Thursday, August 28, 2008

8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு

8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டுகமுதி, ஆக. 28: கமுதி கலா விருத்தி உயர்நிலைப்பள்ளி, தொடர்ந்து 8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி.யில் நூறு சதவீதம் தேர்ச்சிபெற்றதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு சென்னை-கமுதி முஸ்லிம் பொது நலச்சபை தலைவர் கே.வி.ஏ. முகம்மது கனிவா தலைமையும், டி.எம்.எம். அசன் இப்ராகிம், டி.வி.பி.எம். சிக்கந்தர், இசட். அப்துல் ரஷீது, ஏ. இதிரீஸ், எம்.எஸ். நஜீப்கான், எஸ். மரியம்பீவி, ஏ. பாத்திமாகனி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.

பள்ளித் தாளாளர் கே.பி.எம். முகம்மதுஅலி ஜின்னா வர வேற்றார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற ஜி. ஆசிக் இப்ராகிம், என். முருகன், எஸ். முகம்மது முசாபர் அலி ஆகியோருக்கு தலா ரூ. 5,000 பரிசும் மற்றும் பாடம் வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற 47 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சென்னை தொழில் அதிபர்கள் பி.எஸ்.எம்.டி. செய்யது அப்துல் ரஹ்மான் சேட், ஓஸôன் எம். சாகுல் கமீது, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். காதர்பாட்சா (எ) வெள்ளைச்சாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பி.கே. கிருஷ்ணன், ஜவஹர் ரெக்ஸின் டி.கே.ஏ. அப்துல்வகாப் சகாராணி ஆகியோர் பரிசு வழங்கினர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தொடர்ந்து 8 ஆண்டுகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற சிறப்பாக கல்வி கற்பித்த தலைமை ஆசிரியை, ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டி ஜி. அப்துல்கரீம் நன்றி கூறினார்.

சித்தார்கோட்டை முகம்மதியா பள்ளி ஆண்டு விழா

சித்தார்கோட்டை முகம்மதியா பள்ளி ஆண்டு விழாராமநாதபுரம், ஆக. 28: சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளியின் 103-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஆகியன நடைபெற்றன.

காலையில் தொடங்கிய விளையாட்டு விழாவுக்கு முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் தலைவர் ஏ.எம்.தாவூது தலைமை வகித்தார்.

நிர்வாகக் குழுத் தலைவர் எஸ். தஸ்தகீர், முகம்மதியா பள்ளிகளின் துணைத் தலைவர் அல்தாப் ஹூசைன், செயலர் முகம்மது முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிகளின் நிர்வாகக் குழு துணைச் செயலர் ஜமீருல் ஹசன் வரவேற்றார். தேசிய ஒருமைப்பாடுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேசினார்.

விளையாட்டுப் போட்டிகளை முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் செயலர் ஹெச். மஹ்சூல் கரீம் துவக்கி வைத்தார்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியை சாஜிதா பானு நன்றி கூறினார்.

முன்னதாக தேசியக் கொடியை முஸ்லிம் சபையின் தலைவர் ஏ.எம். தாவூது, பள்ளிக்கொடியை நிர்வாகக்குழுத் தலைவர் எஸ்.தஸ்தகீரும் ஏற்றி வைத்தனர்.

வாலிப முஸ்லிம் தமிழ்க்கழகத் தலைவர் ஹபீபு ரகுமான் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தலைமை ஆசிரியர் எம். முகம்மது இபுராம்சா, தாளாளர் ஏ. அஹமது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் டி. ராஜேந்திரன், பனைக்குளம் பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.ஏ. ஜவஹர்அலி, சித்தார்கோட்டை முகம்மதியா பள்ளிகளின் நிர்வாகக்குழுத் தலைவர் எஸ். தஸ்தகீர், புரவலர் எஸ்.எம். கமருல்ஜமான், ஊராட்சிமன்றத் தலைவர் முகம்மது அப்துல்கனி, பனைக்குளம் வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

விழாவினைத் தொடர்ந்து முகம்மதியா நர்சரிப் பள்ளியின் ஆண்டுவிழாவும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

வெளிநாட்டு வேலை மோகம்

வெளிநாடு சென்றால் ஏதாவது ஒரு வேலை பார்த்து பிழைத்துக் கொள்ளலாம், கைநிறைய சம்பளம் கிடைக்கும், தனது குடும்பத்தாரை எந்த குறைவும் இல்லாமல் மகிழ்ச் சியாக பார்த்துக் கொள்ளலாம் என்ற கனவுகளோடு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஏஜென்ட்களின் பேச்சை நம்பி ஒரு லட்சம், 2 லட்சம் என கொடுத்து வெளிநாடு செல்ல துடிக்கின்றனர்.பெரும்பாலானவர்கள் இந்த பணத்தை கொடுக்க தாய் அல்லது மனைவியின் நகைகளை விற்றோ, வீட்டை அடமானம் வைத்தோ, வட்டிக்கு பணம் வாங்கியோ கொடுக்கின்றனர்.பாஸ்போர்ட், விசா பெறுவதற்கும் இந்த ஏஜென்ட்களையே அணுகுகின்றனர். சில சமயம் போலி பாஸ்போர்ட்டில் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். இப்படி வெளிநாடு செல்பவர்கள் அங்குள்ள போலீசாரிடம் மாட்டிக் கொண்டு சிறையில் வாடுகின்றனர். குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா போனற நாடுகளுக்கும் சாதாரண வேலை தேடிச் செல்வோர் தான் இத்தகைய அவதிக்குள்ளாகின்றனர்.

