Thursday, January 29, 2009

முன்னாள் மாணவனின் ஆனந்த கண்ணீர் மடல்

மதிப்பு மிக்க எனது (முன்னாள்) பள்ளியின் இன்னாள் தலைமை ஆசிரியை மற்றும் ஆசான் பெருந்தகைகட்கு, இப்புனித மிக்க கா.மு.பள்ளியின் முன்னாள் பள்ளியின் மாணவன் எழுதும் அஞ்சல்.

முன்னாள் மாணவர் அமைப்பு அமையப் போகும் நற்செய்தி எனக்கு கிட்டியது; மனமெல்லாம் மகிழ்ச்சி எட்டியது. நாங்கள் பள்ளியிறுதித் தேர்வில் எழுபத்தி யிரண்டு விழுக்காடு பெற்றோம்( ஆண்டு 1974 ). ஆனால், தற்பொழுது அதைவிட அதிகம் எடுத்து நம் பள்ளியின் பெருமையை அறியச்செய்திட்ட அறச்செயல் செய்திட்ட ஆசான்கட்கு நிரம்ப நன்றி. என்னைப் பற்றிய் சிறு குறிப்பு கீழே எழுதியுள்ளேன்:

பெயர்: அபுல்கலாம்
பள்ளியிறுதி முடித்த ஆண்டு: 1974

சிறப்பு தகுதிகள் (என் நன்றிக்குரிய ஆசான்களால் பெற்றவைகள்): வகுப்பில் எப்பொழுதும் முதல் தரம் பெறும் பேறு; இறுதி பொதுத் தேர்வில் இரண்டாமிடம்.

"யாப்பிலக்கணத்தின்" அடியொற்றி வெண்பா சுயமாக எழுதியதால் எனது மதிப்பிற்குரிய- தமிழ்ப்பால் ஊட்டிய தமிழாசிரியர்கள் திரு. இராமதாசு /திரு. சண்முகம் மற்றும் என் வகுப்பு தோழர்களால் "கவியன்பன்" என்று அழைக்கப் பெற்றேன்; இன்று வரை அப்பெயரிலேயே கவிதைகள் யாத்தும் உலகமெங்கும் நமதூர் பெயர் அறியச் செய்கின்றேன். எங்கட்கு கிடைத்த ஆசான்களின் அற்புதமான போதனா முறைகளால் தமிழைப் போல் ஆங்கில இலக்கணத்திலும் எங்களுக்கு ஆழமான அறிவமுதம் ஊட்டித்தான் வெளியுலகுக்கு அனுப்பி வைத்தனர். அதனாற்றான், இன்றளவும், இறையருளால், ஆங்கில இலக்கணத்தில் தவறின்றி எழுதவும்; பேசவும் எங்களால் முடியும்.யாராகிலும் தவறாக இலக்கணப் பிழையுடன் பேசினால் உடனேத் திருத்தி கொடுக்கின்றேன்; அதன் விளைவாக, எனது பட்ட படிப்பு -இளங்கலை வணிகவியல் முடித்த ஆண்டு முதல் இன்று வரை இலவசமாக ஆங்கில இலக்கணம் கற்று தருகின்றேன். அத்தனைக்கும் அடிப்படை அதிரையில் பிறக்க வைத்த அல்லாஹ்வின் அருளும் அற்புதமான ஆசான்களின் போதனா முறைகளும். எனவே, என்னை அதிரை என்னும் அழகிய பதியில் உதிக்க வைத்த அல்லாஹ்வுக்கு நன்றி. ஆயுள் முழுவதும் என் ஆசான்கட்கு நிரம்ப நன்றி கடன் பட்டுள்ளேன். அரபு நாடுகள் முதல் அமெரிக்கா வரைச் சென்று உயர்பதவிகளில் உட்கார்ந்து பணியாற்றிட உதவியாக அமைந்தது உண்மையாக எனது தாய்மடி போன்ற என் பள்ளி தான் என்று மனம் மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் விட்டேன்.
எனது நன்றி மறவா ஆசான்கள்:

தமிழ்ப்பால் ஊட்டிய திரு. இராமதாசு/ திரு.சண்முகம்
ஆங்கிலத்தில் சுயமாக பேச - எழுத பயிற்றிவித்த : ஜனாப். அலியார் சார்
அறிவியல் பாடத்தை அற்புதமாக நடத்தும்; ரெங்கராஜ் ஐயா
ஓவியப்பாடத்தூடே ஆங்கில இலக்கணம் கற்று தந்த : ஜனாப் வாவன்னா சார்
எனது திறமைக்கு மதிப்பளித்து தேர்தலின்றியே- பள்ளித்தலவனாகத் தேர்வு செய்த தலைமை ஆசிரியர்: ஜனாப் இப்றாஹிம் சார்
பல்கலைவேநதராகிய அதிரையின் இயக்குனர் திலகம் : ஜனாப். ஹாஜா முஹையித்தீன் சார்
(அவர்கள் கற்று தறாத பாடமேயில்லை எனலாம். அடிப்படையில் கணித ஆசிரியர். ஆனால், தமிழ்-இலக்கண இலக்க்கியம்; ஆங்கில இலக்கண இலக்கியம்; மற்றும் பேச்சு திறன் எழுத்துத் துறை எல்லாம் கற்ற- கற்பித்த அவர்கள் தான் என் உதாரண புருஷர். அவர்கள் இயற்றி இயக்கிய நாடகத்தில் பங்கு பெற்றது என் வாழ்வில் கிடைத்த ஒரு பேறு.
எனது படைப்புகள்:
என்னைப் படைத்தவனருளால், நான் படைத்து இன்று வரை இணய தளத்தில் உலகமெங்கும் உள்ள் தமிழர்களால் பாராட்டப்பெற்று அதிரையின் பெயர் அகிலம் உணரவும் அதற்கு அடிப்படையான கா.மு.பள்ளியினை நினைவு கூரத்தக்க கவிதைத் தொகுப்பு
ஆங்கில வழி போதனாமுறையில் படித்த எத்தனையோ பட்டதாரிகட்கும் பயன்பெற்று தந்த -தந்து வரும்

"KALAM'S INSTITUE: BASIC LEVEL GRAMMAR TEACHING"என்ற சிறு நூல் ஒன்றும் இயற்றி இலவசமாக இணய தளம் மூலம் உலகத்தமிழர்கட்கு அனுப்பியுள்ளேன்.
அடுத்து வரும் அஞ்சலில் அவ்விரண்டு படைப்புகளும் தங்கட்கு- என் முன்னாள் பள்ளி என்ற தாய்மடிக்கு சமர்ப்பிக்கின்றேன்.
நன்றியுள்ள முன்னாள் மாணவன்


-"கவியன்பன்"கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com


பின் குறிப்பு:
தங்கர்பச்சன் படைத்த "பள்ளிகூடம்" திரைப்படம் பார்த்தபோழ்து என் உள்ளம் என் தாய்மடியான அதிரை கா.மு.பள்ளியை நினைத்து அழுது விட்டேன்; இன்று முன்னாள் மாணவர் சங்கம் அமைத்து அதில் நானும் அங்கம் என்பதை நினத்து ஆனந்த கண்ணீர் விட்டேன். உண்மையாக, ஒவ்வொரு முறை விடுமுறையில் நான் பிறந்த ஊராம்- தமிழகத்தில் சிறந்த ஊராம் "அதிரா(ம்)" ப்ட்டினத்துக்கு வரும்பொழுதெல்லாம், என் பள்ளியினுள்ளேச் சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டு பழைய நினைவுகளை உள்ளத்தில் ஏந்தி வருவேன்; அது சமயம்- தாயின் மடியில் தலை வைத்த சுகமான உள்ளுணர்வே எனக்கு ஏற்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இம்முறை விடுமுறையில் வரும்பொழுது
முன்னாள் மாணவர் சங்கத்தில் இணய உள்ளேன் என்பதை நினைத்தாலே இனிக்கின்ற நினைவலைகளுடன்................................

No comments: