Monday, November 1, 2010

மஸ்கட்டில் இஸ்லாமிய இலக்கிய கழகம் துவக்கம்

மஸ்கட்டில் இஸ்லாமிய இலக்கிய கழகம் துவக்கம்

மஸ்கட் : ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் முதலாவது பன்னாட்டு கிளை துவங்கப்பட்டுள்ளது என அதன் பொறுப்பாளர் பஷீர் முஹம்மது தெரிவித்துள்ளார்.


இஸ்லாமிய இலக்கியக் கழகம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தின் புதிய பரிணாமத்தை புதுப் புது வடிவங்களோடு வெளிக்கொணர்ந்து தமிழ் சமுதாய மக்களின் கைகளிலும், மனங்களிலும் பதியச் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.
கல்விப் பணிக்காக பொருளாதார ரீதியிலான அனைத்து உதவிகளையும் கல்வி உதவித் தொகையாகவும், பைத்துல்மால் நிதியாகவும் SEED அமைப்பின் மூலம் மிகுந்த முனைப்புடன் வழங்கி வருவதோடு, சமுதாய பொருளாதர முன்னேற்றதிற்கான பணிகளில் சிறப்பாய் செயல்பட்டு வருகிறது.

இஸ்லாமிய இலக்கிய கழகத் தலைமை அமைப்பின் நெறியாளர் முனைவர்.கவிக்கோ அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளார் ஜனாப்.S.M. இதாயதுல்லாஹ் மற்றும் பேராசிரியர் அப்துல்சமது அவர்களின் வழிகாட்டுதலின் பெயரால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மஸ்கட் பிரிவின் பொறுப்பாளர் மற்றும் தலைவர் ஜனாப். பஷீர் முஹம்மது, செயலாளர் ஜனாப். காமில் கனி, பொருளாளர் ஜனாப். அப்துல் சலாம் மற்றும் ஆலோசகர்கள் ஜனாப்.அபுல் ஹசன், ஜனாப். அன்வர் அலி ஆகியோர் ‘நிர்வாக உறுப்பினர்களில் இருந்து தேர்வு செய்யப் பட்டனர்.

“தொடர்ந்து தமிழ் இஸ்லாமிய இலக்கியம், கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கான பணிகளில் தலைமை அமைப்போடு சேர்ந்து பணியாற்றவும், மற்ற வளைகுடா நாடுகளில் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் கிளைகளைத் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” பொறுப்பாளர் பஷீர் முஹம்மது அவர்கள் கூறினார்.

No comments: