வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Monday, February 2, 2009
துபாயில் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர் வெளியீடு
துபாயில் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர் வெளியீடு
துபாயில் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சிறப்பு மலர் வெளியீட்டு விழா 30.01.2009 வெள்ளிக்கிழமை துபாய் தேரா கேரளா முஸ்லிம் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு பத்திரிகையாளர் கமால் பாஷா தலைமை வகித்தார். ஸபியுல்லாஹ் இறைவசனங்களை ஓதினார். எம். சபியுல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். ஜெ.முஹம்மது அலி இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை குறித்த அறிமுகவரை நிகழ்த்தினார்.
பொறியாளர் ஷேக் முஹம்மது இந்திய முஸ்லிம் நல் அறக்கட்டளையின் கல்விப் பணிகளை விரிவாக எடுத்துரைத்தார். அவர் தனது உரையில் கல்வி உதவி, வட்டியில்லாக் கடன் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதை விரிவாக விளக்கினார்.
மவ்லவி நூருல்லா ஹஜ்ரத் பதினொரு நபர்களுடன் துவங்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்று உயர்நிலையினை அடைந்துள்ளது குறித்து பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி சமுதாய மேம்பாட்டிற்கு கல்வியின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். கல்வி விழிப்புணர்வு மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து சிறப்புற நடத்தி வர வாழ்த்தினார்.
சிங்கப்பூர் ஆடிட்டர் ஃபெரோஸ் கான் கல்வியின் முக்கியத்துவ குறித்து நீண்ட உரை நிகழ்த்தினார். அதில் ஆசிரியர்கள் சமூக அக்கறையுடன் செயலாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மனிதன் புனிதனாக கல்வி மிகவும் அவசியமான ஒன்று என்றார்.
இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு மலரை ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் வெளியிட முதல் பிரதியினை தொழிலதிபர் அபுதாஹிர் பெற்றுக்கொண்டார்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஆடிட்டர் ஃபாரூக், மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா,அய்மான் கல்லூரி செயலர் சையது ஜாபர், சாதிக் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment