அன்புடையீர் வணக்கம்!
http://www.amudamtamil.com
அமுதம் தமிழ்.காம் வழியாக உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழுக்கும் அமுதென்றும் பேர் - பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளை மனதிற்கொண்டு அமுதம்தமிழ்.காம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அறிவை வளர்க்கும் புதுமை இதழாய் அமுதம் தமிழ் மாத இதழை கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம். அறிவு பெட்டகமாய் விளங்கும் அமுதம் இதழை தொடர்ந்து, வலைதள வாசகர்களும் பயன்பெறும் விதத்தில் அமுதம் இதழை வலைதளத்தில் வெளியிடுகிறோம்.
அதோடு சிறுவர்களுக்கு பயனுள்ள பல்வேறு விஷயங்களும், கலை அறிவியல் சார்ந்த கட்டுரைகளும், பயணக்கட்டுரைகள், உடல்நல, மனநல தகவல்கள், கட்டுரைகள், நகைச்சுவை பகுதி, மகளிர் பகுதி, கதைகள், கவிதைகள், படித்ததும் ரசித்ததும், எழுத்தாளர் அறிமுகம், மக்கள் கருத்துக்களை கூறும் மக்கள் மேடை, மாற்றுத்திறன் கொண்டோர் பயன்பெறும் விதத்தில் பல்வேறு தகவல்கள், சாதனையாளர்கள், புகைப்பட காலரி, குறும்படங்களை பற்றி விமர்சிக்கும் குறும்பட பகுதி ஆகியன அமுதம்தமிழ்.காமில் இதம்பெற உள்ளன.
தமிழ் இணையதள வாசகர்களுக்கு நல்ல பயனுள்ள பகுதிகளை கொண்டு வெளிவந்திருக்கும் அமுதம் இணையதளத்திற்கு தாங்கள் இரண்டு விதத்தில் ஆதரவு தரலாம்.
ஒன்று வாசகராக இருந்து எங்களுக்கு உற்சாகமூட்டலாம். இரண்டு படைப்பாளியாக பங்குபெறுவதன் மூலம் நல்ல தரமான படைப்புகள் வெளிவர உதவலாம்.
உங்கள் ஆதரவை அன்புடன் எதிர்பார்க்கும்
அன்பன்
ஜி.எ.பிரிட்டோ.
Editor
Amudam Monthly
Amudamtamil.com
519, Christu Nager,
Nagercoil, - 629003
Tamilnadu, India.
Phone : 04652 - 225626
Cell : 9994352587
Email : contact@amudamtamil.com