Monday, December 15, 2008

துபாய் ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் எண்டிவிவி அரேபியா நேர்காணல்

Please note that the Interview featuring our MD which was aired on NDTV Arabia has been put up on the homepage of www.etaascon.com .



You can download the video from the website to view the same.





Regards



Corporate Communication Team



From: corpcomm
Sent: Thursday, November 20, 2008 1:18 PM
To: 'all@etaascon.com'; 'adhall@etaascon.com'
Subject: FW: Communication to all Employees





Reminder to all employees.





Dear Colleagues,





Pls note that our MD will be appearing for an interview called ‘Big Fish’ which will be aired on NDTV Arabia this Friday (21st Nov) at 8:30pm.



The show primilarly highlights on interviewing several senior officials in the UAE who are mostly CEO’S / MD’S of key companies based in Dubai focusing on their business, business values, business morals, industry status, etc.



If it is convenient to yourself please watch the programme.





Regards



Corporate Communications Team

பரமக்குடியில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

பரமக்குடியில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன

பரமக்குடியில் தியாகத்திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 09 டிசம்பர் 2008 செவ்வாய்க்கிழமை மாலை கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கீழமுஸ்லிம் ஜமாஅத் சபை தலைவர் எஸ்.என்.எம். முஹம்மது யாக்கூப் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை செயலாளர் எஸ்.என்.ஏ. முஹம்மது ஈசா, மேல முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அப்துல் கபூர், ரயில்வே பள்ளி தலைவர் ஆர் எஸ் ஒய். பஷீர் அஹ்மது, தெற்குப் பள்ளி தலைவர் முத்து நைனார், கொல்லம்பட்டரை ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது, பாரதி நகர் ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஏ கமால், எஸ்.ஆர்.பட்டணம் ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஜவ்வாதுப் புலவர் மன்ற தலைவர் டபிள்யூ. நூருல் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பள்ளி மாணவர்களுக்கு ஹதிஸ் ஒப்பித்தல், திருக்குர்ஆன் மனனப் போட்டி, பாங்கு சொல்லும் போட்டி,கயிறு இழுக்கும் போட்டி,இறகுப் பந்து
போட்டி, இஸ்லாமியப் பாடல்கள் போட்டி உளிட்ட எட்டு போட்டிகள் பரமக்குடியில் உள்ள ஏழு மதரஸா மாணாக்கர்களுக்கு நடத்தப்பட்டன. இதில் சுமார் 160 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி பரமக்குடி எஸ்.டி. கூரியர்ஸ் உரிமையாளர் காசிம் முஹம்மது, கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஜி.எம். ஷேக் தாவுது, ரோட்டரி சங்க தலைவர் சாதிக் அலி,நகர் மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், அஹமது மீர் ஜவ்வாது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பரமக்குடி நகர் தலைவர் ஏ.பி. சீனி அலியார், கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளி தாளாளர் சாதிக் பாட்சா, கேஜே மேல்நிலைப்பள்ளி தாளாளர் அப்துல் ரஹீம், கேஜே நர்சரி தொடக்கப்பள்ளி தாளாளர் முஹம்மது உமர், தொழிலதிபர் கான், சலாம் டிராவல்ஸ் அதிபர் அப்துல் சலாம், பரமக்குடி இஸ்லாமிய இளைஞர் சபையின் ஆலோசகர் வழக்கறிஞர் ஒலி முஹம்மது, புரபஷனல் கூரியர்ஸ் அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கேடயமும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஇ, முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பஇ, மாவட்ட உலமாக்கள் சபை தலைவர் மௌலவி வலியுல்லாஹ் நூரி, கீழப்பள்ளி இமாம் மௌலவி ஜலாலுதீன் மன்பஇ, இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை
பேராசிரியர் முனைவர் எஸ். ஆபிதீன், ஹாஜி அலி பிர்தௌஸி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் சமூக அக்கறையுடன் உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியினை ஜவ்வாதுப் புலவர் மன்ற செயற்குழு உறுப்பினர் ஜெ. ஹிதாயத்துல்லாஹ் தொகுத்து வழங்கினார். ஜவ்வாதுப் புலவர் மன்ற செயலாளர் அஸ்கர் அலி நன்றியுரை நிகழ்த்தினார்.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே. ஏ. ஹிதாயத்துல்லாஹ் (9750105141) மற்றும் ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது அரிதானது. பெருநாளன்றே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது சமுதாய மாணாக்கர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது என பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இது போன்ற நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற தங்களது அவாவினை ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Excellence in report writing

Excellence in report writing

You may have to learn how to prepare a report at some stage or the other in your career. Here are some guidelines.

Any one who wishes to become a good writer should endeavour, before he allows himself to be tempted by the more showy qualities, to be direct, simple, brief, vigorous, and lucid.

H.W. Fowler

You will have to write reports at some stage or the other in your career. Even a short technical report if written shabbily may damage your reputation in your organisation. The time spent to learn how to prepare a good report is never a loss.

Any report is a formal write-up. It may be on topics that cover different areas such as accident; employee appraisal; enquiry; feasibility; industrial relations; investigation; maintenance of equipment; progress of work; or research.

Any report should be prepared with the reader in mind. It is desirable that you follow a simple format that facilitates easy comprehension. If your report goes to a busy executive, a summary will prove to be useful. Any good report will have a structure comprising the following elements:
•Title: Precise; should tell what it is. There can be a contents page that shows the name of the report, its subject, authors, and the date of submission.

•Content list: List of items in the report, sections, sub sections, list of exhibits if any, and page numbers
•Introduction/ Preface: A short write-up that explains the background, the reason why it has been prepared, and acknowledgement of those who have helped in the preparation. Sometimes a preface is added by the authority that accepts and uses the report, before its publication.

•Abstract: Essential summary or overview of the contents and the prime message. This may be written after the preparing the body of the report.

•Method: Style adopted in gathering details and processing them.
•Results: The main findings. These may be presented using graphics as well.
•Discussion: Analysis of the results, their relevance, and implications. This may be a major component of your report. Practical suggestion for further steps can appear in this part..
•Conclusions: This is the final part of the main body. It can carry a pointer to the future.
•References
•Appendices: Information either too long or too detailed to be included in the main text of the report
In the case of reports to be published for wide circulation, you have to plan the type of printing, paper, colours, and so on. A suitable disclaimer may also be necessary. The glitter of the publication should however not be at the expense of the contents.
Planning a report
You cannot just jump into writing a report, without adequate planning and preparation. The reason why you have been asked to prepare a report has to be kept in mind, and further steps planned in tune with the specific requirements. Often the authority that has asked you to make a report may not have a clear picture of the objectives of the report. In such cases, you will have to seek clarification. A clear brief is essential.. Without this, your efforts may be found to be futile in the end.
The objectives, time available for submission of the report, its approximate length and nature of contents may have to be discussed beforehand. With this background, you may prepare a rough picture of the report in your mind.
The next stage is vital. Analyse the objectives in detail, and plan the strategies for gathering details in respect of each objective.
An outline of the contents will have to be drafted. This is the skeleton of your report. Flesh and blood will have to be added in the form of data, analysis, arguments, and conclusions.
If you have any doubts regarding the style of the report expected by the authorities, you may have a preliminary discussion on the well structured outline and the methodology contemplated.
Supporting facts
Any argument that you may put forward should be backed by facts. No report will be considered sound, unless it is well documented and supported by reliable data and convincing evidence. This takes us to the need for garnering and compiling information. This activity is sometimes termed research. You may have to explore various avenues such as perusing related documents and archives, using libraries, browsing the Internet, and interviewing people. Preparing a list of people or organisations to be contacted, and the type of information expected from each may be written down. Making a time schedule is essential, if the report has to be finished on time. You will have to stick to the schedule, perhaps with minor allowances..
Your efforts may yield too much of information. You will have to separate the wheat from the chaff, analyse the material, and come to logical conclusions. The physical part of preparation may be done following the usual pattern and format expected from you.
It is a good idea to go through a few reports that have been accepted by your organisation, before beginning to draft. The language that you use should invariably be simple. Clarity is of supreme importance in this type of business document.
Do not go for fancy fonts. Make your report look professional and elegant. Never think that your first draft is sufficient. You will find that there is ample room for revision, as you go through your draft repeatedly. Follow the basic structure of reports indicated earlier. The pages should be numbered, as also the paragraphs for easy reference.

"Respond to 26 Nov - Take Immediate Action"

"Respond to 26 Nov - Take Immediate Action"

hosted on the web by PetitionOnline. com, the free online petition
service, at:

http://www.Petition Online.com/ 26novAct/

தியாகத் திருநாள் - நினைவுகள்

தியாகத் திருநாள் - நினைவுகள்

(கவிஞர் ப.அத்தாவுல்லா)




பரந்து கிடந்தது அந்த பாலைப் பெருவெளி. கண்ணெட்டிய தூரம்வரை மண்கொட்டிக் கிடந்தது. அந்தப் பெருமகனாரும் அவர்தம் துணைவியாரும் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு பால்மணம் மாறாத அந்த பச்சிளம் பாலகர். இறைவன் இட்டுவைத்த இலக்கு நோக்கி அவர்களது பயணம் அமைந்திருந்தது. தமது எந்த சொந்த விருப்பங்களுக்காகவும் தம்மை விலைப்படுத்திக் கொள்ளாத அந்த நேயர் குறிப்பிட்ட இடம் வந்ததும் தம் பயணம் நிறுத்தினார். அவர்களது தேவைக்காகக் கொஞ்சம் கனிகளையும் தோற்பை சுமந்த குடிநீரையும் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தார்.




அவர்களைக் குடியமர்த்திய அந்தப் பெருவெளியில் அந்த மரத்திற்கு அருகில் இந்த உலகத்தின் மையப்புள்ளி, சற்றே உயர்ந்த மணல்மேடாய் தெரிந்தது. திரும்பி நடந்த அந்தப் பெருமகனாரை நோக்கி அவர் துணைவியார் வினவினார்.




‘எங்களை இங்கே விட்டுவிட்டுச்செல்லுமாறு இறைவன்தான் உங்களுக்குக் கட்டளையிட்டானா?’




‘ஆமாம்’




‘அப்படியானால் அவன் எங்களைக் கைவிட மாட்டான்’ – உறுதிபட எழுந்தது அன்னையின் குரல். அவர்களை விட்டுச்சென்ற அந்த இடத்தில் இரு மலைக்குன்றுகள் நின்றன. பக்கத்தில் அந்த மணல்மேடு இருந்தது. அந்த மணல்மேடு ஆதியிறை ஆலயம் ‘கஅபா’.




அந்தப் பெருமகனார் பெயர் இபுராகிம் (அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்), அவர் துணைவியார் பெயர் ஹாஜரா (அலை). அந்தப் பாலகர் பெயர் இஸ்மாயில் (அலை).




திரும்பி நடந்த அந்தப் பெருமகனார் மலைக்குன்றுகளைக் கடந்ததும் தம் முகத்தை அந்த மணல்மேட்டின் பக்கம் திருப்பினார். இரு கரங்களையும் விரித்து இறைவனிடம் இறைஞ்சினார்.




‘இறைவனே! யாருமற்ற, விவசாயமுமில்லாத இந்த பாலைப் பள்ளத்தாக்கில் என் சந்ததிகளைக் குடியமர்த்தி இருக்கிறேன் - தொழுகையை நிலைநிறுத்துவதற்காக! மக்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கித் திருப்புவாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!’




சில நாட்களில் கொண்டு வந்த உணவுப்பொருளும் குடிநீரும் தீர்ந்தது. அதனால் நீரைத் தேடவேண்டிய அவசியம் உண்டாயிற்று. குழந்தை பசியால் அழுதது. தாகத்தில், வெயிலின் வேகத்தில் அழுதது. அழுத குழந்தையின் தாகம் தீர்க்க நீரில்லை. அன்னையோ மிகக் கவலையுற்றார். பக்கத்தில் நின்றிருந்த இருமலைக் குன்றுகளையும் நோக்கினார். ஒருவேளை அங்கே ஏதேனும் நீரூற்று இருக்கக் கூடுமோ என ஐயுற்றார். முதலில் ஒரு மலைக்குன்றில் ஏறினார்கள். அதன் பெயர் ஸஃபா. அங்கே நீரில்லை. பிறகு அடுத்த மலையில் ஏறினார்கள். தேடினார்கள். அங்கும் நீரில்லை. அதன் பெயர் மர்வா. இரு குன்றுகளிலும் ஏறித் தேடியும் நீரில்லாமல் வாடினார்கள்.




மீண்டும் குழந்தையின் நிலையறிய ஓடினார்கள். அங்கே கண்ட அந்த அதிசயக் காட்சியில் மனம் தேறினார்கள். தம் கண்களையே நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் நோக்கினார்கள். அங்கே குழந்தையின் காலடி உதைப்பில், வானவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர்களது காலடியிலிருந்து நீர் பீறிட்டுப் பாய்ந்து கொண்டிருந்தது. அதிசயித்த அன்னை, நீரை அள்ளியள்ளிப் பருகினார்கள். இறைவனின் அற்புதப் பேரதிசயத்தில் மனம் நிறைந்து உருகினார்கள். நீர்ப்பை நிறைந்திட நீரெடுத்துப் பெருக்கினார்கள். தம் கைகளால், பாலைமணல் கொண்டு சிறு கரை கட்டி, நீரை அணை கட்டினார்கள் - ‘ஜம் ஜம்’ – நில் நில் - என்று தம் வாயுரையால் பொங்கிப் பெருகிய நீரை கரைகட்டினார்கள்.




‘இறைவன், இஸ்மாயில் (அலை) அவர்களின் அன்னைக்குக் கருணை புரிவானாக! அன்று மட்டும் அன்னை ஹாஜரா ‘ஜம்-ஜம்’ ஊற்றுக்குக் கரை கட்டவில்லையெனில் அது பொங்கிப் பெருகி இந்த பூலோகமெல்லாம் நனைத்திருக்கும்.’ என்று பின்னாளில் பொருள் விளக்கம் தந்தார் நபிகள் பெருமானார் நாயகம் (ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம்) அவர்கள்.




அவர்கள் தங்கியிருந்த அந்த பாலைப் பெருவெளிக்கு ‘மக்கா’ என்று பெயர். பூமியிலிருந்து சற்றே உயர்ந்து மணல் திட்டாய் காணப்பட்ட அந்த ஒளிப் புள்ளிதான் பூமிப்பந்தின் நடுப்புள்ளியாய் இலங்கும் ஆதியிறை ஆலயம் ‘கஅபா’. வானவர் அல்லது அக்குழந்தை, இருவேறு கருத்துக்கள், காலடியில் இருந்து பீறிட்டுக் கிளம்பிய அந்த நீரூற்றுதான் வற்றாத ஜீவனாய் இன்னும் ஊறிக் கொண்டிருக்கும் வசந்தத் தேனூற்று ‘ஜம்-ஜம்’. மக்காவுக்கு மாநிலத்தின் மார்பிடம் என்றொரு அடைமொழிப் பெயர் உண்டு. ஒருவேளை ‘ஜம்-ஜம்’ எனும் பால் அங்கு சுரந்து கொண்டிருக்கும் காரணமாயிருக்குமோ?




இபுராஹீம் நபிகள் இறைவனின் பேரன்புக்குப் பாத்திரமான பெருந்தகையாளர். அவருக்கு இரு மனைவியரை அளித்து இறைவன் சிறப்புச் செய்தான். மூத்தவர் பெயர் ஸாரா(அலை). இளையவர் ஹாஜரா(அலை). அவர்கள் ஓர் அரச குலத்துப் புறா. இபுராஹீம் நபிகளோடு இணைந்து நடந்த நிலா, மூத்தவருக்கு இஸ்ஹாக்(அலை) அவர்களும், இளையவருக்கு இஸ்மாயில்(அலை) அவர்களும் மகவாகப் பிறந்தனர். இந்த இளையவர் வழி அநேக அற்புதங்களை இறைவன் நடத்திக் காட்டினான்.




இறைவன் கட்டளைப்படி மக்கா எனும் மணிநிலத்தில், தம் கண்ணின் மணிகளைக் கழற்றி வைத்துவிட்டு இபுராஹீம் நபிகள் சொந்த நாடு திரும்பினார்.




ஹாஜரா அன்னையாரும் இஸ்மாயில் இளஞ்சிசுவும் இறையின் காவலில் இருந்தனர். தமது இதயநேசர் வேண்டிய இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொள்ளாமலா இருப்பான்? மக்காவின் பாதையில் வழிநடந்து செல்லும் வழிப்பயணிகள் வழக்கமாக நடந்து செல்லுகின்ற அந்தப் பாட்டையில், ஒரு புதுமையைப் பார்த்தனர். நீரிருக்கும் இடம் மட்டுமே வட்டமிட்டுப் பறக்கும் தண்ணீர்ப்பறவை, ‘ஜம்-ஜம்’ ஊற்றுருகே வட்டமிடுவது கண்டு வியப்புற்றனர். இவ்வளவு காலமாக இந்தப் பாதையில் வருகிறோம். இதுவரை இங்கே நீர் இருந்ததில்லையே என்று தமக்குள் வினா விடுத்துக் கொண்டனர். அந்த அதிசயம் என்னவென்று காண வந்திருந்தவர்களில் ஓரிருவரை அனுப்பி வைத்தனர். அவர்கள் கண்டு வந்து சொன்ன நீரூற்றுபற்றி அறிந்து மகிழ்வுற்றனர். அன்னை ஹாஜராவிடம் தாங்களும் அங்கு வந்து தங்கி வாழ அனுமதி கேட்டனர். மக்களுடன் சேர்ந்து வாழ விரும்புவதில் ஆர்வம் கொண்ட அன்னையார் அனுமதி அளித்தார். ஆயினும் நீரூற்றில் அவர்களுக்கு எந்தப் பங்கும் தரமுடியாது என்றும் எடுத்துரைத்தார். அந்நீரை பயன்படுத்திக் கொள்வதில் தடையில்லை என்று உறுதிமொழியும் உடன் தந்தார். பிறகென்ன?




நீரிருக்கும் இடம் ஊரிருக்கும். ‘ஜம்-ஜம்’ நீர் வந்தபிறகு மக்காவில் ஊர் வந்தது. அங்கு முதலில் வந்து குடியேறியவர்கள் ‘ஜர்ஹ{ம்’ இனத்தார் என வரலாற்று ஆசிரியர்கள் வடித்து வைத்திருக்கின்றனர்.




இளவல் இஸ்மாயில் வாலிபராய் வளர்ந்தார். அழகும், இளமையும், பொலிவும் புதுமையும் பெற்று மிளிர்ந்தார். தக்க வயது வந்ததம் குடியேறிய குலத்தாரிடம் பெண் முடித்தார். இறை நாட்டப்படி மீண்டும் நபி இபுராஹீம் அவர்கள் மக்கா வந்தார். அவர் வந்த வேளை, இளையவர் இல்லத்தில் இல்லை. அவர்களது மனைவி மட்டும் இருந்தார். அவர்களிடம், அவர்களது நிலைபற்றிக் கேட்க அவர்கள் சிரமத்தில் இருப்பதாக பதில் தந்தார். இபுராஹீம் நபிகளாரோ அவரிடத்து இளையவர் வந்தால் தமது ‘ஸலாம்’ உரைக்கும்படி கூறி, ‘வீட்டு நிலைப்படியை மாற்றி வருக’ எனக் கூறுமாறு கூறிச் சென்றார்.




இஸ்மாயில் நபிகளார் இல்லத்தில் நுழைந்தபோது தமது தந்தையார் இறைத்தூதர் இபுராஹீம் நபிகள் அவர்கள் வந்து சென்றது அறிந்து, உள்ளுணர்வில் அது பற்றி வினவினார். அவரது மனைவியாரும் நடந்தது பற்றி எடுத்துரைத்தார். ‘வீட்டு நிலைப்படி என்பது நீதான். உன்னை மணவிடுதலை செய்து விடுகிறேன். அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள்’ என்று கூறி அம்மங்கையை அவரது இல்லத்துக்கு அனுப்பி வைத்தார். மீண்டும் அதே குலத்திலிருந்து இன்னொரு பெண்ணை மணமுடித்தார்.




இறை நாடியவரை பொறுத்திருந்த இபுராஹீம் நபிகள் மீண்டும் மக்கா வந்தார். அப்போதும் இஸ்மாயில் நபிகள் இல்லத்திலே இல்லை. துணைவியார் இருந்தார்கள். வந்த முதியவரை முகமலர்ந்து வரவேற்றார்கள். நன்கு உபசரித்தார்கள். இறைச்சியும் நீரும் கொண்டு தந்து அன்பளித்தார்கள். தங்கள் வாழ்க்கை நிலை இறையருளால் மிக நல்ல நிலையில் இருப்பதாக ஒப்பித்தார்கள். அவர்களிடம் ‘இஸ்மாயில் வந்தால் என் ஸலாம் கூறுங்கள். வீட்டு நிலைப்படியைப் பேணி நிலைப்படுத்துங்கள் என்று கூறுக’ எனக் கூறிச் சென்றார்கள்.




முன்னர்போலவே - இறை உதிப்புணர்வால் - இல்லம் வந்த இஸ்மாயில்(அலை) அவர்கள் தமது மனைவியாரிடம் வினவ, அவர்களோ நடந்தவை அனைத்தையும் எடுத்துச் சொன்னார்கள். தந்தையார் கூற்றுப்படி அந்த மாதரசியைத் தங்களுடனேயே தங்க வைத்துக் கொண்டார்கள், தக்க வைத்துக் கொண்டார்கள். அன்னை ஹாஜரா இறையடி சேர்ந்திருந்தார்கள. காலம் கடந்து சென்றது. மீண்டும் இருவரும் இணையும் காலம் நெருங்கி வந்தது. ‘ஜம்-ஜம்’ ஊற்றருகே நின்றிருந்த பெரிய மரத்தின் நிழலில் இளையவர் அமர்ந்து அம்பொன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தார். மீண்டும் பெருமகனார் அங்கே வந்தார்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு இருவரும் சந்தித்தார்கள். நெடுநாட்களுக்குப் பிறகு பாசமுள்ள இறைத் தூதர்களாகிய தந்தையும் மகனும் சந்தித்தால் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி நடந்து கொண்டார்கள். இறைத்தூதர்களாக இலங்கியவர்கள் அவர்கள். இறை கட்டளைகளையே வாழ்வாக்கிக் கொண்டவர்கள் அவர்கள். இறை கட்டளைக்கு இம்மியும் மாறு செய்யாதவர்கள் அவர்கள். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அதில் மண்டிக் கிடந்தது. உள்ளன்பும் உவகையும் பின்னிக் கிடந்தது. கனிவும் கருணையும் தேங்கிக் கிடந்தது.




பின்னர் இபுராஹீம் நபியவர்கள் தமது மகனாரை நோக்கிக் கூறலானார்கள், ‘இஸ்மாயிலே! இறைவன் எனக்கு ஒரு செயலைச் செய்யச் சொல்லிக் கட்டளையிட்டிருக்கிறான். நீ அதில் எனக்கு உதவ முடியுமா?’ என்பதாகக் கேட்டார்கள். ‘இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் நிறைவேற்றுங்கள். நிச்சயம் நான் அதில் உங்களுக்கு உதவுகிறேன்’ என்று பதிலளித்தார்கள்.




அப்போது இபுராஹீம் நபி அவர்கள் சுற்றியிருந்த இடங்களில் சற்று உயரமாக, சற்றே மேலோங்கியிருந்த மணற்திட்டைக் காட்டிச் சொல்லலானார்கள், ‘இங்கே நான் இறையில்லத்தைப் புதுப்பித்துக் கட்டி எழுப்ப வேண்டும்’. இஸ்மாயில் நபியவர்கள் கற்களைக் கொண்டு வந்து தரவும் அவர்கள் கட்டவும் தொடங்கினார்கள். ஓரளவு உயரம் வந்தபொழுது ‘மகாமே இபுராஹீம்’ என்று சொல்லப்படும் அந்த கல்லைக் கொண்டுவந்து வைத்தார்கள். இபுராஹீம் நபியவர்கள் அதன்மேல் ஏறிநின்று கொண்டு கட்டலானார்கள்.




இதற்கு முன்னால் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதாவது இபுராஹீம் நபியவர்கள் கனவொன்று கண்டார்கள். தமது அருமை மகனை அறுத்துப் பலியிடக் கனவு கண்டார்கள். இறைவன் தூதராக இயங்கிய அந்தப் பெருமகனாரிடம், மற்றோரிடம் இல்லாத இனிய பண்பொன்று மிளிர்ந்தது. அது கனவாயினும் அல்லது இறையறிவிப்பாயினும் எதுவாயிருப்பினும் எந்தக் கேள்வியும் கேட்காமல் உடனடியாக நிறைவேற்றி விடுவதுதான் அது. கனவு கண்டபிறகு மகனைச் சந்தித்ததும், அவரிடம் இதுகுறித்து வினவினார்கள். ‘அருமை மகனே! உன்னை அறுத்து பலியிடுவதாகக் கனவொன்று கண்டேன். உன் விருப்பம் எதுவோ?’. தந்தை இபுராஹீம் நபியின் அடிச்சுவட்டைப் பின்பற்றியொழுகும் அந்த அற்புதர் இஸ்மாயில் நபிகள், ‘இறைவன் விருப்பம் அதுவேயாயின் உங்களுக்கு, உங்கள் ஆசைக்கு அடிபணியும் பிள்ளையாகவே என்னைக் காண்பீர்கள்’ என்றார்கள். இறைவன் கட்டளையல்லவா? எனவே அப்படி வந்தது பதில். இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என்றெல்லாம் விபரீதமாகத் தங்கள் புத்தியை தீட்டாமல் மகனைப் பலியிட கத்தியைத் தீட்டியவர் அந்தக் காருண்யர்!




பக்கத்திலே ‘மினா’ வெறும் மைதானம். அங்கே அழைத்துச் செல்கிறார்கள அருமை மைந்தனை. பளபளப்பாகத் தீட்டப்பட்ட கத்தி கைகளில். தந்தையார் ஆணைக்குத் தலை தாழ்த்தி தரும் தனயன். பக்கத்திலே பாறையொன்று. இறைவன் இட்டது முடிக்கும் நல்ல நெறிப்பெற்றியர் மகனது கழுத்தில் கத்தியை வைத்து அழுத்துகிறார்கள். அவர்களது வீரத்திற்கும் முறுக்கேறிய வலிமைக்குமாக இணங்கி அறுபட வேண்டிய உயிர் முடிச்சு இன்னும் இன்னும் விறைத்து நிற்கிறது. கழுத்தில் கத்தி வைக்கின்ற போதெல்லாம் அறுந்து போகவில்லை கழுத்து. மாறாக, கத்தி குரல்வளை விட்டும் நழுவிப் போகிறது. என்ன அதிசயம்! என்ன அதிசயம்! வலிமை போயிற்றே! கரம் வலுவிழந்து போனதோ? முதுமையில் கரங்கள் தளர்ந்து போனதோ? இறiவா என்ன இது வேதனை? நீ காட்டித்தந்த கனவினை நனவாக்க முடியாமல் போகுமோ என்றெல்லாம் இறைபக்தியில் கனிந்த அந்தப் பெருமகனாரின் மனம் உருகுகிறது. கத்தி கூர்மைப்படவில்லையோ என்று சோதிக்கும் முகத்தான பக்கத்தில் நின்றிருந்த பாறைக் குன்றின்மேல் ஓங்கி அடிக்கிறார்கள். பாறை பிளந்து விடுகிறது. அப்போது வானின்றும் கொழுத்த ஆடொன்று இறங்கி வருகிறது. அதோடு இறைச் செய்தியும் வருகிறது. அதன்படி அந்த ஆட்டை மட்டும் அறுத்து பலியிடுகிறார்கள். இறைச் சோதனையில் வென்று காட்டுகிறார்கள்!




அதற்குப் பிறகுதான் கஅபா புனித ஆதியிறையாலயம் புதுப்பித்துக் கட்டப்பட்டது. அதற்கு முன்னாலும் கஅபா இருந்தது. வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று, இன்ன பிற இயற்கையின் சீற்றங்களால் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுப் போயிற்று. இறைவேதம் அல் குர்ஆன், கஅபா இறையாலயத்தை, உலகத்தின் முதல் தோன்றிய ஆதியிறை ஆலயமாகச் சிறப்பித்துப் பேசும். வரலாற்று ஆய்வாளர்கள் கருத்துப்படி இதுவரை ஏறத்தாழ பன்னிரு முறைகள் கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்கிறது. அதன் முக்கிய அடித்தளமாக இபுராஹீம் நபிகள் கட்டிய அவர்களால் கட்டப்பட்ட அந்த சுற்றுச் சுவரே அடிப்படையாக அமைந்தது.




இரு நபிமார்களும் இறையில்லத்தைக் கட்டி முடித்தனர். பின்னர் இறையிடம் இறைஞ்சினர்! ‘இறைவனே! இந்த புனிதப் பணியை எம்மிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே நன்கு அறிந்தவனாகவும் செவியேற்பவனாகவும் இருக்கிறாய்! என்று திரும்பத் திரும்பக் கூறியபடி அவ்வாலயத்தைச் சுற்றி வட்டமிட்டு நடந்தனர்.







இபுராஹீம் நபி இன்னும் இறைஞ்சினார்கள்! ‘இறைவனே! எங்கள் பணியை ஏற்றுக் கொள்வாயாக! இஸ்லாமியராகவே எங்களை உன்னூலில் நூற்றுக் கொள்வாயாக! எங்கள் சந்ததியைப் பெருக்கு! உனை வணங்கும் கூட்டத்தாரை அதில் ஆக்கு. அவர்களில் இருந்தே ஒரு உன்னதத் தூதரை உண்டாக்கு. அவர்களுக்கு உனது வேதத்தையும் ஞானத்தையும் பரிசாக்கு!’




இந்தப் பிரார்த்தனையின் பயன் நமக்கு ஈருலக இரட்சகராம் அண்ணல் முஹம்மது(ஸல்) அவர்கள் அருளப்பட்டார்கள். அனைத்துலகுக்கும் ஓர் அருட்கொடையாக அகிலத்தின் அழகான முன்மாதிரியாக!




இதைத்தான் பெருமானார் பின்னாளில் இப்படிப் பேசினார்கள். ‘நான் என் தந்தை இபுராஹீமின் பிரார்த்தனையாக இருக்கிறேன்!’




நபிகள் பெருமானாரின் தலைமுறை வரிசை இபுராஹீம் நபிகளாரைத் தொடும். இபுராஹீம் நபிகள் இஸ்மாயில் நபிகளின் இரண்டாம் துணைவியாரிடம் அவர் கொண்டுவந்து கொடுத்த இறைச்சியிலும், நீரிலும் இறiவா நீ அபிவிருத்தி செய்வாயாக என்று பிரார்த்தித்தார்கள். அதனால்தான் இவ்விரு உணவும் கனிவகைகளில் பிரார்த்தித்த கனிவகைகளும் இந்த மக்கா மாநகரில் மட்டும் இன்றும் அதிகமதிகம் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. இறைச்சியும் நீரும் தினமும் உண்டாலும் அது மக்கா மக்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக மற்றவர்களுக்கு அனுதினமும் ஒத்துக் கொள்வதுமில்லை. உலகின் எந்த பாகத்திலும் கிடைக்காத கனிவர்க்கங்கள் எல்லாம் இன்று மக்காவில் மட்டும் அதிகமாகக் கிடைக்கிறது. ஆய்வாளர்களை அது ஆச்சர்யப்பட வைக்கிறது. இறைத்தூதரின் வேண்டுதலையும் இறைவன் அவர்களுக்களித்த உயர்சிறப்பையும் உற்று நோக்குவோர் இதனை இறைவன் பேரற்புதமாகவும் பெருந்தகை வேண்டுதலின் பெரும் பயனாகவுமே போற்றி ஏற்பர். உண்மையும் அதுதான். அந்தப் பெருமகனாரின் நினைவை தியாகத்தைப் போற்றும் வகையிலேதான் இந்த தியாகத்திருநாள் கொண்டாடப்படுகிறது.




எவ்வளவு பெரிய சோதனையில் அவர்கள் சிக்கித் தவித்தார்கள் என்பது அந்தச் சூழலிலிருந்து ஆய்வோருக்குத்தான் தெரியும். பால் மணம் மாறாத பச்சிளம் பாலகரைப் பாலைக்காட்டில் கொண்டுவிடும் பண்பாகட்டும், அரச குலத்து இளமனைவியை இறைவனின் அடைக்கலத்தில் விட்டுவிடும் தன்மையாகட்டும், கனவுதான் என்றாலும் பெற்றெடுத்த பிள்ளையை பலிகொடுக்கத் துணிந்த வீரமாகட்டும், பெரியவரின் கட்டளையேற்று மணல்மேடாய்க் கிடந்த இறையாலயத்தைப் புதுப்பித்துக் கட்டிய பொலிவாகட்டும், இறைகட்டளை எதுவென்றாலும் முகமன் கூறி வரவேற்று அடிபணிந்து காட்டிய பெருந்திறல் பண்பாகட்டும், அத்தனையும் அந்த வல்லவனிடமே ஒப்புவித்து, ஓர் அடிமையாய் தம்மை அர்ப்பணித்தளித்த ஓங்குயர் நிலையாகட்டும், இதயப் பிரார்த்தனையில் நம் ஈருலகும் வெற்றிபெற வைக்கும் நபிகள் நாயகத்தின் மூதாதையர் எனும் உயர்குலச் சிறப்பிலாகட்டும், எண்ண எண்ண எண்ணமெலாம் இனிக்கும் அந்த இனிய பெருந்தகையாளரின் இயல்பையும் திறத்தையும் எவர்தான் முழுதுமாக இயம்பவியலும்?




அவர்களைப்பற்றி எத்தனை ஆயிரம் நூற்கள் எழுதினாலும் அவர்களின் கால் துகளில் பட்டுத்தெறித்த தூசிக்குக்கூட இணையாகாது. அந்தப் பெருமகனாரின் நினைவாகத்தான் இந்தப் பெருநாள் - தியாகத் திருநாள்.




‘இறiவா! மனிதர்களில் சிலரை இவர்களை நோக்கித் திருப்புவாயாக!’ என்று அந்த இறைத்தூதர் இறைஞ்சினார்கள். இன்று ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களின் இதயமும் புனித கஅபாவின் பக்கம் வாழ்வில் ஒருமுறை ஒவ்வொரு முஸ்லிமுக்கும். புனித ஹஜ் கடமையாக்கப்பட்டிருக்கிறது.




பெற்ற மகனை பலிகொடுக்கத் துணிந்த அந்த வீரச்செயலைப் போற்றி, ஆடு அல்லது மாடு அல்லது ஒட்டகம் அறுத்துப் பலியிடுதல் கடனாக்கப்பட்டிருக்கிறது. இரத்தமும் சதையும் எதுவும் இறைவன் விருப்பமல்ல. எனினும் இபுராஹீம் நபிகள் செய்யத் துணிந்த அந்த தியாகத்தைப் பாராட்டும் வகையில் இது ஹஜ்ஜுக் கடமையின் ஓர் அங்கமாக இறைவனாலும் இறைத் தூதராலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பொங்கிப் பெருகும் ‘ஜம்-ஜம்’ நீ ஆண்டுகள் ஆயிரங்களைக் கடந்தும் இன்னும் பொங்கியபடியே இருக்கிறது. அதன் புதுமையும் பழம்பெருமையும் இஸ்லாமிய உலகு மட்டுமின்றி, அனைத்துலகும் தொட்டும் தொடர்ந்தும் பொங்கியபடியே இருக்கிறது.




‘இறைவா! இந்த இறைச்சியிலும் நீரிலும் அபிவிருத்தி அளிப்பாயாக!’ என்று வேண்டினார்கள். அது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அன்னை ஹாஜராவை விட்டுப் பிரிகையில் ‘கனிவகைகளை வழங்குவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். உலகின் எந்த பாகத்திலும் கிடைக்கும் அத்தனை கனிவகைகளிலும் மக்கம் கனிந்து கிடக்கிறது.




உலகம் அனைத்தும் மானுடம் அனைத்தும் ஓர்குலம். ஒன்றே குலம், ஒருவனே தேவன். அவனே இறைவன். அவனது அடிமைகள் நாம் எனும் ‘தல்பியா’ எனும் சங்கநாதம் மக்கம் தொட்டு ஒலிக்கிறது. அதன் பழமையும் பெருமையும் மானுட சமுதாயம் போற்றும் உரிமையும் கடமையும் சமதர்மச் சமுதாயச் சோலையாக, சரிநிகர் சமானமாக அனைவரையும் ‘வெள்ளாடை’ தரித்த புனிதர்களாகக் காட்டும் புண்ணியத் திருவிழா ஆரம்பமாயிற்று. அண்ணலின் ஆதிகுலத் தோன்றல் இஸ்மாயில் நபிகள், தந்தையார் இபுராஹீம் நபிகள், துணைவியார் ஹாஜரா அம்மையார் நினைவுகளில் மக்கம் பூத்துக் கிடக்கிறது. உலக முழுவதும் அதன் வழித்தடம் பார்த்து நடக்கிறது. இனி உலகம் உள்ளளவும் இந்த வரலாறு ‘ஜம்-ஜம்’ நீர்போல் வந்து கொண்டேயிருக்கும் கஅபா இறையாலயம் அந்த கண்ணியனின் புகழ்மொழியில் நனைந்து கொண்டேயிருக்கும்!




(அலை) – அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் இறைக்கருணை அவர்கள் மீது

(ஸல்) - ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் உண்டாகட்டும் என்பது பொருள்!




கவிஞர் ப. அத்தாவுல்லா

Improving the School Education

Here is the email on Improving School Education" i received from Seyed Ibrahim

Improving the School Education

http://seyed.ibrahim.googlepages.com/improve


Action Items on

I. How to improve performance in the Exam

II. How to avoid dropouts at School level

III. The inadequacies – Economy, Health and Environment

IV. Miscellaneous

தமிழார்வம் இருக்க வேண்டியதுதான்..அதுக்காக..?

"மெய்ப்புலம் அறைகூவலர்"

சென்னை விமான நிலையத்தினுள் ஒரு பெயர்ப்பலகையில் கண்ட வார்த்தைகள் இவை. இதன் பொருள் யாருக்காவது புரிகிறதா? மண்டையைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள்..

Physically Challenged என்ற ஆங்கிலப் பதத்தின் தமிழ் மொழிப் பெயர்ப்பாம் இது! உடல் ஊனமுற்றோருக்கான கழிவறைக் கதவில் இப்படி ஒரு பெயர்ப்பலகையை வைத்திருக்கிறார்கள். தமிழ்ப்பற்றை வெளிப்படுத்த கழிவறைக் கதவுதானா கிடைத்தது என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

ibnubasheer@gmail.com

Sunday, December 14, 2008

கடவுளுக்கு ஒரு கடிதம்

கடவுளுக்கு ஒரு கடிதம்

நீ என்னைப் பார்க்கின்றாய்;
நான் உன்னைப் பார்க்கவில்லை...
உறுதியாக அறிவேன்: இம்மையில் உன்னைக் காண இயலாது-
இறுதி நாள் வரை காத்திருப்பேன்; உன்னைக் காண்பதற்கு!
அதற்காகத்தானேச் சேர்த்து வைத்துள்ளேன் உயிருக்குள் சக்தி
அதன் பெயர்கள்: கலிமா-தொழுகை- நோன்பு-ஜக்காத்- ஹஜ் ஆகிய பக்தி
உன்னை மட்டுமே வணங்குகின்றேன்;உன்னிடம் மட்டுமே உதவி கேட்கின்றேன்...
உன்னை மட்டுமே நேசிக்கின்றேன்; உன்னிடம் தான் யாசிக்கின்றேன்
உன்னிடம் கேட்டால் மகிழ்கின்றாய்
மனிதரிடம் கேட்டால் இகழ்கின்றனர்
நீ வாக்கு மீற மாட்டாய் என்பது
நான் அனுபவித்த- அனுபவிக்கின்ற- அனுபவிக்க போகும் (உன் நாட்டப்படி)
உனது அருட்கொடைகளே சாட்சிகள் ஆகும்....
சோதனைகளை எல்லாம்
சாதனைகளாய்க் கடந்து வந்து தான் உன்னைச்
சந்திக்க வேண்டும் என்பதும் உன் சட்டம்;
சிந்திக்கத் தூண்டும் சீர்மிகு திட்டம்
இன்று நீ இருக்கின்றாய் எம் கண்கட்கு மறைவாய்!
நாளை மஹ்ஷரிலே இக்கடிதத்துக்கு மறுமொழி தருவாய் இறைவா................!!!

-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்

புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி

புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
புளங்காகிதம் அடைவதில் நமக்கோர் மயக்கம்;
உள்ளத்தளவில் ஈமானின் தளர்ச்சி
ஒத்துக்கொள்வதில் நமக்கேன் தயக்கம்?
தாயும் ஒன்றே; தந்தையும் ஒன்றே
தாரணிக்கு நாம் தந்த சமத்துவம் எங்கே?
ஆயினும் நமக்குள் ஆயிரம் பிளவுகள் உண்டே
ஆயுதம் கொண்டும் நமக்குள்
சண்டையிட்டு மாய்த்து கொள்வது யாரோடு?
சகோதரத்துவ மரத்தை சாய்த்து விடுகின்றோம் வேரோடு....!
அண்டை வீட்டார் பசித்திருத்தலாகாது -என்ற
அண்ணல்நபி(ஸல்) அமுத மொழி மறந்தோம் அடியோடு..
பண்டைய முஸ்லிம்கள் உலகுக்கு
பயிற்றுவித்தனர் அறிவியல்- கணிதம்*
இன்றைய முஸ்லிம் இளைஞர்கள்
எத்தனை பேரிடம் உண்டு உயர்கல்வி விகிதம்?
மூளைச்சலவைச் செய்து முஸ்லிம் இளைஞர்களை
மூலைக்குத்தள்ளி விட்ட முல்லாக்களே....!
நாளை மஹ்ஷரிலே பதில் தர வேண்டும் அல்லாஹ்விடம்
நானே வந்து சாட்சி சொல்வேன் அப்போது...

---"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்.
00971-50-8351499
shaickkalam@yahoo.com

Accounts Department
Granite Construction Company
Post Box # 842
Abu Dhabi, U.A.E.

விதைகள்

விதைகள்"

கருவாகி உருவாகி வளர விதை;
பருகும் பழமுண்டாக விதை;
கவிஞனின் கற்பனை விதை;
க"விதை" என்பதும் அதனாலே..!
விதை ஓர் ஒப்பற்ற ஆசான்;
அதைக் கொண்டு பாடம் பெறலாம்
வீரியமுள்ள விதையே ஆலமரம்;
காரியத்தில் தன்னம்பிக்கை கற்று தரும் போதிமரம்...!
விஞ்ஞானத்தில் விந்தைகள் யாவும் விதை வடிவமே துவக்கம்;
எஞ்ஞான்றும் இதனை ஒத்துகொள்வோம்..
கணிணி முதல் கைப்பேசி வரை
அனைத்திலும் ஆதாரப் பொருள்
விதை வடிவமே..............
விதையே நீ வாழ்க! வளர்க!!!!!

"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்


050-8351499
shaickkalam@yahoo.com

இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்

இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்
பகவான் மஹாவீர் விக்லாங் சஹாய்தா சமிதி நிறுவனமும் டவ் இந்தியாவும் இணைந்து இலவச சேவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலவசம்
ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர் (விட்டமானி) இலவசமாக வழங்கப்படும்.

ஊனமுற்ற சகோதர சகோதரிகள் எவ்வித கட்டனமும் இன்றி இவற்றை இலவசமாக பெறலாம்

வரும் 15-12-2008 காலை முதல் 19-12-2008 வரை இவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்
அலுவலக நேரம் : காலை 9.00 முதல் இரவு 7.00 மனி வரை.

முக்கிய குறிப்பு : இச்சலுகை பெற விரும்புவோர் கட்டாயமாக மதியம் 2.00 மனிக்கு முன்னதாக வர வேண்டும்.

முகவரி : ஹஸ்த்தினாபுரி நகரி (மாலு ஜெய்ன பவன்)
30, வெங்கடாச்சலம் முதலியார் தெரு,
சூளை, சென்னை 600112
சூளை அஞ்சல் அலுவலகம் அருகில்.

தொலைபேசி : 044 - 266919616 / 25322223
திரு. மோஹன் ஜெயின்


தயவு செய்து உங்கள் பகுதியில் ஊனமுற்றோர் யாராவது இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை தெறிவியுங்கள். ஏழ்மையில் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்

இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்
பகவான் மஹாவீர் விக்லாங் சஹாய்தா சமிதி நிறுவனமும் டவ் இந்தியாவும் இணைந்து இலவச சேவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலவசம்
ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர் (விட்டமானி) இலவசமாக வழங்கப்படும்.

ஊனமுற்ற சகோதர சகோதரிகள் எவ்வித கட்டனமும் இன்றி இவற்றை இலவசமாக பெறலாம்

வரும் 15-12-2008 காலை முதல் 19-12-2008 வரை இவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்
அலுவலக நேரம் : காலை 9.00 முதல் இரவு 7.00 மனி வரை.

