Wednesday, November 23, 2011

நற்செயல் எது

நற்செயல் எது

عن عبد الله بن مسعود رضي الله عنه سالت النبى صلى الله عليه و سلم اي الاعمال افضل قال الصلوة لوقتها قالت ثم اي قال بر الوالدين ثم اي قال الجهاد فى سبيل الله


இப்னு மஸ்ஊத் அவர்கள் கூறினார்கள் நான் உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்களிடம் கேட்டேன்.
செயல்களின் சிறந்தது எது
உரித்த நேரத்தில் தொழுவது என்று விடையளித்தார்கள்
பின்பு எது என்று வினவினேன்
பெற்றோருக்கு பணிவிடை செய்வதாகும் என்று கூறினார்கள்
பின்பு எது என்று வின்வினேன்
அறப்போர் புரிவதாகும் என்று கூறினார்கள்

பல நேரங்களில் நபி பெருமான் அவர்கள் இது போன்ற பல கேள்விகளை ஸஹாபக்கள் கேட்டு அதன் மூலம் மற்ற மக்களுக்கும் பிரயோஜம் ஏற்படுத்தினார்கள். முதலாவது செய்தி தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழுவதாகும், அடுத்து பெற்றோரிடம் நல்ல முறையில் அவர்களின் மனம் கோணாமல் நடப்பதாகும்.அடுத்து இறைபாதையில் அறப்போர் புரிவதாகும்.

No comments: