அல்குர்ஆன் ஓர் அற்புதம் - “இறையருட் கவிமணி” தமிழ்ச் செம்மல் பேராசிரியர் கா. அபதுல் கபூர், எம்.ஏ.டி.லிட்.
http://www.mudukulathur.com/religiondetails.asp?id=114
வையகத்து மக்கள் வாய்பிளந்து வியக்கின்ற அற்புதங்கள் பலவற்றை ஏடுகள் எடுத்துக் காட்டுகின்றன. எகிப்து நாட்டில் ஏற்றத்துடன் மிளிர்கின்ற பிரமிடுகள் எனப்படும் பட்டைக் கோபுரங்கள். அவற்றின் அருகாமையில் 66 அடி உயரத்திலும் 175 அடி நீளத்திலும் ஒற்றைக் கல்லில் உருவாக்கப் பட்டுள்ள ஸஃபிங்கஸ் எனப்படும் சிங்க வடிவச் சிலை. இராக் நாட்டில் புராத் நதிக்கரையில் திகழ்ந்த பண்டைய பாபிலோனியாவின் தொங்குதோட்டம். கிரேக்க நாட்டில் 127 சலவைக் கற்களின் மீது நிறுவப்பட்டிருக்கும் 60 அடி உயரமுடைய ஆர்ட்டிமிஸ் ஆலயம். ஹெலிகார்னஸஸ் என்னுமிடத்தில் எழில்மிகு தோற்றத்துடன் எழுப்பப்பட்ட மெளஸலஸ் மண்ணறை. ரோட்ஸ் நகரத்தில் கிரேக்கர்களின் கதிர்க்கடவுளுக்காக 109 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட வெண்கலச் சிலை. அலெக் சாந்திரியாவில் 600 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட கலங்கரை விளக்கம். சீன நாட்டின் வட எல்லையில் 2550 மைல் நீளத்தில் நிருமாணிக்கப்பட்ட உயரமான நெடுஞ்சுவர். பைசா நகரத்தில் 116 அடி உயரத்தில் சாய்ந்து நிற்கின்ற கோபுரம். பேரரசர் ஷாஜஹான் துணைவியார் மீது கொண்ட காதற் சின்னம் கண்ணீர்த்துளியாக உறைந்துவிட்ட தாஜ் மஹால். இவைகளெல்லாம் பாருலகம் கண்ட பேரற்புதங் களாகப் போற்றப்படுகின்றன. இவற்றினும் மேலான சில அற்புதங்களைப் பற்றி மனிதன் சிந்திப்பதே இல்லை.
மலைகளைப் போன்று உயரமாக எழுந்த அலைகளின் நடுவே மரத்தாலும் ஆணிகளாலும் அமைக்கப்பட்ட ஒரு கலத்தில் நபி நூஹ் (அலை) அவர்களும் குழுவினரும் எத்தகைய இடையூறுமின்றிக் காப்பாற்றப்படுகின்றனர். கொடியோன் நம்ரூதின் ஆணைப்படிக் கோபுரமாகக் கொழுந்து விட்டெரியும் நெருப்புக் குண்டத்தில் இறைநேயர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தூக்கி எறியப்பட்டபோது நெருப்புக் குண்டம் குளிர்ச்சிமிக்க தண்ணீர்க் குளம் போன்று மாறிவிடுகின்றது. அட்டதிசை போற்றும் சுலைமான் நபி (அலை) அவர்களின் அரசவையில் ஸபா நாட்டரசி பல்கீஸின் அரியணை நாடியவுடன் கொணரப்படுகிறது. முன்னவன் தூதர் மூஸா (அலை) அவர்களின் ஆஸாக் கோல் பாம்பாக மாறுகின்றது. பாறையில் அடித்தவுடன் நீரூற்றுக்கள் தோன்றுகின்றன. இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் தந்தையின்றியே பிறக்கின்றார்கள். தொட்டிற் பருவத்திலேயே தெளிவாக உரையாடுகின்றார்கள். இறை யாணைப்படி இறந்தோரை எழுப்புகின்றார்கள். பிறவிக் குருடர்களையும், பெரு நோயாளிகளையும் குணப்படுத்து கின்றார்கள்.
பாலைவன நாட்டின் பாரான் பள்ளத்தாக்கில் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தன்னந்தனியாகக் கிடந்த புனிதக் குழவியொன்றன் பூவடிகள் பட்டுப் பொங்கியெழுந்த நீரூற்றொன்று, இற்றைநாள் வரையில் வற்றாமலிருந்து வையகத்து மக்களுக்கெல்லாம் வாய்கமழ, மனங்குளிர ஜம்ஜம்மென்று நீரூட்டி வருகின்றது. அந்த ஜம்ஜம் ஊற்றின் கரையிலேயே எழுந்த மக்கமா நகரத்தில் அனாதையாகப் பிறந்து எழுதப் படிக்கத் தெரியாதிருந்த ஒருவரால் தோற்று விக்கப்பட்ட இஸ்லாமிய நாகரீகம் இன்று உலகளாவி நிலைத்து நிற்கின்றது. இஸ்லாம் நெறியின் அடிப்படை யாகவும், ஆதாரமாகவும் அமைந்துள்ள அல்- குர்- ஆன் என்னும் அருள்மறை அவனியிலுள்ள நூல்கள் அனைத் திற்கும் அன்னையாகத் திகழ்ந்து அற்புதங்கள் பலவற்றை விளைவித்துக் காலத்தின் கோலத்தால் கவர்ச்சியை இழந்து விடாமல் பூத்துக் குலுங்கும் அறிவு வளர்ச்சியினால் புதுமை மாறிவிடாமல், இன்றளவும் இணையற்ற நூலாய் விளங்கி வருகின்றது. இத்தகைய அற்புதங்களை ஆறறிவு படைத்த அற்புத மனிதன் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
இறைத் தூதர்களாக இவ்வுலகில் வாழ்ந்த நபிமார் களெல்லாம் அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக் கேற்ற அற்புதங் களைக் காட்டிச் சென்றார்கள். இசை இன்பத்தில் இதயத்தைப் பறிகொடுத்து வாழ்ந்த மக்களிடையே தோன்றிய ஹலரத் தாவூத் (அலை) அவர்கள் நாத வேதமாகிய சபூர் மறையை ஓதிக் காட்டினார்கள். மந்திரவாதிகளின் மாயத் தந்திரங் களெல்லாம் மேலோங்கி நின்ற காலத்தில் வாழ்ந்த ஹலரத் மூஸா (அலை) ஆஸாக் கோலால் அற்புதம் செய்தார்கள். மருத்துவத் துறையில் மனத்தைச் செலுத்திய மக்களிடையே வாழ்ந்த ஹலரத் ஈஸா (அலை) அவர்கள் தீராப் பிணிகளைத் தீர்த்து வைத்தார்கள். மொழி வெறியிலும், இலக்கிய இன்பத் திலும், கவிதைச் சுவையிலும் மெய்ம்மறந்து திளைத்திருந்த மக்களுக்கு அண்ணல் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறையருள் இலக்கியமாகிய திருக்குர்ஆனை வழங்கினார்கள். பிற நபிமார் காட்டிய அற்புதங்களெல்லாம் ஏடு கமழும் பேருண்மைகளாக விளங்க அண்ணலார் காட்டிய அற்புதம் என்றும் எல்லோரும் நேரிற் காணும் பாருண்மையாக நிலைத்து விட்டது.
“அற்புதங்கள் யாவினையும் அவைமிகைத்து நிற்பனவாம் நிற்கவில்லை முந்தைநபி நிகழ்த்துமற்றை அற்புதமே”
என்பது காலமெல்லாம் கமழும் கஸீதத்துல் புர்தா என்னும் கவிதைச் செல்வம் வழங்கியுள்ள இமாம் பூஸ்ரீ (ரஹ்) அவர்கள் ’தாமத்ல தைனா’ எனத் தொடங்கும் பாவடிகளில் பதித்துள்ள கருத்தாகும். பெற்றெடுத்த குழவிகளையே உயிருடன் குழிதோண்டிப் புதைத்துக் கொடுமையின் கொடு முடியிலேறிக் கொக்கரித்து நின்ற கொடியவர்களின் கன் னெஞ்சங்களைத் தண்ணீர் போல மாற்றிய அற்புதத்தை மாநிலத்தில் வேறெங்கே காண முடியும்?
பளிச்செனத் தோன்றிய வான்மறையின் வெளிச்சத்திற்கு முன்னால் இலக்கிய அரக்கர்களெல்லாம் கண்ணைத் திறக்க முடியாமல் வாயை மூடி மெளனிகளாயினர். நானில நாயனின் மறை நாதத்தைச் செவிமடுத்த மாத்திரத்தில் ஆடிய அவர்களின் நாடிகளெல்லாம் அடங்கியொடுங்கி இதயங்களெல்லாம் இளகியோடின. வானின்று இறங்கிய பேரமுதம் அவர்களுக்குத் தேனினும் பாலினும் தெவிட்டாக் கனியிலும் தித்தித்தது. வள்ளல் நாயகமவர்களின் தலையைக் கொய்வதற்காக வஞ்சினங் கூறி வாளேந்திப் புறப்பட்டுச் சென்ற மாவீரர் உமறு, திருமறை வசனங்கள் சிலவற்றைக் கேட்டதும் மனந்திருந்தி மாநபியின் தாளடைந்து மறை நெறியைத் தழுவுகின்றார். திருநபியைத் திருத்துவதற்காகத் திட்டமிட்டு வந்த தீரர் உத்பா, திருமறை ஓதக் கேட்டதும் ஊமையைப் போல் ஒன்றும் பேசாமல், சிங்கத்தைக் கண்ட வரையாடு போன்று அசையாமல் நிற்கின்றார். உத்தமத் திருநபிக்குப் புத்தி கூற வந்த வலீதிப்னு முகைரா,”தேனீ” என்னும் அத்தியாயத்தைக் கேட்டு மறைமலர் நுகரும் தேனீயாக மாறிவிடுகிறார். பிரசித்தி பெற்ற மந்திரவாதி லம்மாதிப்னு ஸஃலத்துல் அஜ்தீ, துமாமத் இப்னு உதால், அபூ தர்ருல் கப்பார் முதலிய ஆயிரக்கணக்கானோரின் திசைமாறிய வாழ்க்கையில் திருமறையே ஒரு திருப்பு மையமாக அமைந்தது. கவிதச் செருக்கு மண்டையிலேறி யிருந்த அண்டாக்கவிஞன் இன்பத் திருமறையில் ஈரைந்து சொற்களைக் கொண்டிலங்கும் “அல் கவ்தர்” அத்தியாயத்தைச் செவி மடுத்ததும் ”மானிடர் மொழி யீதன்று” (மா ஹாதா கவ்லுல் பஷர்) என்பதாக வியந்து மொழிந்து தலைகுனிந்த நிகழ்ச்சியை அறிகின்றோம்.
அருமை நாயகமவர்களின் திருமறை வெளிப்பாடெனக் கூறுவதெல்லாம் கற்பனையின் களியாட்டே யென்றும், பித்தரின் பிதற்றலென்றும் சூனியக்காரரின் சூழ்ச்சி யென்றும் குறை கூறிக் கொண்டிருந்த மக்கத்து மக்களுக்கு மாபெரியோன் விடுத்த அறைகூவல் உலையாத இறை மறையில் நிலையாக இடம்பெற்றுள்ளது.
”நாம் நம் அடியாருக்கு அருளியதில் நீங்கள் ஐயம் கொண்டு நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் அல்லாஹ்வைத் தவிர - உங்கள் உதவியாளர்களையும் நீங்கள் துணைக் கழைத்துக் கொண்டு இதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்” (2:23)
இவ்வறை கூவலை ஏற்கும் வகையில் தொடக்கத்திலே தோன்றிய ஓரிரு சலசலப்புகள் மக்கள் மன்றத்திலே நகைப்பிற் கிடமாகி அழிந்தொழிந்தன. பிற்காலத்தில் திரு மறையின் அறைகூவலை ஏற்கும் வகையில் வரிந்து கட்டிக் கொண்டு வந்த வில்லியம் மூர் போன்ற பாதிரிமார்களும் வித்தகர்களும் படுதோல்வி கண்டதோடு மட்டுமன்றி வான் மறையை வாய்விட்டுப் பாராட்டவும் தொடங்கினர். “There is probably in the world no other book which has remained twelve centuries with so pure a text” (பன்னிரு நூற்றாண்டுகளாகப் பாருலகில் இத்துணைத் தூய்மையுடன் நின்றிலங்கும். இன்னொரு நூலே கிடையாது) என்பார் பாதிரியார் வில்லியம் மூர் “That the best of Arab writers has never succeded in producing anything equal in merit to the Holy Quran itself is not surprising” (மிகச்சிறந்த அரபி எழுத்தாளர் ஒருவர் கூடப் புனிதக் குர்ஆனின் ஆற்றலுக்கு ஈடானதொன்றை ஆக்கியளிப்பதில் என்றுமே வெற்றி கண்ட தில்லை என்பது வியப்பிற்குரியதல்ல”) என்பதாக பால்மர் என்பார் திருக்குர்ஆன் முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.
“மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து இதைப் போன்ற ஒரு குர்ஆனை உண்டாக்க முயன்றாலும் அவ்வாறு உண்டாக்கவே முடியாது அவர்களில் சிலர் சிலருக்கு உதவி செய்த போதிலும் சரியே” (17:88) என்னும் இறை தீர்ப்பு எக்காலமும் நிலைத்திருப்பதல்லவா?
மனித குலத்தின் மனப் பக்குவத்திற் கேற்பக் காலத்திற் கேற்ற முறையில் தூதர்கள் வாயிலாக வழிகாட்டி வந்த இறைவன், நிறைவான அறவுரைகள் அனைத்தையும் பெறு வதற்கு மனிதகுலம் தகுதியைப் பெற்றுவிட்ட தருணத்தில் இறுதித் தூதராகிய அண்ணல் நாயகமவர்கள் வாயிலாக வளமும் வனப்பும் செறிந்த உயர்தனிச் செம்மொழியாகிய அரபியில் நிறைவு பெற்ற இறுதி மறையை இறக்கினான். ஆகவே உலகின் இறுதி வரையிலே மனித குலத்திற்குத் தேவையான அறவுரைகள் அனைத்தும் அதில் இடம் பெற்றன. அதனை மாசுபடாமல், மாறுபடாமல் இறைவன் ஏற்றெடுத்தான்.
“அறிவுவகை யெத்தனையென் றறியவகை யில்லை
அத்தனையும் அவனுரைத்த அருள்மறையி லடக்கம்
எத்தனையோ கோடிமறை இறையுரைத்த தெல்லாம்
எடுத்தொடுக்கிக் குர்ஆனை இறையிறக்கிக் கொடுத்தான்
முத்தான குர்ஆனுக் குயர்ந்தமறை யில்லை”
என்பது ஞானமேதை பீரப்பா அவர்களின் சத்தான பாடல். அறிஞர்களால் ஆக்கப்படும் நூல்கள், யாதேனும் ஓரிரு பொருட்கள் பற்றிப் பேசுவதைப் பொதுவாகக் காணலாம். அனைத்துலகுக்கும் உலக முடிவு வரையில் வழிகாட்டும் ஆற்றல் பெற்றிருக்கும் ”நூல்களின் தாய்” (உம்முல் கிதாப்) என நுவலப்படும் இறைவனின் அருள்மறை தொட்டுக் காட்டாத பொருட்களே உலகத்திலில்லை. அறிவியல், அரசியல், அருளியல், பொருளியல், உயிரியல்,ஒழுக்கவியல், சட்டவியல், சமூகவியல் முதலிய எல்லாப் பொருட்களை யும் தன்னகத்தே தாங்கியுள்ளது ஏகநாயகனின் எழில்மறை, ஒருவன் யார் யாரைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்பதை விரிவாக எடுத்துக் கூறுவதிலிருந்து தன்னுடைய தல்லாத இல்லத்தில் நுழைகின்றபோது எத்தகைய ஒழுக்கத் துடன் நுழையவேண்டு மென்பது வரையில் எல்லாப் பொருள் பற்றியும் நுட்பமாக நுவல்லது அல்லாஹ்வின் அருள்மறை மனிதகுல ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத் துவம், உயிர்களின் உற்பத்தி, வான்வெளிப் பயணம், வானுக்கும் மண்ணுக்கு மிடையே உயிரினங்கள், அனைத்துயிர்களிலும் ஆண், பெண் அமைப்பு, அன்னையின் வயிற்றில் குழந்தையின் வளர்ச்சி, உலோகங்களின் பயன், பொறியின் செயற்பாட்டால் விளையும் வீரியம் – போன்ற பல்வேறு பொருள்பற்றி இன்று விஞ்ஞானிகள் வெளியிடும் கருத்துக்களுக்குரிய கருவனைத்தையும் திருமறையில் காணலாம் நூஹ் நபியின் கப்பல், உரோமர்கள்மீது வெற்றி ஃபிர்அவ்வின் சடலம் ஆகியவை பற்றிய தீர்க்கதரிசனங்கள் காலப் போக்கிலே வெளிப்பட்டுள்ளன.
“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும்” என்னும் இலக்கணத்திற்குப் பொருத்தமாக ஒரே நூல் பொய்யகற்றும் திருமறை யென்பதில் ஐயமே இல்லை. சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய நூல்களுக்குரிய பத்து வனப்பாலும் பொலிவினைப் பெற்று ”குன்றக் கூறல், மிகைபடக் கூறல்” முதலிய குற்றங்கள் பத்தும் இல்லாததாக இலங்குகின்ற நூல் இறைமறையேயாகும். வரலாற்றைக் கூறினாலும் வாக்குறுதிகளை வழங்கினாலும் அச்சுறுத்தி எச்சரிக்கை செய்தாலும், ஆகுமானவற்றை அறிவித்தாலும், நன்மையை ஏவினாலும், தீமையைத் தடுத்துரைத்தாலும், இறை புகழை இயம்பினாலும் திருமறையில் ஒரு தனித்தன்மையைக் காணலாம். ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்ற முறையில் தேவையான உவகை உருவகங்களுடன் உலகின் எப்பகுதி மக்களும் புரிந்துகொள்ளும் தன்மையில் அமைந்துள்ளன திருமறையின் போதனைகள்.
தீயானது தொட்டவரை மட்டும் சுட்டிடும் தன்மை வாய்ந்தது. தீமையோ, செய்தாரை மட்டுமின்றி அவர் வழி வந்தோரையும் வாட்டி வதைக்கும் இயல்புடையது. மனிதப் புனிதர்களாகிய இறை தூதர்களுக்குத் தீங்கிழைத்ததன் காரணமாகப் பூண்டோடழிந்த மக்களைப் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் எடுத்துரைக்கப்பட்டு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. நூஹ் நபியின் காலத்தில் வெள்ளப் பெருக்கால் அழிந்தவர்களையும், ஆத் கூட்டத்தினர் புயலினால் அழிந்த தையும், தமூத் கூட்டத்தினர் இடியோசை கேட்டு ஈரல்கள் வெடித்துக் குடல்கள் தெறித்துச் சிதறி அழிந்ததையும், லூத் நபியின் பகைவர் கல்மாரியினால் அழிந்ததையும், ஷுஐப் நபியின் பகைவர் நெருப்பு மாரியால் மடிந்ததையும், மூஸா நபியின் பகைவர்கள் நீலாற்றில் மூழ்கி இறந்ததையும், காரூன் குழுவினரை நிலமே விழுங்கியதையும் திருமறை யானது எடுத்துரைத்து எச்சரிக்கும் பகுதிகள் எவரையும் நடுங்கச் செய்வனவாகும்.
உலகின் எப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கும் தோன்று கின்ற எவ்வகைச் சிக்கலுக்கும் ஓரிரு சொற்களில் வழிகாட்டுகின்ற அற்புதத்தைத் திருமறையில் காணமுடியும். ஒரு போது ஆண், பெண் ஆகிய இரு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மாரிடையே ஆண் குழந்தைக்குரியவன் யாரெனும் ஐயம் எழுந்தபோது, எடையிலே மிகுந்த தாய்ப் பாலுக்குரிய அன்னையே ஆண் குழந்தைக்குரியவள் என்னும் தீர்ப்பினை வழங்குவதற்குக் காரணமாக இருந்தது. ”அர்ரிஜாலு கவ்வாமூன அலந் நிஸா (ஆண்களே பெண்களின் நிர்வாகிகள்) 4:34, என்னும் திருமறைத் தொடராகும்.
குழப்பங்களைத் தெளிவு படுத்துவதற்கும் மயக்க நிலையில் நல்ல தீர்ப்புகள் வழங்குவதற்கும் காரணமாக இருந்த மறைத்தொடர்கள் பலப்பல திருமறையின் ஒவ்வொரு வசனமும், ஒவ்வொரு சொல்லும் விளைக்கின்ற பயன்களும் அற்புதமாகவே அமைந்துள்ளன. மனிதர்களே உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்திருக்கிறது. உங்கள் இருதயங்களிலுள்ள நோய்க்கு அது ஒரு சஞ்சீவியாகும். மேலும் (அது) விசுவாசம் கொண்டவர் களுக்கு நேர்வழி காட்டியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது. (10:57) இவ்விறை மொழிக்கேற்ப இதயப் பிணிகளைப் போக்கும் ஆத்மீக மருந்தும் இம்மையையும் மறுமையையும் செம்மையாக்கும். அறவுரைகளும் வான் மறையில் நிறைந்துள்ளன. “லஹா மஆனின்” என்பதாகத் தொடங்கும் கஸீதத்துல் புர்தாவின் கவின்மிகு பாடலைக் காண்போம்.
“கடலின் அலைபோன்றதுவாம் கத்தன் மறை வாக்கருத்தம்
சுடருமுத்தின் மேலதுவாம் சொல்லழகினால் மதிப்பால்”
பரந்து விரிந்து கிடக்கும் ஆழ்கடலின் அலைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வருவதையும் முன்னால் வந்த அலைகளைத் தழுவியே பின்னால் வரும் அலைகள் எழுவதையும் பார்க்கின்றோம். அதுபோன்ற திருமறையின் வசனங்களுக்குத் தொடர்ந்து பல விளக்கங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதையும் அவ்விளக்கங்கள் ஒன்றுக்கொன்று முரண்படாமல் ஆதரவாக இருப்பதையும் காண்கிறோம். அழகிலும் விலைமதிப்பிலும் திருமறையின் மணியான கருத்துக்கள் முத்துக்களை வென்றுவிடப் பார்க்கின்றோம். “ஸிப்கத்தல்லாஹ்” (இறைவனின் வண்ணத்தை அடைவீர்) 21:38, “வஜிபால அவ்தாத” (மேலும் மலைகள் முளைகள்) 78:7 இவைபோன்று எத்தனையோ சிறுதொடர்களுள் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்கள் ஆய்வாளர்களை வியப்பில் மூழ்கச் செய்கின்றன.
ஆசிரியர் ஒருவர் ஒரு நூலை எழுதி முடித்தபின் அந்நூலினை ஆயும் அறிஞர்கள் அதிலுள்ள பிழைகளையும், முரண்பாடுகளையும் எடுத்துரைப்பதற்குத் தவறுவதில்லை. ஓர் ஆசிரியரின் வாழ்நாளிலேயே அவர் நூலின் கருத்துக்கள் மறுக்கப்படுவதையும் வெறுக்கப்படுவதையும் பார்க்கின்றோம். அவர் மறைவுக்குப் பின் அந்நூல் திருத்தப்படுவதையும் இடைச் செருகல்கள் நுழைக்கப்படுவதையும் காண்கின்றோம். இறைவனால் இறக்கப்பட்ட மறைநூல்கள் கூட மனிதர்களின் கைபட்டுத் தூய்மையிழந்து உருக்குலைந்து விட்டன. ஆனால் இறைவனின் இறுதி மறையாகிய திருக்குர்ஆன் தோன்றி 1450 ஆண்டுகள் சென்ற பின்பும் அதன் ஒரு சொல்லோ, எழுத்தோ, புள்ளியோ, கோடோ மாற்றப்படாமல் காக்கப்பட்டு வருகின்றது. அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலேயே அந்தாகியா என்னும் ஊரிலிருந்து வந்த ஒரு குழுவினர் திருமறை கூறும் வரலாற்றுக் குறிப்பின் காரணமாகத் தங்கள் ஊருக்கு ஏற்படுகின்ற பழியைப் போக்குவதற்காக “அபல்” என்னும் சொல்லை “அதவ்” என்பதாக மாற்றுவதற்கு எவ்வளவோ வேண்டியும் அண்ணலார் அவர்கள் அதற்கிசையவில்லை.
