Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Saturday, May 29, 2010

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 2 ஆவது மாநாடு

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 2 ஆவது மாநாடு

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் தனது மற்றுமொரு இலக்கிய மாநாட்டை இவ்வருடம் ஜூலை மாதத்தில் கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

1999 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு தனது பத்தாவது நிறைவு விழாவையும் இம்மாநாட்டுடன் சேர்த்துக் கொண்டாடவிருக்கிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு அரச அனுசரணையுடன் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்திய இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் 2008 ஆம் ஆண்டில் புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தின் நூற்றாண்டு விழாவையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 2007 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கும் இவ்வருடம் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடத்திய ஒரு நாள் காப்பியக் கருத்தரங்குக்கும் ஒத்தாசையாக செயற்பட்டது.

தற்போது தமிழகத்தின் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஒரு சகோதர இயக்கமாகவும் இயங்கும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இவ்வருடம் இலக்கிய மாநாட்டை உள்ளூர்ப் புரவலர்களின் ஆதரவுடன் இரண்டு தினங்களுக்கு நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்தியாவிலும் இலங்கையிலும் இடம்பெற்ற மாநாடுகள் இஸ்லாமிய பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி விரிவாகப் பேசியதுடன் அழியும் நிலையிலிருந்த பல முன்னோரிலக்கியங்களையும் மீள் பதிப்புச் செய்து சமூகத்தின் பயன்பாட்டுக்கும் இருப்புக்கும் ஆதாரமாகச் செயற்பட்டுள்ளன. தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு 1960 க்கும் பின்னரான இலங்கையின் முஸ்லிம் படைப்பாளிகளைப் பற்றியும் அவர்களது படைப்புக்கள் பற்றியும் பேசுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல் நாள் சம்பிரதாயபூர்வமாக மாநாடு தொடக்கி வைக்கப்படுவதுடன் உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்களதும் பிரமுகர்களதும் உரைகளும் இடம்பெறும். இரண்டாம் நாள் ஆய்வரங்கில் வளவாளர்கள் தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பார்கள். அதனைத் தொடர்ந்து இசையரங்கும் பாராட்டு அரங்கும் இடம்பெறும். இதில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் தீர்மானித்துள்ள அறிஞர் பெருமக்களும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் கௌரவிக்கப்படுவார்கள். இம்மாநாட்டின் கவியரங்கில் இலங்கைக் கவிஞர்கள் பங்கு கொள்வார்கள். இறுதி நிகழ்வு சிறப்புரைகளுடனும் நாடகத்துடனும் நிறைவு செய்யப்படும்.

இம்மாநாட்டுக்கு இந்தியா, மலேஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்தும் பேராளர்கள் பலர் வருகை தரவுள்ளனர். இலங்கைப் பேராளர்களாக இலக்கியவாதிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் முந்நூறு பேரை மாத்திரமே பதிவு செய்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையர்களான யாரும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்ற போதும் இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் முன்னுரிமை பெறுவார்கள்.

இதுபற்றிய விபரங்கள் விரைவில் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படவுள்ளன.

மாநாடு பற்றிய மேலதிக விபரங்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும். டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் - 011 2730378 - 077 2721244, அஷ்ரஃப் சிஹாப்தீன் - 0777 303 818, டாக்டர் தாஸிம் அகமது - 011 2438801 - 077 966 4063 மாநாட்டில் இடம் பெற வேண்டிய விடயங்கள் குறித்த முன்மொழிவுகளை யாரும் எழுத்து மூலம் தெரிவிக்க முடியும்.

அனுப்ப வேண்டிய முகவரி

President, Sri Lanka Islamic Iiterary research forum, 16 School Avenue, Off Station Road, Dehiwala.

Sunday, April 26, 2009

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கருணாநிதி உண்ணாநிலை!

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கருணாநிதி உண்ணாநிலை!

இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி இன்று காலை முதல் உண்ணாநிலையைத் தொடங்கியுள்ளார்.

இன்று காலை அண்ணா நினைவிடத்திற்குச் சென்ற கருணாநிதி அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தனது உண்ணாநிலையைத் தொடங்கினார்.

இது தமிழர்களுக்கான தன்னுடைய மற்றொரு தியாகம் என்று கூறிய முதல்வர், ராஜபக்சேவின் இன அழிப்பில் நானும் ஒருவனாக இருக்கட்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக நேற்று விடுதலைப் புலியினர் தாங்களாகவே முன்வந்து போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர். இலங்கை அரசு அதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்ட நிலையில், இதுபற்றிக் கூறிய கருணாநிதி இன்று ஓர் இரவு பொறுத்திருப்போம் என்று கூறியிருந்தார்.

Saturday, February 21, 2009

சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!

அன்பு சகோதரர் விடுதலைவீரபத்திரன் அவர்களுக்கு,

தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!! இலங்கையிலும் நிலவட்டுமாக!!!

நான் அனுப்பிய கட்டுரைகளுக்கு பதில் அனுப்பி இருந்தீர்கள். தாங்கள் எமக்கு அனுப்பிய அறிவுரைகளையும் ஏற்று கொள்கிறேன். நான் அனுப்பிய, திரட்டிய தகவல்கள் அனைத்தும் முஸ்லீம் அல்லாத சகோதரர்கள் அதுவும் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் எழுதிய புத்தகங்கள் மற்றும் இணைய தளங்களிளிர்ந்து திரட்டியது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் தாங்கள் மதங்களை தூக்கி எறிந்துவிட்டு நல்ல மனிதர்களாக இருப்போம் என்று சொல்லி இருக்கிறிர்கள். அன்பு சகோதரரே! என் பள்ளி வாழ்விலும், கல்லூரி வாழ்விலும் சரி என்னுடன் படித்தவர்களுக்கும், இப்பொழுது என்னுடன் ஏன் என் அறையில் தங்கி இருக்கும் இந்து சகோதரார் ராஜாராமன் அவர்களுக்கும் என் நடவடிக்கைகள் பற்றி நன்றாக தெரியும்.

நான் எனது வீட்டு நூலக்கதிலே பகவத் கீதை, பைபிள். குரான், அம்பேத்கார் அவர்களின் எழுத்தும் சொல்லும், தந்தை பெரியார் அவர்களின் ஏராளமான புத்தகங்கள், சுவாமி விவேகனந்தரின் புத்தகங்கள், மகாத்மா காந்தி அவர்களின் புத்தகங்கள் ஏன் ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் புத்தகங்களை படித்தும் இருகிறேன். அவற்றை பாதுகாப்பாகவும் வைத்தும் இருகிறேன். என்னுடைய கணிப்பொறியில் காஞ்சி பெரியவர் அவர்களின் தெய்வத்தின் குரலும் என் வேலை நேரத்தில் ஓய்வு கிடைக்கும் போது படித்து கொண்டு இருகிறேன். நீங்கள் யாரை பார்த்து உங்கள் சுட்டு விரலை நீட்டுகிறிர்கள். மேலும் தாங்கள் நான் அனுப்பிய கட்டுரையின் அடிப்படை தெரியாமல் எமக்கு பதில் அனுப்பி உள்ளிர்கள் என்பது உண்மை. மேலும் என்னுடன் விவாதிக்க தயாராக இருந்தால் நான் எப்பொழுதும் தயாராகவே இருகிறேன். மின்னஞ்சலிலே தொடர்பு கொள்ளலாம்.

விடுதலைபுலிகள் தமிழ் நாட்டில் மட்டும் ஏதோ தடை செய்யப்பட்டு இருப்பதுபோல் சொல்லி இருக்கிறார்கள். தங்களுக்கு வளைகுடா நாடுகளை தவிர எங்கு எல்லாம் தடை செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அனுப்பி வைக்கிறேன்.

(தமிழ் நாட்டிலே நடக்கும் போராட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை மட்டுமே)

gazzali

To: gazzalie@yahoo.com
Date: Saturday, February 21, 2009, 5:06 AM

---------- Forwarded message ----------
From: விடுதலைவீரபத்திரன்
Date: 2009/2/21
Subject: வ‌ண‌க்க‌ம்.
To: Veera Pathiran

வ‌ண‌க்க‌ம். இய‌க்குன‌ர் சீமான் ப‌ற்றி நீங்க‌ள் அனுப்பிய‌ மெயில் பாடித்தேன்.விடுத‌லைபுலிக‌ள் இய‌க்க‌ம் த‌மிழ்நாட்டில் த‌டை செய்ய‌ ப‌ட்ட‌ இய‌க்க‌ம் தான். ஆனால் அவ‌ர்க‌ள் பாகிதான் தீவிர‌வாதிக‌ள் போல‌ இந்திய‌வுக்குள் வ‌ந்து தாக்குத‌ல் ந‌ட‌த்த‌வில்லை. த‌மிழ‌ர்க‌ளுக்கு த‌னிநாடு வேண்டும் என்றுதான் போர‌டிக்கொண்டு இருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் யாரும் அப்பாவி சிங்க‌ளவர்களை கொல்ல‌வில்லை.பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்க‌வில்லை. ஆனால் சிங்க‌ள‌வர்க‌ள் தான் எல்லாம் செய்கிறார்க‌ள்.

எங்கோ இருக்கும் காசா மீது குண்டு போட‌ப்ப‌ட்ட‌போது துடித்த‌ உங்க‌ளுக்கு ப‌க்க‌த்தில் இருக்கும் இல‌ங்கை த‌மிழர்க‌ள் மீது தின‌மும் தாக்குத‌ல் ந‌டத்தி அதில் ஆயிர‌க்க‌ன‌க்கானோர் சாவுவ‌தை ப‌ற்றி தெரியாம‌ல் போய்விட்ட‌து. ம‌த‌ங்க‌ள் இந்த‌ உல‌க‌த்தில் சாதித்தது கிடையாது.ந‌ல்ல‌ ம‌னிதர்க‌ளாக‌ இருந்து சாதித்த‌வ‌ர்க‌ள் அதிக‌ம். ம‌த‌ங்க‌ளை தூக்கியெரிந்துவிட்டு முத‌லில் ந‌ல்ல‌ மனித‌ர்க‌ளாக‌ இருப்போம். இத‌ற்கு மேல‌ த‌ங்க‌ளுக்கு விரிவான‌ விள‌க்க‌ம் வேண்டும் என்றால் நான் உங்க‌ளுக்கு த‌ர‌ த‌யாராக‌ இருக்கிறேன்.

--

விடுதலைவீரபத்திரன் துபாய்
www.viduthalaiveeraa.blogspot.com

Thursday, February 19, 2009

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை!

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை!

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை !

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இராணுவப் போரைச் சிங்கள அரசு முடுக்கி விட்டிருக்கிறது விடுதலைப்புலிகளை முற்றிலும் ஒழித்துவிட வேண்டுமென்ற வெறியில் முல்லைத் தீவை முற்றுகையிட்டிருக்கிறது இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இலங்கையின் இனப்பிரச்சனை சிங்கள-தமிழ் தமிழ்-முஸ்லிம் சிங்கள-தமிழ்-முஸ்லிம் பிரச்சனையாக முப்பரிமாணம் கொண்டதென்பதை ஆழமாக உணர்ந்திருக்கிறார்கள் இன்றைய சூழலில் அவர்களின் நிலைமையை அறிவதற்காக தமிழகம் வருகை தந்திருந்த இலங்கைக் கவிஞர்கள் அல் அஸுமத் தாஸிம் அஹமது, அஷ்ரஃப் சிஹாப்தீன், ஆகியோரை அணுகினோம் அவர்களிடம் தொடுக்கப்பட்ட வினாக்களும் அவர்கள் தந்த பதில்களும் இங்கே இருப்பும் பொறுப்புமாக வெளியிடப்படுகிறது.

இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ன?

கவிஞர் அல் அஸுமத் : வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அதி உயர்நிலையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் தாய் மண் வாழ்க்கை அற்றுப் போயிருக்கிறது இன்னுமே அவர்களுக்குரிய மாற்றீடு செம்மையாகச் செய்யப்படவில்லை.

கிழக்கு வாழ் முஸ்லிம்கள் இரு தசாப்தங்களுக்குப் பிறகு ஓரளவு ஆறுதலுடன் இன்று காணப்படுகிறார்கள்.இந்த ஆறுதல் நிலை வாழ்க்கை உறுதியானதை எதிர்காலம்தான் உறுதி செய்ய வேண்டியும் இருக்கிறது.

மூன்றாம் நிலைப்பட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மைச் சிங்களவர்களுடன் இந்திய வம்சாவழித் தமிழர்களுடனும் என்றும் வழக்கம் போல் வாழ்கிறார்கள் வடக்கு, கிழக்கு அல்லாத ஏனைய பகுதிகளில் வாழ்பவர்கள் இவர்கள். வடக்கு, கிழக்கிலும் முன்னரெல்லாம் முஸ்லிம்கள் இவர்களைப் போன்றுதான் வாழ்ந்தார்கள்.

வடக்கு ,கிழக்குப் பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் பிற இன-மத மொழி கலாச்சாரத்துப் பெரும்பான்மை மக்களுடன் உலகில் பல்வேறு நாடுகளிலும் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்குள்ள அதே வாழ்நிலைதான் எங்களுக்கும் உள்ளது.

அவ்வப்போது சிறு-பெரும் பிரச்சனைகள் எழத்தான் செய்கின்றன சில கலந்துரையாடல்கள் அல்லது சாத்வீகமான பலத்த எதிர்ப்புகள் அவற்றை மாற்றி விடுகின்றன அல்லது அமுக்கி விடுகின்றன.

இலங்கை முஸ்லிம்கள் என்றும் அமைதி விரும்பிகளே ஆயினும் இலங்கையைப் பொறுத்த மட்டில் எங்களுக்குள் நாங்கள் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்வதுதான் பெரும்பாடாக இருக்கிறது.

இலங்கை இனவாதயுத்தம் நடந்து கொண்டிருக்கும் இந்நிலையில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுதான் என்ன?

கவிஞர் தாஸிம் அஹமது : இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் முஸ்லிம்களை மட்டும் பாதிப்புக் குள்ளாக்கவில்லை பொதுவாகப் பெரும்பானமை இனமான சிங்களவர்களும் வடக்கு கிழக்குக்கு அப்பால் வாழ்கின்ற தமிழர்களும், நாட்டில் எங்கும் பரவலாக வாழ்கின்ற முஸ்லிம் மக்களும் அரசியல் சமூக, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை. இதில் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபாடுகள் உண்டு. இதனை இந்த இட்த்தில் விரிவாக கூறமுடியாது.
முப்பது வருடங்களாக நடைபெற்று வரும் இந்த கோர யுத் த த்தினால் அகதி வாழ்க்கையின் துயரங்கள், அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் சொல்லி விளங்க முடியாதவை. குறிப்பாகத் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இனத்தவரின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், இரு தலை முறையினரின் சமூக – பொருளாதார நிலை மிகமிகப் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. வர்த்தக வாணிபம், தொழில் வாய்ப்புகள் அரசியல் பங்களிப்பு என்பன உள்நாட்டில் மிகவும் மோசமான நிலையில் இருந்து இரு சமூகங்களுக்கிடையேயும் காணப்படுகின்றன. இன்றைய இந்த நிலைக்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியம் தேவை. அரசியல் தீர்வு பற்றிப் பேசிப் பேசியே இருபது ஆண்டுகள் கழிந்து விட்டன.

தமிழ் விடுதலைப் போராட்டம் தொய்வுறும் நிலையில் முஸ்லிம் சமூகம் பேரினவாத த் தால்தான் பாதிக்கப்படுவதற்கான நிலை தோன்றுமா ?

கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் :

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அங்கு இரண்டாவது சிறுபான்மையினர் என்ற உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரை தமிழ்ச் சமூகம் ஒரு பேரினவாத சக்தியேயாகும். விடுதலைப் போராட் ட்த்துக்கு முன்பும் சரி, பின்னும் சரி நம்பிக்கை தரக்கூடிய வகையில் தமிழர் தரப்பு அரசியல் தலைவர்களோ விடுதலை இயக்கங்களோ நட்ந்து கொண்ட்து கிடயாது. முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களில் நம்பிக்கை வைத்து விடாமல் தடுக்கவும் முஸ்லிம்களை ஒரு அரசியல் சக்தியாக மாற்றவும் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஓர் அரசியல் இயக்கத்தை நிறுவ வேண்டியிருந்தது.

எந்த ஒரு தேசத்திலும் சிறுபான்மையாக வாழ்வோர் சற்று அடக்கி வாசிக்க வேண்டிய அவசியம் உண்டு. பேரினவாத் தின் கரங்களில் அவ்வப்போது சிக்காத சிறுபான்மை உலகத்தில் கிடையாது.

நாங்கள் இப்போது 1983 க்கு அதாவது தமிழ் விடுதலைப் போராட் ட த்துக்கு முந்திய காலப் பிரிவைக் கனவு காண்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, விடுதலைப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்களவர்களும் அவ்வாறான ஒரு மனநிலையோடுதான் உள்ளார்.
என்றோ ஒரு நாள் சமாதானம் வந்துவிடக்கூடும். அல்லது இப்பிரச்சனை ஏதோ ஒரு வழியில் தீர்வுக்கு வரக்கூடும். ஆனாலும் சிறுபான்மையினரை அலட்சியத்துடனும் சந்தேகத்துடனும் பேரினவாதம் நோக்கும் நிலை உருவாகும். இவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாயின் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கும் தார்மீகப் பொறுப்பு ஆயுதமேந்திப் போராடிய விடுதலை இயக்கங்களையே சேரும்.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எந்த பேரினவாதமும் எந்த சூழ்ச்சிக்கும் திட்டமிடலாம். செய்யலாம். ஆனால் சூழ்ச்சிக்கார ர் களுக்கெல்லாம் பெரிய சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் மட்டுமே !

எதிர்காலம் என்பது அல்லாஹ்விடம் உள்ளது. எல்லாவற்றுக்கும் அவனே போதுமானவன்.
மேற்காணும் பதில்கள் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களேயாகும்.

எந்த நாடாக இருந்தாலும் இலட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் சூறையாடப்படுவதை எவராலும் பொறுக்கவியலாது. சொந்த மண்ணில் சொத்தையிழந்து, சுகத்தை இழந்து, அகதிகளாக அல்லாடும் அனைத்து மக்களுடைய நல்வாழ்வுக்காகவும் அந்த நாட்டு அரசு பொறுப்பேற்க வேண்டும். போரின் மூலமாக எதையும் நிரந்தரமாகச் சாதித்துவிட முடியாது.

ஆயுதம் ஏந்திய வண்ணமாகவே இருந்து கொண்டு அமைதியை நிலைநாட்ட முடியாது.
அனைத்து தரப்பு மக்களும் சமாதானத்தோடு, சம உரிமையோடும் வாழ அந்நாட்டு அரசு முயலவேண்டும். பிற நாடுகளும் அதற்கு உடனடியாக உதவ வேண்டும். அமைதிப் பேச்சு தொடர்ந்திடவும், இராணுவ நடவடிக்கைகள் ஒழிந்திடவும் வேண்டும்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே த த் தமக்குள் ஒற்றுமையும், பிறவகுப்பாரிடம் நல்லிணக்கமும் உண்டாகிட வேண்டும். ஒரு காலத்தில் இந்தியத் தீபகற்பத்தின் ஒரு பகுதியாக இலங்கிய இன்றைய இலங்கையில் புத்தரின் கருத்துக்கள் தழைத்த மண்ணில் ஞானிகள் உலா வந்த வளமான தேசத்தில் மத நல்லிணக்கமும், மனித நேய ஒருமைப்பாடும் மலர்ந்து அமைதி தவழ வேண்டும் என்பதே அனைவரது இறைஞ்சுதலாகும்.

( இனிய திசைகள் மாத இதழ் பிப்ரவரி 2009 லிருந்து )

தொடர்புக்கு : 9444 165153

Wednesday, December 31, 2008

அறிஞர் சித்தி லெப்பை - இலங்கை

அந்த அரபிகள் தங்களது ஈமானுடைய உறுதியினாலும், சுத்த வீரத்தினாலும், மன ஒற்றுமையினாலும், விடா முயற்சியாலும் இவ்வளவு கீர்த்தியும், மேன்மையும், வெற்றியும் பெற்றார்கள். இப்படி இருக்க இக்காலத்தில் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் தங்களுடைய முன்னோர்களாகிய அரபிகள் போல மன ஒற்றுமையும், முயற்சியும் இல்லாதிருக்கின்றனர். மற்ற பல சமயத்தினர் எல்லாம் கல்வியிலும், சீர்திருத்தத்திலும், மேற்பட்டு வருதலையும் இவர்கள் நாள்தோறும் கீழ் பட்டு வருதலையும் பார்த்து எவர்களும் மனம் வருத்தம் கொள்ளும் படியாய் இருக்கிறது. ஆகையால் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் எல்லாரும் ஒரு மனப்பட்டு கல்வி பயிற்சிக்குரிய கருமங்களிலே முயற்சிப்பது கடமையாகிறது.

சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னாள் அறிஞர் சித்தி லெப்பை அவர்கள் தமது சக மதத்தவர்களுக்கு விடுத்த வேண்டுகோள் இது. அந்த வேண்டுகோள் இன்று கூட பொருத்தமுடையதாக காணப்படுகிறது. இடையில் சென்று கழிந்த ஒரு நூற்றாண்டு காலம் அவருடைய வேண்டுகோளின் கனாகனத்தை சற்றும் குறைத்தும் சிதைத்தும் விடவில்லை. காலத்து கேற்றதாக காணப்படும் அதன் துரதிஷ்ட குரல் எம் கவனத்தை ஈர்கின்றது. எனவே இலங்கை முஸ்லிம்கள் தமது முக்கிய தினங்களில் எல்லாம் அவரது அறை கூவலுக்கு செவிமடுத்து அன்னாரது நினைவு மங்காது பேணுதல் முஸ்லிம் சமுதாயத்தின் நண்பனும், நல்லாயனும், நல்லாசிரியனுமாகிய அவருக்கு செய்ய வேண்டிய கடமை ஆகும். 1838 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி பிறந்த சித்தி லெப்பை அவர்கள் 1898 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் தேதி காலமானார்.

இலங்கையின் கலாச்சார வரலாற்றிலே பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டை மறுமலர்ச்சி காலம் எனலாம். நீண்ட நெடுங்காலம் நிலை தடுமாறி நினைவிழந்து, செயல் ஊக்கமின்றி கிடந்த பௌத்தர்களும், ஹிந்துக்களும் விழித்து எழுந்து கிழக்குலக அறநெறிகளுக்கும், மேற்குலக நெறி முறைகளுக்கும் சமரசம் காண, நவின அறிவாற்றலுக்கும் பண்டைய ஒழுக்க முறைகளுக்கும் ஒப்புரவு காண முயன்று கொண்டு இருந்தனர். மேற்கு நாட்டவரின் ஆதிக்கத்தில் பேதலித்து நின்றவர்கள் அவ்வாதிகத்தினால் ஏற்பட கூடிய நன்மை தீமைகளை சீர்தூக்கி பார்க்க முற்பட்டு இருந்தனர்.

ஆனால் இலங்கை முஸ்லிம்களோ எதிலும் அக்கறையற்று வாளாவிருந்தனர். சக சமுதாயத்தவர்கள் எழுச்சி பெற்று துடிப்புடன் செயற்பட்டமையை அவர்கள் உணரவில்லை. கைத்தொழில் புரட்சியினால் புத்தூக்கம் பெற்ற ஐரோப்பா உலகம் அனைத்தையும் விழுங்கி ஏப்பம் விட கங்கணம் கட்டி நின்றமையால் முஸ்லிம் உலகம் வலிமையற்று கிடந்ததென்பதை இலங்கை முஸ்லிம்கள் உணராது வாளாவிருந்தனர். மற்றும் பற்பல சாதியாரும் கல்வியிலும் சீர்திருத்தத்திலும் மேற்பட்டு வர இவர்கள் தமது தந்தை வழி தொழில்களுடன் திருப்தி பட்டு கிணற்று தவளைகளாக வாழ்ந்து வந்தனர். மாற்றத்தை வெறுத்த அவர்கள் "தழுவி நட அன்றேல் அழிந்து போ" என்ற வாழ்கை நியதியை அசட்டை செய்து வந்தனர். "மக்கள் தமது மனதை மாற்றிக்கொள்ள வராதவரை அல்லாஹ் அவர்களின் வாழ்க்கையில் மாற்றமுண்டு பண்ண மாட்டான்". என்ற இறை வாக்கினை மறந்து இருந்தனர்.

எனவே முஸ்லிம்கள் கல்வித்துறையில் பின்தங்கியும், பொருளாதார துறையில் தேக்க முற்றும், கலாச்சார துறையில் ஒதுங்கியவர்களாக, மார்க்க துறையில் மாற மரபு உடையவர்களாக, ஆய்வு துறையில் ஆர்வங் குன்றியவர்களாக, அரசியல் துறையில் கணக்கு எடுக்க படாமலும் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்கள். இந்த பரிதாப நிலையினை சித்தி லெப்பை அவர்கள் தீட்சனியத்துடன் கண்டு மனம் வெதும்பினர். சென்று கழிந்த பல நூற்றாண்டுகளில் ஊக்கமும் உற்சாகமும் குன்றி வாழ்ந்த தமது சக மதத்தவர்கள், எதிர் காலம் பற்றி எவ்வளவு சிரதையுமற்றவர்களாக மாறிவிட்டமை கண்ட அவர் இலங்கை முஸ்லிம்கள் தமது சமுதாயத்தின் பரிதாப நிலைமையை உணர வைத்தால் இன்றியமையாதது என்பதை உணர்ந்து கொண்டார். இப்பணியில் தமது சமுதாயத்தின் பிற பெரியார்களின் ஒத்துழைப்பையும் பெறல் அவசியம் என்பதையும் அவர் உணர்ந்தார். இதனை சாதிப்பதற்காக அரபு தமிழ் வார இதழ் ஒன்றினை ஆரம்பித்தார். " முஸ்லிம் நேசன்" என்று அந்த இதழுக்கு பெயரிட்டார். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி முதல் முறையாக வெளிவந்த இப்பத்திரிகையில் ஆசிரியர் வசனமே நாம் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டிய பகுதி.

இந்த ஆசிரிய வசனத்திலே, சித்தி லெப்பை, தமது வாரப்பத்திரிகை மூலமாக தமது சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு தாம் ஆற்றவிருந்த தொண்டு பற்றி விளக்கினார். தத்துவம், அறிவியல் ஆகியன சம்பந்தமான கட்டுரைகள், தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள், வியாபாரம், விவசாயம், வாணிபம், குடியுரிமை முதலியன பற்றிய அறிக்கைகள் தமது பத்திரிகையில் பிரசுரிக்க தீர்மானித்து இருந்தார். வர்த்தக துறையில் புதிதாக தோன்றி வரும் போட்டியாளர்களை விட்டு தமது சக மதத்தவர்களை எச்சரிக்க முற்பட்டார். தமது வாசகர்களின் மகிழ்ச்சிக்காகவும், முன்னேற்றதிர்க்காகவும் கற்று அறிந்த உலமா பெருமக்களின் கருத்து பெட்டகத்தை திரட்டி தரபோவதாக அறிவித்தார். அரபு கிதாபுகளிலும், ஆங்கில நூல்களிலும் பறந்து செறிந்து இருக்கும் அறிவு செல்வங்களை எல்லாம் தேன் சேர்க்கும் வண்டை போல சேகரித்து தமது வாசகர்களுக்கு வழங்க இருப்பதாக எழுதினார். இவ்வகையாக தமது சக மதத்தவர்களின் மனதிலே அரண்கள் அமைக்க அவர் விரும்பினார். இவையே அவரது திட்டங்களும் லட்சியங்களும் ஆகும்.

சித்தி லெப்பை அவர்கள் எதனையும் துருவி ஆராயும் இயல்பு உடையவராய் விளங்கினார். சட்ட துறையில் மட்டும் அவர் பாண்டித்தியம் பெற்று இருக்கவில்லை. சமகால அரசியல் விவகாரங்களை ஐயந்திரிபற அறிந்திருந்தமையால் தமது சமுதாயத்தை பீடித்த பீடைகள் யாவை என்பதை வெகு நுட்பமாக நாடி பிடித்து சொல்லும் திறமை பெற்று இருந்தார். சர் சயேத் அஹ்மத் கான் அவர்களின் தலைமையிலே இந்தியாவில் வெற்றி பெற்று வந்த அலிகார் இயக்கத்தை அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்தார். ஆறுமுக நாவலரின் சமய, கல்வி முன்னேற்றத்திற்கான முயற்சிகளும் 1880 இல் கானல். ஒல்கோட் அவர்களை இலங்கையின் பால் ஈர்த்த பௌத்த நடவடிக்கைகளும் அவர்களை பெரிதும் வசிகரித்து இருந்தன. இஸ்லாத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தியானது தமது சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கான பரிகாரங்களை தேட அவரை தூண்டியது.

ஆகவே அவர் தமது பிரக்கிராசித் தொழிலையும் கண்டி மாநகர சபையில் உறுப்பினர் என்ற வகையில் தமக்கிருந்த அந்தஸ்தையும் மகிழ்ச்சியுடன் தூக்கி எறிந்தார். தமது பிற்கால வாழ்கை முழுவதையும் தமது சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் செலவிட்டார். இம்முயற்சியில் ஆறு வருடங்களுக்கு மேலாக தம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட வாரப் பத்திரிக்கை மூலமாகவும் இஸ்லாம் பற்றியும் கல்வி பற்றியும் எழுதிய கட்டுரைகள், முஸ்லிம் பாடசாலைகளின் உபயோகதிற்கென்று பிரசுரஞ் செய்த பாடநூல்கள், பல்வேறு பகுதிகளில் நிகழ்த்திய பிரசங்கங்கள், கொழும்பிலும் பிற இடங்களிலும் நிறுவிய பாடசாலைகள் ஆகியவற்றினாலும் பெரும் வெற்றி ஈட்டினார்.

தமது கால உலகில், இலங்கை முஸ்லிம்கள் ஆங்கிலத்தை புறக்கணித்தல் தற்கொலைக்கு சமமானது என்பதை சித்தி லெப்பை ஐயம்திரிபற அறிந்து இருந்தார். எனவே இஸ்லாத்தின் மீதுள்ள உவப்புக்கோ, முஸ்லிம்களின் கலாச்சாரத்துக்கோ பங்கம் ஏற்படாத வகையில் ஆங்கிலம் போதிக்கும் பாடசாலைகளை அமைப்பதற்கான வழி வகைகளை ஆராயலானார்.

1884 ஆம் ஆண்டில் கொழும்பு, புதிய சோனகத் தெருவிலே முதலாவது ஆங்கில முகமதிய பாடசாலையை அவர் தோற்றுவித்தார். இப்பாடசாலை நெடுங்காலம் நிலைக்காவிட்டாலும் ஏழு வருடங்களுக்கு பின்னர், அவருடைய அயரா உழைப்பின் பயனாக அல்-மதரஸதுஸஹிராஹ் என்னும் பெயரில் புத்துயிர் பெற்றது. இதுவே பிற்பாடும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியாக மலர்ந்தது.

இஸ்லாத்துடன் உள்ளார்ந்த தொடர்பில்லாத போதிலும் மக்கள் மனதிலே வேரூன்றி இரண்டறக் கலந்துவிட்ட பல பழக்க வழக்கங்களைக் கைவிடுமாறு அவர் தமது சக மதத்தவர்களைக் கேட்டுக் கொண்டார். இப்பழக்க வழக்கங்கள் காலத்தையும் நேரத்தையும் செல்வத்தையும் விரயஞ் செய்வனவென்று எடுத்துக் காட்டினார். எனவே ஜனாஸா அடக்கம், சியாரத் செய்தல், தொப்பி அணிதல், நிக்காஹ் சடங்குகள், ஜும்மா பிரசங்கங்கள் என்பனவற்றை ஒட்டிய சம்பிரதாயங்களில் மாற்றங்கள் தேவை எனப் பிரச்சாரம் செய்தார். இஸ்லாமிய வாழ்கை முறையை திடப்படுதுவதற்கே தரீக்குகள் ஆரம்பிக்கபட்டனவன்றி மக்களுக்கிடையே பகைமையைப் பெருக்குதற்கல்ல என்று வற்புறுத்தி விளக்கினார்.

சட்ட நிர்ணய சபையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இருத்தல் அவசியமென்று இடையறாது வன்மையாகப் போராடினார். இதன் பயனாக 1889 ஆம் ஆண்டில் முஹமதியர் இருவர் நியமன உறுப்பினராக அங்கத்துவம் பெற்றனர். இந் நியமனம் கிடைக்கும் வரை சித்தி லெப்பை அவர்களே முஸ்லிம்களின் உத்தியோகச் சார்பற்ற பிரதிநிதியாகத் தமது மக்களின் நலனை முன்னிட்ட விசயங்களில் அவரே அரசாங்க அதிகாரிகளுடன் பரிந்து பேசினார். இலங்கை முஸ்லிம்களின் நன்மைக்கான எந்தச் சட்டத்தையும் முழு மூச்சுடன் ஆதரித்து வந்தார். முஸ்லிம் விவாகப் பதிவுச் சட்டத்தை பழமை விரும்பிகள் எதிர்த்த போது சித்தி லெப்பை வரவேற்றார். அத்துடன் இது விசயத்தில் தமது முழு ஆதரவையும் அரசாங்கத்திற்கு நல்கினார். சமயம் நேர்ந்த போதெல்லாம் இலங்கை முஸ்லிம்களின் சமுதாய ஒருமைப் பாட்டையும், கலாச்சார தனித்துவத்தையும், உத்வேகத்துடனும், விவேகத்துடனும் நிலைநாட்டி வந்தார்.

தனது பெரியார்களைக் கனம் பண்ணாத சமுதாயம் பெரியார்கள் தோன்றுவதற்கான அருகதையற்றதாக நாளடைவில் சீரழிந்து விடுமென்பெது நிருபனமான உண்மை. இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சியின் தந்தையும் சமுதாய வழிகாடியுமாகிய சித்தி லெப்பை அவர்களின் பெயர் நிலைத்து நிற்பதற்கும், அவர் மீது நமக்கிருக்கும் மதிப்பை வெளிபடுத்துவதற்க்கும் சிறந்த வழி அன்னார் காட்டிய வழியில் இலங்கை முஸ்லிம்கள் மட்டும் அல்லாது அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம்களும் பயனிப்போமாக!

இக்கட்டுரை மணி மஞ்சரி 1972 ஏப்ரல் இதழில் வெளியிடப்பட்டது.

Saturday, August 30, 2008

இலங்கை பத்திரிகாசிரியரின் மறைவு - ஓர் இரங்கல்

"நவமணி' இலங்கைத் தமிழ் மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் நாடித்
துடிப்பு. அதன்நாளங்களில் இரத்தமாக
ஓடோ ஓடென்று ஓடி அதற்கு உயிர்த் துடி[ப்பைத் தந்தவர், இன்று தானே அதை
இழந்து அமரராகிவிட்டார்.

சாதாரண நிருபராக இருந்து, பத்திரிகாசிரியராக உயர்வதற்குள் அவர் பட்ட
கஷ்டங்கள், பெற்ற அனுபவங்கள்
வரும் தலைமுறைக்கு வழிகாட்டக் கூடியவை. ஆனால், அது முறையாகப்
பதியப்படவில்லை என்பது சோகம்.
ஒரு ஒலிப்பதிவுக் கருவியுடன் என்னோடு ஒன்றிரண்டு மணி நேரம் உட்காருங்கள்.
உங்கள் அனுபவங்களை அசை
போடுங்கள். அதை ஒரு நூலாக - வாழ்க்கைச் சரிதமாக வடிக்கும் பொறுப்பை நான்
ஏற்றுக் கொள்கிறேன் என்றேன்.
ஆனால், வேலைப்பழு காரணமாக, நேரத்தோடு நித்தம் நித்தம் யுத்தம் நடத்திக்
கொண்டிருந்த அவருக்கு நேரமே
கிடைக்கவில்லை. காலமும், காலனும் கூட காத்திருக்கத் தயாரில்லை.

அரசியலில் ஆழ்ந்த புலமை, சமூகப் பிரச்னைகளில் பிரக்ஞையுடன் கூடிய அக்கறை,
அதை எழுத்தில் வடிக்கும்
வல்லமை. முகம் நோக்காது, விளைவுகளை எண்ணாது, அதே சமயம் முகத்தில்
அடித்தாற்போல் சொல்லாமல்
நளினமாகவும், நாகரீகமாகவும் உண்மைகளை பிட்டுப் பிட்டு வைத்த பாங்கு. அவரை
'பெரிய ம்னிதர்' என்று
முத்திரை குத்தப்பட அருகதை உள்ளவராக்கியது.

உயர் மட்டத்திலுள்ள அத்தனை சமூக - பொருளாதார - அரசியல் பிரமுகர்களையும்
தோழமையுடன் கைலாகு
கொடுத்துப் பழகும் அளவுக்கு பரிச்சயம். ஆனால், இந்த செல்வாக்கின் ஒரு
துளியையேனும் தன் சொந்த
லாபங்களுக்காகப் பயன் படுத்தினாரா என்றால், அழுத்தம் திருத்தமாக வரும்
பதில் " இல்லை" என்பதாகும்.

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன ? அது வேறொன்றுமில்லை. இலங்கையில்,
அதுவும் தமிழில், அதுவும்
கட்சி சாராது, நடுநிலை நின்று பத்திரிகை நடத்துவதுதான் என்பதைப் புரிந்து
கொள்ளுங்கள். அது மலையைப்
புரட்டி கட்லில் உருட்டும் பணி. அதை எவ்வித நெம்புகோலும் இல்லாமல்
நெஞ்சுரத்துடன் செய்தார் என்பதுதான்
அவருடைய தனிச்சிறப்பு.

பத்திரிகை வெளிவராமல் இருக்க 99 ஒன்பது காரணம் இருக்கும். அதற்காக
அச்சமோ, கவலையோ படமாட்டார்.
வெளிவர உதவும் அந்த ஒரு காரணம் போதும். பத்திரிகையை வெளிக்கொணர்ந்து
விடுவார். பத்திரிகை அச்சிட
மசிதான் தேவை.ஆனால் இவர் உபயோகித்த மசி இவரது உதிரமும், வியர்வையும் !

சரக்கு குவிந்து கிடந்தது. பக்கங்கள் இல்லை. எதை எடுப்பது, எதை விடுவது,
எப்போதும் அவரை வாட்டிய சவால்.
சளைத்தாரில்லை. பொருளாதாரம் புறமுதுகில் ஓங்கி அடித்தது. தினசரியாக
நட்த்துவது நஷ்டத்தால் இடித்தது.
அதனால் என்ன ? மாற்று வழி கண்டு பிடி. வாரம் ஒரு முறை அல்லது
இருமுறையாக்கு. காலம் கனியாமல்
போகாது அன்று பார்த்துக் கொள்ளலாம் என்கிற வைராக்கியமும் விடா
முயற்சியும் எல்லோருக்கும் வந்து விடாது.

லண்டன் "தீபம்" தொலைகாட்சியில் நான் வாரம் தோறும் நடத்தும் அரசியல்
விமர்சன நிகச்சிக்கு " அரங்கம் -
அந்தரங்கம்" என்று பெயர் வைத்தேன். என்ன ஆச்சரியம் ! நான் அடுத்த முறை
இலங்கை வந்தபோது பார்க்கிறேன்
"நவமணி' யின் இரண்டாம் பக்கத்தில் அவர் எழுதி வந்த பிரசித்தி பெற்ற,
எல்லோரும் படிக்கும், சக்தி வாய்ந்த
அந்தப் பகுதிக்கும் அதுதான் பெயர்.

"உங்களைப் பார்த்து நான் வைக்கவும் இல்லை. என்னைப் பார்த்து நீங்கள்
வைக்கவும் இல்லை. இயல்பாகவே
அப்படி அமைந்து விட்டது. அதன் பொருள் நீங்களும் நானும் ஒரே அலைவரிசையில்
(Wave Length) சிந்திக்கிறோம்
என்பதுதான். அதையிட்டு நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.

தொடர்ந்து எங்களுக்கு எழுதுங்கள் என்றார். செலவைப் பொருட்படுத்தாது,
தவறாமல் "நவமணி" அனுப்பித் தந்தார் இங்கே, இலங்கை பற்றிய செய்திகளை
நான் விஷய ஞானத்துடன் அணுக அது எனக்குப் பெரிதும் உதவியது.

அல்-ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் என் பள்ளித் தோழர். பால்ய நண்பர். அவர் மீது
அதீதமான அன்பும், நட்பும், மதிப்பும்
மரியாதையும் வைத்திருந்தார். அவருடைய வளர்ச்சி தன்னுடைய வளர்ச்சி போல்
எண்ணீ மகிழ்வார். எங்கள்
இருவரையும் சேர்ந்த்தே சந்திக்கப் பிரியப்படுவார்.சுவாரஸ்யமான எங்கள்
இளமைகால அனுபவங்களை
கரிசனத்துடன் கேட்பார். ஒரு நாள் ஸாஹிராக் கல்லூரியைப் பற்றிப்
பேசும்போது, " ஒரே உறையில் எப்படி
இரண்டு வாள்கள் இருந்தீர்கள் ? " என்றார். நான் சொன்னேன். ' இரண்டு
வாள்கள் அல்ல வால்கள். அதுதான் நான்
இந்தியாவுக்கு ஓடி விட்டேன்" என்றேன். வாய்விட்டுச் சிரித்தார்.
நகைச்சுவையை ரசித்துச் சிரிப்பார்.

ஆனால், இவரும், துணைவியாரும் விபத்தில் சிக்கி, தான் தப்பி, துணைவியார்
போய் விட, " அவளோடு நானும் போயிருக்க வேண்டும்" என்றவர் துக்கம் தாளாமல்,
ஓசைப்படாமல், கண்ணீர் விட்டு அழுதார். ஆறுதல் சொன்னோம்.

இன்று அவர் போய் விட்டார். நண்பர்களாகிய நாங்கள் அவரது பிரிவுத் துயர்
தாங்காது கண்ணி வடிக்கிறோம்
எங்கள் கண்ணிரைத் துடைத்து ஆறுதல் சொல்ல அவர் இல்லை..

நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்ட "நவமணி" யின் ஆசிரியர் திலகம்
அல்ஹாஜ் அஸாருடைய இழப்பு
இலங்கைக்கு மட்டுமல்ல, எழுத்துலகுக்கும், ஊடகத் துறைக்கும் ஈடு செய்ய
முடியாத இழப்பு. அவரது பயிற்சிப்
பட்டறையில் அனுபவ பாடம் கற்றுக் கொண்ட எத்தனையோ மாணவ மணிகள் தாங்கள் சாதனைகள் மூலம்
பெயரெடுத்து அவரது பெயரை பிரகாசிக்கச் செய்வார்களாக. அதுவே அவருக்குச்
செலுத்தும் இதயமார்ந்த
அஞ்சலியாக இருக்கும். அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவனின் பரிசு
சுவர்க்கமாக இருக்கட்டும்.

ஆழ்ந்த இரங்கலுடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
abjabin@gmail.com
__._,_.___

Monday, July 14, 2008

அமீரகத்தில் அல்லலுறும் இலங்கைப் பெண்

அமீரகத்தில் அல்லலுறும் இலங்கைப் பெண்

அமீரகத்தின் வட கிழக்குப் பகுதியில் உள்ளது ராசல் கைமா. இங்கு வீட்டுப்பணிக்காக ஒரு ஏஜென்ஸி மூலம் வருகை புரிந்த அவரை அரபி ஒருவர் வீட்டில் பணிக்குச் சென்றுள்ளார்.

அங்கு 14 பிள்ளைகளுடன் உள்ள அப்பெரிய குடும்பத்தில் ஒரு பணிப்பெண்ணால் சமாளிக்க இயலாமல் மற்றொரு அரபியை நம்பி அங்கு பணிக்கு சென்றுள்ளார். வந்தவரை லாபம் எனக் கருதிய அவரை ஒன்பது மாதம் வீட்டிலேயே வைத்து சம்பளம் எதுவும் கொடுக்காமல் வேலை வாங்கியுள்ளார்.

சமயம் பார்த்து வீட்டை விட்டு தப்பித்து ஒரு அறையில் அடைக்கலமாகியுள்ளார். ஏஜென்ஸி மூலம் வருகை புரிந்த இவருக்கு விசாவும் அடிக்கப்படவில்லை.

தற்பொழுது இலங்கையில் தனது தகப்பனாரின் உடல்நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உடனடியாக தாயகம் செல்ல விரும்பும் இவருக்கு உதவிட தமிழக சகோதரர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவரது விமானப் பயணத்திற்கு உதவிட யாரேனும் முன்வருவார்களேயானால் அவர்கள் 050 277 80 92 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, August 2, 2007

தமிழ் முஸ்லிம் இதழ்கள்

முஸ்லிம் முரசு
எண் 49 கே.எம்.தெரு
ராஜ அண்ணாமலைபுரம்
சென்னை 600 028

தொலைபேசி : 2495 1648

இஸ்மி மாத இதழ்
1, Jaffar Syrang Street,
Vallal Seethakathi Nagar
(Custom House Backside)
Chennai-600 001.
Phone: 044-25232255 , 25232222
Fax: 044-25248888
http://www.tnwakfboard.org/contactus.htm

Ilampirai
No 365 ( 231 ) poonamalle High Road
Amimjikarai
Chennai 600 029
Tel : 2664 1389
Cell : 98 436 22733
E mail : ilampirai4u@gmail.com

Makkal Urimai
No 7 Vada Maraikayar Street
Chennai 600 001
Tel : 2524 7824
Fax : 2522 3868
E mail : makkalurimai@yahoo.com
makkalurimai@gmail.com
Editor : M. Tahmimun Ansari

NARGIS
No 54 Maryam Nagar
Malligaipuram
Trichy 620 001
E mail : aneesnargis@hotmail.com
Tel : 0431-2301255
Cell : 94431-30135

Quranin Kural
Post Box No. 250
No 38 Thasildar pallivasal Street
Madurai 625 001
Tel : 0452 - 6991333
Fax : 0452 - 2322672
E mail : quraaninkural@sancharnet.in

Subscribtion

One Year Rs. 120

Founder : Allama A.M. Abdul Jabbar Baqavi (rah)
Editor : Moulavi A Mohamed Ashraf Ali Manbayee

சத்தியப் பாதை
வடக்குத் தெரு
கீழக்கரை 623 517
போன் : 94435 21122
www.sathyapathai.com
info@sathyapathai.com

SAMARASAM TAMIL FORTNIGHTLY
No 138 Perambur High Road
Chennai 600 012
Tel : 2662 0091
E-mail : samarasam12@gmail.com
www.samarasam.com
www.iftchennai.org

Subscribtion Rate :

Rs.220 for one year
Rs.110 for six months
Rs.820 for one year overseas subscribtion.

Editor & Publisher : H Abdur Raqeeb
Editor-in-charge : Sirajul Hasan

UNARVU
No 7 Vadamaraikayar Street
Mannady
CHENNAI 600 001
Tel : 044 2521 5408
Advt :
PWP Agencies
No 2 ( Old No. 255 )
Angappan Street, Near Ilayangudi Masjid
Chennai 600 001
Cell : 98 402 68254
E mail : mmtadvt@yahoo.com

சமநிலைச் சமுதாயம் தமிழ் மாத இதழ்

சமநிலைச் சமுதாயம்
தபால் பெட்டி எண் : 6315
மயிலாப்பூர்
சென்னை 600 004

எண் 5 கிரீம்ஸ் சாலை
கனரா வங்கி பின்புறம்
இரண்டாவது மாடி
ஆயிரம் விளக்கு
சென்னை 600 006
தொலைபேசி : 28290785
தொலைநகல் : 24352814

ஆசிரியர் : ஜாபர் சாதிக் பாக்கவி
98 402 77450
editor2samanilai@yahoo.co.in
editor2samudhayam@yahoo.co.in

வாசிக்கும் தலைமுறையை வார்த்தெடுக்கும் மகத்தான பயணம் எனும் முழக்கத்தோடு
சிறுபான்மைக் களத்திலிருந்து சமகாலத்தில் வெளிவரும் இதழ்களிலிருந்து
முற்றிலும் வித்தியாசப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி, பொருளாதாரம், சமூக முன்னேற்றம், வணிகம், அரசியல், சமுதாயச் சேவைகள், தேசத்தின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வுக்காக இதழ் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் மூத்த படைப்பாளிகள், முஸ்லிம் படைப்பாளர்கள் பலரும் தங்களது ஆழமான, கனமான படைப்புகள் மூலம் இதழை கனப்படுத்தி வருகிறார்கள்.

VIDIYAL VELLI
No 26 Baracks Road
( Near Vetenery College )
Second Floor
Periamet
CHENNAI - 600 003
Tel : 256 10969
Fax : 256 10872
E-mail : vidialvelli@gmail.com

Rs. 180 for one year
Rs. 800 for one year - Overseas Subscribttion

Editor : M Gulam Mohamed M.A.
Sub Editor : M.S. Abdul Hameed B.E

புஷ்றா - நற்செய்தி மாத இதழ்

சுன்னத்வல் ஜமாஅத் முற்போக்கு மாத இதழ்

ஆசிரியர்

மௌலவி பாஸில் ஏ.எல்.பதுறுத்தீன்
ஷர்க்கி - பரேலவி

தொடர்பு முகவரி

புஷ்றா
138 சரீப் ஹாஜியார் வீதி
அட்டாளைச்சேனை 02
தொலைபேசி : 060 2672600
இலங்கை

ஆங்கிலம்

Cultural Horizons
P O Box No 115222
Dubai
UAE
E mail : info@dcc.ae
www.dubaiculturalcouncil.ae

Radiance Viewsweekly
D 307 Dawat Nagar
Abul Fazl Enclave
Okhla, Jamia Nagar
New delhi 110 025
Tel : 011 2631 1423
Fax : 011 2631 1424

98 91 72 4939
www.radianceweekly.com
radianceweekly@vsnl.com
radianceweekly@gmail.com

www.thenewsfromindia.com

About News From India

Welcome to News From India
India's most widely circulated English language newspaper covering national,
international ,sports and other news related to muslim world.

Weekly 'News From India'
An English weekly of Indian Muslims 'News from India' first appeared on 6
December, 1993. And it was the same date when Babri Masjid was martyred a
year before, i.e. on 6th December 1992.
If you turn over the pages of the previous issues of the weekly, you would
find how at such a critical juncture, when there pervaded an environment of
utter confusion, anguish and anger among the Muslim community through out
the world, especially in India, in the wake of the martyrdom of the Babri
Masjid. The Muslim community of India had no platform of its own to give
vent to its grievously injured feelings as the national media, too appeared
to be greatly biased. Rather, at times, it looked to be playing a role of a
suppressor or distorter of the truth. And it was really a testing time for
the Indian Muslims who were in a dire need of an effective platform in order
to bring to fore the truth. And, of course, the weekly News From India came
up to call a spade , with professional excellence, honesty and fortitude.
Note:
The 'News From India' became a daily on 1st July 2006, there by having an
honour of being the 1st English daily of the Indian Muslims, after 1947.

Our mission to provide latest:

National News
International News
Muslim World News
Sports News
Other... Address:

C11, Shaheen Bagh,
Okhla, New Delhi - 110025
I N D I A Direct:

Tel/Fax : +91-11-26971185 E-Mail:

newsfromindia786@hotmail.com

Akbare Mashriq Dialy Urdu

Editor M.W. HAQUE
Telephone 22448464
Fax 22012590
Email mushriq@vsnl.net
Address 6/267, Lalita Park, Laxmi Nagar, New Delhi,India

Hindustan Express Daily Urdu
Editor M.D. Khalid Anwar
Telephone 011-23277914, 011-42564528
Fax 011-23277947
Address 5051-3rd Floor, Netaji Subhash Marg Darya Ganj
Delhi-11002

Muslim India Monthly English

Editor Syed Shahabuddin
Telephone 011-26326780
Fax 011-26327346
Address D-250, Abul Fazal Enclave, Jamia Nagar
New Delhi-110025

Akbar-e-NAO Weekly Urdu

Editor Ahmad Adeel Khan
Telephone 011-23260075
Fax 011-23260075
Address 1734, Dakhani Rai Street, Daryaganj
New Delhi-110002

Nau Dunya Weekly Urdu

Editor Shahid Siddique
Telephone 011-24358630, 24354706, 24352602
Fax 011-24354569
Address No.2 first Floor Nizamuddin West Market
New Delhi-1100013

The Milli Gazatte English

Editor Zafrul Islam
Telephone (+91-11) 2682 2883, 2692 7483, 2632 2825
Fax (+91-11) 2683 5825
Email edit@milligazette.com
Address D-84 Abul Fazl Enclave-I, Jamia Nagar
New Delhi 110025 India

----------------------------------------------------------
----
Editor: Khalid Sabir
C-11, Shaheen Bagh, Okhla, New Delhi, INDIA - 110025, Tel/Fax :
+91-11-26971185
www.thenewsfromindia.com

Al Jumuah
P O Box 26970
Riyadh 11496
Saudi Arabia

966-1- 225 1288
Fax : 2690509
www.aljumuah.com