Monday, July 7, 2008

இந்திய முதல்வர்களில் சிறந்த முதல்வர் கருணாநிதி - ஜிகே மணி வாழ்த்து

இந்திய முதல்வர்களில் சிறந்த முதல்வர் கருணாநிதி - ஜிகே மணி வாழ்த்து

பொது வாழ்வில் முக்கால் நூற்றாண்டை அடைந்து சட்டமன்ற வரலாற்றில் அரை நூற்றாண்டைக் கடந்து இந்திய முதல்வர்களிலேயே சிறந்த முதல்வராக நிர்வாகியாக விளங்கி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்தவர்.

கடின உழைப்பாலும், தளராத மன உறுதியுடன் முடிவுகளை எடுப்பதில் தீர்க்க தரிசனமாக விளங்கும் முதல்வரின் பணி சிறக்க தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்க அவர் நீண்ட காலம் வாழ பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ஜி.கே. மணி வாழ்த்திப் பேசினார்.

( முதல்வர் கலைஞர் தலைமையிலான நல்லரசு இரண்டு ஆண்டு நிறைவடைந்து 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி கடந்த மே மாதம் நடந்த நிகழ்வில் )

துபாயில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்

துபாயில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்

துபாய் தேரா கோட்டைப் பள்ளியில் வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் இஷா தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலதிக விபரம் பெற : மௌலவி இஸ்மாயில் ஹஸனி 050 29 28 746

கேரளாவில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

Expa registration closes on 20th July
Plase register now
http://expascan.registerhere.org

CIGI
(CENTRE FOR INFORMATION & GUIDANCE, INDIA -CIGI)
Golf Link Road , Calicut – 17, Tel 91-495-2356059, 2351377 cigihq@cigi.org, www.cigi.org
announces
ExpaScan' 2008
(A five-day residential camp designed specifically for expatriate students of 9 to 12 std.)

"Celebrate Learning - Experience Living"

On
2008' August 13,14,15,16 & 17

at
CIGI Campus
Chevayoor, Calicut

Please ensure this golden opportunity is utilized by YOUR Child
For registration and details please call logn on Now :

http://expascan.registerhere.org

or call
Adv. Backer Ali
050-4599159

அப்துல் முஸவ்விரின் பிளாக்

அப்துல் முஸவ்விர் சென்னையைச் சேர்ந்த இவர் தற்பொழுது குவைத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது பிளாக் முகவரி


http://musawir.ipcblogger.com/


மேற்கண்ட தளத்தை பார்த்து நிறை, குறைகளை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும்

amusavir@gmail.com

உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்

உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் சொத்து! ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்கு அழைக்கிறோம். இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிரவாதத்திற்கு இடமும் இல்லை@ உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு சிறைச்சாலைக்கு அனுப்பும் செயலும் இல்லை@ நாம் நாமாக இருப்போம். நம் கலாச்சார தனித்தன்மையைப் பாதுகாப்போம் என தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற கட்சிகளிலிருந்து, விலகி தாய்ச்சபையாம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி மாநில முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் - பரக்கத் ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றபோது அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கபட்டினம், மெய்யூர் புதுப்பட்டினம், கூவத்தூர், அடையாளச்சேரி, கருமாரப்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்.ஜாகீர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் எம்.எச்.நியமத்துல்லாஹ் ஆகியோர் தலைமையில் கிளைகளின் நிர்வாகிகளை எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில், ஏ.ரஷீத் பாஷா, எம்.அமீர், ஜே.முஹம்மது கபீர், ஏ.சலீம், எம்.முஹம்மது இல்யாஸ், பி.முஹம்மது அலி, கே.அப்துல் ரஹ்மான் என்ற பாரூக், பி.இம்ரான், பி.ஆரிப், கே.நிஸார் அஹமது, ஜே.உசேன், ஜே.காதர் பாஷா, பிலால், எஸ்.சுலைமான், பஷீர், கபீரான், பாஷா, சபீர், சவுகர், சாகுல் ஹமீது, ஹயாத், அஸ்மத், அல்தாப் உள்ளிட்ட ஏராளமானோர் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எஸ்.தாவூது இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

முஸ்லிம் லீகில் இணைந்தவர்களை வரவேற்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பேசியதாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தம்பிகள் ஜாஹீர், நியமதுல்லா உள்ளிட்ட ஏராளமான சகோதரர்கள் இணைகின்ற இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டிருக்கிறேன்.

இது தாய் வீடு. இங்கு வருகின்றவர்களை அரவணைத்து ஆதரிப்பது என் கடமை. இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த வரவேற்பு சடங்குக்காக அல்ல. ஒரு வரலாற்றுப் பேரியக்கத்தில் இணைந்து சேவையாற்ற வந்துள்ளவர்களை வாழ்த்துவது சம்பிரதாயத்திற்காகவும் அல்ல.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய பேரியக்கம். இதில் ஊழியர்களாக இருந்து சமுதாய சேவை செய்வதே ஒரு பெருமை.

ஒரு காலத்தில் அகில இந்திய முஸ்லிம் லீகாக இருந்தது. 1948இல் காயிதெ மில்லத் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகாக உருவாக்கித் தரப்பட்டது. இன்று 18 மாநிலங்களில் செயல்படுகிறது. சில மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில இடங்களில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இது தமிழ்நாட்டு இயக்கம் அல்ல. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் பெயரை இணைத்து பல பேர் பல இயக்கங்களை வைத்துள்ளனர். அவைகள் பெயரளவில் உள்ளன. தி.மு.க. பெயரை பயன்படுத்தி பல இயக்கங்கள் உள்ளன. சட்டத்தால் அதை தடுக்க முடியவில்லை.

பெயரை ஒட்டு போட்டதுபோல் கொடியையும் ஒட்டு போட்டு பயன்படுத்துகின்றனர். நட்சத்திரம் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக்கொடி பிரபலமானது. அது வரலாற்று பெருமைமிக்கது. அந்த கொடியையும் விட்டு வைக்கவில்லை.

முஸ்லிம்களில் பல இயக்கங்களாக இருக்கும் இயக்கங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து செயல்பட வைக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் 56 இயக்கங்கள் இருந்தன. அவைகள் எல்லாம் அழைத்துப் பேசப்பட்டன., அந்த கூட்டத்தில் பங்கேற்ற நான் கூறினேன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நான் உருவாக்கவில்லை@ எனக்கு முன்பே உருவாக்கப்பட்ட இயக்கம் அது. எனக்கு முன்பிருந்தவர்கள் உருவாக்கிய அமைப்பிற்கு இப்போது நான் தலைவர். எனக்கு முன்பே பலர் தலைவர்களாக இருந்துள்ளனர். எனக்குப்பின் இன்னொருவர் தலைவராக வருவார். ஆனால் மற்ற இயக்கங்கள் அப்படி அல்ல. அவைகள் முன்பு உருவாகி இருந்திருக்கவில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தவிர, வேறு எந்த முஸ்லிம் இயக்கத்திற்கும் கடந்த கால வரலாறு இல்லை. முஸ்லிம் லீகை விட சிறந்த ஒன்றை வேறு யாராலும் உருவாக்கித் தர இயலாது. நாங்கள் செய்வதை சொல்வதில்லை. எங்களை விட வேறு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்காக அழைக்கிறோம்.

இந்த இயக்கத்திற்காக தலைமைப் பொறுப்பேற்றவர்கள் அந்த பதவியை அலங்கரித்துள்ளனர்., தாய்ச்சபையின் தலைவராக, பனாத்வாலா அவர்கள் இருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என பிரிட்டிஷ் நாடாளுமன்றமே அவரைப் பாராட்டி கவுரவித்தது. இப்படிப்பட்ட இயக்கத்தில் இணைந்து சமுதாயத்தை பாதுகாக்க பொறுப்பேற்க முன்வர வேண்டும்.

ஏனெனில் நேற்று போல் இன்று இல்லை@ இன்று சூழ்நிலை நன்றாக இல்லை@ என்றைக்கும் ஏதாவது பிரச்சினை வராதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

கஷ்மீர் - அமர்நாத் கோவில் நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று இந்தியா முழுவதும் பிரச்சினையாக்குகின்றனர். கஷ்மீரில் ஏதாவது நடந்தால் மதவெறியை தூண்டிவிட்டு இந்தியா முழுவதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட தயாராக உள்ளனர்.

இந்த நேரத்தில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும். நாம் அனைவரிடமும் சமமாக பழக வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு வைக்காதே என்று சொல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.

நாம் யாருடனும் சண்டை போட வேண்டாம். தெய்வங்களாக நினைத்து வழிபடுகின்ற எதையும் திட்ட வேண்டாம். அவர்களின் தெய்வங்களை திட்டினால் அவர்கள் நமது இறைவனை திட்டுவார்கள். இதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிர வாதத்திற்கு இடமும் இல்லை@ நாம் நாமாக இருப்போம்@ நம் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்போம். உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக இங்கே காயல் மஹப+ப் குறிப்பிட்டார். அந்த நிலை இனி தொடரக்கூடாது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராக இருக்கும் கே.எஸ்.தாவூது இன்று சிறப்பாக செயல்படுகிறார். முஸ்லிம் லீகே இல்லாமல் இருந்த இடங்களில் முஸ்லிம் லீகை உருவாக்கி வருகிறார்.

அவருடைய முயற்சியில் இன்று நீங்கள் எல்லாம் தாய்ச்சபையில் இணைகின்றீர்கள். உங்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும். அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்களாக உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

முஸ்லிம் லீக் வளர்ந்தால் சமுதாயம் வளரும்@ முஸ்லிம் லீக் சிறந்தால் சமுதாயம் சிறக்கும்@ முஸ்லிம் லீக் உயர்ந்தால் சமுதாயம் உயரும்.

-இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.ஏ.செய்யது அஹமது, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப், மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியை முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் எஸ்.பி.இஸ்மாயில், வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் கே.பி.இஸ்மத் பாட்சா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.முஹம்மது ய+னுஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.யஹ்யா சித்தீக், பனையூர் கிளை தலைவர் ஏ.அப்துல் காதர், செயலாளர் ஏ.ஜே.உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.

http://www.muslimleaguetn.com/news.asp?id=86

கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24

கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24.

ரியாத் தமிழ் சங்கம்-எழுத்துக் கூடம் (ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை) கண்ணதாசன் வாரம் கொண்டாடுகிறது.

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 - திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 - சண்டமாருதம் ஆசிரியர்
1949 - திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி, பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952/53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் டுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952/53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 -முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - மாலையிட்ட மங்கை
1958/59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960/61 - அரசியல் மாற்றம் - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
புதிய கட்சி - தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962/63 - இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம்
1964/66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968/69 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 ரஷயப் பயணம் - சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள்
- உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார்.
20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.
------------------------------------------------------------------------------------

சில முத்திரை வரிகள்.
-------------
அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்...
--------------------------
ஆடை இன்றி பிறந்தொமே - ஆசை இன்றி பிறந்தொமா?
ஆடி முடிக்கையிலே அள்ளி சென்ரோர் யாருமுண்டொ?
--------------------------
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரொ?
---------------------------
உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞில் தூங்கிக் கிடப்பது நீதி
--------------------------
ஆசையெ அலை போலே,
நாமெல்லாம் அதன் மேலே,
ஓடம் போலே அடிடுவொமே வாழ் நாளிலே
-------------------------------
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர்
சுகம் பெறுவர் - அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவர்?
--------------------------------
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு, இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே
யார் காணுவார்?
---------------------------------
போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கெ இடமேது?
வாழ்க்கை என்பது வியாபராம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும்.
-------------------------------
கவியரசு பற்றி Sachi Sri Kantha
"...If only Kannadasan had been born in Europe or the USA, instead of Sirukuudalpatti village in the Ramanathapuram district of Tamil Nadu, he probably would have become a Nobel laureate in literature and received international recognition. But on the other hand, Tamils would have lost a goliard, who composed lyrics in Tamil for every sentimental moment they experience in life...."
-- இது மிகையில்லை என்றே தொன்றுகிறது.
---------------------------------
தங்களின் பங்களிப்பு தொடரட்டும்.
அன்பன்
மு.வெற்றிவேல்

vetri@vetrionline.com
www.vetrionline.com
966 1 2168418
966 503158935