நிச்சயமாக நாமே இந்நினைவூட்டியை இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனைப் பாதுகாப்போம்” (15:9) என்பது ஆற்றல் மிக்கோனின் அருள் வாக்கல்லவா? இவ்வசனத்தின் அடிப்படையில் இறைவன் திருமறையைக் காப்பாற்றி வருகின்ற முறைகள் பலவாகும். திருமறை முழுவதையும் மனத்திலே பதித்துள்ள ஹாபிளுகள் இஸ்லாமிய உலகில் என்றும் ஆயிரக்கணக்கிலே இருந்து வருகின்றார்கள். அவனி யிலுள்ள அனைத்து நூல்களும் அழிந்துவிட்ட போதிலும் உயர் மறையை உள்ளத்திற் பதித்துள்ள நானூறு ஹாபிளுகள் ஓரிடத்திலே சேர்ந்துவிட்டால் ஆளுக்கு ஈரெட்டு வசனங்களாகப் பகுத்து ஒரு மணி நேரத்திற் குள்ளாகத் திருமறை முழுவதையும் திருப்பி எழுதிவிட முடியும்.
திருமறையின் ஓர் எழுத்தைக் கூட எவரும் மாற்றிவிடாத நிலையில் அதன் கட்டுக்கோப்பு அமைந்திருப்பது மிகப் பெரும் அற்புதமாக இருந்து வருவதை இன்றைய ஆராய்ச்சி யாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். திருமறைக்கும் திருமறையிலுள்ள ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் சிறப்புத் தொடராகவும் காப்பு மொழியாகவும் அனைத்தும் வல்ல நாயனின் அரசு முத்திரையாகவும் அமைந்துள்ள பஸ்மலா என்னும் ஆணித்திறவுகோல் (Master – key) கொண்டு திருமறைப் பகுதிகளைத் திறந்து பார்ப்பவர்கள் மாமறைக் கருவூலத்தில் மண்டிக்கிடக்கும் மாமணிக் குவியல்களைக் கண்டு பெருவியப்படைவார்கள். “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்” என்னும் அரபித் தொடர் நான்கு சொற்களையும் 19 எழுத்துக்களையும் பெற்றதாக அமைந்துள்ளது. எண்களின் வரிசையில் மிகச்சிறிய எண்ணாகிய ஒன்றும் மிகப்பெரிய எண்ணாகிய ஒன்பதும் இணைவதே பத்தொன்பது. மேலும் அவ்வெண் வேறெந்த எண்ணாலும் வகுத்தற் கியலாத ஒற்றைப் பட்ட எண்ணாகத் தத்துவங்கள் பலவற்றைப் பொதிந்துள்ளது. காலத்தின் அளவுகோலாக அமைந்த ஒரு வாரத்தின் ஏழு நாட்களையும் ஒரு ஆண்டின் பன்னிரு மாதங்களையும் கூட்டினால் பெறுவது பத்தொன்பது. மனிதர்கள் பெற்றுள்ள தத்துவங்கள் 19 என்றும், மனிதன் உறுதிகொள்ள வேண்டிய நம்பிக்கைகள் 19 என்றும், அர்சு, குர்சு, எழுவான், மண், தண்ணீர், காற்று, நெருப்பு, ஜீவாதாரத் தாது இனங்கள், மானிட இதயம், ஈரல், மூளை ஆகிய வற்றிற்குரிய காவலர்களாகிய அமரர்கள் 19 என்றும் அறிஞர்கள் பகர்ந்துள்ளனர். காலத்தை வென்று ஞாலத்தை வாழவைக்கும் சீலத்திருமறையுடன்19 பிணைக்கப்பட்டுள்ளது. பஸ்மலாத் தொடரில் அடங்கியுள்ள இஸ்ம். அல்லாஹ், ரஹ்மான், ரஹீம், - ஆகிய நான்கு தொடர்களும் திருமறைக் குள் பத்தொன்பதன் பெருக்கமாகவே இடம்பெற்றுள்ளன.
இஸ்ம் 19 x 1 = 19 தடவையும், அல்லாஹ் 19 x 142 = 2698 தடவைகளும், ரஹ்மான் 19 x 3 = 57 தடவைகளும், ரஹீம் 19 x 6 = 114 தடவைகளும் திருமறைக்குள் இடம் பெற்றுள்ளன. அரபி நெடுங்கணக்கில் 28 எழுத்துக்கள். 114 சூறாக்கள் ஆகிய வற்றின் கூட்டுத்தொகையாகிய 142 ன் பெருக்கமாகவே அல்லாஹ் 2698 தடவைகள் இடம்பெற்றுள்ளதும் ரஹ்மான் என்பதன் இரட்டிப்பாக ரஹீம் அமைந்திருப்பதும் குறிப்பிடத் தகுந்ததாகும்.
பாருலகின் மிகப் பழமையான மொழிகளுள் ஒன்றான விந்தைக்குரிய அரபி மொழி எழுத்துக்களின் ஒலி, வரி வடிவங்கள், தத்துவங்கள் பலவற்றைத் தாங்கியுள்ளன. நேர் கோடு ஒன்றை அகரமாகத் தலைப்பிலே நிறுத்திப் பின்னர் அதனையே படுத்தும் வளைத்தும் நெளித்தும் புள்ளிகள் இல்லாமலும் அமைந்துள்ள எழுத்துக்களின் வரிவடிவம் ஒரு வகைச் சுருக்கெழுத்தாகவே விளங்குகின்றது. அவ்வெழுத்துக் களுக்கு அமைக்கப்பட்டுள்ள “அப்ஜதீ” என்னும் எண் கணிதமும் ஒருபெரும் அற்புதமாகும். எழுத்துக்களைச் சூரிய எழுத்துக்கள், சந்திர எழுத்துக்கள், இருள் எழுத்துக்கள், ஒளி எழுத்துக்கள் என்பதாக வகைப்படுத்துவதும் உண்டு. “ஸப் அன் மினல் மதானி” எனப்படும் திருப்பித் திருப்பி ஓதப்படும் ஏழு வசனங்களைக் கொண்ட பாத்திஹா சூறாவில் இருள் எழுத்துக்கள் இடம் பெறாமலிருப்பதை எடுத்துக்காட்டுவதும் உண்டு. 28 அரபி எழுத்துக்களின் நேர்பாதியாகிய 14 எழுத்துக்கள் “ஹுருப்ஃபுல் முகத்த ஆத்” (சங்கேத எழுத்துக்கள்) என்பதாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை பதினான்கினையும் எழுத்துக்களின் சுரங்கமென்றும் பேச்சு மொழியின் தொடக்கமென்றும் ஹலரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக அல்லாமா சுயூத்தி அவர்கள் இத்கானில் எடுத்துரைத்துள்ளார்கள். அலீஃப், லாம், மீம், யா, ஸீன் இச்சங்கத்தே எழுத்துக்கள் பதினான்கும் பதினான்கு வகையான இணைப்புகளைப் பெற்று திருமறை யின் 29 சூறாக்களின் தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்துவரும் அத்தியாயத்திற்குள் இருக்கும் எழுத்துக்கள் வெளியேறி விடாமலும், வெளியிலிருந்து பிற நுழைந்து விடாமலும் அவை திறம்படக் காவல் புரிகின்றன.
