தக்கலையில் அன்புடன் அல்லாவுக்கு................. நூல் வெளியீட்டு விழா
தக்கலை பீர் முஹம்மது அப்பா அரங்கில் 2009 பிப்ரவரி 6 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அன்புடன் அல்லாவுக்கு.... எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
நூல் வெளியீட்டு விழாவிற்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி பேராசிரியர் மு. அப்துல் சமது தலைமை தாங்குகிறார்.
ஏ. அப்துல் ரவூஃப் வரவேற்புரை நிகழ்த்துகிறார். மவ்லவி எச்.எம். சித்தீக் கிராஅத் ஓதுகிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. முஹம்மது இஸ்மாயில், நாகர்கோவில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ரால்ஃப் செல்வின், ஹாஜி என்.எஸ்.எஸ். தாஜுத்தீன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் கா. முஹமம்து ஃபாரூக், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் முனைவர் ஜேம்ஸ் ஆர். டேனியல், கவிஞர் தக்கலை ஹலீமா உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகின்றனர்.
கவிமாமணி பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் நூல் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.
நூலின் பிரதிகளை எஸ். முஹம்மது முஸ்தபா,துபாய் ஈடிஏ அஸ்கான் பொறியாளர் எம். ஷாகுல் ஹமீது, ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் சந்தான குமாரசுவாமி, என்.எஸ். ஹமீது, எஸ். ஷேக் பரீது, மக்காய்பாளையம் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஏ.பி.எம். ராபி, டிடிஎன் தொலைக்காட்சி உரிமையாளர் ஏ.எஸ். ஜஹபர் சாதிக் உள்ளிட்டோர் பெறுகின்றனர்.
நூலாசிரியர் எம்.ஏ. ஷாகுல் ஹமீது ஏற்புரை நிகழ்த்துகிறார். எச். ஹாமீம் முஸ்தபா நன்றி கூறுகிறார். நாவலாசிரியர் எம். மீரான் மைதீன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்கிறார்.
இந்நூல் லைலா பதிப்பகம், 6 35 முகில் இல்லம், இராஜலட்சுமி நகர், பெருவிளை ரோடு, நாகர்கோவில் 3 என்ற பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. வெளியீட்டு விழாவில் நூல் ரூ. 100 க்கு கிடைக்கும்.
No comments:
Post a Comment