Showing posts with label பாராட்டு. Show all posts
Showing posts with label பாராட்டு. Show all posts

Thursday, August 28, 2008

8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு

8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு



கமுதி, ஆக. 28: கமுதி கலா விருத்தி உயர்நிலைப்பள்ளி, தொடர்ந்து 8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி.யில் நூறு சதவீதம் தேர்ச்சிபெற்றதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு சென்னை-கமுதி முஸ்லிம் பொது நலச்சபை தலைவர் கே.வி.ஏ. முகம்மது கனிவா தலைமையும், டி.எம்.எம். அசன் இப்ராகிம், டி.வி.பி.எம். சிக்கந்தர், இசட். அப்துல் ரஷீது, ஏ. இதிரீஸ், எம்.எஸ். நஜீப்கான், எஸ். மரியம்பீவி, ஏ. பாத்திமாகனி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.

பள்ளித் தாளாளர் கே.பி.எம். முகம்மதுஅலி ஜின்னா வர வேற்றார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற ஜி. ஆசிக் இப்ராகிம், என். முருகன், எஸ். முகம்மது முசாபர் அலி ஆகியோருக்கு தலா ரூ. 5,000 பரிசும் மற்றும் பாடம் வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற 47 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சென்னை தொழில் அதிபர்கள் பி.எஸ்.எம்.டி. செய்யது அப்துல் ரஹ்மான் சேட், ஓஸôன் எம். சாகுல் கமீது, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். காதர்பாட்சா (எ) வெள்ளைச்சாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பி.கே. கிருஷ்ணன், ஜவஹர் ரெக்ஸின் டி.கே.ஏ. அப்துல்வகாப் சகாராணி ஆகியோர் பரிசு வழங்கினர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தொடர்ந்து 8 ஆண்டுகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற சிறப்பாக கல்வி கற்பித்த தலைமை ஆசிரியை, ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டி ஜி. அப்துல்கரீம் நன்றி கூறினார்.

Sunday, March 30, 2008

துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா

துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா

துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் 05
மாலை 7.00 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவனில் கவிஞர் அபிவை டி.எம்.எம்.
தாஜுதீனுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.


விழா நிகழ்வு மீரா. அப்துல் கதீம், இ. இசாக், சே.ரெ. பட்டணம் மணி, குத்தாலம் அஷ்ரப் அலி, பாரத், கவிமதி உள்ளிட்ட பேரவை ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர்

சேட் ஆலிம் மன்பஈ, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடகர் ஏ.எஸ். தாஜுதீன் வாழ்த்துரை வழங்க
உள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 050 4547046/050 4804113
மின்னஞ்சல் தொடர்புக்கு : Abdul Katheem