முக்கிய குறிப்பு : இச்சலுகை பெற விரும்புவோர் கட்டாயமாக மதியம் 2.00 மனிக்கு முன்னதாக வர வேண்டும்.

முகவரி : ஹஸ்த்தினாபுரி நகரி (மாலு ஜெய்ன பவன்)
30, வெங்கடாச்சலம் முதலியார் தெரு,
சூளை, சென்னை 600112
சூளை அஞ்சல் அலுவலகம் அருகில்.

தொலைபேசி : 044 - 266919616 / 25322223
திரு. மோஹன் ஜெயின்


தயவு செய்து உங்கள் பகுதியில் ஊனமுற்றோர் யாராவது இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை தெறிவியுங்கள். ஏழ்மையில் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

Saturday, December 13, 2008

இந்திய விமானப்படைக்கு ஜன. 23-ல் ஆள் தேர்வு

இந்திய விமானப்படைக்கு ஜன. 23-ல் ஆள் தேர்வு

கோவை, டிச.13: இந்திய விமானப்படைக்கான ஆள் சேர்ப்பு முகாம், கோவை சூலூர் ஏர்போர்ஸ் ஸ்டேஷனில் ஜனவரி 23-ம் தேதி நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம்.

இதில் சேர்வதற்கான கல்வித் தகுதி:

கணிதம் இயற்பியல் பாடங்களுடன் குறைந்தபட்சம் 50 சதம் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் டூ இன்டர்மீடியட் படிப்பில் தேர்வாகி இருக்க வேண்டும்.

அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் 3 ஆண்டு டிப்ளமோ-மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி, மற்றும் தகவல் தொழில்நுட்பப் படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி இருக்க வேண்டும்.

ஆள் சேர்ப்பு முகாமுக்கு வருபவர்கள் ஜனவரி 23-ம் தேதி காலை 6 முதல் 10 மணிக்குள் வர வேண்டும்.

மேலும், கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள், மற்றும் அதன் மூன்று பிரதிகள், இரு வெள்ளை கவர்கள், இருப்பிடச் சான்று (தேவைப்படின்) சமீபத்திய வண்ண புகைப்படம் பாஸ்போர்ட் அளவு-7 பிரதிகள், உடல்திறன் தேர்வுக்காக விளையாட்டு உடை (ஷார்ட்ஸ் மற்றும் ஷூ) ஆகியவற்றை உடன் கொண்டு வரவேண்டும்.

முகாமில் எழுத்து மற்றும் உடல்திறன் தேர்வில் தேர்வானவர்களுக்கு மட்டும் விண்ணப்பங்கள் அங்கேயே அளிக்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு கமாண்டிங் ஆபீஸர், 8, ஏர்மென் செலக்சன் சென்டர், ஏர்போர்ஸ், தாம்பரம், சென்னை-46, தொலைபேசி எண்:044 - 22791853, 22395553 என்ற முகவரியில் தொடர்புக் கொள்ளலாம்.

உணவா? விஷமா?

உணவா? விஷமா?
Written by விருந்தினர் Friday, 12 December 2008 08:06

கேரள மாநிலம் காசர்கோடு, இன்னும் அந்த சாபத்தில் இருந்து மீளவில்லை. இன்று வரையிலும் காலோ, கையோ, இதயமோ, மூளையோ, உயிரோ..., ஏதோ ஒன்று இல்லாமல் தான் அங்கு குழந்தைகள் பிறக்கின்றன. சில பெரியவர்கள் திடீரென ரத்தம் கக்கி சாகின்றனர். புற்றுநோய், காசநோய், மாரடைப்பு, மூளை வளர்ச்சியின்மை.. என ஏதேனும் ஒரு நோய்கள் அண்டாத மனிதர்களே அங்கு இல்லை.

கேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் இந்த அவலத்தின் மூலம் எது?

7000 ஏக்கரில் விரிந்து கிடந்த முந்திரி தோட்டத்தை திடீரென தாக்கி சிதைத்தன பூச்சிகள். பூச்சிகளின் தொல்லையால் நிலை தடுமாறிய கேரள முந்திரி கார்பரேஷன் எடுத்த முடிவு தான் காசர்கோடு மாவட்டத்தையே விஷக்குழியில் தள்ளியது. ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் என்ற விஷத்தை முந்திரி தோட்டத்தில் கொட்டியது அந்நிறுவனம். மிகவும் சக்தி வாய்ந்த அந்த விஷத்தால் பூச்சிகள் அழிந்ததோ இல்லையோ? நீர், நிலம், காற்றில் மிக வேகமாக ஊடுருவிய எண்டோசல்பான் மனிதர்களுக்கு கொள்ளை நோய்களை வாரி வழங்கியதுடன் ஜென்ம சனியாக அந்த மாவட்டத்தையே ஆட்டி படைக்க தொடங்கி விட்டது. 1971ல் தொடங்கி 30 வருடங்களுக்கும் மேலாக நடந்த பாவ செயலை, ஒரு டாக்டர் கண்டு பிடித்து உலகுக்கு சொல்ல, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செயவதைப்போல 2003ல் அந்த விஷத்தை தடை செய்தது கேரள உயர்நீதி மன்றம்.

இந்த கொடூரத்தை நினைவில் வைத்துக்கொண்டு, இப்போது தமிழக டெல்டா மாவட்டங்களுக்கு வருவோம்.

தஞ்சை, நாகை திருவாரூர் அடங்கிய டெல்டா பூமியில், பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதம் வரை சுமார் 5 லட்சம் ஏக்கர் அளவுக்கு உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக உளுந்து பயிரை புரோட்டீனிய புழுக்கள் உண்டு, இல்லையென்றாக்கி வருகின்றன. வெறுத்துப்போன விவசாயிகள் 10 நாளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 250 முதல் 500 மிலி எண்டோசல்பான் விஷத்தை தெளிக்கிறார்கள். 60 நாள் பயிரான உளுந்துக்கு 30 நாள் வரை 3 முறை மருந்து தெளிக்கப்படுகிறது. இந்த கணக்குப்படி பார்த்தால் ஒரே மாதத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 3.75 லட்சம் முதல் 7.5 லட்சம் லிட்டர் எண்டோசல்பான் காற்றில், நீரில், உணவில் கலந்து உயிருக்குள் ஊடுருவுகிறது. இது மட்டுமின்றி அதன் பிறகு பயிரிடப்படும் நெல் பயிருக்கும் இதே எண்டோசல்பானைத்தான் லிட்டர், லிட்டராக கொட்டுகிறார்கள் நம் விவசாயிகள்.

இது காசர்கோட்டைக் காட்டிலும் விபரீதமானது. பெரும்பான்மை உணவுத் தேவையை டெல்டா மாவட்டங்களே நிறைவு செய்கிறது என்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் இந்த விபரீதத்துக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பது தான் விஷயமே!

நம் விவசாயத்துக்கு 15 ஆயிரம் வருட பாரம்பரியம் உண்டு. இன்று விவசாயத்தில் வெற்றி கண்ட எல்லா மேலை நாடுகளும் நம்மிடம் தொழில்நுட்பத்தை பிச்சை வாங்கியவைகள் தான். வீட்டுக்கு வீடு வளர்க்கப்பட்ட மாடுகளின் சாணம், வயற்காட்டோரம் இருக்கும் மரங்களின் இலை தழைகள் தான் உரங்கள். பருவத்துக்கேற்ற ரகங்கள். பயிருக்கு கேடு செய்யும் ஒரு பூச்சியிருந்தால், அதை சாப்பிடும் 5 பூச்சிகள் இயல்பாகவே வளரும் சூழல். உழைப்பு மட்டுமே விவசாயியின் முதலீடு. சாகுபடியில் கிடைக்கும் உற்பத்தி முழுவதும் லாபம். இது தான் நம் பாரம்பரியம். விவசாயிகளின் வியர்வையில் மட்டுமே உப்பை காணும் வயற்காடுகளில் உற்பத்தியாகும் அத்தனை உணவு பயிர்களும் முழு சக்தி தருவனவாக இருந்தன. கைபிடி மண்ணை அள்ளி ஆராய்ந்தால் நூற்றுக்கணக்கான மண்புழுக்கள், லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள்.., சிலந்தி, தவளை, தட்டான், குளவி, பறவைகள் என வயலே சங்கீத மேடையாக இருக்கும். ஆற்காடு கிச்சடி, திருவண்ணாமலை தூயமல்லி, புதுக்கோட்டை மாப்பிள்ளை சம்பா, தஞ்சை சம்பா மோஷனம், ஒட்டடை சம்பா, சீரக சம்பா என உலகை பொறாமைப்பட வைத்தன நம் உற்பத்தி செய்த உணவு ரகங்கள். உள்நாட்டு உணவு தேவையை நிறைவுசெய்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்த நம் விவசாய தொழில்நுட்பத்தை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பார்த்த பார்வை தான் இன்றைய அவலத்துக்கு காரணம். அதிகமில்லை. ஐம்பதே ஆண்டுகளில் தமிழகத்தில் செழித்து வளர்ந்திருந்த 65 சதவீத விவசாயிகளின் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதும் கட்டத்துக்கு வந்தாயிற்று.

1949ல் தான் மாபெரும் பேரழிவுக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. 1940களில் அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகள் பயன்படுத்தி, பின்னர் அதன் தன்மை உணர்ந்து தடை செய்யப்பட்ட டி.டி.சி, டி.டி.டி, பி.ஹெச்.சி போன்ற பூச்சி மருந்துகள் அந்த காலக்கட்டதில் தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தன. சூழ்ச்சியின் தன்மை அறியாமல் ஐந்துக்கும், பத்துக்கும் ஆசைப்பட்ட சில அதிகாரிகளை, கைக்குள் போட்டுக்கொண்டு இந்திய விவசாயிகள் மத்தியில் கடைவிரிக்கத் தொடங்கின பூச்சி மருந்து நிறுவனங்கள். சிறிது, சிறிதாக இந்த பூச்சி மருந்துகளில் மதிமயங்கினர் விவசாயிகள். 1952ல் அமெரிக்க மோட்டார் கம்பெனியான போர்டும், எண்ணை கம்பெனியான ராக்பெல்லரும் இந்திய விவசாய உற்பத்தியை அதிகரிக்க ரசாயன உதவிகளை செய்வதாக கூறி களமிறங்கின. 1959ல் புதிய ஒட்டுரக பயிர்கள் புகுத்தப்பட்டன. அதோடு நம் விவசாயிகளின் நிம்மதி முடிவுக்கு வந்தது.
வயற்காடுகள் யூரியா, பாஸ்பேட் போன்ற உப்பின் ருசிக்கு பலியாகி மலடாக தொடங்கின.

மேலை நாடுகளின் ஒட்டுரக பயிர்கள் நம் நிலத்தின் தட்ப வெப்பங்களுக்கு தாக்கு பிடிக்காமல் வாடி வதங்கின. மேலும் தீமை செய்யும் பூச்சிகளை அந்த பயிர்கள் ஈர்ததன. இன்று ஒட்டு மொத்த மனித குலத்துக்கே சவாலாக மாறிய பிரச்னையின் வித்து அப்போது தான் தூவப்பட்டது. ஒட்டு ரக பயிர்களையும், உரங்களையும் தந்த மேலை நாட்டு நிறுவனங்களே பூச்சி கொள்ளிகள் என்ற பெயரில் விஷங்களையும் வழங்கின. நம் உற்பத்தியை இறக்குமதி செய்த மேலை நாடுகள், உரங்களுக்கும், பூச்சிக் கொல்லிகளுக்கும் நாம் பழக்கப்பட்ட பிறகு, உரம் போட்ட பொருட்கள் எங்களுக்கு வேண்டாம் என்று கை விரித்து விட்டன. நம் பூமி சுயம் அழிந்து, உரங்களின்றி புல் பூண்டுகளைக்கூட பிரசவிக்க தகுதியற்றதாகி விட்ட நிலையில், இருக்கும் பூமியை விற்றுவிட்டு வெளிநாடுகளில் கொத்து வேலைக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி விட்டு தெருவோர டீக்கடைகளில் உக்கார்ந்து ஆடுபுலியாட்டம் ஆடுகின்றனர் விவசாய பெருங்குடி மக்கள். இது தான் ஒரு அடிமைக்கதையின் சுருக்கமான வரலாறு.

உலக அளவில் இரசாயன உரம் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதன்மை வகிக்கிறது இந்தியா. உலக நாடுகளால் தடை செயயப்பட்ட எண்டோசல்பான், மாலத்தியான், அல்ட்ரின், எண்ட்ரின், லின்டேன், குளோர்பைரிபாஸ் ( இது போபால் விஷவாயு சம்பவத்துக்கு காரணமான டோ கெமிக்கல் கம்பெனியின் தயாரிப்பு. அமெரிக்காவில் உற்பத்தியாகிறது. அங்கு தடை செய்யப்பட்டு தற்போது இந்திய வயல்களுக்குள் கொட்டப்படுகிறது). உள்பட 90 வகை பூச்சிக்கொல்லிகள், 147 வகை ரசாயான உரங்களை பயன்படுத்தி இந்திய காற்று, நிலம், நீரை விஷமாக்குகிறார்கள் விவசாயிகள். நெல், உளுந்து, பயறு, காய்கறிகள், எண்ணை, பூக்கள் என நிலங்களில் விளையும் எல்லாமே விஷமாகி விட்டது.

டிடிசி, எக்காலக்ஸ், ஆண்ட்ரின், பாலிடால் உள்ளிட்ட 12 விஷங்களுக்கு எதிராக உலக அளவில் நடத்தப்பட்ட 12 அழுக்குகளுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அந்த மருந்துகள் தடை செய்யப்பட்டன. ஆனால் இந்தியா இன்னும் கண்மூடி கிடக்கிறது.

வியட்நாம் நாட்டு போராளிகளை ஒழிக்க அந்த அரசு, காடுகளில் ஏஜென்ட் ஆரஞ்ச் என்ற பயங்கர விஷ மருந்தை விமானங்கள் மூலம் தெளித்தது. அந்த ரசாயன விஷம் பட்ட மரங்கள் கருகி அழிந்தன. அந்த ஏஜென்ட் ஆரஞ்ச் விஷமும் நம் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் வரிசையில் இடம் பிடித்துள்ளது தான் அதிர்ச்சி.

வேதி பூச்சி மருந்துகளை வயல்களில் கொட்டுவதால் விவசாயிகளின் நண்பர்களான மண்புழு, தவளை, பாம்பு, சிலந்தி, வெட்டுக்கிளி தட்டான் போன்ற உயிரினங்கள் தாக்குப்பிடிக்காமல் அழிந்து விட்டன. இயற்கை எதிரிகளான பூச்சிகள் விஷங்களையே புரோட்டின்களாக மாற்றிக்கொண்டு கொளுத்துப் போய்விட்டன.

விஷங்களை தெளித்தும் பூச்சிகள் அழியாததால் மேலும், மேலும் விஷங்களை கொட்டுக்கிறார்கள் விவசாயிகள். குறிப்பாக காய்கறி பயிர்களுக்கு வாரத்துக்கு 3 முறை கூட மருந்தடிக்கிறார்கள். எண்டோசல்பான் மாதிரியான பூச்சிக்கொல்லியின் வீரியம் முற்றிலும் அழிய 50 வருடங்கள் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். குறைந்தபட்சம் பூச்சிமருந்தடித்து 23 நட்கள் கழித்து தான் காய்கறிகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் நாளை பறிக்க வேண்டிய காய்கறிக்குக்கூட இன்று மருந்தடிக்கும் பழக்கம் விவசாயிகளிடம் உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில காய்கறிகளில் டாக்ஸிஸ் லிங்க் (TOXICS LINK) நிறுவனம் நடத்திய சோதனையில் 80 சதவீதம் விஷத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உண்ணும் உணவில் 10 லட்சத்தில் 1 பங்கு விஷத்தன்மை இருக்கலாம் என்கிறது ஐநா சபை. ஆனால் இந்தியர்களின் உணவில் சராசரியாக 50 சதம் விஷம் இருக்கக்கூடும் என்கின்றன சில ஆய்வுகள்.

நேரடி உணவு பொருட்களான திராட்சை, வெள்ளரி, வெத்தலைகளில் கூட எண்டோசல்பான், மோனோகுரோட்டபாஸ் மருந்துகள் தெளிக்கப்படுகிறது. இதை சாப்பிடும்போது அந்த பொருட்களால் கிடைக்கும் சத்துக்களைக் காட்டிலும் 50 சதம் அதிக பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உற்பத்தியில் பூச்சிக்கொள்ளிகள் பயன்படுத்துவது மட்டுமின்றி இப்பயிர் வகைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் தங்கள் பங்குக்கு விஷத்தை சேர்க்கிறார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சி.

பொதுவாக உளுந்து போன்ற பயறு வகைகளை இருப்பு வைக்கும் போது அந்துப்பூச்சி பதம் பார்த்துவிடும். முதலுக்கே மோசம் வரும் என்பதால் அலுமினியம் பாஸ்பேட் என்ற ஹெவி பாய்ஸனை இருப்பு வைக்கும் அறைக்குள் வைக்கிறாகள் வியாபாரிகள். அந்த விஷம் காற்றில் பரவி உளுந்திலேயே தங்கி விடுகிறது. உளுந்து நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக மாறிவிட்ட நிலையில் நுகர்வோர் இந்த விபரீதம் குறித்து கவலைப்படுவதில்லை என்பது தான் சோகம்.

மேலும் விஷம் கலந்த தவிடு, புண்ணாக்கு, பயிர்களின் மிச்சங்களை உண்பதால் மாடுகள் தரும் பால், ஆடுகளின் இறைச்சி எல்லாமும் விஷ முலாம் பூசப்பட்ட பொருட்களாக உருமாறி விட்டன.

இது போன்ற விஷங்கள் உடம்பில் நிகழ்த்தும் பாதிப்புகள் சொல்லி மாளாது. மூளை, இதயம், பெண்களின் மார்பகம், கர்ப்பப்பை, விரைப்பை போன்ற இடங்களில் தங்கி புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்களை உருவாக்குகிறது. மேலும் நரம்பு மண்டலத்தின் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. பெண்களின் கொழுப்பு திசுக்களில் கலந்து தாய்ப்பால் வழி குழந்தைகளுக்கும் அந்த விஷம் சப்ளை செய்யப்படுகிறது என்று உயிரை கலங்கடிக்கிறார்கள் டாக்டர்கள்.

மல்லி, முல்லை, ரோஜா போன்ற மலர்களில் இயற்கை மணம் மறைந்து இன்று பூச்சி மருந்துகளின் நாற்றமே அடிக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மலர்கள் அதிகம் பயிரிடப்படும் தாமரைப்பாக்கம், வெங்கல், பூரிவாக்கம் போன்ற பகுதிகளில் பூந்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கைகளே இந்த அவலத்துக்கு சாட்சி. மேலும் அதிகபட்ச விஷம் தெளிக்கப்படும் பூக்களை தலையில் வைப்பதால் கூட சில அபாயகரமான பாதிப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாம்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டு கிராமங்களில் மாடுகள் இல்லாத வீடே இல்லை. இன்றோ அடிமாடுகளாக கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் மாடுகள் ஏற்றுமதியாகி விட்டன. மாடுகள் மூலம் கிடைக்கும் கோமயம், சாணம், பால், தயிர், மோர் தான் விவசாயிகளின் மூலதனம். கோமயத்தில் ஆடாதொடை, ஆடு தின்னா பாலை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, துத்தி போன்ற ஆடு சாப்பிடாத இலைகளில் 5 வகைகளை 15 நாட்கள் ஊறவைத்து அந்த நீருடன் தம்ணீர் கலந்து அடித்து தான் விவசாயிகள் பூச்சிகளை கட்டுப்படுத்தினர். மேலும் மாடு தரும் பொருட்களால் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் மிகச்சிறந்த ஊக்க மருந்து. மாடுகளை இழந்ததே உணவு விஷமானதுக்கு காரணம் என்கிறார்கள் முற்போக்கு விவசாயிகள்.

உணவே மருந்து, மருந்தே உணவு என்றார்கள் நம் மூதாதை சித்தர்கள். ஒரு 50 ஆண்டு இடைவெளியில் உணவே விஷம், விஷமே உணவு என்று நமக்கு நாமே அழிவை தேடிக் கொண்டிருக்கிறோம். இந்த கட்டத்திலேனும் விழித்துக் கொள்ளாவிட்டால் நம்மை எந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.
-முடச்சிக்காடு புதியபாரதி

http://poovulagu.blogspot.com/2008/12/blog-post_12.html

www.tamilcircle.net

வி.பி சிங்கை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட பார்ப்பன “இந்தியா டுடே”விற்கு கண்டனக் கூட்டம்

சமூக நீதிக் காவலர் திரு.வி.பி.சிங் நினைவு அஞ்சலிக் கூட்டம் & வி.பி சிங்கை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட பார்ப்பன “இந்தியா டுடே”விற்கு கண்டனக் கூட்டம்


நினைவுகளைப் பகிர்வோர்:

விடுதலை இராசேந்திரன்
இரா.அதியமான்
அ.மார்க்ஸ்
ஞாநி
ஆதவன் தீட்சண்யா
ஓவியா
அழகிய பெரியவன்

நாள்: டிசம்பர் 14, 2008, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5:30 மணி
இடம்: புக் பாயின்ட் அரங்கம், ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில், அண்ணா சாலை, சென்னை

நமது ஒளிக்காகத் தன்னைக் கரைத்துக் கொண்ட ஓர் உயிருக்கு அஞ்சலி செலுத்த அனைவரும் வாருங்கள்!!

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: கீற்று.காம் (www.keetru.com)

மீடியாவை நம்பலாமா?

மீடியாவை நம்பலாமா?

நியாயமாகப் பார்த்தால் பிபிசி ஒளிபரப்பியிருக்கவேண்டும். நாங்கள் எந்த விதச் சார்பு நிலையையும் எடுக்கமாட்டோம். நடுநிலையுடன் செய்திகளை அளிப்போம் என்றெல்லாம் வாய் கொள்ளாமல் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் அந்நிறுவனம் அப்படி ஒரு சம்பவமே நடக்காதததுபோல் அமைதியாக இருந்துவிட்டது.
வேறு எந்த மீடியாவிலும் செய்தி வரவில்லை. கார்டியன் ஒரு துணுக்குச் செய்தியை மாத்திரம் வெளியிட்டது. அதுவும்கூட முழுமையான ஒரு பதிவு அல்ல.

