Saturday, August 1, 2009

ராஸல்கைமாவில் புதிய தையலகம்

ராஸல்கைமாவில் புதிய தையலகம்

ராஸல்கைமாவில் தமிழ் நண்பர்கள் 'அல் மரூஃப் டைலரிங் டிரேடிங் எல்.எல்.சி' எனும் நிறுவனத்தை 24-07-2009 அன்று ராஸல் கைமா மாரிஸ் பகுதியில் துவக்கினர்.

இந்நிறுவனத்தில் யூனிபார்ஃம், பள்ளி சீருடைகள், உள்ளிட்ட ஆயத்த ஆடைகளை மொத்த ஆர்டரின் பேரில் தைக்கும் திட்டத்தின் அடிப்படையில் துவக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவன வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ள்படுகிறார்கள்

தொடர்புக்கு

சாதிக் பாஷா
055 - 310 89 00
ராஸல்கைமா
யு.எ.இ

சமவுரிமை மாத இதழ்

சமவுரிமை மாத இதழ்


“தாடிக்குத் தடை” “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை” என்ற துடிப்பான செய்திகளை அறிமுகப்படுத்தி எழுத்துலகில் முகம் திறந்து மலர்ந்திருக்கிறது “சமவுரிமை” மாத இதழ் அல்ஹம்து லில்லாஹ்.

“ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? என்ற நபி வழியைத் திறந்து வைத்து ஜெயிக்கப் போவது யாரு? என்று இந்திய அரசியலை இலேசாக விரல் விட்டுக் கிண்டி இருப்பது எடுத்து வைக்கும் அடி எத்தனை இதயங்களை இடித்துரைக்கப் போகிறதோ? என்று எதிர்பார்க்கத் தோணுகிறது.

தகுதியான ஆசிரியர் குழுவைக் கொண்டு தடம் போட்டு வைத்திருக்கும் ‘சமவுரிமை’ புடம் போட்டெடுத்துச் செய்திகளை படம் போட்டுக் காட்டும் என நம்பலாம்.

முதல் இதழே முதன்மையான இதழாக விளங்குகிறது. இது சமுதாயத்துக்குத் தேவையான சமவுரிமைகளைப் பெற்றுத் தந்து வாசகர்களின் இதயங்களிலே நடுபீடத்தில் குடியேற நெஞ்சாற வாழ்த்துகிறேன்.

வானவில் போல அழகாகத் தோன்றி மறையாமல் நல்லவைகளை நிலவுபோலக் குளுமைப் படுத்தி – அல்லவைகளைச் சூரியனைப் போல சுட்டெரித்து ஊடக வானில் என்றென்றும் புகழுடன் நிலைத்திருக்க இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறேன். இதயம் குளிந்து வாழ்த்துகிறேன்.


ஆக்கம் :முதுவைக் கவிஞர்
மவ்லவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ

கோடையும் வாடையும்

கோடையும் வாடையும்

திருச்சி – A. முஹம்மது அபுதாஹிர்

கொளுத்துகின்ற
கோடை வெயில்
கொடுமையானது !
அதனை விட
வரதட்சணையால்
பல பெண்கள்
உயிரோடு கொளுத்தப்பட்டது
கொடுமையானது !

வசந்த காலத்தின்
தென்றலைப் பார்க்க
ஆசைப்பட்டவர்கள்
வரதட்சணை தீயின்
வாடைக் காற்றில்
வாடி வருகிறார்கள் !


மே, ஜூன், ஜூலை வாடைகாற்று
உடலெல்லாம்
வியர்த்து விட்டது !
வரதட்சணைக் கோடையால்
மேனியெல்லாம் தீ ஜூவாலை
சகோதரிகள் பலரின் உயிரை
கரித்து விட்டது !

எத்தனை டிகிரி
வெயிலடித்தடித்தாலும்
அது குறைவானதுதான் !
படித்த டிகிரிக்கு
வரதட்சணை வாங்குவதுதான்
மிகவும் மோசமானது !

கோடையின்
கத்திரி வெயில் அடித்தது !
அனலால்
வீட்டில் இருக்க முடியவில்லை
எங்கள்
புத்திரிக்கு திருமணம் நடந்தது
வரதட்சணையால்
வீட்டை விற்காமல் இருக்கமுடியவில்லை !

அறுபது டிகிரி
வெயிலடித்தால்
குளிர் பானத்தை குடிக்கலாம் !
அறுபது பவுன்
வரதட்சணை கொடுத்தால்
பணத்துக்கு எங்கே போவது !

கோடையில்
குளிர்ச்சிக்கு
ஊட்டிக்கு போகிறார்கள்
வரதட்சணையால்
வீட்டையே விற்றவர்கள்
வசிக்க எங்கே போவார்கள் !

மகனுக்கு
நிலாவைக் காட்டும்
அன்பான அம்மாக்கள்
மாமியாராகும் போது
மருமகளுக்கு
சூரியனாகி விடுகிறார்கள் !
தாய் பேச்சை
கேட்காத பிள்ளைகளும்
வரதட்சணை என்று வரும் போது
வாய் மூடி விடுகிறார்கள் !

பாலையில்
கானல் நீர் அங்கே !
ஆம் அங்கே நீரில்லை
கல்யாணத்தில்
பெண்ணைப் பெற்றவர்கள்
சிரிக்கிறார்கள்
ஆனால்
அவர்களுக்குள்
சிரமங்கள் மறைந்திருக்கிறது

கோடை மழை
இன்று வரும்
வானிலை அறிக்கையில்
உள்ளம் குளிர்ந்தது !
கொடுமையான
இந்நிலை என்று மாறும்
உள்ளம் கொதிக்கிறது !

கோடையின்
வாடை !
காய்ந்து போகும்
இலை !
மயக்கம் தலைவலி
என்ற நிலை - அவை
கொடியதல்ல
வரதட்சணையைவிட !

பெண் சிசுக்கொலை
இளம் பெண்களின்
தற்கொலை !
கணவன், மாமியார்
செய்யும் படுகொலை
கொடியது மட்டுமல்ல
கோடையை விட !
கொதிக்கும் கோடையின்
அக்கினியின் கொடுமையை
குளிர்பானம் குடித்து
தணித்து விடலாம் !
சகோதரா
கொதித்தெழு – இந்த
அக்கிரமத்தை எதிர்த்து நீ
எப்போது குரல் கொடுப்பாய்?
நீ மனம் வைத்தால்
தடுத்து விடலாம் !