குர்ஆன் என்னும் சொல்லின் முதலெழுத்து காஃப், ஈற்றெழுத்து நூன், சூறா 68-நூன் என்னும் எழுத்துடன் தொடங்குகிறது. அந்த அத்தியாயத்திலுள்ள நூன்களின் எண்ணிக்கை 133, அதாவது 19 x 7=133 சூறா 50-காஃப் என்னும் எழுத்துடன் தொடங்குகிறது. அந்த அத்தியாயத்திலுள்ள காஃப் களின் எண்ணிக்கை 57. அதாவது 19 x 3= 57 ஹா மீம் ஐன் ஸீன் காஃப் எனத் தொடங்கும் 42-வது சூறாவில் 57 காஃப்கள் உள்ளன. ஆகவே மேற்குறிப்பிட்ட இரு சூறாவில் 57காஃப்கள் உள்ளன. ஆகவே மேற்குறிப்பிட்ட இரு சூறாக்களிலுமுள்ள 114 காஃப்களும் குர்ஆனிலுள்ள சூறாக்களைக் குறிக்கும் இஷாராவாக உள்ளன. சங்கேத எழுத்துக்களுடன் தொடங்கும் எல்லா சூறாக்களிலும் தலைப்பிலுள்ள சங்கேத எழுத்துக்கள் பத்தொன்பதன் பெருக்கமாகவே அந்த சூறாக்களின் உள்ளே இடம் பெறுகின்றன. இத்தகைய அற்புதமான கட்டுக்கோப்பு டன் எழுத்துக்கள் அமைக்கப்பட்டிருப்பதால் திருமறைக்குள் ஓர் எழுத்தைப் புகுத்தினாலும், அகற்றினாலும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இவை மட்டுமின்றித் திருமறை யினுள் பல சொற்களும் அவற்றின் எதிர்ச்சொற்களும் ஒரே அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன எடுத்துக்காட்டாக, இம்மை யைக் குறிக்கும் துன்யா-115 தடவைகள்; மறுமையைக் குறிக்கும் ஆகிரத்-115 தடவைகள்; வாழ்க்கையைக் குறிக்கும் ஹயாத்-145; இறப்பைக் குறிக்கும் மெளத்து-145; நன்மையைக் குறிக்கும் ஸாலிஹாத்-167; தீமையைக் குறிக்கும் ஸையிஆத் -167; கடுமையைக் குறிக்கும் ஷித்தத்-102; பொறுமையைக் குறிக்கும் ஸப்ரு-102; துன்பத்தைக் குறிக்கும் முஸீபத்து-75; நன்றியைக் குறிக்கும் ஷுக்ரு-75.
எதிர்ச்சொற்களின் எண்ணிக்கையில் சமநிலை இருப்பது போன்றே தொடர்புடைய பல சொற்களிலும் ஒரு சமநிலை யைக் காண்கிறோம். நபாத் (முளை) ஷஜர் (மரம்) இரண்டும் 26 தடவைகள்; ரஹ்மத் (கருணை) ஹுதா (நேர்வழி) இரண்டும் 79 தடவைகள் பிர்ரு (நற்செயல்), தவாப் (நன்மை) இரண்டும் 20 தடவைகள்.
இவை போன்று நூற்றுக்கணக்கான சொற்களில் சமநிலை யைக் காண்கின்றோம். மேலும் ஓர் ஆண்டில் அமைந்துள்ள 12 மாதங்களும் இஷாராவாக ஷஹ்ர் (மாதம்) என்னும் சொல் 12 தடவைகளும் ஓர் ஆண்டிலுள்ள 365 நாட்களுக்கு இஷாராவாக யவ்ம (நாள்) என்னும் சொல் 365 தடவைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்பின்னணியில் கவிதையுலகில் முன்னணியில் நிற்கும் புனித இலக்கியமாகிய கஸீதத்துல் புர்தாவில் ”ஃபலாது அத்து” எனத் தொடங்கும் பாவடிகளைப் பாடுகின்றபோது மெய் சிலிர்த்து விடுகின்றது.
“கத்தன்மறை அற்புதங்கள் கணிப்புக்கள வுக்கடங்கா;
நித்தமதை ஓதிவரும் நேயர் அடையார் அலுப்பே”
சாதாரண ஆசிரியர் ஒருவரின் நூலை இரண்டாவது முறை யாகப் படிக்கும்போது சலிப்படைகின்ற நாம் திருமறையின் ஒரு சூறாவை – பாத்திஹா சூறாவை –ஓராயிரம் தடவைகள் ஓதினாலும் உள்ளம் சலிப்படையாமலிருப்பதன் இரகசியம் இறைமறையின் அற்புதமேயாகும். இவ்வற்புதத்திற்கு இணை யான தொன்றை எங்கும் எவரும் எப்போதும் காணமுடியுமா தென்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வல் ஹம்துலில்லாஹ்!
( அல் குர்ஆன் ஓர் அற்புதம் எனும் நூலிலிருந்து ……….. )
பதிப்பாசிரியர் :
பேராசிரியர் மு. கலீல் அகமது எம்.ஏ
தமிழ்த்துறை
புதுக்கல்லூரி
சென்னை 600 014
வெளியீடு :
நன்னெறிப் பதிப்பகம்
17-18 B, பாறையடித் தெரு
அஞ்சுவண்ணம்
திருவிதாங்கோடு 629 174
கன்னியாகுமரி மாவட்டம்
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label அல்குர்ஆன். Show all posts

Wednesday, August 5, 2009
Wednesday, March 25, 2009
அல்குர்ஆனின் சிறப்புகள்
அல்குர்ஆனின் சிறப்புகள
அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன், தான் விரும்புவது போல் வாழ்ந்துக் கொள்ள விட்டுவிடாமல் வாழ்க்கை நெறியை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் வகுத்துக் கொடுத்தான். இந்த அடிப்படையில் மனித சமுதாயத்திற்கு இறுதி வேதமாக அல்குர்ஆனையும் இறுதித் தூதராக முஹம்மது(ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான். எனவே நமது வாழ்க்கையை மன இச்சைப்படி அமைத்துக் கொள்ளாமல் அல்குர்ஆனும் நபிமொழியும் காட்டித்தரும் நெறியிலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். இதுவே முஸ்லிமின் உயரிய பண்பும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் எதிர்பார்ப்புமாகும். மார்க்கத்தின் இவ்விரு அங்கங்களில் முதலிடம் பெறுவது அல்குர்ஆன் ஆகும்.
அல்குர்ஆனுடன் இரண்டு விதமான தொடர்புகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
1. திருக்குர்ஆனை பொருளறிந்து படிப்பது. அதன் கட்டளைகளைப் புரிந்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.
2. அல்குர்ஆனை அதிகமாக ஓதி அளவற்ற நன்மையைப் பெற்றுக் கொள்வது.
அல்குர்ஆனை பொருளறிந்து படிப்பது
திருமறையை சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து சூரத்துன்னாஸ் வரை முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும். அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அது தடுக்கும் செயல்களை விட்டும் விலகிக் கொள்வது. அதில் கூறப்பட்ட சம்பவங்களின் மூலம் படிப்பினை பெறுவது, இவ்வாறு அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களின் குணநலன்கள் அல்-குர்ஆனாகவே இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதின் பொருளும் இதுதான்.
எனவே நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் அல்-குர்ஆனுக்கு கட்டுப்படும் வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளவேண்டும். அதுவே அல்-குர்ஆன் இறக்கி அருளப்பட்டதின் மகத்தான நோக்கமாகும்.
இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் அல்-குர்ஆனுக்கு இணங்க தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் அதன் கட்டளைகளுக்கு உடனே கட்டுப்படுபவர்களாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன. எனவே நாமும் அல்குர்ஆனைப் படித்து, அதன் அடிப்படையில் செயல்பட்டு ஈருலக வெற்றியைப் பெறுவோமாக!
திருக்குர்ஆன் பொதுமக்களுக்குப் புரியாது என்று கூறுவது தவறான கூற்றாகும். திருக்குர்ஆனின் அர்த்தம் மற்றும் விளக்கங்களை நேரடியாக அறிவதற்கு அரபி மொழியில் புலமை அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மொழி பெயர்க்கப்பட்டவற்றைப் படித்து அதில் உள்ள செய்திகளை ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள முடியும். ஒரு நூல் மொழிபெயர்க்கப்படுகிறது என்றால் அந்த மொழியை அறியாதவர்கள் அதனை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். எனவே குர்ஆனை அதன் மொழிபெயர்ப்பை புரிந்து கொள்ள முடியாதென்பது தவறானதும் அல்லாஹ்வின் வேதவசனங்களுக்கு மாற்றமான கூற்றுமாகும். அல்லாஹ் இதனை 54: 32, 47: 24 வசனங்களின் மூலம் உணர்த்துகிறான்.
நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
(அல்-குர்ஆன் 54:32)
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்-குர்ஆன் 47:24)
அல்குர்ஆனை ஓதுதல்
பொருளறியாமல் படித்தாலும் ஆன்மீக ரீதியாக நன்மையை பெற்றுத்தரும் ஒரே நூல் அல்குர்ஆன் மட்டும்தான். திருக்குர்ஆனை ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. அல்குர்ஆனை முறையாக, புரிந்து ஓதுபவர் மறுமையில் மலக்குமார்களுடன் இருப்பார். திருமறையைப் படித்தவர்களுக்காக அது மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும். இதுபோன்ற இன்னும் பல நன்மைகளும் சிறப்புக்களும் உள்ளன. எனவே பொருட்செலவோ, கடின உடலுழைப்போ இன்றி குறைந்த நேரத்தில் நிறைந்த நன்மையைப் பெற்றுத் தரும் திருமறையை அதிகமாக ஓதிடவேண்டும்.
குறிப்பாக ரமலான் மாதத்தில் அதிமாக ஓதவேண்டும். ரமலான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிம் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஒன்றாகும்.
நபி(ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரமலானில் ஒரு தடவை குர்ஆனை ஓதிக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் மரணிக்கும் வருடம் இரண்டு தடவை ஓதிக் காண்பிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : புகாரி)
அல்குர்ஆனின் எழுத்துக்களை முறையாக உச்சரித்து, நிறுத்தி, நிதானமாக, ஓதவேண்டும்.
(நபியே! இரவுத் தொழுகையான) அதில் குர்ஆனை (நன்கு திருத்தமாக) நிறுத்தி, நிறுத்தி ஓதுவீராக! என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். குர்ஆனை அழகாக, ராகமாக, ஓதாதவன் நம்மைச் சார்ந்தவனல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குர்ஆனை ஓதுவதை விட்டும் பொடுபோக்காக இருக்கும் சகோதர, சகோதரிகள், நாளை மறுமை நாளில் ஓரு நன்மைக்காக அங்கும் இங்கும் ஓடித் திரிந்து அல்லோலப்பட்டும் அது கிடைக்காமல் நரகில் விழ நேரிடும் அந்நாளை நாம் மறந்து விடக்கூடாது. இதோ குர்ஆனின் சிறப்புக்கள் குறித்து குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறிய ஒருசில சிறப்புக்கள்:-
குர்ஆன் குறித்து குர்ஆன் கூறுவது
1. குர்ஆனை புரிந்து கொள்வது எளிது - நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
(அல்-குர்ஆன் 54:32)
2. சிந்திக்கத் தூண்டும் குர்ஆன்
- மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
3. குர்ஆன் விசுவாசிகளுக்கு அருமருந்து - இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம் ஆனால் அக்கிரமக் காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அல்-குர்ஆன் 17:82)
4. குர்ஆன் மனிதர்களின் இதய நோய்நிவாரணி - மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது. (அல்-குர்ஆன் 10:57)
5. குர்ஆனை ஓதும் முன்பு ஷைத்தானிய தீண்டுதலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருதல் - மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. (அல்-குர்ஆன் 16:98)
6. குர்ஆன் எழுத்து வடிவில் நபிக்கு அருளப்படவில்லை - காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும், இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள். (அல்-குர்ஆன் 6:7)
7.குர்ஆன் நபியின் சொந்த கூற்றல்ல - அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்படடதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால், அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். (அல்-குர்ஆன் 69: 43-46)
குர்ஆன் குறித்து நபிமொழிகள் கூறுவது
1. நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான்.
(அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரலி) – ஆதாரம் : முஸ்லிம்)
2. குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
3. குர்ஆனின் விஷயத்தில் தர்க்கம் புரிவது இறை மறுப்புச் செயலாகும்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : அபூதாவூத்
4. குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்.
அறிவிப்பாளர்: உஸ்மான்(ரலி) – ஆதாரம் : புகாரி
5. இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : தப்ரானி )
6. பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். (ஆதாரம் : முஸ்லிம்)
7. இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே. (அறிவிப்பாளர்: உமர்(ரலி) - ஆதாரம் : முஸ்லிம்)
8. குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) – ஆதாரம் : திர்மிதி
9. எவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் நன்மை இருக்கிறது. ஒரு நன்மை அதுபோன்று பத்து மடங்காக்கப்படும். "அலீஃப், லாம், மீம்" ஒரு எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக அலீஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்துமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத்(ரலி) - ஆதாரம் : திர்மிதி, தாரமி.)
10. குர்ஆனை ஓதக்கூடியவருக்கு உவமைகளையும், ஓதாமல் இருப்பவருக்கு உவமைகளையும் பெருமானார்(ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள். குர்ஆனை ஓதக்கூடிய முஃமினின் உவமை பழத்தைப் போன்றது. அதனுடைய வாசனையோ மணமானது. அதனுடைய சுவையோ ருசிக்கத்தக்கது. குர்ஆனை ஓதாத மூஃமீனின் உவமை பேரித்தம் பழத்தை போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ இனிப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் உவமை குமட்டிக்காய் போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதக்கூடிய நயவஞ்சகனின் உதாரணம் துளசி செடியை போன்றது. அதனுடைய வாசனை மணமானது. அதனுடைய சுவையோ கசப்பானது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபு மூஸா(ரலி) - ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
11. யார் குர்ஆனை ராகமாக (தஜ்வீத்துடன்) ஓதவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (அறிவிப்பாளர்: பசீர் பின் அப்துல் முன்திர்(ரலி) - ஆதாரம் : அபூதாவூத்)
12. குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் அதை ஓதுங்கள். குர்ஆனைக் கற்று அதனை ஒதி அதன் அடிப்படையில் நடப்போருக்கு உவமையானது கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையைப் போன்றது. அது அனைத்து இடங்களிலும் மணம் வீசிக்கொண்டிருக்கும். குர்ஆனைக் கற்று அது அவருடைய உள்ளத்தில் பசுமையாய் பதிந்தும் அதனடிப்படையில் நடக்கவில்லையோ அவரின் உவமை கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையை அது பரவாமல் கட்டிக்கொண்டவரைப் போல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)
13. நாங்கள் திண்ணையில் அமர்ந்து இருக்கிற சமயத்தில் பெருமானார்(ஸல்) எங்களிடம் வந்து உங்களிடம் பாவம் செய்யாது சொந்த பந்தங்களை துண்டிக்காத நிலையில் ஒவ்வொரு நாளும் புத்ஹான் அல்லது ஹதீக் என்ற இடத்திற்கு சென்று திமில்களுடைய இரண்டு ஓட்டகங்களை கொண்டு வர யார் விரும்புவார்? என வினவினார்கள். நாங்கள் அனைவரும் இதை விரும்புவோம் என்று பதிலளித்தோம். உங்களில் ஒருவர் பள்ளிவாசல் பக்கம் செல்லக்கூடாதா? அவ்வாறு சென்று அல்லாஹ்வுடைய வேத்தில் இரண்டு வசனங்களை ஓதுதல் அல்லது கற்றல் இரண்டு ஒட்டகங்களை விட சிறந்தது. மூன்று வசனங்களை ஓதுவது மூன்று ஒட்டகங்களை விட சிறந்தது. நான்கு வசனங்களை ஓதுவது நான்கு ஒட்டகங்களை விட சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன்னுடைய இல்லத்திற்கு செல்லும்போது தன்னுடன் நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்களை பெற்றுச் செல்லவேண்டும் என்று விரும்புவாரா? என்று வினவினார்கள். நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம் என்று கூறினோம். மூன்று (குர்ஆனிய) வசனங்களை உங்களில் ஒருவர் தன்னுடைய தொழுகையில் ஓதுவது அவருக்கு நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : முஸ்லிம், இப்னுமாஜா)
14. குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணிமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை ஒதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திருப்பித்திருப்பி சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) - ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
15. மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) - ஆதாரம் : அபூதாவுத், திர்மிதி)
16. குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் இறைவா இவருக்கு ஆடையை அணிவி என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான். அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஒதுவீராக!, அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : திர்மிதி, இப்னு குஸைமா)
குர்ஆன் உயிருடன் இருக்கும் போதே படித்து நேர்வழி பெறுவதற்குத்தானேயொழிய இறந்த பின் மரணித்தவர்களுக்கு குர்ஆனை அஞ்சல் செய்வதற்கு இல்லை.