பிப்ரவரி 28, 2008 அன்று தொடங்கியிருக்கிறார்கள். காஸா முனைக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு அது. ஒட்டினாற்போல் ஒரு திறந்தவெளி மைதானம். குழந்தைகள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதிகம் சத்தம் எழுப்பாதபடி அவர்கள் தலைக்கு மேலே படர்ந்த அந்த விமானம் சட்டென்று குண்டுகளை வீசிவிட்டு கடந்து சென்றுவிட்டது. நான்கு சிறுவர்கள் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டனர். மேலும் மூன்று பேர் ரத்தம் சொட்டச்சொட்ட அலறிக்கொண்டு ஓடிபோயிருக்கிறார்கள். இறந்து போனவர்களில் எட்டு வயது குழந்தையும் அடக்கம்.

தாக்கியிருப்பது இஸ்ரேல் ராணுவம். விளையாடிக்கொண்டிருப்பவர்கள் சிறுவர்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பிறகே குண்டுகள் வீசப்பட்டிருக்கவேண்டும். காரணம், அந்தப் போர் விமானங்கள் தலைக்கு மேலே மிக அருகில் பறந்து சென்றிருக்கின்றன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் காலம் காலமாக யுத்தம் தொடர்ந்துகொண்டு இருப்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால், சமீப காலமாக மீடியாவில் செய்திகள் அதிகம் வராததால், பாலஸ்தீனம் அமைதியாகத்தான் இருக்கிறது போலும் என்று உலகம் நினைத்துக்கொண்டிருந்தது.

பாலஸ்தீனத்தில் இருந்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த வெள்ளை அறிக்கை இந்த அனுமானத்தைச் சிதறடித்திருக்கிறது. ஜூன் 2007 தொடங்கி ஜூன் 2008 வரை கிட்டத்தட்ட 70 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில், கவனிக்கப்படவேண்டிய விஷயம், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகள். விளையாடிக்கொண்டிருந்தவர்கள். பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள். கடைத்தெருவில் ஓடிக்கொண்டிருந்தவர்கள். தெரு முனையில் கூடி கதை பேசிக்கொண்டிருந்தவர்கள்.

எனில், இஸ்ரேல் அரசாங்கத்தின் நோக்கம்தான் என்ன? குழந்கைளைத் தேர்ந்தெடுத்துக் கொல்லும் ராணுவ ஆபரேஷன் மூலம் அவர்கள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள்? இத்தனைக் குழந்தைகள் இறந்துகொண்டிருக்கும்போது, செய்தித்தாள்களும் இணையத்தளங்களும் டிவி சானல்களும் என்ன செய்துகொண்டிருந்தன?

அல் ஜசீராவைப் பற்றி இங்கே அவசியம் குறிப்பிட்டாகவேண்டும். மத்தியக் கிழக்குச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடும் நிறுவனம் இது. பாலஸ்தீன குழந்தைகள் தாக்குதல் குறித்து விரிவாக அல் ஜசீரா செய்தி ஒளிபரப்பியது.சில வீடியோ காட்சிகளையும் இணையத்தளத்தில் இணைத்திருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளும். ஒரு குழந்தை திக்கித்திணறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது. என் பெயர் இன்னது. நான் இங்கே குடியிருக்கிறேன். என் கண் முன்பே என் அப்பாவை அவர்கள் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்.

இஸ்லாமியர்களின் குரல், அல் ஜசீரா. ஆனால், பிபிசி போல் உலகெங்கும் பிரபலமான அமைப்பு அல்ல இது. அல் ஜசீராவின் இணையத்தளத்தை தினந்தோறும் கவனித்து வருபவர்களுக்கு மாத்திரமே அது தரும் செய்திகள் சென்றடையும். பாலஸ்தீன் குறித்து அல் ஜசீரா அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வந்தபோதும் பரவலான உலகக் கவனத்தை அவை ஈர்க்கவில்லை.

மீடியா லென்ஸ் என்னும் நிறுவனம் இதற்கு விடை கண்டுபிடிக்கப் புறப்பட்டது. மீடியா என்று வந்துவிட்டால் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் அனைத்து செய்திகளையும் வெளியிடுவதுதானே தர்மம்? எந்தச் செய்தியை வெளியிடவேண்டும் எந்த செய்தியை வெளியிடக்கூடாது என்று யார் முடிவு செய்கிறார்கள்? ஏன்?

கார்டியனில் பாலஸ்தீன் குறித்து எழுதிய கட்டுரையாளருக்குச் செய்தி ஒன்றை அனுப்பியது மீடியா லென்ஸ். ஐயா, உங்கள் கட்டுரையை வாசித்தோம். பலரும் வெளியிடாத அந்தச் செய்தியை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். நன்றி. ஆனால், இத்தனைக்கும் காரணமான இஸ்ரேல் ராணுவத்தைப் பற்றி நீங்கள் ஒரு வரி கூட எழுதவில்லையே. ஏன்? குழந்தைகள் இறந்துபோனார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். எப்படி, யாரால் என்பதையும் எழுதியிருக்கவேண்டாமா? கட்டுரையாசிரியரிடம் இருந்து பதிலில்லை.

அடுத்து, பிபிசியைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அன்புள்ள ஜெரிமி போவன், பிபிசியின் மத்திய கிழக்கு எடிட்டர் நீங்கள்தானே? சமீபத்தில் பாலஸ்தீனத்தில் இருந்து வெளிவந்திருக்கும் வெள்ளை அறிக்கையை வாசித்தீர்களா? எத்தனைக் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? நீங்கள் ஏன் இந்த அறிக்கையைப் பற்றி ஒரு வரி கூட விவாதிக்கவில்லை? சமீப காலங்களாக, பாலஸ்தீனில் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களை கிட்டத்தட்ட தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருவதற்கு என்ன காரணம்? தொலைக்காட்சியில் மட்டுமல்ல, இணையத்தளத்திலும் ஒரு செய்தியையும் நீங்கள் வெளியிடவில்லை. ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா? உங்களை விட எத்தனையோ மடங்கு சிறிய நிறுவனம் அல் ஜசீரா. அவர்களுக்கு இருப்பும் பொறுப்புணர்வில் ஒரு சிறிய அளவாவது உங்களுக்கு இருக்கவேண்டாமா?

பதிலில்லை. வெள்ளை அறிக்கையை வாசித்து அதிர்ந்து போன பலரும் பிசியைத் தனித்தனியாகத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். செய்திகளை எந்த அடிப்படையில் பிபிசி தேர்ந்தெடுக்கிறது? எந்த அடிப்படையில் ஒளிபரப்புகிறது? தவறு செய்தது இஸ்ரேல் என்பதால் கண்டும்காணாமலும் இருந்துவிட்டீர்களா? அமெரிக்கா இல்லாமல் இஸ்ரேல் இல்லை. அமெரிக்கா இல்லாமல் பிரிட்டன் இல்லை. எனவேதான் அடங்கிபோய்விட்டீர்களா?

எந்தவொரு விளக்கத்தையும் பிபிசி அளிக்காததால், க்ளாஸ்கோ மீடியா க்ரூப் என்னும் நிறுவனம் பிரிட்டனில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. மத்திய கிழக்கு பற்றி வெளிவரும் செய்திகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இஸ்ரேல், பாலஸ்தீன் இரு தரப்புச் செய்திகளும் உங்களை வந்தடைகின்றதா? 2000 பேரிடம் கருத்து கேட்டிருக்கிறார்கள். பாலஸ்தீன் பற்றி எங்களால் தெரிந்துகொள்ளமுடியவில்லை. இஸ்ரேல் பற்றிய ஒரே சார்பான செய்திகள்தான் கிடைக்கின்றன. பாதிக்கப்படுபவர்கள் பாலஸ்தீனர்கள் என்பதால் அவர்களை நிறைய ஃபோகஸ் செய்யவேண்டும். 95 சதவீதத்தினரின் வருத்தம் இது.

எனில், மக்கள் எதைத் தெரிந்துகொள்ளவேண்டும் எதைத் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதை மீடியா உலகம்தான் முடிவு செய்கிறது. மீடியா என்றால் பிபிசி போன்ற பெரும் நிறுவனங்கள். அவர்கள் எதை அளிக்கிறார்களோ அதை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடிய கட்டாயத்தில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். பலமான ஓர் இனத்தால் மட்டுமே இன்னொரு இனத்தை ஒடுக்கிவைக்கமுடியும். பாலஸ்தீனை இஸ்ரேல் ஒடுக்குவது போல. இஸ்ரேலுக்கு ராணுவ பலம் மாத்திரமல்ல உலகளவில் செல்வாக்கும் இருப்பதால்தான் மீடியாவை அவர்களால் தேவைக்கேற்ப உபயோகித்துக்கொள்ள முயல்கிறது.

பாதிக்கப்படுபவர்களின் செய்திகளை வெளியிட்டுவருவதால் அல் ஜசீரா இதுவரை சந்தித்துள்ள பிரச்னைகள் ஏராளம். அவர்கள் அலுவலகத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தொலைபேசி மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அனைத்தையும் கடந்துதான் இயங்கிக்கொண்டிருக்கிறது அந்நிறுவனம்.

நாங்கள் தருவதுதான் செய்தி. நாங்கள் அளிக்கத் தவறும் செய்திகளை வேறு யார் அளித்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுதான் மீடியா உலகம் வழங்கும் நீதி. பிபிசி போன்ற பெரும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பு இருக்கிறது. மக்களிடையே நல்ல பெயரும் செல்வாக்கும்கூட இருக்கிறது. மாறுபட்டு சிந்திக்கும் இணையத்தளங்கள் கண்காணிக்கப்படுகின்றன. வலைப்பதிவாளர்களின் தளங்கள் கடத்தப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. செல்வாக்கில்லாத சிறு பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் பொதுவான உண்மை இது.

பிபிசி, சிஎன்என், டைம், கார்டியன் போன்ற நிறுவனங்களிடம் இருந்துதான் பாலஸ்தீன் பற்றியும் இராக் பற்றியும் ஆப்கனிஸ்தான் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகம் தினம் தினம் தெரிந்துகொள்ளமுயல்கிறது.
http://marudhang.blogspot.com/2008/11/blog-post_29.html
www.tamilcircle.net

Last Sermon of the Messenger of Allaah (Peace be upon him)

Last Sermon of the Messenger of Allaah (Peace be upon him)

This Sermon was delivered

on the Ninth Day of Dhul Hijjah 10 A.H

in the Uranah Valley of mount Arafat


"O People, lend me an attentive ear, for I don't know whether, after this year, I shall ever be amongst you again. Therefore listen to what I am saying to you carefully and take these words to those who could not be present here today.

O People, just as you regard this month, this day, this city as Sacred, so regard the life and property of every Muslim as a sacred trust. Return the goods entrusted to you to their rightful owners. Hurt no one so that no one may hurt you. Remember that you will indeed meet your Lord, and that He will indeed reckon your deeds. Allaah has forbidden you to take usury (Interest), therefore all interest obligation shall henceforth be waived...

Beware of Satan, for your safety of your religion. He has lost all hope that he will ever be able to lead you astray in big things, so beware of following him in small things.

O People, it is true that you have certain rights with regard to your women, but they also have right over you. If they abide by your right then to them belongs the right to be fed and clothed in kindness. Do treat your women well and be kind to them for they are your partners and committed helpers. And it is your right that they do not make friends with any one of whom you do not approve, as well as never to commit adultery.

