சொல்லி சொல்லி வளர்ப்போம்.
சில நேரம்
சிணுங்கும் என் கைப்பேசி
உன் அழைப்புக்காக;
உள்ளுக்குள்ளே உரைப்பேன்
அன்புத்தொல்லை என்று!
சுருக்கென்ற வார்த்தைக்கு
நறுக்கென்று கடித்துக்கொள்வேன்
அன்பு எப்படித் தொல்லையாகும் என்று!
காயாத கனவுகளுடன்
காலாற நடைப்போடும் நினைவுகளுடன்
கால்மேல் கால்போட்டு கட்டிலில்!
புதுஜோடி என்ற
பட்டத்துடன் இப்படி
விட்டத்தைப் பார்த்தப்படி இங்கே நான்!
மணிக்கணக்கில் பேசினாலும்
நிமிடமாய் இருக்கும்;
”மணி”யைப் பற்றிப் பேசினால் மட்டும்
நெருடாலாய் இருக்கும்!
என்னைப் போன்ற தோழர்கள்
ஏராளம் இங்கே;
ஏங்கிக்கொண்டே இருக்கும்
எப்போதும் செல்வோம் அங்கே!
இனி தலைமுறைக்கு
சொல்லி சொல்லி வளர்ப்போம்
கல்வியைபற்றி;
சொல்லவே வேண்டும் கல்விக்கு முன்
வெளிநாட்டைப்பற்றி!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
No comments:
Post a Comment