சேது பொறியியல் கல்லூரி 10_வது பட்டமளிப்பு விழா அமைச்சர் அன்பழகன் பங்கேற்பு
மதுரை,பிப்.2
சேது பொறியியல் கல்லூரியின் 10_வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பழகன் கலந்துகொண்டு மாணவ_மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 10_வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் முகமது ஜலீல் பட்டமளிப்பு விழாவை துவக்கிவைத்து வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் அ.செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்த விழாவில் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் கலந்துகொண்டு 250 மாணவ_மாணவிகளுக்கு பொறியியல் பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:_
தமிழ்நாட்டில் அண்மையில் கடந்த 50 ஆண்டு காலத்தில் நடைபெறாத வளர்ச்சி கல்வித்துறையில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐ.டி.துறை உலக அளவில் இந்திய நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட ஐ.டி.துறையில் கைதேர்ந்த இளைஞர்கள் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஐ.டி.துறையில் சிறந்து பணியாற்றி வருகிறார்கள். இது நமது மாநிலத்தை உலக அளவில் அறியச்செய்துள்ளது. ஒரு காலத்தில் பலருக்கு கல்வி மறுக்கப்பட்டது.
இன்னார்தான் கல்வி அறிவு பெறவேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு இருந்தது. அதையெல்லாம் மாற்றி தற்போது யார் வேண்டுமானாலும் கல்வியை பெறலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வியை புகுட்டுவது ஒரு அரசின் கடமை. கல்வி யாருக்கும் மறுக்கப்பட கூடாது என்ற நிலை இப்போது உள்ளது. எனவே இதை பயன்படுத்தி அனைத்து இளைஞர்களும் முன்னேற வேண்டும். அதற்கான முயற்சியில் ஞிங்கள் ஈடுபட வேண்டும். இங்கு படித்து பட்டங்களை பெற்றுச்செல்லும் ஞிங்கள் உங்களது தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ஏராளமாக சம்பாதித்து வீட்டையும் நாட்டையும் வளப்படுத்த எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பட்டமளிப்பு விழாவில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதன்மை கல்வி அதிகாரி சீனி முகைதீன் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை தலைவர் கிறிஸ்டோபர் ரமேஷ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment