Saturday, August 4, 2007

அஸ்ஸலாமு அலைக்கும்! தமிழ் பேசும் அனைவருக்கும் ஓர் நற்செய்தி !

அஸ்ஸலாமு அலைக்கும்! தமிழ் பேசும் அனைவருக்கும் ஓர் நற்செய்தி !
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும்...
மாபெரும் இஸ்ரா-மிஃராஜ் நிகழ்ச்சி

நாள் : இன்ஷா அல்லாஹ் 10.08.2007 வெள்ளிக்கிழமை
நேரம் : சரியாக மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மட்டுமே
இடம் : ஜம்இயத்துல் இஸ்லாஹ் உள் அரங்கம், ரவ்தா
40 ம் எண் ரோடு (அஹ்மதி நெடுஞ்சாலை), ஹவல்லி ஏஸி பிரிட்ஜ் எதிரில்.
பேரூந்து வழித்தடங்கள் : 17 மற்றும் 19

கருப்பொருள்:
அண்ணல் நபியின் விண்ணுலக பயணம் - நன்மையே
மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!

தலைமை :
மௌலானா மௌலவீ அல்ஹாஜ் அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத்
(இமாம், மஸ்ஜித் அல் உகாஷா, குவைத் - தலைவர் 'K-Tic' )

கிராஅத் :
அல்ஹாஜ் A.A. கபீர் அலி (துணைத் தலைவர் 'K-Tic')

வரவேற்புரை :
டாக்டர் K.S. அன்வர் பாட்சா (துணைத் தலைவர் 'K-Tic' )

நிகழ்ச்சி நெறியாளர்:
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A.,
(பொதுச்செயலாளர் 'K-Tic')


சிறப்புரை:


துபையிலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்
மவ்லவீ காஜா முஹம்மது மக்கீ . மன்பஈ B.A.,
(கத்தீப் / இமாம், மஸ்ஜித் அல் குவைத், தேரா துபை, ஐக்கிய அரபு அமீரகம்)
மற்றும்
இலங்கை மவ்லவீ M.J.M. அஜ்வத் (மார்க்க அறிஞர்கள் குழு 'K-Tic' )
அல்ஹாஜ் N.B. அப்துல் பாரி (துணைத் தலைவர் 'K-Tic')

நன்றியுரை :
மௌலவீ M.S. முஹம்மது மீறாஷா ஃபாஜில் பாகவீ (துணைத் தலைவர் 'K-Tic' )

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத்திலிருந்து வெளியாகும் முதல் இலவச இஸ்லாமிய மாத இதழான 'K-Tic' செய்தி மடல் 'மிஃராஜ்" சிறப்பிதழாக வெளியிடப்படும்.

அனைவரும் குடும்பத்துடன் வருக! குறையில்லா அறிவமுதம் பெருக!!

நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொள்ள தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு :
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A.,
(பொதுச்செயலாளர் 'K-Tic' )?w 78 72 482
சகோ. A.K. சுல்தான் அப்துல் நாஸர் B.A., (இணைப்பொதுச்செயலாளர் 'K-Tic') 94 30 786
சகோ. N . முஹம்மது நாஸர் (இணைப்பொருளாளர் 'K-Tic') ?w 730 27 47

இணையதளம் : www.k-tic.com

மின்னஞ்சல்: q8tic@yahoo.com
யாஹு குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

ஆங்கில ஆசான்

ஆங்கில ஆசான் ்்


அமீரகத்தில் இலவச கல்விப் பணியில் ஒரு தமிழர்

ஸலாஹுத்தீன்


ஐக்கிய அரபு அமீகரம் அபுதாபியில் தனது பணிநேரம் போக மீதமுள்ள நேரத்தில் சமுதாய மக்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணியை இலவசமாக செய்துவருக்ணீறடர் தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழர் சலாஹுத்தீன்.

அமீரகத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடத்தையும் பணம் சம்பாதிப்பதிலேயே குறிக்கோளாக இருப்பார்கள். காரணம் பல தியாகங்களை செய்து வெளிநாடு வந்திருப்பது சம்பாதிப்பதற்காகவே என்ற சுடுகின்ற உண்மைதான் காரணம். சிலபேர் சொல்வதைப்போல மஹஸர் மைதானத்தில் ‘யா நப்ஸே’ என்று அவரவர்கள் தங்களை மட்டுமே பார்த்துக் கொள்வதைப்போல வெளிநாட்டு வாழ்க்கையும் கிட்டதட்ட அந்த நிலைமைக்குத்தான் தள்ளப்படுகிறடர்கள். உறவினர்கள், நண்பர்கள் என அந்த வட்டாரங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் கவனிக்கப்படுவதில்லை. ஊடணீலே நல்ல நண்பனாயிருந்தாலும் இங்கே வந்திருந்தால், ஒரு ‘ஹய்’ ஒரு ‘ஹலோ’ அவ்வளவுதான், தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போவார்கள். யாரையும் கவனித்துக் கொண்டிருக்க முடியாது என்பதுதான் அப்பட்டமான உண்மை.

இப்படியிருக்கும் இங்கேதான் ஒரு தமிழர் குறைந்த வருமானமேப் பெற்றுவந்தாலும், தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தை சமுதாய மக்களின் கல்விப்ணிக்கு உதவி வருகிறடர். தமிழர்கள் ஆங்கிலப் புலமையில் குறைவாகவிருப்பதாலேதான் வளைகுடாவில் அவர்களால் உலக அளவிலான போட்டியை சமாளிக்க முடியவில்லை, என்று உணர்ந்து நம் சமுதாய மக்களை உயர்த்திட இலவசமாகவே ஆங்கிலக் கல்வியைக் கற்றுத்தருகிறடர் சலாஹுத்தீன்.

இவரது சேவையில் பலனடைந்த மாணவர்களில் பலர்; பதவி உயர்வு பெற்றவர்களும் உண்டு.