Thursday, September 18, 2008

குவைத்தில் ஷரீஅத் விளக்க மாநாடு!

மாபெரும் ஷரீஅத் விளக்க மாநாடு! புனித ரமழான் சிறப்பு நிகழ்வுகள்!! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

முதல் நிகழ்ச்சி!

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 19-09-2008 வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் தராவீஹ் தொழுகைக்கு பிறகு நள்ளிரவு 2 மணி (ஸஹர் நேரம்) வரை குவைத், தஸ்மா பகுதியில் உள்ள 'டீச்சர்ஸ் சொஸைட்டி' இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அரங்கத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 'மாபெரும் ஷரீஅத் விளக்க மாநாடு, புனித ரமழான் சிறப்பு நிகழ்வாக' நடைபெற இருக்கின்றது.

சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு மாநாட்டில் பெங்களூரு ஸபீலுர் ரஷhத் அரபிக்கல்லூரியின் தலைமைப் பேராசியர் - சமுதாயத்தின் போர்வாள் - கன்ஜுல் மில்லத் - ஃபகீஹுல் மில்லத் மவ்லானா மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எஸ். ஸைஃபுத்தீன் ரஷாதி ஃபாஜில் மழாஹிரி ஹழ்ரத் கிப்லா அவர்கள் 'தவ்ஹீத் எது? தவ்ஹீத்வாதிகள் யார்;' என்ற தலைப்பிலும், இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் பேராசியர் - சொற்பொழிவு திலகம் - ஸுல்தானுல் வாயிழீன் மவ்லானா மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் முஃப்தி ரிஜ்வி பின் நூரி ஹழ்ரத் கிப்லா அவர்கள் 'தக்வா - இறையச்சம்' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றுகின்றனர். கூட்ட இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்.

இரண்டாவது நிகழ்ச்சி!

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 20-09-2008 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் தராவீஹ் தொழுகைக்கு பிறகு நள்ளிரவு 2 மணி (ஸஹர் நேரம்) வரை குவைத், ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'அஹ்மத் அப்துல்லாஹ் அல் அஜீல்' பள்ளிவாசலில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 'மாபெரும் ஷரீஅத் விளக்க மாநாடு, புனித ரமழான் சிறப்பு நிகழ்வாக' நடைபெற இருக்கின்றது.
சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு மாநாட்டில் பெங்களூரு ஸபீலுர் ரஷhத் அரபிக்கல்லூரியின் தலைமைப் பேராசியர் - சமுதாயத்தின் போர்வாள் - கன்ஜுல் மில்லத் - ஃபகீஹுல் மில்லத் மவ்லானா மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எஸ். ஸைஃபுத்தீன் ரஷாதி ஃபாஜில் மழாஹிரி ஹழ்ரத் கிப்லா அவர்கள் 'இஸ்லாமிய எழுச்சியும், குழப்பவாதிகளின் சூழ்ச்சியும்' என்ற தலைப்பல் சிறப்புரையாற்றுகின்றார். கூட்ட இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்.
தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ளவம், குழப்பங்களிலிருந்து தெளிவு பெறவும், குழப்பவாதிகளின் சுயரூபத்தை தெரிந்து கொள்ளவும் இச்சிறப்புமிகு இரண்டு நிகழ்ச்சிகளிலும் குவைத் வாழ் இந்திய, தமிழக, இலங்கை தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஸஹர் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்து கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப் பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும், அலைபேசி வாயிலாக 7872482, 9430786, 7302747 போன்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு அழைப்பு விடுக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.
செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல்கள் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

No comments: