பெற்றோருக்கான டிப்ஸ்... தேர்வுக்குத் தயாராகும் பிள்ளைகளை திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள். வீடு மாற்றுதல், சுண்ணாம்பு அடித்தல் உள்ளிட்ட வேலைகளை தள்ளிப் போடுங்கள்.
கலை, ஓவியம், விளையாட்டு போன்ற வற்றில் உங்கள் பிள் ளையின் கவனம் சிதறலாம். நீங்கள் தான் பக்குவமாகப் புரிய வைக்க வேண்டும்.வழக்கத்தை விட அதிக, "ஸ்ட்ரெய்ன்' எடுத்துப் படிப்பதால், சீக்கிரமே சோர்வடைந்து விடுவர்.
எனவே, சத்தான உணவையே கொடுங்கள். முக்கியமாக, நேரம் தவறாமல் சாப்பிட வைக்கிற பொறுப்பு உங்களிடம் தான் உள்ளது.புரதச் சத்துள்ள பருப்பு வகைகள், காய்கறிகள், கீரை வகைகள்(வல்லாரை கீரை ஞாபக சக்தியைத் தரவல்லது) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.அவர்களுக்கு திடீரென ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட் டால், "இந்த நேரம் பார்த்து இப்படி ஆகிடுச்சே' என்று புலம்ப வேண்டாம். "முதல்ல ரெஸ்ட் எடு; உடம்பு சரியான பிறகு படிச்சுக் கலாம்' என்று சொல்லுங்கள்.படிக்கிற பிள்ளைகளின் பக்கத்தில் உட் கார்ந்து கொண்டு, "அதை முடிச்சிட்டியா? இது தானே படிக்கிற?' என்றெல்லாம் கேட்ப தை விடவும், ஏதேனும் கை வேலை செய்தபடியோ, புத்தகம் படித்தவாறோ சும்மா அவர்களுக்கு, "கம்பெனி' கொடுப்பது அதிக பலன் தரும்.நீங்களும், வீட்டில் உள்ள அனைவரும் தருகிற ஊக்கமும், நம்பிக்கை வார்த்தைகளும் தான் பிள்ளைகளுக்கு கூடுதல் சக்தியைத் தரும். எனவே, கொஞ்சம் கூட சோர்ந்து போகாமல் தொடர்ந்து அவர் களை உற்சாகப் படுத்துங்கள்.
No comments:
Post a Comment