அடிமைகளைப் போல வாழ்ந்து: முழுக்க முழுக்க ஏஜென்ட்களை நம்பி வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே அவர்கள் தாங்கள் கூலி வேலைக்காக அனுப்பப்பட்டுள் ளோம் என்பதை தெரிந்து கொள் கின்றனர். தெரிந்த பின்னரும் நாடு திரும்ப முடியாத அளவிற்கு பாஸ் போர்ட், விசா போன்ற ஆவணங் களை வேலை தரும் நிறுவனத்தார் வாங்கி வைத்து கொள்கின்றனர். ஒழுங்கான சம்பளம் தராத கம் பெனிகளில் 12 மணி நேரம் வேலை செய்யும் இவர்கள் அடிமைகளைப் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பலர் மன அழுத்தத்தில் தற் கொலை செய்து கொள்வதும் உண்டு. தப்பி செல்ல முயற்சி செய்து வேலை பார்க்கும் நிறுவனத் தாரால் அடித்து துன்புறுத்தப்படுவதும் உண்டு. அதையும் மீறி தங்கள் எதிர்ப்பை காட்டினால் உயிருக்கே ஆபத்தாக முடியும் அவல நிலையும் உள்ளது.

இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. என்ன வளம் இல்லை இங்கு. வெளிநாடுகளில் வேலை தேடுவதற்காக கஷ்டப்பட்டு திரட்டும் பணத்தை முதலீடு செய்து இந்தியாவிலேயே நம்பிக்கையுடன் சுயதொழில் செய்யலாம். பணத்திற் காக வேலை தேடி வெளிநாடு சென்று ஏமாந்து, வெறுங்கையோடு திரும்பினால் ஊர் சிரிக்குமே என மனம் நொந்து போவதை விட, உள் நாட்டிலேயே நமது பெற்றோர், சகோதரர் அல்லது நண்பர்களின் துணை உள்ளது என்ற நம்பிக்கையுடன் தொழில் செய்யலாம்; படிப் புக்கேற்ற வேலை பார்க்கலாம்.. வெளிநாட்டு வேலை என ஆசை காட்டுவோரிடம் குருட்டு நம் பிக்கை வைக்காமல், இங்கேயே என்ன செய்யலாம் என சிந்திக்க வேண்டும்.

போதிய விழிப்புணர்ச்சி: வெளிநாடுகளில் பாதிக்கப்படும் இந்தியர்கள் குறித்து பத்திரிகைகளிலும் "டிவி'களிலும் ஒரு சிலரது துயர சம்பவங்கள் மட்டுமே வெளிப்படுகின்றன. பலரது வாழ்க்கை வெளிநாட்டு வேலை மோகத்தால் சிதைந்து போனது வெளியுலகிற்கு தெரியாமலேயே போய்விடுகிறது. எனவே இது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இந்த புதிய பகுதி துவக் கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை மோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய துயர அனுபவங்களை "தினமலர்' இதழுக்கு எழுதி அனுப்பலாம். புகைப்படங்களையும் அனுப்பலாம். இதன் மூலம் மற்றவர்களும் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து வெளிநாட்டு வேலை என்ற மோகத் தில் இருந்து விடுபட உதவலாம்.

உங்கள் வசதிக்காக சில கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளன.

கேள்விகள்1. பாஸ்போர்ட் பெறுவதில் சிரமம் இருந்ததா? அதற்கு எவ்வளவு செலவானது?

2. குறிப்பட்ட நாட்டில் குறிப் பிட்ட வேலையைப் பெற இடைத் தரகர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?

3. எந்த நாட்டில் எந்த மாதிரியான வேலை? என்ன சம்பளம் என்றெல்லாம் முன் கூட்டியே தெரிவித்தார்களா?

4. விசா வாங்க எவ்வளவு செலவு செய்தீர்கள்?

5. அந்த நாட்டிற்குச் சென்றதும், உங்கள் பாஸ்போர்ட்டை அந்த நிறுவனத்தினர் வாங்கி வைத்துக் கொண்டார்களா?

6. அங்கு ஏற்கனவே கூறிய வேலை தரப்பட்டதா? பேசிய சம்பளம் தரப்பட்டதா?