(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனையுண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது
(அல்குர்ஆன் 36: 70)
குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது உண்மை. உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். குர்ஆனைப் படியுங்கள். அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.
குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல் குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். விளங்காதவற்றை அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள். அதன் படி செயல்படுங்கள்.
குர்ஆனைப் படித்து அதன்படி நடந்து ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

Thursday, March 6, 2008
அறிவியல்
மேற்கத்திய அறிவியல் வளர்ச்சியடைந்து அதன் பரிணாமமான நவீன கண்டுபிடிப்புக்கள் உலகை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கின்றன. அதேநேரம் உலகின் மகிழ்ச்சிக்கு குழிதோண்டிக் கொண்டிருப்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும். இத்தருனத்தில் இஸ்லாம் கூறும் அறிவியல் பக்கங்களை ஒருமுறை புறட்டிப்பார்ப்பது மிகவும் பொருத்தமாக அமையும்.
எமது அவா என்னவென்றால்:
மேற்கத்திய உலகையே உதவிக்கு அழைத்துக் கொண்டிருக்கும் நமது சமூகம் இவைகளை உணர்ந்து தன்னை வளர்ச்சியின் பக்கம் திருப்பிக் கொள்வதற்கு இந்த வரிகள் ஓர் ஊன்று கோலாய் அமையும்.
முஸ்லீம்கள் அல்லாத நம் சகோதரர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து சத்தியத்தைப் பின்பற்ற வழிகோலும்.
இவை நமது பிரதான எதிர்பார்ப்புகளாகும்.
இந்த ஆக்கத்தில் கூறப்பட்டிருக்கும் முக்கிய சில பகுதிகள் 27-04-2007 ஆம் நாளன்று சவுதி அரேபியா, அல்-ஜுபைல் தஃவா சென்டரில் நடைபெற்ற ஒருநாள் இஸ்லாமிய மாநாட்டில் உரையாற்றப்பட்டது. இத்தலைப்பு பறந்து விரிந்த ஒரு தலைப்பாதலால் பெரும்பாலான பகுதி உரையில் விடுபட்டுள்ளது. எனவே தமிழ் உலகம் பயனடைய வேண்டும் என்ற ஒரு நோக்கில் என்னால் முடிந்தளவு பல தகவல்களை ஒன்று திரட்ட முயற்சிக்கிறேன். வல்ல றஹ்மான் நம் அனைவருக்கும் தெளிவையும் சத்தியத்தைப் பின்பற்றும் வாய்ப்பையும் தந்தருள்வானாக.
இத்தலைப்பில் ஆங்கிலத்தில் விரிவாக நூற்கள் வெளிவந்த அளவுக்கு தமிழில் வெளிவரவில்லைதான். இருந்தாலும் சில எழுத்தாளர்கள் தங்களுக்கு முடிந்த வரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்த நூற்கள் ஒரு சில விடயங்களை மட்டுமே அலசுகின்றன. நிறைய தகவல்கள் விடுபட்டுள்ளன. நமது இந்த ஆக்கம் கூட அனைத்தையும் உட்கொள்ளாவிட்டாலும் ஓரளவு பல விடயங்களை வியாபித்துள்ளதை நீங்களே போகப் போக புறிந்து கொள்வீர்கள்.
இந்த ஆக்கம் எழுதப்படுவதற்கு இதர இருபெரும் காரணங்கள் உள்ளன:
1-இஸ்லாத்தின் மூலாதார நூற்கள் கூறும் அறிவியல் உண்மைகளை, நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புக்களோடு உரசிப்பார்த்து நமது ஈமானை புதுப்பித்துக் கொள்ளுதல்.
2-மேற்கத்திய உலகின் நன்றி மறந்த தன்மையையும், அவர்களது சுய ரூபத்தையும் மக்களுக்கு உணர்த்துதல்.
மேலே குறிப்பிட்ட காரணங்களில் இரண்டாவது காரணத்தில் மிகப் பெரும் உண்மை உலகின் கண்களை விட்டும் மறைக்கப்பட்டுள்ளன. அதாவது மேற்கத்திய உலகின் கண்டுபிடிப்புகளுக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் முஸ்லீம்கள் தான் காரணமாக அமைந்திருக்கிறார்கள். முஸ்லீம்களது அன்றைய அறிவியல் கண்டுபிடிப்புக்கள்தான் அவர்களுக்கு வளர்ச்சிப் படிக்கட்டுக்களாக அமைந்துள்ளன. உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்தல் தகுமோ? என்பதே நமது கேள்வியாகும்.
இக்கூற்றினைப் பார்க்கும் அநேகருக்கு இது புதுமையாகக் கூட இருக்கலாம். அல்லது முஸ்லீம்கள் அறிவியல் முன்னோடிகளாக இருந்துள்ளனரா? என்ற கேள்வி கூட எழுப்பலாம். இதனை நாம் ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை. மாறாக அவர்களது கூற்றுக்களை வரலாறுகள் பட்டியலிடுகின்றன.
ஐரோப்பிய விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடிகள்:-
'Marguis' எனும் அறிஞர் தனது 'speeches delivered in ' எனும் நூலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
'It is to musalman science, to musalman art and to musalman literature that Europe has been in a great means indebted for its extrication from darkness of the middle ages.'
'ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.'
ஏனென்றால், 8-12ம் நூற்றாண்டு காலப்பகுதியானது 'ஐரோப்பா அறியாமை எனும் இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்' என இன்றும் வரலாறு கூறுகின்றது. இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் அசாத்தியமானவைகளாகும். இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு முஸ்லீம்கள் வளர்ச்சியடைந்திருந்தார்கள் என்பதற்கு இஸ்லாம் மார்க்கமும், அவர்களது வேதமும்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Maurice Bucaille :
'அந்த நூற்றாண்டில் வாழ்;ந்த மனிதன் கற்பனை செய்தும் பார்த்திராத - இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புக்களின் யதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படி துல்லியமாகத் தெரிவிக்க முடிந்தது?' - The Bible, The Quran and Science 1978,p.125
Sir. William Muir கூறுகிறார்:
'குர்ஆன் இஸ்லாத்தின் மாபெரும் சாதனையாகும். அதன் ஆதிக்கம் சமயம், ஒழுக்கம், விஞ்ஞானம் போன்ற அனைத்துத் துறைகளிலும் படர்ந்து நிற்கிறது. குர்ஆன் அனைத்திற்கும் மேலானது என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.' - The life of Mohammed, London 1903, ch. The Coran p.vii.
இந்த நடுநிலைவாதிகளின் கூற்றுக்கள் உண்மையில் பொன் வரிகளில் பொறிக்கப்பட வேண்டியவைகளாகும். வரலாறுகளை மாற்ற முடியாதல்லவா! அதுதான் இன்னும் இந்த உண்மைகள் புறையோடிக் கிடக்கின்றன. சத்தியவாதி அவைகளைத் தூசிதட்டி வெளிக் கொணருகிறான். சாதனைகள் பல கண்ட இஸ்லாமிய அறிஞர்கள் பலரது வரலாறுகளை உலகின் கண்களை விட்டும் மறைத்த பெருமையும் மேற்கத்திய உலகையே சாரும்.
