Sunday, April 18, 2010

Smile Please....

Smile Please....

1) 1000 புக்ஸ் படிச்சு ப்ரில்லியன்ட் ஆவதை விட ஒரு அறிவாளியிடம் 10
நிமிடம் பேசுவது பெட்டெர்.
அதனால எப்ப வேணாலும் நீங்க எனக்கு கால் பண்ணலாம்.

2) அப்பா: டேய்! என் பாக்கெட்ல 100 ருபாய் வச்சுருந்தேன்! இப்ப
10 ரூபாய்தான் இருக்கு?
மகன்: நான்தான் எடுத்தேன்!
அப்பா: எதுக்கு?
மகன்: நீங்கதானப்பா 100க்கு 90 எடுக்கணும்னு சொன்னீங்க!
அப்பா: ?!?....

3) ஆண்: உங்களைப் பார்த்தா என்னோட 3வது மனைவி
மாதிரியே இருக்கீங்க!
பெண்: அப்படியா?!? உங்களுக்கு மொத்தம் எத்தன மனைவி?
ஆண்: இரண்டு!
---ங்கொய்யால! எப்படி பிட்ட போடுறான் பாருங்க!

4) செடி வாடினால் தண்ணீர் விடுவேன்...
இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்....
நீ வாடினால் என் உயிரை விடுவேன்.....
நீ சந்தோசமாக இருக்க அப்பப்ப இப்படி ரீல் விடுவேன்......

5) கடவுள்: உனக்குப் படித்த வரம் ஒன்று கேள்!
ஆண்: எங்க வீட்ல இருந்து சொர்க்கத்துக்கு ஒரு ரோடு
வேண்டும்!
கடவுள்: அது முடியாது! வேற ஏதாவது கேள்!
ஆண்: ஒரு பெண் என்னை உண்மையாக லவ் பண்ண வைக்க
வேண்டும்!
கடவுள்: சொர்க்கத்துக்கு தார் ரோடு வேண்டுமா? அல்லது
சிமென்ட் ரோடு வேண்டுமா?

6) ஆயிரம் வார்த்தைகள் காயப்படுத்தாது, வாத்தியார் வகுப்பு எடுக்கும்போது!
ஆனால் ஒரு உண்மையான நண்பனின் மவுனம் மிகவும் வலியைக் கொடுக்கும், எக்ஸாம் ஹாலில்!
---- பயபுள்ள படிச்சுருப்பானோ?


7) ஆசிரியர்: தலைவலிக்கு ஒரு நாள் லீவ் எடுத்த..சரி... கால் வலிக்கு
ஏண்டா ரெண்டு நாள் லீவ் எடுத்த?
மாணவன்: சார் தலை ஒன்னுதான்! ஆனா கால் ரெண்டு இல்லியா?
அடுத்த மாணவன்: சார்! எனக்கு பல்லு வலி!
--- எப்பூடி!

8) பையன்: அப்பா! கம்ப்யூட்டர் படிக்க காசு கொடுப்பா!
அப்பா: செருப்பு பிஞ்சிடும்! நீ படிக்க கேளு தரேன்! கம்ப்யூட்டர் படிக்க
நான் ஏண்டா தரனும்? என்ன சின்னப்புள்ள தனமா இருக்கு?

9) ஆசிரியர்: வாச ரோஜா வாடிப் போலாமா? – இந்த வாக்கியத்தை அயற்கூற்று
(indirect) வாக்கியமா எப்படி அமைப்ப?
மாணவன்: வாடி சரோஜா ஓடிப் போலாமா?

10) பையன்: காதல் வந்தா சொல்லி அனுப்பு!
கேர்ள்: வரலன்னா?
பையன்: SMS’ல உன் தங்கச்சி செல் நம்பர அனுப்பு!

11) ஒரு பொண்ணு, ஒரு பையன ஏமாற்றும் பொது அவன் தற்கொலை செய்து
கொள்கிறான். இங்க பொண்ணு பையனை கொன்று விடுகிறாள்!
ஒரு பையன், ஒரு பொண்ணை ஏமாற்றும் பொது ஒரு குழந்தை பிறந்து விடுகிறது!
இங்க பையன் ஒரு உயிரை கொடுக்கிறான்!

நீதி: பையன்கள் இரக்க குணம் படைத்தவர்கள்!

12) ஒரு குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
அதுக்காக போன் செய்து என்னை சிரிக்க சொல்லி தொல்லைப் பண்ணக் கூடாது! இப்ப
நான் ரொம்ப பிசி. O.K..வா?

13) ஏறக்குறைய லவ் செய்வது, போர் புரிவது ஒரே மாதிரிதான்! இருந்தாலும்
நான் உங்களை போர் புரிவதுக்குதான் சிபாரிசு செய்வேன். ஏனெனில் போரில்
நீங்கள் ஒன்று உயிர் பிழைக்கலாம், அல்லது செத்துப் போய் விடலாம். ஆனால்
காதலில் நீங்கள் வாழவும் முடியாது! சாகவும் முடியாது!!

14) மாணவன்: சார்.. என்ன இது?
ஆசிரியர்: கொஸ்டின் பேப்பர்!
மாணவன்: சார்...இது என்ன?
ஆசிரியர்: ஆன்செர் பேப்பர்!
மாணவன்: என்ன கொடும சார் இது? கொஸ்டின் பேப்பர்’ல கொஸ்டின் இருக்கு! ஆனா
ஆன்செர் பேப்பர்’ல ஆன்சர காணோம்?!?

15) AB க்கு போர் அடிச்சா என்ன செய்யும்?
CD போட்டுப் பார்க்கும்!
EF க்கு உடம்பு சரி இல்லன்னா எங்க போகும்?
GH க்குப் போகும்!
IJKL க்கு எனிமி யாரு?
MN (எமன்) தான்!
OP ரேசனுக்குப் போனா?
Q லதான் நிக்கும்!
RS க்கு தலை வலிச்சா?
T குடிக்கும்!
UVWXY க்கு பறக்கனும்னா?
Z (ஜெட்)ல போகும்!
எப்பூடி!?!

Thanks to mohanacharal

No comments: