துபாயில் குடும்ப பொருளாதார திட்டமிடல் குறித்த கலந்துரையாடல்
துபாயில் குடும்ப பொருளாதார திட்டமிடல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி 23.01.2009 வெள்ளிக்கிழமை மாலை அஸ்கான் சமுதாயக் கூடத்தில் அமீரக வாழ் இளையான்குடி ஜமாஅத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியினை சிங்கப்பூர் வாழ் இளையான்குடி பிரமுகர் ஆடிட்டர் ஃபேரோஸ் கான் நடத்தினார். அவர் தனது உரையில் நடைமுறை சாத்தியத்தை கூறுவதோடு அல்லாமல் அதற்கான தீர்வினைக் கொடுக்க வேண்டும் என்றார். ஜெர்மன் அறிஞர் ஒருவர் ஒரு மனிதன் தனது வாழ்வின் அனுபவத்தை பள்ளிக்கு வெளியே கற்றுக் கொள்கிறான் என்று கூறியத நினைவு கூர்ந்து தனது அனுபவத்தின் மூலம் குடும்பப் பொருளாதாரத்தை திட்டமிடல் குறித்து விவரித்தார்.
மேலும் கணவன் மனைவி உறவு, பெற்றோர் பிள்ளை உறவு, ஆசிரியர் மாணவர் உறவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளிலும் இவர் ஆலோசனை வழங்கி வருகிறார். அமீரகத்தில் ஒரு வாரம் இருக்கும் இவரை 055 988 68 05 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவரது http://www.bitter-truth.net ஆக்கங்களை எனும் இணையத்தளத்தில் பார்க்கலாம்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஷ்ரஃப், கபீர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் நம்ம ஊரு செய்தி ஆசிரியர் முனைவர் அய்யூப், அப்துல் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment