Thursday, January 29, 2009

சென்னையில் பிப்.1 இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!

சென்னையில் பிப்.1 இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இன்ஷா அல்லாஹ் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும்.

ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே, அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம். தாங்கள் அனைவரும் சிரமத்தை பொருட்படுத்தாமல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி தலைமை வகிக்கிறார்.

தி.மு.க. பொருளாளரும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமாகிய, மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் இம்மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவு பேருரை நிகழ்த்துகின்றார். வக்ஃப் வாரிய அமைச்சர் மாண்புமிகு டி.பி. எம்.மைதீன்கான் வாழ்த்துரை வழங்குகின்றார்.

இம்மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். சையது அஹமது, தமிழக அரசு ஹஜ் கமிட்டி தலைவர் - வக்ஃபு வாரிய உறுப்பினர் ஜே.எம். ஹாரூன் எம்.பி,, தலைமை காஜி முப்தி முஹம்மது ஸலாவுத்தீன் அய்யூப், ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான், செய்யது எம். ஸலாவுத்தீன், காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான், இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் மௌலவி அ.முஹம்மது கான் பாகவி, முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவரும், வக்ஃப் வாரிய உறுப்பினருமான ஹாஜி எம். சிக்கந்தர்,, முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் சேமுமு முஹம்மதலி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், சமுதாய புரவலர்கள், மாநில அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர். முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.,
தமிழகம் முழுவதும் உள்ள இமாம்கள், சங்கமிகு ஆலிம் பெருமக்கள், முத்தவல்லிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்க உள்ள இம்மாநாட்டிற்கு அலைகடலென திரண்டுவரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

No comments: