கொடிகட்டி பறக்கும் வளைகுடாவில் நான்!
இறந்துப்போன உறவினர்களுக்கு
வழிந்தோடும் கண்ணீரால் மட்டுமே
பலமுறை நல்லடக்கம்!
கருகிய கண்களோடு
மெல்லிய உதறலோடு
ஆறுதல் மட்டுமே சொல்லும் அவலம்!!
தினமும் கதறும் இதயத்திற்கு
மருந்தாய் மனைவியின் குரல்!
காதுகளின் வழியே மூளையை கிறங்கடிக்கும்
என் மழலையின் சிரிப்பலைகள்!!
எத்துனை முறை தொடர்பு கொண்டாலும்
அத்துனை முறையும் அம்மாவின் அதிகாரம்
"நல்ல சாப்பிடு"!!
வடிகட்டிய வயதுடன்
கொடிகட்டி பறக்கும் வளைகுடாவில் நான்!
வளர்ச்சியடைந்த விஞ்சானதால்
எல்லோரும் புகைப்படமாய் என் பாக்கெட்டில்!!
மாதத்திற்கு இத்தனை நாட்கள் என தெரிந்தாலும்
ஒவ்வொரு முறையும் எண்ணிப் பார்க்கும் நான்
விடுமுறையை!!
பணயம் வைத்துவிட்டுதான் வந்திருக்கிறோம்
பந்தங்களை பணத்திற்காக!!
- யாசர் அரஃபாத்
itzyasa@gmail.com