Saturday, September 18, 2010

இல்லாத உணவின்..

இல்லாத உணவின்..

எதை உண்ணவும் வழியில்லாமல்
முடங்கிப் போய் நானிருக்க;
எனைத் திங்க நீ வந்தாயோ!

மனம் விட்டு அழவும்
திடம் இல்லாமல் நான்;
உணவாக வேண்டுமா நான் உனக்கு!

என்னைப் படம் எடுத்தவனுக்கோ
பாராட்டுப்பத்திரம் தத்ரூபக் காட்சி என்று;
ஒட்டிப்போன வயிருடன்
ஒரமாய் சிரித்தேன்;
உன் உணவுக்கும் நான்தானா
கழுகுக்குப் பிறகு..

எட்டி நின்று வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கும்
தொட்டு விட்டுச் செல்லும்
கண்ணீர் தரையைத் தட்டிவிட்டுச் செல்லும்!

இல்லாத உணவின் மகத்துவம்
தள்ளாடும் எனக்குத்தான் தெரியும்;
விரயம் ஆக்காதீர் உணவை!

எங்கே வலி எனத்தெரியாமல்
வலிக் கொடுக்கும்;உயிர் எடுக்கும்;
பசிக்கு உணவு இல்லையேல்
உணவே நாம்தான் பசிக்கு..

உணவுக்கொடுத்து
உயிர்க்கொடுங்கள்;
உணர்வைக் கொடுத்து
உயிர்வதையைத் தடுங்கள்!

-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
--

No comments: