Tuesday, July 22, 2008

தப்லீக்

தப்லீக்

- கம்பம் ஹாருன் ரஷீத்

இஸ்லாத்தைப் பரப்புகின்ற
கடமைகள் நினைவிருக்க
நமக்குள்ளே பின்பற்றல்
பின்னடைந்து போனதினால் -

முஸ்லிம்களையே
முஸ்லிம்களாய் ஆக்குகின்ற
மேன்மையான முயற்சியிது !
மருவில்லாத மாமணியாய்
கருவுக்குள் இருந்த இடம்
இஸ்லாத்தில் இருந்ததினால் -

பெயர் தாங்கும் முஸ்லிமாய்
பெயரளவில் வாழ்வு நிலை !
நுனிப்புல் மேய்கின்ற
பரபரப்பு வாழ்க்கைக்குள்
விபத்தாக வந்ததினால் -

விளங்கிக்கொள்ள நேரமில்லை !
மார்க்கமெனும் நல்வழியை
மனதார நினைந்துருகி
பண்பட்ட தெளிவோடு
பற்றுதலைப் பற்றவில்லை !

சின்னஞ்சிறு அசைவுகளும்
சிந்தனையைக் கிளறுகின்ற
சித்தாந்தம் பேசவில்லை !
வழிகாட்டி விளக்குதற்குப்
பெற்றோரின் தெளிவுநிலை
பேருதவி செய்ததில்லை !

இஸ்லாமிய வாழ்வுநிலை
வாழ்க்கையோடு வாழும் விதம்
மாற்றுமதப் பார்வைகளில்
பதியமிட்டுப் பவனிவர,
மார்க்கத்தின் நெறிமுறைகள்
மனதிற்குள் சென்று பேச,

சத்திய மார்க்கத்திற்கு
எத்திவைத்தல் என்னும்
ஆர்ப்பாட்டமில்லாத
அமைதிப் புரட்சியிது !

No comments: