Showing posts with label மன்னி. Show all posts
Showing posts with label மன்னி. Show all posts

Friday, September 10, 2010

மன்னித்து விடு மறையோனே ..

மன்னித்து விடு மறையோனே ..

நித்தமும் உனை நினைத்திருந்தேன்
நித்திரையிலும் விழித்தெழுந்தேன்;
மாதமாய் பசித்திருந்தேன்
மாசற்ற உன் கருணையை
எதிர் நோக்கிருந்தேன்;

கலங்கிய கண்ணீருடன்கரம்
உயர்த்தி இருந்தேன்;
கடைக்கோடி இரவிலும் காத்திருந்தேன்!

தேம்பி தேம்பி அழுகிறேன் ரஹ்மானே
தேற்றுவதற்கு நீ மட்டுமே போதுமானவனே!
எழுந்து நிற்கும் மயிற்கால்களும் –
உனக்குமண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் போது!

மன்னித்து விடு மறையோனே
மறந்தும் நான் தவறியிருந்தால்;
தொழுகையாளரோடு என் பாதத்தைசேர்த்து விடு –
மாறி மாறி எங்களுக்குள் சேற்றை பூசுவதைவிட்டு காத்துவிடு!

-யாசர் அரஃபாத்

http://itzyasa.blogspot.com/