இந்திய விமானப்படைக்கு ஜன. 23-ல் ஆள் தேர்வு
கோவை, டிச.13: இந்திய விமானப்படைக்கான ஆள் சேர்ப்பு முகாம், கோவை சூலூர் ஏர்போர்ஸ் ஸ்டேஷனில் ஜனவரி 23-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம்.
இதில் சேர்வதற்கான கல்வித் தகுதி:
கணிதம் இயற்பியல் பாடங்களுடன் குறைந்தபட்சம் 50 சதம் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் டூ இன்டர்மீடியட் படிப்பில் தேர்வாகி இருக்க வேண்டும்.
அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் 3 ஆண்டு டிப்ளமோ-மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி, மற்றும் தகவல் தொழில்நுட்பப் படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி இருக்க வேண்டும்.
ஆள் சேர்ப்பு முகாமுக்கு வருபவர்கள் ஜனவரி 23-ம் தேதி காலை 6 முதல் 10 மணிக்குள் வர வேண்டும்.
மேலும், கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள், மற்றும் அதன் மூன்று பிரதிகள், இரு வெள்ளை கவர்கள், இருப்பிடச் சான்று (தேவைப்படின்) சமீபத்திய வண்ண புகைப்படம் பாஸ்போர்ட் அளவு-7 பிரதிகள், உடல்திறன் தேர்வுக்காக விளையாட்டு உடை (ஷார்ட்ஸ் மற்றும் ஷூ) ஆகியவற்றை உடன் கொண்டு வரவேண்டும்.
முகாமில் எழுத்து மற்றும் உடல்திறன் தேர்வில் தேர்வானவர்களுக்கு மட்டும் விண்ணப்பங்கள் அங்கேயே அளிக்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு கமாண்டிங் ஆபீஸர், 8, ஏர்மென் செலக்சன் சென்டர், ஏர்போர்ஸ், தாம்பரம், சென்னை-46, தொலைபேசி எண்:044 - 22791853, 22395553 என்ற முகவரியில் தொடர்புக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment