Thursday, September 18, 2008

செஞ்சிக்கோட்டையில் சதாத்துல்லாகான் மசூதி, நுழைவு வாயில் புதுப்பிக்கும் பணி தீவிரம்

செஞ்சிக்கோட்டையில் சதாத்துல்லாகான் மசூதி, நுழைவு வாயில் புதுப்பிக்கும் பணி தீவிரம்


செஞ்சி,செப்.19-

செஞ்சிக்கோட்டையில் சதாத்துல்லாகான் மசூதி நுழைவு வாயில் உள்பட பல்வேறு பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

நுழைவு வாயில் புதுப்பிக்கும் பணி

தொல்பொருள் ஆய்வுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையை பழமை மாறாமல் வைத்திருக்க வேண்டும் என்று காரணம் சொல்லி ஏற்கனவே பராமரிக்கப்படாமல் இருந்தது. இதனால் கோட்டை மதில் சுவர்கள் புல் செடிகள் முளைத்து சேதமடையும் வகையில் காணப்பட்டது.அதனால் தற்போதுள்ள அதிகாரிகள் அதனை செப்பணிட முடிவு செய்து கடந்த ஓராண்டாக பல்வேறு பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

அதன்படி கோட்டையில் மதில் சுவர்கள் சரிசெய்யப்பட்டு சிமெண்டு பூசி புதுப்பிக்கப்பட்டது. சிவன் கோவில் சீரமைக்கப் பட்டது.வெளிநாட்டினரும் பயன்படுத்தும் வகையில் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.

பழமை வாய்ந்த மசூதி

தற்போது ராஜகிரி கோட்டைக்கு வெளியில் உள்ள சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த சதாத்துல்லாகான் மசூதி புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இதில் இன்றும் செஞ்சியை சேர்ந்த முஸ்லீம்கள் ரம்ஜான் மற்றும் பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களில் தொழுகை நடத்துகின்றனர்.

மேலும் ராஜகிரி கோட்டையில் முதல் மற்றும் 2-வது, 3-வது நுழைவு வாயில் மதில் சுவர்கள் (பெரிய பெரிய பெரிய கருங்கற்களால் ஆனது ) இங்கு பழுதடைந்த பணிகள் சீர் செய்யப்படுகிறது.

இப்பணிகள் தொல் பொருள்துறை அலுவலர் சந்திரசேகர், உதவியாளர் மணி ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

No comments: