5 கப் கொதிக்கும் தண்ணீரில் நன்றாகக் கழுகிய 1 கப் அரிசியை வேக வைக்கவும். (கால் கப் அளவு முருங்கை இலை (கீரை) கிடைத்தால் அரிசி ஓரளவு வெந்ததும் அதில் கலக்கவும்)
துருவிய தேங்காய் : முக்கால்
சுக்கு : 1 இஞ்ச் நீளம்
பூண்டு : 4 அல்லி...(இந்தியாவில் கிடைக்கும் சாதரண பூண்டு எனில் 7 அல்லிகள் தேவை)
சீரகம் : ஒரு மேசைக்கரண்டி
ஆகியவற்றை நன்றாக மிக்சியில் அரைத்து கஞ்சியில் கலக்கவும், தேவையான அளவு உப்பு சேர்த்து பருவமாக வெந்தவுடன் இறக்கிவிடவும்.
------
மிழகு கஞ்சி....
5 கப் கொதிக்கும் தண்ணீரில் நன்றாகக் கழுகிய 1 கப் அரிசியை வேக வைக்கவும். (கால் கப் அளவு முருங்கை இலை (கீரை) கிடைத்தால் அரிசி ஓரளவு வெந்ததும் அதில் கலக்கவும்)
துருவிய தேங்காய் : முக்கால்
மஞ்சள் பொடி : அரை மேஜை கரண்டி
பெருஞ்சீரகப்பொடி : 2 மேஜை கரண்டி
வத்தல் பொடி : அரைக்கால் மேஜை கரண்டி
மல்லிப்பொடி : அரை மேஜை கரண்டி
சிறிய உள்ள : ஆறு அல்லது ஏழு
இலவங்கப்பட்டை (கறுவா) : 2 இஞ்ச் நீளம்
ஆகியவற்றை நன்றாக மிக்சியில் அரைத்து கஞ்சியில் கலக்கவும், தேவையான அளவு உப்பு சேர்த்து பருவமாக வெந்தவுடன் இறக்கிவிடவும்.
தாளிக்க : சிறிய உள்ளி, கடுகு, கறி வேப்பிலை ஆகியவை உபயோகித்து தாளித்து கஞ்சியில் கலக்கவும்.
--
அபூ நூறா
No comments:
Post a Comment