என்னால் முடியும்
என்னால் புது விஷயங்களை கற்று கொள்ள முடியும்.
தெரியாத விவரங்களை என்னால் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.
தெரியாததை தெரியாது என்று சொல்ல என்னால் முடியும்.
என்னால் தற்சமயம் இயலாத காரியங்களை இயலாது என்று சொல்ல என்னால் முடியும்.
தோல்விகளை என்னால் தாங்கி கொள்ள முடியும்.
மீண்டும் முயற்சிக்கலாம் என்று சொல்ல என்னால் முடியும்.
விதைத்தபின் பயிறு விளையும் வரை காத்திருக்க என்னால் முடியும்.
பிறரது பாராட்டு கிடைக்காவிடிலும் எனது கொள்கையில் உறுதியாக இருக்க என்னால் முடியும்.
களைப்பில்லாமல் என் கடமைகளை தொடர்ந்து உற்சாகமாக செய்ய என்னால் முடியும்.
அவசியமான சமயத்தில் பிறர் உதவியை நாட பிறரது உதவிக்கு நன்றி சொல்ல என்னால் முடியும்.
எனது தவறுகளை யாரும் சுட்டி காட்டும் போது நிதானமாக இருக்க என்னால் முடியும்.
நான் தவறாக ஒன்றை சொல்லி விட்டால் அல்லது செய்து விட்டால் அதற்கு மன்னிப்பு கேட்க என்னால் முடியும்.
பிறர் கோபப்படும் போது பொறுமையாக இருக்க என்னால் முடியும்.
சின்ன விசயங்களை பெரிது படுத்தாமல் இருக்க என்னால் முடியும்.
பேசாமல் இருப்பதே சிறந்தது என்ற சந்தர்ப்பத்தில் என்னால் பேசாமல் இருக்க முடியும்.
என்றென்றும் பிறருக்கு உதவி செய்ய என்னால் முடியும்.
எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் தன்னிச்சையாகவும் என்னால் செயல்பட முடியும்.
சல்மான் ரபிக் ரியாத்
No comments:
Post a Comment