Showing posts with label அனுமதி. Show all posts
Showing posts with label அனுமதி. Show all posts

Thursday, September 11, 2008

கூடுதலாக 11 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்ல அனுமதி

கூடுதலாக 11 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்ல அனுமதி



புது தில்லி, செப். 11: நடப்பாண்டில் இந்தியாவிலிருந்து கூடுதலாக 11 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்வதற்கு சவூதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டு 1.68 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

ஹஜ் பயணம் செல்வதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கூடுதல் யாத்ரீகர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு 1.57 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். நடப்பாண்டில் ஹஜ் பயணம் செல்ல உள்ள 1.68 லட்சம் பேரில் 1,23,211 யாத்ரீகர்கள் மத்திய ஹஜ் கமிட்டி மூலம் அனுப்பிவைக்கப்படுவர். எஞ்சியவர்கள் தனியார் சுற்றுலா அமைப்பினர் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்வர்.

சலுகைக் கட்டணம்: நடப்பாண்டில் 1,23,211 ஹஜ் யாத்ரீகர்கள் சலுகைக் கட்டணம் மூலம் மெக்கா செல்ல உள்ளனர். கடந்த ஆண்டு 1.10 லட்சம் பேர் சலுகைக் கட்டணத்தில் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.

கட்டணம் உயர்வில்லை: ஹஜ் பயணிகளுக்கான விமானக் கட்டணம் உயர்த்தப்படாது என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.

தில்லியில் வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

ஹஜ் பயணிகளுக்கான விமானக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டைப் போல் ஒரு பயணிக்கு ரூ.12 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றார்.

அமைச்சரவை ஒப்புதல்: தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு மற்றும் நிதிக் கார்ப்பொரேஷனின் பங்கு மூலதனத்தை ரூ.750 கோடியிலிருந்து ரூ.850 கோடியாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNH20080911143630&Title=Headlines+Page&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0&ndate=9/12/2008&dName=No+Title&Dist=

Saturday, August 9, 2008

நீங்கள் தேர்வு செய்யும் கல்வி நிறுவனம் முறையான அனுமதி பெற்றுள்ளதா ?

நீங்கள் தேர்வு செய்யும் கல்வி நிறுவனம் முறையான அனுமதி பெற்றுள்ளதா ?


விபரம் அறிய கீழ்க்கண்ட இணையத்தளங்கள் மூலம் அறியலாம்

www.education.nic.in

www.ugc.ac.in

www.aicte.ernet.in

www.ncte.in.org

www.nciindia.org

www.dec.ac.in

Wednesday, July 23, 2008

துபாயில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

துபாயில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

துபாயில் உடல்நலககுறைவு மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் தமிழக இளைஞர் ஒருவர் துபாய் ராஷித் மருத்துவமனையில் இந்திய துணைத் தூதரக அலுவலர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோர்வாகக் காணப்பட்ட அவரிடம் பேசியதிலிருந்து தனது பெயர் குணசேகர் என தெரிவித்தார்.தாயாய் பெயர் விஜயலெட்சுமி எனவும், தாத்தா பெயர் பெரிய கருப்பன் எனவும் தெரிவித்துள்ளார். அவரது விபரம் வருமாறு

குணசேகர்
த/பெ. பெரிய கருப்பன்
கிழக்குத் தெரு
எஸ். பி. மங்கலம் ( சர்வோதய மங்கலம் )
கொட்டாம்பட்டி அருகில்
சிங்கம்புணரி ( வழி )
சிவகெங்கை மாவட்டம்

அவரைப் பற்றிய முழுவிபரங்கள் தெரிந்தால் துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் தெரிவித்தால் அவரை தாயகம் அனுப்பி வைக்க உதவியாய் இருக்கும். மேற்கண்ட தகவல் அவர் தெரிவித்ததன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுதான் அவரது முழுமுகவரியா என்பது உறுதியாகத் தெரியாத நிலை நிலவுகிறது.

எஸ்.பி, மங்கலம், கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள ஊரைச் சேர்ந்தவர்கள் அவரைப் பார்த்து யார் என விபரம் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு
050 467 4399

http://thatstamil.oneindia.in/news/2008/07/24/wrold-tamil-youth-admitted-in-dubai-hospital.html


navaneetha krishnan
dateWed, Jul 23, 2008 at 11:49 PM
subjectRe: துபாயில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

நண்பருக்கு வணக்கம்!
இச்செய்தியை நான் அதிகாலையில் பிரசுரித்துள்ளேன். மேலும் எமது வழக்குரைஞர் மூலமாக சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லப்பட்டுவிட்டது. மேலும் "நாங்கள் அந்தக் கிராமத்தில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால் இதில் தமிழக அரசின் தலையீடு இருந்தால்தான் சிறப்பாக இருக்கும்" என்று சப் இன்ஸ்பெக்டர் அதிகாலைக்கு தெரிவித்தார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாலை முயற்சி செய்கிறது என்பதை தகவலுக்காகத் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். நன்றி!

பிகு : எஸ்.வி.மங்களம் என்பதே சரி

நவின் - கலிபோர்னியாவிலிருந்து.

வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com



TI S
dateThu, Jul 24, 2008 at 8:57 PM
subjectRe: துபாயில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

Dear friend,

Can you give the photo of the youth. So that it will be some helpful to find out the persons here.

Agni Subramaniam
MANITHAM - www.manitham.net
OPIRA - www.opira.org

HOME PAGE : TAMIL INFO SERVICE [TIS]