Thursday, September 18, 2008

துபாய் பேருந்தில் திடீர் தீ : ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்


துபாய் பேருந்தில் திடீர் தீ : ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்

துபாயின் முக்கிய வணிகப் பகுதியான பர்துபாயின் பிரதான சாலையான காலித் பின் வாலித் சாலையில் வியாழன் நண்பகல் 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிந்தது.

வாகனத்தின் ஏதோ ஒரு பகுதியில் புகை வருவதை உணர்ந்த ஓட்டுநர் ஏதோ அசாம்பாவிதம் நேரப்போகிறது என்பதனை உணர்ந்து உடனடியாக பயணிகளை பேருந்தை விட்டு இறங்குமாறு எச்சரித்தார். பயணிகள் இறங்கியதும் ஓட்டுநரும் பேருந்தை விட்டுக் குதித்தார்.

அதனைத் தொடர்ந்து தீ மளமளவென எரிந்து பேருந்தை தீக்கிரையாக்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயினை அணைத்தனர். இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதுடன், தங்களது இன்னுயிரைக் காத்த ஓட்டுநரைப் பாராட்டினர்.

தீவிபத்துக்குக் காரணம் மின்கசிவு என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குளிர்சாதனத்தில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்துக்குக் காரணம் என ஓட்டுநர் தெரிவித்தார்.

No comments: