Saturday, July 19, 2008

மக்கள் முன்னேற்றக் கழகம்

Anonymous has left a new comment on your post "மக்கள் உரிமை~யின் மண்டையில் உறைக்கட்டும்!":

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆதரவுடன் புதியதொரு அரசியல்கட்சியை தொடங்கும் முதல் கட்ட நடவடிக்கையாக தமுமுக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. மிகவும் எச்சரிக்கையாக 'முஸ்லிம்' என்கிற பெயர் இல்லாமல் 'மக்கள் முன்னேற்றக் கழகம்' என்று பெயர் சூட்டியிருக்கிறது.

இதிலிருந்தே தெரிகிறது இவர்கள் தொடங்கும் கட்சி எம்.பி, எம்.எல்.ஏ சீட்டுக்காக தொடங்கும் கட்சி என்பது தெளிவாகிறது.

'முஸ்லிம் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்று பெயர் வைக்கவேண்டியதுதானே. யார்க்கு பயந்து இப்படி 'மக்கள் முன்னேற்றக் கழகம்' என்று பெயர் வைத்திருக்கிறீர்?

உங்களின் முஸ்லிம் சமுதாயப்பற்று வெளிவந்திருக்கிறது. உங்கள் முகமூடியை நீங்களே கிழித்திருக்கிறீர்கள்.

'முஸ்லிம்' என்கிற பெயர் அரசியல் கட்சியில் சேர்க்க முடியாது என்றால் சுய கவுரவத்தை விட்டுவிட்டு சமுதாய நலனுக்காக வேண்டியும் நம்முடைய 'முஸ்லிம்' என்கிற அடையாளத்திற்காக வேண்டியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கில் சேர வேண்டியதுதானே. வரட்டு கவுரவம் ஏன்? விட்டுக்கொடுத்து போக வேண்டியதுதானே?

கட்சி பெயரிலேயே 'முஸ்லிம்' என்கிற பெயரை காட்ட முடியவில்லை. இவர்கள சொல்லிக்கொள்கிறார்கள் தனி அடையாளத்தோடு எம்.பி, எம்.எல்.ஏ சீட்டுக்களுக்கு போட்டியிடுவார்களாம். அவர்கள் சொல்வது போல தனி அடையாளத்தோடு போட்டியிட்டாலும் 'மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயர் தானே வரும். எந்த இடத்திலும் 'முஸ்லிம்' என்கிற தனி அடையாளம் வராதே.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எவ்வளவோ மேலானது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கர்கள் பெயரிலாவது தனி அடையாளம் "முஸ்லிம்" என்கிற அடையாளம் வைத்திருக்கிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுய அடையாளத்தோடுதான் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் போட்டியிட்டது. திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டு அந்த கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுத்தான் போட்டியிட்டார்களே தவிர சுய அடையாளத்தை இழந்து அல்ல என்பது அரைவேக்காடுகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. சுயமாக சிந்திக்க தலைப்படவேண்டும் (அந்த திறன் இருந்தால்). ஒப்பந்தம் போடப்பட்டது அனைத்துப்பத்திரிக்கையிலும் போட்டோவுடன் செய்தி வெளியானதே. திராவிட முன்னேற்ற கழகமும் பொதுவான கட்சித்தானே. அந்த கட்சி சார்பில் போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கிறது?

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்குப்போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் பெற்ற வெற்றியை எதிர்த்து 'வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' (வெளியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்றத்திற்குள் திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினரா?) என்று நீதி மன்றத்தில் வழக்குப்போட்டார்கள் சட்டம் தெரியாதவர்கள் எதையுமே சுயமாக சிந்திக்க தலைபடாதவர்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்க இயலாது என்று தீர்ப்பு கூறியது நீதிமன்றம்.

நீதிமன்றம், தேர்தல் கமிஷன் போன்றவை அங்கீகரிக்கிறது. புதிதாக கட்சி ஆரம்பிக்கும் அரைவேக்காடுகள் சுய அடையாளத்தோடு போட்டியிட வேண்டும் என்கிறார்கள். சுய அடையாளத்தோடு கட்சிக்கூட ஆரம்பிக்க வக்கில்லை. 'மக்கள் முன்னேற்றக் கழகம்' சார்பில் பேட்டியிட்டு வென்றாலும் நம்முடைய சுய அடையாளம் பாராளுமன்றத்திற்குள்ளும் சரி சட்டமன்றத்திற்குள்ளும் சரி வெளியிலும் சரி இல்லை. கட்சியிலேயே 'முஸலிம்' என்ற பெயர் இல்லையே, அதுக்கெல்லாம் தைரியம் வேண்டும். வாய்க்கொழுப்பேறி பேசும் முன்பு இவற்றையெல்லாம் யோசித்திருக்க வேண்டும்.

முகமது ரிபாயி

No comments: