Sunday, May 3, 2009

அமீர‌க‌த்தில் இஸ்லாம் குறித்த‌ ச‌ந்தேக‌ங்க‌ளுக்கு தொலைபேசி வ‌ழியே தீர்வு

அமீர‌க‌த்தில் இஸ்லாம் குறித்த‌ ச‌ந்தேக‌ங்க‌ளுக்கு தொலைபேசி வ‌ழியே தீர்வு

அமீர‌க‌த்தில் இஸ்லாமிய‌ விவ‌கார‌த்துறை இஸ்லாம் குறித்த‌ ச‌ந்தேக‌ங‌களை தொலைபேசி, குறுந்த‌க‌வ‌ல் ( எஸ்.எம்.எஸ்) உள்ளிட்ட‌ ஊட‌க‌ங்க‌ள் வ‌ழியே தீர்வு கிடைக்கும் வ‌ண்ண‌ம் ஏற்பாடு செய்துள்ள‌து.

தொலைபேசி வ‌ழியே இல‌வ‌ச‌மாக‌ 800 24 22 எனும் எண்ணில் காலை எட்டு ம‌ணி முத‌ல் இர‌வு எட்டு ம‌ணி வ‌ரை ஞாயிறு முத‌ல் வியாழ‌ன் வ‌ரை அர‌பி, ஆங்கில‌ம் ம‌ற்றும் உர்தூ ஆகிய‌ மொழிக‌ளில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

குறுந்தக‌வ‌ல் ( எஸ்.எம்.எஸ் ) மூல‌ம் 200 வார்தைக‌ளுக்கு மிகாம‌ல் அனுப்ப‌ வேண்டும். மேல‌திக விப‌ர‌ங்க‌ளுக்கு www.awqaf.ae எனும் இணைய‌த்த‌ள‌த்தின் மூல‌ம் அறிந்து கொள்ள‌லாம்.

விளையாட்டுப் பள்ளிகளில் சேர இலவச விண்ணப்பம் வினியோகம்

விளையாட்டுப் பள்ளிகளில் சேர இலவச விண்ணப்பம் வினியோகம்

தமிழகத்தில் உள்ள 18 விளையாட்டுப் பள்ளிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அப்பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தமிழகத்தில் 18 இடங்களில் விளையாட்டுப்பள்ளி விடுதிகள் மூலம் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்கப் படுத்தி வருகிறது.

இவற்றில் 860 மாணவ மாணவிகள் கல்வியுடன் நவீன விளையாட்டுப் பயிற்சியும் பெற்று வருகின்றனர்.

வரும் 2009-10 ம் ஆண்டிற்கான புதிய மாணவ மாணவிகள் தேர்வு 385 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து விளையாட்டுப் பள்ளிகளிலும் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் இடம் மற்றும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய அளவில் தேர்வு பெறும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வரும் மே மாதம் 9,10ம் தேதிகளில் மண்டல அளவிலான தேர்வுகள் திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, ஈரோடு ஆகிய இடங்களில் நடக்கும்.

மாணவர்களுக்கு மாநில அளவிலான தேர்வுகள் திருச்சியில் மே மாதம் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கும்.

மாணவிகளுக்கு எல்லா விளையாட்டுகளுக்குமான மாநில அளவிலான தேர்வுகள் திருவண்ணாமலையில் மே மாதம் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கும்.

இவ்வாறு செய்திக் குறிப்புகள் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் ( 22 ஏப்ரல் 2009 )