O People, listen to me in earnest, worship Allaah, say your five daily prayers (Salaah), fast during the month of Ramadaan, and give your wealth in Zakaat. Perform Hajj if you can afford to. You know that every Muslim is the brother of another Muslim. You are all equal. Nobody has superiority over other except by piety and good action.

Remember, one day you will appear before Allaah and answer for your deeds. So beware, do not astray from the path of righteousness after I am gone.

O People, no prophet or apostle will come after me and no new faith will be born. Reason well, therefore, O People, and understand my words which I convey to you. I leave behind me two things, the Qur'an and my example, the Sunnah and if you follow these you will never go astray.

All those who listen to me shall pass on my words to others and those to others again; and may the last ones understand my words better than those who listen to me directly.

Be my witness oh Allaah that I have conveyed your message to your people."

~~~
Some Lessons From the Prophet (pbuh)'s Farewell Pilgrimage
http://www.islaam.com/

Hajj is one of the five pillars of Islam and was made obligatory in the tenth, ninth or sixth year, according to different reports [Ibn Kathir, al Bidayah wa al Nihayah, 5/109] . In the tenth year the Prophet, sallallahu `alaihi wa sallam, announced that he intended to perform hajj; this was the only time that he performed hajj after the Hijrah to Madinah. The Muslims came from all over the Arabian Peninsula to perform hajj with him. He left Madinah five days before the end of Dhu al Qa`dah [Ibn Hajar, Fath al Bari, 8/104; Ibn Ishaq, with a hasan isnad (Sirat ibn Hisham, 4/272). Ibn Kathir, al Bidayah wa al Nihayah, 5/111. This is the same as Ibn Ishaq's report. He said, "Its isnad is jayyid."] . When he halted in Arafat, the following ayah was revealed to him: "�This day have I perfected your religion for you, completed My favor upon you, and have chosen for you Islam as your religion�" (Al Ma'idah 5:4) [Sahih al Bukhari, Fath al Bari, 8/108]



The Muslims learned the rituals of the hajj from the Prophet (sallallahu `alaihi wa sallam) when he said: "Take your rituals from me." His hajj was full of laws pertaining to the shari`ah, especially matters pertaining to the hajj, and general advice and laws which were mentioned in the Sermon of Arafat. For this reason, the scholars showed great interest in the farewell pilgrimage and derived many laws from it, dealing with the rituals of hajj and other matters, of which the books of fiqh and hadith explanation are full. Some of the scholars wrote books dealing specifically with the farewell pilgrimage.



A large gathering of Muslims participated in the event. They listened to the farewell sermon Khutbat al Wadaa' which he gave at Arafat in the middle of the Ayyam al Tashriq (three days following the tenth of Dhu al-Hijjah).



"Verily your blood and your property are as sacred and inviolable as the sacredness of this day of yours, in this month of yours, in this land of yours. Behold! Everything pertaining to the days of ignorance is under my feet completely abolished. Abolished are also the blood revenges of the days of ignorance. The first claim of ours on blood revenge which I abolish is that of the son of Rabi`ah ibn al Harith. And the usury riba of the pre-Islamic period is abolished, and the first of our usury I abolish is that of `Abbas ibn `Abd al Muttalib, for it is all abolished. Fear Allah concerning women! Verily you have taken them on the security of Allah, and intercourse with them has been made lawful unto you by words of Allah. You too have rights over them, and they should not allow anyone to sit on your bed whom you do not like. But if they do that, you can chastise them but not severely. Their rights upon you are that you should provide them with food and clothing in a fitting manner. I have left among you the Book of Allah, and if you hold fast to it you would never go astray. And you would be asked about me (on the day of resurrection), (now tell me) what would you say? They (the audience) said: "We bear witness that you have conveyed (the message), discharged (the ministry of Prophethood) and given wise (sincere) counsel." He (the narrator) said: "He (the Prophet) then raised his forefinger toward the sky and pointed it at the people (and said): "O Allah, bear witness, O Allah, bear witness." [The report is from Sahih Muslim, 4/38-43, from the hadith of Jabir ibn `Abd Allah. Al Shaykh Muhammad Nasir al Din al Albani made some brief additions to it, from other books of hadith which narrated the hadith of Jabir with some sahih additions (Hijjat alNabi, pp. 71-73). See the report of Jabir in Hadith in Hijjat al-Nabii, 38-41. See part of the khutbah in Sahih al Bukhari, Fath al Bari, 8/108). Ibn Ishaq mentioned the long text of the farewell khutbah without isnad. Imam Ahmad mentioned the long text of the khutbah of the farewell pilgrimage, which was given in the middle of the Ayyam al Tashriq. Its isnad includes `Ali ibn Zayd ibn Jad`aan, who al Hafiz ibn Hajar, in al Taqrib, said was weak. Al Bannaa said, "Al Bazzar narrated a similar report with the same meaning from Ibn `Umar with a different isnad." The Imams of hadith narrated parts of it in their books, in different chapters, through sahih isnads; and Allah knows best. (Al Fath al Rabbani, 279-281)]



He delivered another sermon at Mina, when he said, "Do not return to Kufr, killing one another, after I am gone." [Sahih al Bukhari, Fath al Bari, 8/107; Muslim, Sahih, 1/82]

[End of excerpt from Dr `Umari's work]






From Benefits of this Great Sermon:



[Adapted from Masaa'il Muhimma `an il- `Umrah wa'l-Hajj by Muhammad Jameel Zeeno]



Prohibition of shedding innocent blood, and taking of wealth without right, which stresses Islam's protection of souls.
Nullification of validity of actions of Jahiliyyah
Prohibition of taking Riba (usury and interest), which is an increase on the principal, whether small or large. Allah the Most High says: "But if you repent, you may have your capital." [Al Baqarah (2:279)]
Admonition to fulfill and give women their rights, and to deal with them in goodness. Many authentic hadeeths have been narrated in this regard, which elucidate their rights and warn against taking them unjustly.
Advice to strongly cling to the Book of Allah, in which lies the honor of Muslims and their victory. Likewise, the order to stick to the Sunnah, which explains the Qur'an, for verily the reason for Muslims' weakness today is their leaving of judging by the Book of Allah and the Sunnah of His Messenger. There will be no victory for Muslims except by returning to these two Sources.
Testimony of the Companions that the Messenger of Allah, sallallahu `alaihi wa sallam, conveyed the message, discharged his trust and counseled the Ummah.
Order to take rituals of Hajj and other rituals from the Prophet's sayings, actions and tacit agreements.
Subtle indication that the Prophet's farewell would soon come.
Warning against fighting and killing among Muslims, which is disbelief in action, which does not take one out of the fold of Islam, as in his, sallallahu `alaihi wa sallam, saying: "Cursing a Muslim is fusooq, and fighting him is kufr." [Agreed upon]




---


Read more...

Lessons from the Farewell Pilgrimage - Im�m al-Haramain 'Abdul-B�r� ibn 'Awad ath-Thubayt�





My Lord!
Grant me that I should be grateful for Thy favor
which Thou hast bestowed on me and on my parents,
and that I should do good
such as Thou art pleased with,
and make me enter, by Thy mercy,
into Thy servants, the good ones.

Ten Things We Waste

Ten Things We Waste

(based on a lesson of Ibn Qayyim al-Jawziyyah)

1. --Our Knowledge-- Wasted by not taking action with it.

2. --Our Actions-- Wasted by committing them with out sincerity.

3. --Our Wealth-- Wasted by using on things that will not bring us ajr. We waste our money, our status, our authority, on things which have no benefit in this life or in akhirah.

4. --Our Hearts-- Wasted because they are empty from the love of Allah, and the feeling of longing to go to Him, and a feeling of peace and contentment. In it's place, our hearts are filled with something or someone else.

5. --Our Bodies-- Wasted because we don't use them in ibadah and service of Allah

6. --Our Love-- Our emotional love is misdirected, not towards Allah, but towards something/someone else.

7. --Our Time-- Wasted, not used properly, to compensate for that which has passed, by doing what is righteous to make up for past deeds

8. --Our Intellect-- Wasted on things that are not beneficial, that are detremental to society and the individual, not in contemplation or
reflection.

9. --Our Service-- Wasted in service of someone who will not bring us closer to Allah, or benefit in dunyaa

10. --Our Dhikr-- Wasted, because it does not effect us or our hearts.

Ten Sicknesses of the Heart...

Ten Sicknesses of the Heart...
1. You believe in the existance of Allah (SWT) but you do not fulfil His Commands.
2. You say you love the Prophet Mohammed (SAW) but you do not follow his Sunnah.
3. You read the Holy Qur'an but you do not put it into practice.
4. You enjoy all the benefits from Allah (SWT) but you are not grateful to him.
5. You acknowledge Shaitan as your enemy but you do not go against him.
6. You want to enter Paradise but you do not work for it.
7. You do not want to be thrown into Hell-Fire but you do not try to run away from it.
8. You believe that every living-thing will face death but you do not prepare for it.
9. You gossip and find faults in others but you forget your own faults and habits.
10. You bury the Dead but you do not take a lesson from it.

பூண்டு

பூண்டு... (Family: Liliaceae)

ஆங்கிலப் பெயர்... Garlic

இந்தி... Lassum, மலையாளம்... Vellulli

தெலுங்கு.. Tella Gadda தாவரவியல் பெயர்... Allium sativum,, கார்லிக் மில்க்

தேவை

உரித்த பூண்டு பல்... 5, காய்ச்சிய பால்... 2 கப், தேன்... 1 தேக்கரண்டி, ஏலப்பொடி... ஒரு சிட்டிகை

செய்முறை

அடிகனமான ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து அதில் பூண்டு பற்களை இடவும். குறைந்த தணலில் (சிம்) பாலை (முக்கால் திட்டமாக சுண்டும் வரை) காய்ச்சவும். பூண்டு கண்ணாடி போல மென்மையாகிவிடும். அழுத்தினால் அப்படியே மாவு போல நசிந்துவிடும்). இப்போது ஏலப் பொடி கலக்கவும். அதிக சூடு இல்லாமல், வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் தேனைக் கலந்து பருகவும்.

எப்போது குடிக்கலாம்?

பூண்டு நாற்றம் முழுக்க போய் விடும்.

தினமும் இரவில் பூண்டு பற்களைத் தின்று, பாலைக் குடிக்கவும்.

பள்ளி செல்லும் பருவத்தினர் முதல் எத்தனை வயது முதிர்ந்தவரும் பருகலாம்.

ஆச்சாரமாக இருப்போர் வெங்காயம் மற்றும் பூண்டை தவிர்ப்பர். ஆயினும் இதை மருத்துவ மூலிகை அளிக்கும் இயற்கை மருந்தாக எண்ணி பயனடையலாம்.

மருத்துவப் பயன்கள்

முக்கியமாக வாய்வுத் தொல்லை அகலும். ரத்த அழுத்தம், பி.பி. கொலஸ்ட்ரால் ஆகியவை குறையும். நோய் எதிர்ப்பு சக்தி மிகும். குறிப்பாக குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி தொல்லை, தொற்று ஆகியவைகளில் இருந்து காக்கலாம். எகிப்து நாட்டில் பிரமிட் கட்டியபோது, அந்த பணியாளர்களுக்கு கொள்ளை நோயில் இருந்து காக்க பூண்டை உணவுடன் அளித்த சரித்திர சான்று உள்ளது. தேவையற்ற கொழுப்பினால் சதைக் கோளமான உடல் சீராகி, கொடி போன்ற மெல்லிய உடல் வாகுக்கு பக்கத் துணையாய் இருப்பது இந்த பூண்டு.



http://tamilherbs.blogspot.com/