Saturday, July 19, 2008

ஹிஸ்புல்லா அமைப்பு தோற்றம்:

ஹிஸ்புல்லா அமைப்பு தோற்றம்:

ஷியா முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய இமாம் ஆயத்துல்லா கொமைனியின் ஆதரவாளர்களால், லெபனானில் ஊடுருவிய இஸ்ரேலிய எதிர்த்து போராட 1982 ல் துவங்கப்பட்டது ஹிஸ்புல்லாஹ் அமைப்பு. 1980 களின் இறுதியில் தெற்கு லெபனானிலிருந்து - இஸ்ரேல் படைகளை திருப்பி அழைத்துக்கொண்ட பிறகு ஹிஸ்புல்லாவின் வளர்ச்சி தீவிரமடைய ஆரம்பித்தது. இதன் வளர்ச்சிகு தேவையான பொருளாதார உதவிகளை ஈரான் மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே செய்து வருகின்றன. சுன்னி முஸ்லிம்களை கொண்ட அரபு நாடுகள் - இவர்களிடமிருந்து விலகியே நிற்கின்றன. இறை இல்லங்களின் பாதுகாவலனாக கூறிக்கொள்ளும் சவுதி அரேபியா ஹிஸ்புல்லாவை தனது எதிரியாகவே கருதுகிறது.

ஹிஸ்புல்லாவின் சாதனையும் சவுதியின் வேதனையும்:
தற்போதைய சுன்னி முஸ்லிம் தலைமியிலான லெபனான் அரசு - சவுதி அரேபியாவின் தாராளமான பண உதவியோடு மேற்கத்திய நாடுகளுக்கு கைக்கூலியாக செயல்பட்டு வருவதால் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் - அரசிற்கும் அடிகடி மோதல் ஏற்பட்டுவருகிறது. இதன் உச்சகட்டமாக கடந்த மே மாதம், 2008 ல் ஹிஸ்புல்லா படையினர் லெபனான் கட்டுப்பாட்டில் உள்ள பெய்ரூட் விமான நிலையத்தை கைப்பற்றி, சுன்னிப் பிரிவைச்சார்ந்த புயூச்சர் மூவ்மென்ட் அமைப்பினரின் சொத்துக்களுக்கு தீவைத்தனர். முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரி க்குச் சொந்தமான தொலைக்காட்சி நிலையத்திற்கும் பத்திரிக்கை அலுவலகத்திற்கும் தீவைத்தனர். தனது பெட்ரோல் டாலர்களால் நடத்தப்படும் லெபனன் அரசின் இயலாமையை கண்ட சவுதி அரேபியா அதிர்ச்சியடைந்து அமெரிக்காவுடன் ஆலோசித்து கண்டனத்தை தெரிவித்தது.

ஹிஸ்புல்லா அமைப்பின் வளர்ச்சி
ஹிஸ்புல்லா அமைப்ப ஆரம்ப காலகட்டத்தில் தற்கொலை தாக்குதல், அய்ரோப்பிய சுற்றுலாப்பயனிகளை கடத்தல், கொரில்லா தாக்குதல் போன்ற வழிமுறைகளை கொண்டு இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்த்து வந்தாலும், இஸ்ரேலின் பலம் மற்றும் பலவீனமறிந்து தக்க பயிற்சிகளை மேற்கொண்டு - அதி நவீன ஆயுதங்களை கையாளுவதில் தேர்ச்சி பெற்று தங்களது தாக்குதல் முறைகளை மேம்படுத்திக் கொண்டனர், அறிவியல் தொழில் நுட்பங்களை பயின்று சொந்தமாக ஏவுகனை தயாரித்து இஸ்ரேலுக்குள் வீசி அமெரிக்காவை மூக்கில் விரல் வைக்க வைத்தனர். ஹிஸ்புல்லாவின் ஆயுதம் கையாளும், திறமை லெபனானின் இரானுவத்தை விட வலிமையும்-திறனும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஹிஸ்புல்லாவிடமிருந்து ஆயுதங்களை களைய அய்க்கிய நாடுகளின் ஒன்றியம் (United Nations) கொண்டுவந்த இரண்டு தீர்மானங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இஸ்ரேலை தாக்குவதை மட்டும் முழுநேரப்பணியாக கொள்ளாது -வறுமையில் உழுலும் லெபனான் மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை நிறைவேற்றுவதிலும்- பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் சமூக- பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி ஒரு மாபெரும் மக்கள் ஆதரவு பெற்ற இயக்கமாக தன்னை உருவாக்கிக்கொண்டது. ஹிஸ்புல்லாவின் ஒரு பிரிவு அரசியலில் ஈடுபட்டுள்ளதோடு தற்போதைய அரசில் அங்கமும் வகிக்கிறது. லெபனான் பாரளுமன்றத்தில் கொண்டுவரப்படும் தீர்மானங்களை நிர்ணயிக்கும் ‘ரத்து அதிகாரம்' (VETO Power) பெற்று விளங்குகிறது. மக்களோடு தொடர்புகொள்ள தனக்கென சக்திவாய்ந்த ஊடகங்களை கொண்டுள்ளது.

ஹிஸ்புல்லாவின் சாதனை
2006 -ல் ஹிஸ்புல்லா - இஸ்ரேலிய படைகளுக்குள் நடந்த எல்லை தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய வீரர்களை பிடித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற போரில். இஸ்ரேலின் மாபெரும் தாக்குதலால் லெபனான் தரைமட்டமாகியது - இறுதியில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது. போரில் லெபனான் தனது அடிப்படை கட்டமைப்புக்களை இழந்து - பொருளாதர சேதத்தை அடைந்தலும் ஹிஸ்புல்லா தானே வெற்றி பெற்றதாக பிரகடனம் செய்தது. இது அரபு நாடுகளால் புகழப்பட்டாலும் இஸ்ரேலை வீம்புக்காக போருக்கு அழைத்ததாக லெபனன் நாட்டு விமர்சகர்களால் கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லாஹ் தன்னை இஸ்லாமிய அமைப்பு என்று அறிவித்து கொண்டாலும் - லெபனானில் வசிக்கும் பிறமதத்தவர்கள் மற்றும் சுன்னி முஸ்லிம்களின் மீதோ தனது 'ஷியா' கொள்கையை திணிக்காது என்று அறிவித்திருக்கிறது.

ஹிஸ்புல்லாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக சிரியாவும் ஈரானும் செயல்படுவதால்தான் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.


பிறைநதிபுரத்தான்
pirainathi_purathaan@yahoo.com

-----------------------------------------------------------------------------------------------
Stand upright,
Speak your thoughts,
Declare the truth you have - that all may share,
Be bold, proclaim it everywhere:
They only live who dare

No comments: