Showing posts with label சமுதாயம். Show all posts
Showing posts with label சமுதாயம். Show all posts

Sunday, April 18, 2010

சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு தீங்கு!

சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு தீங்கு!

(டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி ஐ.பீ.எஸ்.(ஓ)

என் இனிய சகோதர சகோதரிகளே!

உங்களுடன் சில மாதங்களாக சமுதாய பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் மின் அஞ்சல்கள் மூலம் தொடர்பு கொண்டு வருகிறேன். முன்பெல்லாம் கதைகள், கட்டுரைகள் பத்திரிக்கைகள், புத்தகங்களில தான் படிப்போம். ஆனால் இன்று சுழழும் மின்சார உலகத்தில் அலுவல்களுக்கிடையே சில நேரம் மின் அஞ்சலை உபயோகமான தகவல்களைப் பெறவும், நண்பர்கள் உறவினர்களுடன் சில நொடிகள் சம்பாசனை செய்யவும் உபயோகப்படுத்துகிறோம். ஆனால் அந்த சாதனங்களையே தனது சொந்த விருப்பு, வெறுப்புகளைக் கொட்டித்தீர்க்கும் வழிகளாக கருதினால் படிப்பவர்கள் மனதில் பாதிப்பினை ஏற்படுத்தாதா? அந்த செயல்களைத்தான் நான் சில நாட்களாக சில சமுதாய ஊடகங்களிலும், மின் அஞ்சல்களிலும் பார்த்து வருகிறேன்;. நீங்களும் பார்த்து படித்திருப்பீர்கள். அவை சரிதானா? என்பது தான் என் கேள்வி.

1998 ஆம் ஆண்டு கோவைக் கலவரத்தில் பாதிக்கப் பட்ட இஸ்லாமிய சமூதாயத்திற்காக குரல் எழுப்பிய சமுதாய தொண்டு நிறுவனம் ஜனாப். ஜெயினுலாப்தீன்-பாக்கர்-ஜவஹர்அலி-ஜவஹருல்லாஹ் கூட்டுத் தலைமையில் த.மு.மு.க என்று இயங்கி வந்தது. அந்த அமைப்புதான் பெண்கள் தெருவிற்கு வந்து முஸ்லிம்களுக்காக குரல் ஏழுப்பிய முதல் இஸ்லாமிய இயக்கமாக இருந்து வந்தது. துரதிஸ்டமாக அந்த இயக்கம் மூனறாக உடைந்து ஒரு இயக்கத்திற்கு ஜெயினுலாபுதீனும், மற்றொரு இயக்கத்திற்கு எஸ்.எம். பாக்கரும், மூன்றாவது இயக்கத்திற்கு ஹைதர் அலியும்-ஜவஹருல்லாஹ்வும் தலைவர்களாக இருக்கின்றனர். ஹைதர் அலி-ஜவஹிருல்லாஹ் தலைமயையிலான இயக்கம் அரசியல் மனிதநேய கட்சியினை 2009பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தொடங்கியது. மற்ற இரண்டு இயக்கமும் சமதாய இயக்கமாக இயங்கி வருகிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் தங்கள் ஆதரவுகளினை வௌ;வேறு அரசியல் கட்சிகளுக்கு தெரிவித்து வருகின்றனர். நான் மேலே குறிப்பிட்ட நால்வரும் மிகவும் திறமை சாலிகள்-சிறந்த பேச்சாளர்கள்-ஆற்றல் மிக்கவரகள். ஒருவரை விட ஒருவர் சலைத்தவரில்லை. ஒரு இயக்கம் என்று இருந்தாலோ அல்லது தலைவர்கள் பல இருந்தாலோ அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஆனால் அவைகள் சந்திக்கு வரக்கூடாது என்பது தான் என் ஆதங்கம்.

26.01. 2010 அன்று மதுரையில் நடந்த குடியரசு தின விழா பாப்புலர் ப்பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய அணி வகுப்பிலும் 30-31;.01.2010 அன்று திருச்சி ஜமாத்தில் உலாமா நடத்திய கூட்டத்திலும், பிப்ரவரியில் முஸ்லிம் லீக் ஆபிஸில் நடந்த கட்டாயத்திருமணச்சட்ட ஆலோசனைக் கூட்டத்திலும், மார்ச்சில் ஹோட்டல் பிரசிடண்ட்டில் நடந்த இட ஒதிக்கீடு ஆலோசனைக் கூட்டத்திலும் பெரும்பாலான சமுதாய இயக்கங்கள் தங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்லி இஸ்லாமியர் ஒற்றுமையினை வெளிக் காட்டின என்பது பாராட்டக் கூடியது. ஆனால் அந்த ஒற்றுமை சீர்குழைந்து விடுமோ என்று சமீப கால அறிக்கைப் போர்களால் அச்சமாக உள்ளது. சகோதர யுத்தத்தில் பதவியிழந்த கதையினை மகாபாரதத்தில் நாம் படிக்கவில்லையா? காட்டில் தனித்தனியே மேய்ந்த நான்கு காளை மாடுகள் புலிக்கு பலியான கதை மறந்து விட்டோமா?

சமீபத்தில் நடந்த இலங்கைப் போரில் ஏன் தமிழர்கள் தோற்றார்கள்? அங்கு தமிழ் ஈழ விடுதலையென்று முதலில் முஸ்லிம்களை கிழக்கு மத்திய இலங்கையிலிருந்து விரட்டினார்கள், அதன் பின்பு விடுதலை இயக்கத்தில் சகோதரர்களாக இருந்த உமா மகேஸ்வரன், பத்மநாபா, மாத்தையா, ஸ்ரீசபா ரத்தினம், தமிழ் தலைவர் அமிர்தலிங்கம், முன்னாள் முதல் மேயர் யோகேஸ்வரன், வெளியுரவு அமைச்சர் கதிர்காமர் ஆகியோர்களை துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கினார்கள். ஆகவே அந்த இயக்கம் இன்று இலங்கையில் வேரறுக்கப்பட்டது.

நமது சமூதாயம் ஹிந்துத்துவா வெறியர்களால் பல திசைகளிலும் தாக்கப்பட்டு வருகிறார்கள். எப்போது இஸ்லாமிய ஒற்றுமை குலையும் அதில் மீன் பிடிக்கலாம் என எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் என்ன சொல்கிறார் தெரியுமா? இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே, அப்படி இல்லையென்றால் இந்தியாவினை விட்டு வெளியேறி விடலாமாம். நேற்றைய இரவு (13.04.2010) டி.வி. செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு உண்மை நிகழ்ச்சியினைப் பார்த்துக் அதிர்ந்திருப்பார்கள். அதில் சீனாவிலுள்ள ஒரு மிருகக் காட்சி சாலையில் ஐந்து புலிகள் கொண்ட கூண்டின் மேலே ஏழு வயது சிறுமி 26 அடி உயர கம்பியில் நடக்கிறாள.; அந்த சிறுமி எப்போது கீழே விழுவாள் அவளை சாப்பிடலாம் என்று வாயைப் பிழந்து அன்னாந்து பார்த்துக் கொண்டு இருந்தன. ஒரு கட்டத்தில் அந்த சிறுமி கீழே விழப்பார்க்கிறாள் அப்போது அவள் முதுகில் கட்டியிருந்த கம்பியால் அவள் தப்பித்துக் கொள்கிறாள். அந்த சமயத்தில் புலிகள் மேலே பாய்ந்தன. அவைகளின் பசியினைப் போக்க வெள்ளைப் புறா ஒன்றை மிருகக்காட்சிசாலை அதிகாரி மேலேயிருந்து போடுகிறார். அதனை ஒரு புலி கவ்விக் கொண்டு ஓடுகிறது. இதில் நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அதாவது சிறிமியினை சிறுபான்மை சமூகம் என்றும் அந்த சமூகத்தினை ஒழிக்க நேரம் காத்திருக்கும் புலிகளாக ஹிந்துத்துவா அமைப்புகள் என்றும், அந்த புலிகளிடமிருந்து சிறிமியைக் கம்பி அல்லாஹ்வின் பாசக்கயிறு என்றும் கொள்ளலாம். நமது சமுதாயம் எப்போது வேறுபடும் அதில் மஞ்சள் குளிக்கலாம் என எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற வேளையில் நமது சகோதர யுத்தத்திளை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவைதானா?

இந்தச் சமயத்தில் மறைந்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் அலிகார் கூட்டத்தில் 5.5.1970ந்தேதி சமுதாய ஒற்றுமை குறித்து பேசியதினை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். “நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம். சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிக,மிக அவசியம். பெரும்பான்மை சமூகத்தினர் எத்தனைக் கட்சியில் வேண்டுமானாலும் பிரிந்து இருக்கலாம், ஆனால் சிறுபான்மை முஸ்லிம்கள் அப்படி பிரிந்து வாழ முடியாது. அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருப்பது குர்ஆனின் கட்டளையாகும். இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம் வரை சிறப்பாகவே வாழ்ந்தார்கள். முஸ்லிம்கள் இன்றைய தாழ்ந்த நிலை ஏன்? எப்போது முஸ்லிம்கள் இறைவனின் ஒற்றுமை என்ற கயிறைப் பற்றிப் பிடித்துக் கொள் என்ற வசனத்ததை மறந்தோமோ அப்போதே நாம் தரம் தாழ்ந்து விட்டோம். ஜனநாயகத்தில் அரசிலில் பங்கு பெறாமல் நாம் எப்படி வாழ முடியும்? பிற சமுதாயத்தினர்க்கு வேண்டுமானால் அரசியல் வேறு மதம் வேறு என்றிருக்கலாம், ஆனால் முஸ்லிம்களுக்கோ மதமும், அரசியலும் ஒன்றாக இணைந்தே இருக்கின்றன…இந்திய சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம்லீக் பணியைத் தொடர்ந்து செய்து வந்த மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை திருப்திகரமாக இருக்கிறது. முஸ்லிம்கள் ஸ்தாபன ரீதியில் இயங்காத மாநிலங்களில் தான் அவர்கள் வாழ்வு அவலநிலை அடைந்துள்ளது. மாற்றம் காண வேண்டுமென்றால் இறைவனின் போதனைப் படி ஒன்று சேர வேண்டும்…” அவரது சொற்பொழிவு தொலை நோக்க பார்வையில்லையா?

அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ரீகனிடம் உள்நாட்டு இணைச்செயலாளராக இருந்த ராபர்ட் என்பவர் சமீபத்தில் பேசும் போது, ‘ உலக முஸ்லிம்களின் தோல்விக்கு அவர்களின் ஒற்றுமையின்னையே காரணம் என்று சொல்லி அதற்கு உதாரணமாக பாலஸ்தீனம், இராக், ஆப்கானிஸ்தான’ போன்ற நாடுகளை எடுத்துச் சொல்லியுள்ளதாக ஊடகங்கள் சொன்னது. அதனையே நானும் இங்கே வலியுறுத்த விறும்புகிறேன்.

சகோதர யுத்திற்கு எந்த அளவு குரோதத்தினை வளர்க்கும் என்று தமிழ்நாட்டில் நடந்த உண்மை நிகழ்ச்சியினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். தி.மு.க 1972 ஆம் ஆண்டு பிரிந்து தி.மு.க மற்றும் அ.தி.மு.க என்று செயல் பட்டு வந்தன. 1977 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது ஜனதா கட்சி ஆட்சி மத்தியில் இருந்தது. ஒரிஸ்ஸாவில் பிஜூ பட்னாயக் முதல்வராக இருந்தார். அவர் தி.மு.க மற்றும் அதிமுக தலைவர்களிடையே செல்வாக்கு மிக்கவர். அவர் இரண்டு கட்சிகளையும் தமிழகத்தில் இணைத்து செயல்பட்டால் சிறப்பாக தமிழகம் இருக்கும் என்ற எண்ணத்தில் இரண்டு தலைவர்களையும் சந்தித்து ஒற்றுமை முயற்சி எடுத்தார். ஆனால் அது முடியாமல் போனது. ஏன் என்று சமீபத்தில் தி.மு.க தலைவர் விளக்கினார். அதன் விளைவு எவ்வாறு இருந்தது என்றால் தி.மு.கவில் மறைந்த திருவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ தாமரைக்கனி தி.மு.க.வில் இருந்ததால் அவர் மறைவிற்கு ஈமச்சடங்கில் கலந்து கொள்ள அப்போது அதிமுக அமைச்சராக இருந்த அவருடைய மூத்த மகன் தங்க தமிழ் செல்வன் செல்லவில்லை என்றால் கொடுமையாக தெரியவில்லையா உங்களுக்கு? அந்த நிலை ஒற்றுமையினை வலியுறுத்தும் இஸ்லாமிய சமுதாயத்திலும் வேண்டுமா? ரஸ_லல்லா மதீனாவில் செய்து கொண்ட முதல் ஒப்பந்தமே அன்சாரிகள், முஹாஜிர்கள், முஸ்ரிக்கர்களை இணைக்கும் ஒப்பந்தம் என்றால் மிகையாகுமா? அவரகள்; வழி வந்த நாம் இரண்டு பட்டுப்போகலாமா?

ஆகவே பல அமைப்புகள் வைத்திருக்கும் தலைவர்கள் கீழ்கண்ட கோட்பாடுகளைக் கடைப்பிடித்தால் வேண்டத்தகாத நிகழ்வுகளை தவிர்க்கலாம்:

அமைப்புகள் தங்கள் இயக்க வேலைகளில் ஈடுபடும்போது தனிப்பட்ட வெறுப்புகளை கூட்டங்களிலோ அல்லது ஊடகங்களிலோ வெளியிட்டு தலைவர்களின் கண்ணியத்திற்கு தீங்கிழைக்கக் கூடாது.
பொதுவான முஸ்லிம் சமுதாயத்தினைப் பாதிக்கிற செயல்களை ஒன்று கூடி விவாதித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு: முத்துப்பேட்டை கலவரம், இட ஒதுக்கீடு, கட்டாய திருமணப்பதிவுச் சட்டம் மைனாரிட்டி கமிஷன் ரிப்போரட்கள் அமல் செய்வது போன்றவை..
அதற்கு வகை செய்யும் முறையில் ஒரு சமுதாய ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும். அந்த குழு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது அவசர தேவை ஏற்படும் போது கூடி ஆலோசனை செய்ய வேண்டும்.
சமுதாய இளைஞரகள் வேலை மற்றும் படிப்புகளில் வாய்ப்பினைப் பெற ஆலோசனை மையம் ஒன்றை ஏற்படுத்தி அவர்களுக்கு கல்விக்கடன், ஸகாலர்ஷிப், தொழில் முனைவருக்கு தேவையான தகவல்கள் தந்து உதவி செய்ய வேண்டும்.

Wednesday, December 30, 2009

சமுதாயம் சிரிக்கிறதே-சாத்தானின் வேத ஓதல் கண்டு!

சமுதாயம் சிரிக்கிறதே-சாத்தானின் வேத ஓதல் கண்டு!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி. ஐ.பீ.எஸ்(ஓ)

http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=231

சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு.
கணேசன் இதய ஆப்ரேசன் செய்து வீட்டுக்கு வந்தவரை முஸ்லிம் லீக் கட்சி
பொதுச் செயலாளர் ஜனாப் காதர் முகைதீன் மற்றும் முஸ்லிம் லீக்
பிரமுகர்கள் சென்று நலம் விசாரித்ததினை பத்திரிக்கை செய்திகளாக
வெளியிட்டிருந்தன. நான் கூட இதுவல்லவோ தமிழ் கலாச்சாரம் போதித்த
மனித நேய உணர்வு என்று மகிழ்தேன். என்னைப் போல பல முஸ்லிம்களும்
சந்தோசப் பட்டிருப்பார்கள் என்றால் மிகையாகாது.

சில தினங்களுக்கு முன்பு முன்னாள் உச்ச நீதி மன்ற தலமை நீதிபதி
சிறுபான்மை நலன் பற்றி விசாரித்த கமிஷன் அறிக்கையினை இந்திய
பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது என்பதினை அனைவரும் அறிவர். அந்த
அறிக்கையில் மத அடிப்படையில் முஸ்லிம் மக்கள் 73 சதவீதம்
இருப்பதாகவும் ஆகவே 10 சதவீத வேலை வாய்ப்பு முஸ்லிம்களுக்கு
கொடுக்க வேண்டும் என்றும், மற்ற மைனாரிட்டிகளுக்கு 5 சதவீதம் கொடுக்க
வேண்டும் என்றும், அவ்வாறு முஸ்லிம் மைனாரிட்டி வேட்பாளர்கள்
வேலைக்கு கிடைக்காத பட்சத்தில் அந்த வேலையினை மற்ற
மைனாரிட்டிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
அத்துடன் 50 சதவீத ரிசர்வேஷன் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற
நிறுவனங்களிலும், 15 சதவீதம் முஸ்லிம் அல்லாதவர் நடத்தும்
நிறுவனங்களிலும் அமல் படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த
ஒதுக்கீடு முஸ்லிம்-கிறித்துவ மதத்திற்கு மனமாற்றம் கொண்டு இணைந்த
தலித் மக்களுக்கும் பொருந்தும். அவர்கள் விரும்பினால் தங்கள் பழைய
சாதிச் சான்றிதழிலேயே ரிசர்வேஷன் பெற தடையில்லை என்றும்
சொல்லியுள்ளார். அவருடைய அறிக்கை நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிட்டி
அளித்த அறிக்கைக்கு பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும்
மத்திய அரசு சாரபில்; பிரதமர் தெரிவித்தார். நீதிபதி சச்சார் அறிக்கையின்
சாராம்சம் என்ன? முஸ்லிம் படிப்பிலும்-வேலை வாய்ப்பிலும் தலித்களை
விட மிகவும் தாழ்ந்திருக்கிறார்கள் இந்திய நாட்டில் சுதந்திரம் அடைந்து 62
ஆண்டுகள் ஆன பின்னரும் என்று தான் சொல்லியுள்ளார். ஆகவே அவர்கள்
முன்னேற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்
விட்டுள்ளார் என்பதினை அனைவரும் அறிந்ததே.

திரு. இல. கணேசன் அவர்கள் 23.12.2009 ஆம் தேதி வெளியிட்ட
அறிக்கையில், ‘நீதிபதி ரங்கநாத மிஸ்ராவின் இந்த அறிக்கை இஸ்லாமிய,
கிறிஸ்துவ மத குருமார்கள் தூண்டிதலின் பேரில் கொடுக்கப்பட்ட
அறிக்கையென்றும், இந்த குருமார்கள் தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்கள் வாழும்
பகுதிகளுக்கு சென்று, ‘நீ இந்துவாக இருப்பதால்தான் சாதிக் கொடுமை
நீடிக்கிறது, என் மதத்திற்கு வந்து விட்டால் சாதி ஒழியும், சமத்துவம்
நிலவும்’ என்று ஆசை வார்த்தை காட்டி மதம் மாற்றினார்கள். இப்போதோ
மதம் மாறிய பின்னும் சாதி நீடிக்கிறது என்றும் சொல்லி சலுகை
கேட்கிறார்கள், ஆகவே அந்த அறிக்கையினை நிராகரிக்க வேண்டும்,
இல்லையென்றால் மத ரீதியான பின் விளைவுகள் உண்டாக்கி விடும்’
கூறியிருக்கிறார்.

ஆனால் உண்மையென்ன? நாடெங்கிலும் தாழ்த்தப்பட்டவர் முற்பட்ட,
ஆதிக்க சாதிகளின் முன்னால் சட்டையணிக்கூடாது, காலணி அணியக்கூடாது,
டீக்கடையில் ஒரே டம்ளரில் டீ வழக்கக் கூடாது, பிணங்கள் எரிப்பதிற்கு தனி
சுடுகாடு, அவர்கள் மேல் ஜாதி வீதிகளில் நடமாடக்கூடாது, கிணற்றில்
தண்ணீர் மேல் ஜாதியினர் பிடிக்கும் போது தண்ணீர் பிடிக்கக்கூடாது,
குளத்தில் ஒன்றாக குளிக்கக்கூடாது, கோயில்களில் ஒன்றாக சேர்ந்து
வணங்கக்கூடாது, மனமாற இரு ஜோடிகள் வௌ;வேறு ஜாதியினராக
இருந்தாலும் இணையக்கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளினால்
மனம் நொந்து கடலை நோக்கி ஓடி வரும் சிறு ஆறுகள் போல சமத்துவம்
சகோதரத்துவம் போற்றும் இஸ்லாம் மதம் நோக்கி ஓடி வருகிறாரகள் இந்து
மதத்திலுள்ள தலித் மக்கள். அவர்களுக்கு ஆசை வார்த்தை கொடுத்து யாரும்
அழைப்பதில்லை என்பதுதான் உண்மை. எப்போது ஒருவன் ‘லாயிலாக
இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸீலல்;லாஹ’; என்று இஸ்லாமிய மதத்தினை
ஏற்றுக் கொண்டானோ அப்போது ஜாதி வேறுபாடுகள் அறுத்ததெறிந்து
வீசப்படுகின்றன. இந்த நவீன உலகத்திலும் ஜாதி இந்துக்கள் தலித் மக்கள்
தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என்று சுவர் எழுப்பிய அதிசயம் பல
வருடங்களுக்கு முன்பு தென்ஆப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி நடந்தபோது
இருந்தது. அதன் பின்பு நெல்சன் மண்டேலா 27 ஆண்டு தனிமை சிறையில்
இருந்தாலும் போராடி கறுப்பின மக்கள் உரிமை காத்ததோடு மட்டில்லாமல்
அதன் ஜனநாயக அரசின் ஜனாதிபதியாகவும் இருந்தார். ஆனால் தமிழகத்தில்
மதுரை மாவட்டத்தில் உத்தமபுரத்திலும் அது போன்ற சுவர் சமீபத்தில் அரசு
முயற்கியால் இடிக்கப்பட்டாலும் இன்னும் உரிமை மறுக்கப்படுகிறது என்று
தகவல் கிடைத்து பார்வையிட வந்த மார்க்கிஸ்ட் கம்ய+னிஸ்ட் பொலைட்
பீரோ மெம்பர் பிரிந்தா கரட் கூட போலீஸாரால் கைது செய்யப்பட்டார்
என்றும் அது சம்பந்தமாக விசாரணை நடந்தது என்பதினையும் அனைவரும்
அறிந்ததே.

ஏன் சிவகங்கை மாவட்டம் ஊஞ்சனை கிராமத்தில் கோயில் தேர்
இழுக்க தலித்துகள் மறுக்கப் பட்டு அதனை தட்டிக்கேட்ட ஒன்பது தலித்
கொடூரமாக கொலை செய்யப்பட்டதையும் அந்த கிராமத்தைப் பார்ப்பதிற்காக
1988ஆம் ஆண்டு பாரத பிரதமர் ராஜீவ் சென்றதினையும் அனைவரும் மறந்து
விடவில்லை. ஜனநாயக நாட்டில் ஒரு தலித் முருகேசன் மதுரை மாவட்டம்
கீழையூர்பஞ்சாயத்து தலைவராக வந்துவிட்டார் என அறிந்து அவரை
பணியாற்ற விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல,; அவர் உள்பட ஆறு
தலித்துகள் மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு பஸ்ஸில் வரும்
போது கொடூரமாக கொலை செய்யப்பட்டதையும் அந்த வழக்கில்
உச்சநீதிமன்றமும் குற்றவாளிகளின் தண்டனையினை உறுதி செய்ததினையும்
அனைவரும் பத்திரிக்கையில் படித்திருப்பீர்கள். விவசாய கூலி உயர்வு கேட்ட
தலித் விவசாயிகள் மிராசுதார்களால் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
25ந்தேதி மிருகத்தனமான செயலில் தஞசை மாவட்டம் கீழ் வெண்மணி
கிராமத்தில் 40 பேர் பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்பட உயிருடன்
எரித்து கருக்பட்டனர் என்பதினை கல்லூரி மாணவானாக இருந்த
காலத்திலிருந்து இன்னும் பசுமையாக நெஞ்சில் உள்ளது. அன்றை முதல்வர்
பேரரிஞர் அண்ணா கூட அந்த செய்தி கேட்டு துடி துடித்து, ‘ என் நெஞ்சில்
பாய்ச்சிய ஈட்டியாக கருதி வேதனையடைந்து இரவு முழுவதும் உறங்காது
அல்லல் பட்டேன் என்று சொன்னதினை எல்லோரும் படித்திருப்பீர்கள.

சென்ற மாதங்கூட திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டியில் தலித்
மக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, நீதித் துறையின்
உத்திரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் போலீஸ் துணையோடு அவர்களை
பஸ்ஸில் அணியாக அழைத்துச் செல்லும் போது கல், தடி கொண்டு
தாக்கப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆகவே தான் கம்ய
+னிஸ்ட்டுகள் ஆலய நுழையும் போராட்டத்தினை அறிவித்துள்ளார்கள்.
பழைய புராணத்தில் நந்தன் என்ற தலித் ஆண்டவனை தரிசிக்க கோவிலுக்கு
சென்றதாகவும் இறைவனை தரிசிக்க விடாமல் நந்நி போன்றவர்கள்
மறைத்துக் கொண்டு இருந்ததாகவும் ஆகவே அவன் இறைவனிடம், ‘சற்றே
விலகியிரும் பிள்ளாய், சன்னிதானம் மறைக்கிறது, என்றும் நந்தன்
முறையிட்டதாகவும், இறைவன் செவிசாய்த்து ‘நந்தாய் உள்ளே வா’ என்று
அழைத்து நந்தன் உள்ளே சென்று இறைவனை வழிபட்டதாகவும் புராணம்
சொல்கிறது. ஆகவே ஆண்டவனே சொன்னால் தான் தலித்களுக்கு உரிமை
கொடுக்கும் நிலையிருப்பதால் தானே தலித் மக்கள் சமத்துவம்-
சகோதரத்துவம் போற்றும் இஸ்லாம் மதத்திற்கு ஓடோடி வருகிறார்கள்
என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஏற்கனவே நீதியரசர் சச்சார்
அறிக்கையில் படிப்பில்- வேலை வாய்ப்பில் முஸ்லிம்கள் தலித் போன்று
இருப்பதாலும், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறிய
தலித்கள் பொருளாதாரம்-கல்வியில் பின் தங்கியிருப்பதாலும் நீதியரசர்
ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் தலித்கள் அனுபவித்த அரசு சலுகைகளை அவர்கள்
மதம் மாறினாலும் வழங்க வேண்டும் என்று பரிந்திருக்கிறாரே தவிர எந்த
முஸ்லிம் மத குருமார்களும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா போன்ற
அப்பழுக்கற்ற நீதிபதியினை யாரும் வசியப்படுத்தி அறிக்கை தயாரிக்கச் செய்ய
முடியாது.

பி.ஜே.பியில் தலித்-பிற்பட்ட தலைவர்கள் தலை தூக்க முடியுமா?
அவ்வாறு தமிழக தலைவராக வந்த டாக்டர் கிருபாநிதி வடநாட்டில் நடந்த
மாநாட்டில் எவ்வாறெல்லாம் அவமானப்படுத்தப் பட்டார் என்று அறிக்கை
விடுத்து ராஜினாமா செய்யவில்லையா? பிற்பட்ட சமுதாய தலைவர்களான
உமாபாரதி-கல்யான்சிங்-ஏன் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் போன்றோர்
பி.ஜே.பியில் இருந்து ஏன் விலகினார்கள் என்பது அவர்கள் விலகும் போது
கொடுத்த அறிக்கையினைப் பார்த்தாலே அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
அங்கு தலித்-பிற்பட்ட சமூதாய மக்களுக்கு உரிமை மறுக்கப் படுகிறது
என்பதே உண்மை. அவருடைய வீட்டினை ஒழுங்கு படுத்துவதிற்கு பதில்
கண்ணாடி மாளிகை போன்று இருக்கிற இஸ்;லாம் மதத்தினை ஜாதி உணர்வு
இஸ்லாத்திலும் இருக்கிறது போன்ற மாயையை நிலை நிறுத்தப் பார்க்கிறார்.
ஆகவே தான் பி.ஜே.பி கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக
சென்ற பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகுத்தினார்கள் மக்கள்.
முன்னாள் அதிமுக அமைச்சர் திருநாவுக்கரசர் பி.ஜே.பியிலிருந்து விலகும்
போது, ‘பி.ஜே.பியில் சேர்ந்ததால் நான் நல்ல இஸ்லாமிய நண்பர்களை
இழந்தேன், தமிழகத்தில் பி.ஜே.பி என்ற கட்சி என்ற அமைப்புக்கு மக்கள்
ஆதரவு இல்லை என தெரிந்து கொண்டதாக’ வருத்தத்துடன் அறிவித்து விட்டு
விலகி இன்று காங்கிரசில் சேர்ந்துவிட்டார்.

ஆகவே தான் மக்கள் ஆதரவே இல்லாத ஒரு அமைப்பில் இருந்து
கொண்டு தன் பெயர் தினந்தோரும் பத்திரிக்கைகளிலும்-தொலைக்காட்சியிலும்
வரவேண்டுமென்று ஓதும் வேதத்தினை சாத்தான் ஓதும் வேதமாக
இஸ்லாமிய சமுதாயம் மட்டுமல்லாது-ஒட்டுமொத்த தமிழக சமுதாயமும்
நினைத்து சிரிக்கிறது என்றால் அது உண்னைதானே?

Wednesday, May 6, 2009

முஸ்லிம் சமுதாயமும் பெட்டிக்கடை இயக்கங்களும் !

முஸ்லிம் சமுதாயமும் பெட்டிக்கடை இயக்கங்களும் !

மதிப்பிற்குரிய சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு எழுதிக் கொள்வது !

இதைப் படிக்கும் உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவிட ‘துஆ’ செய்கிறேன் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமிழகத்தை பொருத்த வரைக்கும் ஒற்றுமை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் புரியாத ஒரு சமுதாயம் உண்டு என்றால் அது நமது முஸ்லிம் சமுதாயம் மட்டுமே எனக்கூறுவதில் வெட்கப்படுகிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நமது சமுதாயம் அரசியல் ரீதியாக முஸ்லிம் லீக் என்னும் கட்சியுடனும், இஸ்லாமிய கொள்கை ரீதியாக ஜமாஅத்துல் உலமா (மார்க்க அறிஞர்களின் ) சபையுடனும், ஒழுங்கு முறைக்கு ‘’ஜமாஅத்” மஹல்லா என்னும் கட்டுப்பாட்டுடனும் வாழ்ந்த நமது சமுதாயம் இப்போது எப்படி இருக்கிறது ? எங்கே போய்க் கொண்டிருக்கிறது ? இடைப்பட்ட 25 ஆண்டுகளில் சமுதாயத்தின் பெயரால் எத்தனை கட்சிகள், எத்தனை இயக்கங்கள், எத்தனை பிரிவுகள், எத்தனை பிளவுகள் …இவையெல்லாம் ஏன்? எதனால்? என்ற கேள்விக்கு ஒரே பதில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்பட்ட சுயநலம் தான் ! நாம் குறிப்பிட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்மிடையே இறையச்சம் அதிகமிருந்தது ! மரணத்தின் பயம் இருந்தது ! மண்ணறையின் திடுக்கம் இருந்தது!!! ஆனால் தற்போதோ? இவையெல்லாம் ஏதாவதொரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நினைத்து பார்க்க கூடியதாய் மனிதனின் மனம் மாறிவிட்டது. அதனால் தான் ‘’துன்யா’’ வெனும் இவ்வுலக ஆடம்பர வாழ்க்கையின் சுக போகத்திற்கு நம்மை அடிமை படுத்திக் கொண்டோம். ஆடம்பர வாழ்க்கை யென்பது? சொகுசு பங்களா, சொகுசு கார் நினைத்து பார்க்க முடியாத பண மழையில் குளித்து சுகம் காண்பது தான் ! இது ஒவ்வொரு மனிதனின் எதிர்பார்ப்பாகவும் மாறிவிட்டது. இவற்றையெல்லாம் ஹலாலான வழியில் உழைத்து அனுபவித்தால் கூட இஸ்லாத்தின் பார்வையில் தவறு என்பதை நமது உத்தம தலைவராம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறையில் இருந்தும், (ஸல்) அவர்களின் காலத்திற்கு பிறகு வாழ்ந்து காட்டிய உன்னதமான சகாபாக்களின் வாழ்க்கை தத்துவத்திலிருந்தும் நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் தங்களது பதவி காலத்தின் போது கொளுத்தும் வெயில் காலத்திலும் கூட திறந்த வெளியில் ஈச்ச மர ஓலையின் மீது படுத்து உறங்கிய எளிமையை இன்றும் கூட வரலாற்று ஆசிரியர்கள் சிலாகித்து கூறுகிறார்கள். உலக மக்களுக்கு மட்டுமல்ல, நாளை மறுமை நாளின் போது ஒன்று திரட்டப்படும் லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களுக்கும் கூட தலைமை தாங்கவிருக்கும் நமது உயிரினும் மேலான அண்ணல் நபி (ஸல்) அவர்களின் எளிமையான வாழ்க்கைக்கு கோடி உவமைகளை அடுக்கினாலும் நிகராகாது !
ஆடம்பரம் தான் ஒரு தலைவனின் சமூக அந்தஸ்து என்னும் காலத்திலும் கூட அனைத்து வசதியும் இருந்தும் கூட எளிமையாய் வாழ்ந்து காட்டியவர்கள் நபி (ஸல்) அவர்கள். அவர்களை பின் பற்றியே தான் நபித்தோழர்களும் வாழ்ந்தனர். ஆனால் தற்போதைய சமுதாய தலைவர்களின் நிலையை ஆராய்ந்து பாருங்கள். நேற்று ஆரம்பித்த இயக்கங்களின் தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரைக்கும் ஸ்கார்பியோ, டாடா சுமோ, குவாலிஸ்,இன்னோவா போன்ற சொகுசு கார்களில் வலம் வருகின்றனர். இவையெல்லாம் முறையாக சம்பாதித்து வாங்கியது என சொல்லும் அருகதை எத்தனை பேருக்கு இருக்க முடியும்? குறிப்பிட்ட ஒரு இயக்கத்திற்கு வருவதற்கு முன் டீக்கடையில் வேலை பார்த்தவன் இந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவரான பிறகு பல கோடிகளுக்கு அதிபதியாகி விட்டானே ! என்று அந்த நபரை அருகிலிருந்து பார்த்து வந்த பிற மனிதர்கள் கூறும் உண்மையை புறக்கணிக்க முடியுமா? சமுதாயத்தின் பெயரால் இயங்கி வரும் பெரும்பாலான இயக்கங்களின் பொறுப்பாளர்களில் அதிகமானோர் எவ்வித தொழில் துறையும் இல்லாதவர்களாகவும் இயக்கத்தின் பணி மட்டுமே கதி என்று கிடப்பவர்கள். இவர்களின் பொருளாதார நிலையை கூர்ந்து பாருங்கள். நேர்மையாய் உழைத்தவனை விட பல மடங்கு சொத்து சேர்த்தவர்களாய் மாறி விட்டனர். எங்கிருந்து எப்படி இவ்வளவு பணம் இவர்களுக்கு கிடைத்தது? என்பது தான் பாமரனாய் எல்லோரும் கேட்கும் கேள்வி? இத்தகைய கேள்விக்குரிய பதிலை ஆய்வு செய்யும் போது நமக்குத் தலை சுற்ற ஆரம்பித்து விடும். எங்காவது மதக்கலவரம் வராதா? அதில் நம் மக்கள் சிலர் சாக மாட்டார்களா? உடனே அதை வீடியோ எடுத்து கேசட் ரெடி பண்ணி முதலில் அனுப்பப்படும் ஏரியாவாக அரபு நாடுகளையும் பிறகு தமிழகம் முழுவதும் என்ற திட்டத்தின் படி கேசட் விநியோகம் முடிந்ததும் அதே வேகத்தில் வசூல் வேட்டையிலும் இறங்கி கலவரத்தில் இறந்தவர்களது குடும்பத்தினருக்குரிய நிதி என்று அதற்கு பெயரும் சூட்டி கோடிக்கணக்கில் வசூலிக்கப்பட்ட பணத்தில் சிலதை கண் துடைப்புக்காக சிலருக்கு மட்டும் கொடுத்து விட்டு பெரும் பகுதி பணத்தை அமுக்கி கொண்டவர்களாய் சில காலம் இயக்கம் நடத்தினார்கள். இதற்கு 1998 கோவைக் கலவர வசூல், 2002 ல் நடைபெற்ற குஜராத் பூகம்ப வசூல் மற்றும் குஜராத் கலவர வசூல், 2004 சுனாமி வசூல் போன்றவை ஆதாரங்களாகும். கடந்த சில வருடங்களாக மதக்கலவரம் எங்கும் நடைபெற வில்லையே ! எப்படி இயக்கவாதிகள் பிழைப்பு நடத்தினார்கள்? என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறது ! ஒவ்வொரு வருடமும் ரமலான் காலங்களில் முஸ்லிம்களின் இறைக்கடமையில் ஒன்றான ஜகாத், மற்றும் ஃபித்ரா, கூட்டுக் குர்பானி போன்ற ஏழைகளுக்குரிய தர்மங்கள் விநியோகத்தில் மார்க்கத்தின் பெயரால் உள்ளே நுழைந்து பித்ரா, ஜகாத் புரோக்கர்களாய் மாறி கோடிக்கணக்கில் வசூல் செய்து ஏழைகளுக்கு தங்களது இயக்கத்தின் பெயரால் ஃபித்ரா,ஜகாத் விநியோகம் என்ற போலியான விளம்பரத்தையும் தேடிக்கொண்டு வசூல் தொகையில் சிலதை கொடுத்து விட்டு பெரும் பங்கை அவரவர்களின் சொந்த கணக்கில் சேர்த்துக் கொண்டதையும் ஒவ்வொரு வருடமும் நாம் காண முடிந்தது.
கடந்த இரண்டு வருடங்களாக பித்ரா, ஜகாத்,கூட்டுக் குர்பானி வசூல் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை! மக்கள் ஓரளவுக்கு விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டதும் தான் பிழைப்புக்கு வழி இல்லாமல் போய்விடுமோ? என்ற அச்சத்தின் விளைவாகவே தற்போது ஒவ்வொரு இயக்கமும் அரசியல் கட்சியாய் மாறி வலம் வர ஆரம்பித்துள்ளது. அதனால் தான் இயக்கங்களின் எண்ணிக்கையை விட கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. எல்லா காலத்திலும் எல்லோரையும் ஒரே மாதிரி ஏமாற்ற முடியாது என்ற தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் இறுதி புகலிடம் தான் அரசியல் களம்! கடந்த காலத்தில் அரசியலைப் பற்றிய இவர்களது விமர்சனத்தை பாருங்கள். இந்திய அரசியல் என்பது சாக்கடையாகும். அதில் குளிப்பதற்கு நாங்கள் விரும்ப வில்லை அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் அரசியலுக்கு வரமாட்டோம்! என வீர? வசனம் பேசி தங்களை யோக்கியர்களாய் காட்டிக் கொண்ட அந்த நிறம் மாறிகளான பச்சோந்திகள் தான் இன்றைக்கு அரசியல் என்னும் சாக்கடையை குளிப்பதற்கு மட்டுமல்ல தாகம் தீர குடிப்பதற்கும் தயாராகி விட்டார்கள். இயக்கங்களாய் இருந்து எதையும் சாதிக்க முடியாது என்பதால் தான். அரசியலுக்குள் நுழைகிறோம் எனக் கூறுவோர் சமுதாயத்தின் அரசியல் கட்சியாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் முஸ்லிம் லீக்கை பலப்படுத்தலாமே! பெட்டிக் கடையை போல உருவாகிய இயக்கங்கள் ஆளுக்கொரு கட்சியென ஆரம்பித்து எதை சாதிக்கப் போகின்றனவாம்? தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா அல்லது கருணாநிதி இவர்களது கூட்டணியில் இணைந்து அவர்கள் வீசும் 1 அல்லது 2 எலும்புத் துண்டுகளை மட்டுமே கவ்வ முடியும். அதிலும் ஜெயலலிதா பக்கம் 10 முஸ்லிம் பெட்டிக்கடைகள் இருந்தால் கருணாநிதி பக்கமும் 10 முஸ்லிம் பெட்டிக்கடைகள் இருக்கும். இந்த பெட்டிக்கடை அமைப்புகளுக்கு ஜெயலலிதா எந்த தொகுதியை ஒதுக்குகிறாரோ? அதே தொகுதியை கருணாநிதி சார்பிலான பெட்டிக்கடை அமைப்புகளுக்கும் ஒதுக்கப்படுகிறது. இரண்டு ஆடுகளை மோதவிட்டு ஓநாய் காத்திருப்பது போலத்தான். இது கருணாநிதி, ஜெயலலிதாவின் சூழ்ச்சி அல்ல! சாட்சாத் நமது பெட்டிக் கடை இயக்கங்களின் அணுகு முறை தான். தனக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு 2 கண் போக வேண்டும் என்ற இலக்கணத்தை உணர்ந்து செயல்படும் சமுதாய பெட்டிக்கடை இயக்கங்களின் ‘’ஈகோ’’வால் தான் ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் அதுவும் அடுத்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடிகிறது. தி.மு.க –அ.தி.மு.க வீசும் 1 அல்லது 2 சீட்டுகளே தமது கட்சிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் என நினைத்து செயல்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் போக்கினால் தான் வாரத்திற்கு இரண்டு பெட்டிக்கடை இயக்கங்களின் தோன்றுகின்றன. மக்கள் தொகை கணக்கின் படி தமிழகத்தில் வன்னியர் சமுதாய மக்களை விட முஸ்லிம் சமுதாய மக்களின் எண்ணிக்கை தான் அதிகம். ஆனால் வன்னியர் சமுதாயத்தின் அரசியல் சபையான பாட்டாளி மக்கள் கட்சிக்கு இன்று 6 எம்பிக்களும், 18 எம்.எல்.ஏக்களும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் இரண்டு மத்திய அமைச்சர் பதவியும் உள்ளபோது நமது சமுதாயத்தின் பிரதி நிதித்துவம் “0” பூஜ்ஜியமாய் இருப்பதற்கு என்ன காரணம்? அரசியல் ரீதியாக வன்னியர் சமுதாய மக்கள் பா.ம.க என்ற குடையின் கீழ் திரண்டு விடுகிறார்கள் அவர்களுக்குள் ஏராளமான பெட்டிக்கடை இயக்கங்கள், லெட்டர் பேடு அமைப்புகள் கிடையாது ! இதே போன்ற உணர்வு முஸ்லிம் சமுதாய பெட்டிக்கடை இயக்கங்களின் தலைவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? எல்லாம் தங்களுக்குள் இருக்கும் சுய நலமும், எல்லோரும் தலைவர்களாக வேண்டும் என்ற கேவலமான சிந்தனைகளும் தான் ! அதனால் தான் ஒவ்வொரு பெட்டிக்கடை இயக்கங்களின் தலைவர்களும் நாம் மேலே சொன்னது போல் குளு குளு ஆடம்பர கார்களில் பந்தாவாய் வலம் வருகின்றனர். ஒற்றுமை குறித்த இறை வசனத்தையும், நபிவழியையும் புறக்கணித்து விட்டு மேடை தோறும் ஒற்றுமை பற்றி வாய் கிழிய பேசும் ஒவ்வொரு இயக்கவாதியின் பேச்சும் பைத்தியங்கள் தெருவில் கத்துவது போலத்தான் !

எவர் இயக்கம் ஆரம்பித்தாலும் உடனே வசூல் கொடுக்கும் பாமர மக்களின் தவறான அணுகுமுறைதான் ! திரட்டப்பட்ட பணத்தை பங்கு வைக்கும் போது பிரச்சினை ஏற்பட்டு ஒவ்வொரு இயக்கங்களும் இரண்டாக பிளவுபடுகிறது. இயக்கவாதிகளின் முக்கிய நோக்கமே வசூல் என்பதுதான். எனது பாசத்திற்கும், மரியாதைக்குமுரிய சமுதாய சகோதர, சகோதரிகள் அனைவரும் அல்லாஹ் ரசூலுக்கு பயந்து இனிமேல் எந்த இயக்கத்திற்கும், எதற்காகவும் நயா பைசா கொடுக்க மாட்டோம் என உறுதி கொண்டு நடைமுறை படுத்திப் பாருங்கள். எல்லா பெட்டிக்கடை இயக்கங்களும் காணாமல் மறைந்து விடும். சமுதாயத்தின் பெயரால் அவ்வப்போது நிகழும் பிரிவினைகளும் பிளவுகளும் ஏற்பட ஒரு வகையில் இயக்கங்களுக்கு வசூல் கொடுக்கும் பொதுமக்களும் காரணமாகி விடுவதால் நாளை மறுமையில் இயக்க வாதிகளின் அயோக்கியத்தனத்தைப் பற்றிய இறைவனின் கேள்விக்கு வசூல் கொடுத்த பொதுமக்களும் தான் பதில் சொல்லியாக வேண்டும். எனதருமை பொது ஜனங்களே ! ஜகாத்,பித்ரா, கூட்டுக்குர்பானி போன்ற இறைவனுக்குரிய அமல்கள் விஷயத்தில் உங்களது தர்மங்களை எந்த இடைத் தரகர்களிடமும் புரோக்கர் இயக்கங்களுக்கும் கொடுக்காமல் நீங்களே நேரடியாக உங்களை சுற்றி இருக்கும் ஏழைகளுக்கு மறைமுகமாக கொடுத்து அதற்குரிய நன்மைகளை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். ஒரே ஒரு வருடமாவது இதை நடைமுறை படுத்திப் பாருங்கள். அனைத்து பெட்டிக்கடை இயக்கங்களும் அழிந்து போய் விடும். அதன் மூலமாகவாவது சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்படட்டும் ! இன்ஷா அல்லாஹ் !!