7. ஏற்கனவே குறிப்பிட்ட வேலை அல்லது சம்பளம் தரப்படாத நேரத்தில், அங்கிருந்து உடனே இந்தியா திரும்ப அனுமதித் தார்களா?

8. எதிர்பார்த்துச் சென்ற வேலை அல்லது சம்பளம் கிடைக்காத நிலையில் உங்களுக்கு ஏற்பட்ட மனக் கஷ்டம் எப்படி இருந்தது?

9. நீங்கள் எதிர்பார்க்காத வேலை செய்யவோ, கூடுதல் நேரம் பணி புரியுமாறோ வற்புறுத்தப்பட்டீர் களா? துன்புறுத்தினார்களா?

10. அங்கு தங்குவதற்கும் நித்திய கடன்களைக் கழிப்பதற்கும் உரிய வசதி செய்து தரப்பட்டிருந்ததா?

11. நீங்கள் அங்கு பட்ட கஷ்டங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு தெரியுமா? அவர்களுடைய மன நிலை எப்படி இருந்தது?

12. அந்த நாட்டில் வேலை செய்து நாடு திரும்பும்போது, எந்த குறிக் கோளோடு சென்றீர்களோ அந்த அளவுக்கு பணம் சேர்க்க முடிந்ததா?

13. இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

14. இந்தியாவில் சுய தொழில் துவங்க அரசு எந்த அளவிற்கு உதவுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்?

15. வெளிநாட்டில் வேலை தேடிச் செல்ல நினைப்பவர்களுக்கு, உங்கள் அனுபவ அடிப்படையில் கூற விரும்பும் அறிவுரை என்ன?அந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில் எழுதி அனுப்புவதன் மூலம் முழுத் தகவல்களையும் தர இயலும்.நீங்கள் அனுப்பும் தகவல்களை வெளிநாட்டு மோகம் என்ற கவரின் மேல் குறிப்பிட்டு, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

வெளிநாட்டு வேலை மோகம்,
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,
தினமலர் அவென்யூ,
மதுரை- 625 016.

கேள்விகளுக்கான பதிலை coordinator@dinamalar.com என்ற முகவரிக்கு இ மெயில் அனுப்பலாம்.

FATWA SESSION ON RAMADAN

KARNATAKA ISLAMIC KNOWLEDGE BUREAU

KIKB Invites you all with family and friends to attend a,

FATWA SESSION ON RAMADAN

Event conducted by Islamic Affairs and Charitable

Activities Dept.(GOVT. OF DUBAI) on Friday 29th August from 07.30pm to 09.30pm at

JAMIAT UL ISLAHI HALL, Al Qusais, Behind Lulu Hypermarket, Dubai, United Arab Emirates.

All are requested to attend in this event along with family & friends and make it a grand success.

By.President,Office bearers &members, KIKB

துபாயில் ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி

துபாயில் ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி


துபாயில் ரமலானே வருக ! ரஹ்மானே ! நிறைவருளைத் தருக !! எனும் சிறப்பு நிகழ்ச்சி ஹிஜ்ரி 1429 ஷஃபான் 29 ( 29 ஆகஸ்ட் 2008 ) வெள்ளிக்கிழமை தேரா சிறிய ஜர்வூனி கோட்டைப் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.

முதல் அமர்வு ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னர் நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கு மௌலானா மௌலவி பேராசிரியர் முஹம்மது இப்ராஹிம் ஹஜ்ரத் ஃபைஜி தலைமை தாங்குகிறார். மௌலவி முஜீபுர் ரஹ்மான் ஃபைஜி இறைவசனங்களை ஓதுகிறார். அடமங்குடி ஏ. அப்துர் ரஹ்மான் கீதம் பாடுகிறார். மௌலவி மீரன் முஹ்யித்தீன் வடகரை சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

இரண்டாம் அமர்வில் ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் மௌலவி ஹுசைன் மக்கீ காயல்பட்டினம் உரை நிகழ்த்துகிறார்.

மூன்றாம் அமர்வு அஸர் தொழுகைக்குப் பின்னர் நடைபெறுகிறது. இதில் மௌலவி வாலிநோக்கம் கலீலுர் ரஹ்மான் பிலாலி, மௌலவி காஜா முஹ்யித்தீன் ஜமாலி, காயல் மௌலவி முத்து முஹம்மது மஹ்ளரி, காயல் மௌலவி சுலைமான் லெப்பை ஆலிம், சென்னை மௌலவி ஜியாவுத்தீன் பாக்கவி, கோட்டக்குப்பம் மௌலவி முஹம்மது யஹ்யா மன்பயீ, பெரம்பலூர் இஹ்சானுல்லாஹ் பாக்கவி, கீழக்கரை முஹம்மது மஃரூப், ஆவூர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஹஸனீ உள்ளிட்டோர் உரை நிகழ்த்துகின்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துபாய் ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விபரங்களுக்கு 050 29 28 746 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
"Mohamed ismail" ,

குறிப்பு :

ரமலான் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு தஹஜ்ஜத் தொழுகை நடைபெறும்