சமுதாயக் கவலையுடன்
மெளலவி
கீழை ஜஹாங்கீர் அரூஸி
துபை.

Saturday, August 16, 2008

இஸ்லாமிய சமுதாயத்தினர் பாஸிட்டிவ் அரசியலில் ஈடுபட வேண்டும்

இஸ்லாமிய சமுதாயத்தினர் பாஸிட்டிவ் அரசியலில் ஈடுபட வேண்டும்

மதுரை, ஆக. 15: தங்களுக்கான உரிமையைப் பெற இஸ்லாமிய சமுதாயத்தினர் "பாஸிட்டிவ்' அரசியலில் ஈடுபட வேண்டும் என பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் இ.அபுபக்கர் சாகிப் பேசினார்.

மதுரையில் வெள்ளிக்கிழமை மனித நீதிப் பாசறை சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் பேசியது:

நாட்டின் சுதந்திரத்துக்காக இஸ்லாமியர் ஏராளமானோர் தங்களது இன்னுரைத் தந்துள்ளனர். ஆனால், அது மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதைப் போக்கும் வகையிலும், நாட்டின் ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை பேணும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கடந்த காலங்களில் இஸ்லாமிய சமுதாயத்தினர் "நெகடிவ்' அரசியலில் ஈடுபட்டனர். அதாவது, பாஜகவுக்கு மாற்றாக காங்கிரசையும், தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்றாக திமுகவையும் ஆதரித்தனர்.

இனிமேல், பாஸிடிவ் அரசியலில் ஈடுபட வேண்டும். ஏனெனில், பிற்பட்ட யாதவ சமூகம் மற்றும் தலித் சமூகம் "பாஸிட்டிவ்' அரசியல் மூலம்தான் உயர்ந்துள்ளது.

மத்தியில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு மாயாவதி பெயரைக் குறிப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையை எட்ட இஸ்லாமிய சமுதாயமும் "பாஸிட்டிவ்' அரசியலில் ஈடுபடுவது அவசியம் என்றார்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20080816001105&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=8/16/2008&dName=U%D5%FBW&Dist=4