வியக்கத்தகு சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகள் சிலர்:
இல பெயர்காலகட்டம்(கி.பி) துறை
1அல்குவாரிஸ்மி (அல்காரிஸ்ம்) 780-850 கணிதம், வானவியல்
2அல்ராஜி (ரேஜஸ்) 844-946 மருத்துவம்
3அல்ஹைதம் (அல்ஹேஜன்) 965-1039 கணிதம், ஒளியியல்
4அல்பிரூணி 973-1048 கணிதம், தத்துவம், வரலாறு
5இப்னுசீனா (அவிசென்னா)980-1037மருத்துவம்
6அல்இத்ரீஸி (டிரேஸஸ்)1100 புவியியல்
7இப்னுருஸ்து (அவிர்ரோஸ்)1126-1198 மருத்துவம், தத்துவம்
8ஜாபிர் இப்னு ஹையான் (ஜிபர்)803 பெளதீகம்
9அல்தபரி838 மருத்துவம்
10அல்பத்தானி (அல்பதக்னியஸ்) 858 தாவரவியல்
11அல்மசூதி 957 புவியியல்
12அல்ஸஹ்ராவி (அல்புகேஸிஸ்) 936 அறுவைசிகிச்சை
13இப்னுஹல்தூன் 1332 வரலாறு
14இப்னு ஹுஜ்ர் (அவன்ஜோர்) அறுவை சிகிச்சை
15இப்னு இஷாக் அல்கிந்தி 800-873தத்துவம், பெளதீகம், ஒளியியல்
16முஹம்மது ஷாகிர் ஹஸன்
(Angel of red sea)
17முஹம்மது சகரிய்யா யாஸீன் மருத்துவம்
18அலி இப்னு அப்பான் மருத்துவம்
(அலி இப்னு அப்பான் எனும் மருத்துவ மேதை அக்காலத்திலேயே 20 பாகங்களைக் கொண்ட ஒரு மருத்துவ நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).
The Random House Dictionary of the English Language Comple by:- Lawrance Urdang – p ல் காணப்படும் Algebra (Ap'lwo), Al-Chemy (Chemistry). Alcohol, Alkali, Algorithm போன்ற விஞ்ஞானப் பெயர்கள் அரபியிலிருந்து எடுக்கப்பட்டவைகள் என்பதும் கவணத்திற் கொள்ளப்பட வேண்டியவைகளே.
அல்-குஆனும் அறிவியல் விஞ்ஞானமும்:
1642 ல் பிறந்த ஐசக் நியூட்டன் என்ற விஞ்ஞானியே பிற்காலத்தில் உலகில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய அறிவியல் கோட்பாடுகளுக்கு அடித்தளமிட்டவர் என மேற்கத்திய வரலாறு கூறுகின்றது. ஆனால் அல்குர்ஆனோ 1400 வருடங்களாக விஞ்ஞானிகளுக்கே பாடம் புகட்டிக் கொண்டிருப்பதை மேற்கத்திய உலகம் கண்டு கொள்ளவே இல்லை. அல்லது மூடி மறைத்திருக்கின்றது என்று கூட சொல்லலாம்.
அல்குர்ஆன் அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம் எனும் உண்மையை Dr.Zakir Naik அவர்கள், தனக்கே உரிய பானியில் மிகவும் அற்புதமாக இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:
'The Holy Quran is Miracle of Miracles, Quran is Miracle of all times''.
நபிகளார் (ஸல்) அவர்கள் உலகம் அஸ்தமிக்கும் வரைக்கும் அனைவருக்குமான தூதராதலால், அல்குர்ஆன் நிச்சயமாக நிலையான அற்புதமே! (وما أرسلناك إلا كافة للناس)-34:28 'உம்மை உலகத்தார் அனைவருக்கும் (தூதராக) அனுப்பியிருக்கிறோம்' எனும் வசனம் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
Albert Anstain said: 'Science without religion is lame, and religion without science is blind'.
இந்த அல்குர்ஆனின் அதிசயத் தன்மைகள் ஏராளம்! அல்குர்ஆன் கூறும் அறிவியலாகும். ஆதேபோன்று அதனது சபதத்தை மனிதர்களால் முறியடிக்க முடியாமையாகும்.
Dr.Zakir Naik இதனை மிகவும் அழகாகக் கூறுவார்கள்: 'Al-Quran is a book of SIGNS not a book of SCIENCE'. அதாவது, அல்-குர்ஆன் அத்தாட்சிகள் கொண்ட ஒரு வேதமே தவிர விஞ்ஞானப் புத்தகம் கிடையாது என்பதாகும்.
قال تعالى:ஜوإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقينழூ فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرينஸ- البقرة:23-24
'நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.
உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! நிராகரிப்பாளர்களும், கற்களுமே அதன் எரிபொருட்களாகும். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.' – 2:23-24.
இந்த சபதம் 1400 ஆண்டுகளைக் கடந்த பினபும் இதுவரை எவராலும் முறியடிக்க முடியவில்லை. அரபு மொழியை தாய் மொழியாகக் கொண்ட (Coptic Christian) கிறிஸ்தவர்கள் எகிப்தில் மட்டும் 6 மில்லியன் இருக்கின்றனர். அதேபோன்று லெபனான், சிறியா போன்ற இன்னும் பல அரபு நாடுகளிலும் அரபு மொழி பேசக் கூடிய கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். அப்படியிருந்தும் அவர்களால் அல்குர்ஆனின் சவாலை முறியடிக்க முடியவில்லை என்பது அல்குர்ஆனின் இறைத் தன்மையையும், அதன் உண்மைத் தன்மையையும் உணர்த்துகின்றது!
காலத்தை வென்ற கச்சித வேதம் அல்குர்ஆன் ஓர் நிலையான அற்புதமாகும்.
அல்குர்ஆனின் வரலாறுகள் புராணங்கள் போன்று கிடையாது.
நிதர்சன உண்மைகள் அல்குர்ஆனில் தனிரகம்!
அல்குர்ஆன் சரித்திரம் பேசும் ஆனால் சரித்திர நூலன்று! வரலாறு கூறும் ஆனால் வரலாற்று நூலுமன்று!
விஞ்ஞானம் அல்குர்ஆனின் விந்தைகளிற் சில, ஆனால் விஞ்ஞான நூலல்ல!
அல்குர்ஆனின் போதனைகள் நிச்சயமாக உலகத்திற்குத் தேவை!!
காலத்தின் நகர்வோடு சிறிதளவும் சலைக்காது நடைபோடும் ஒரே தன்நிகரற்ற வேதம் என்றால் அது அல்குர்ஆனைத் தவிர வேறெதுவும் கிடையவே கிடையாதென அடித்துக் கூறலாம்.
உலகில் இன்று வேதவாக்குகள் மறுக்கப் படலாம் ஆனால், விஞ்ஞானிகளின் வாக்குகள்தான் மேதாவிகள் பலருக்கு வேதப் பாடம். விஞ்ஞானிகளுக்கே விஞ்ஞானம் புகட்டும் வேதப் புத்தகத்தை உலகில் கண்டிருக்கிறீர்களா? அது அல்குர்ஆன் மட்டும்தான்! ஏனைய மதநூற்களில் கூட ஓரிரு விஞ்ஞானக் கருத்துக்கள் காணக்கிடக்கின்றன. அவைகள் தற்செயலாக விஞ்ஞானத்தோடு பொருந்திப் போனவைகள் என்றே கருத வேண்டும். ஏனென்றால் அதிகமான இடங்களில் மதக் கருத்துக்கள் விஞ்ஞானத்தோடு மோதுகின்றமை அன்று முதல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. உதாரணத்திற்கு கலீலியோ கலீலியின் விஞ்ஞானக் கருத்துக்கு திருச்சபைகள் எவ்வாறு தடையாக இருந்தன என்பதை வரலாறுகள் நிருபித்துக் காட்டுகின்றன.
அதே நேரம் உலக வேதபுத்தகங்களிலேயே அல்குர்ஆன் தனித்து நிற்பதை கீழ் வரும் 'அல்குர்ஆனும் விஞ்ஞானமும்' எனும் தொடர் உண்மைப்படுத்துவதை உணர்வீர்கள்!!
--
அன்புடன்
மீரான்
smeeran.tnj@gmail.com
www.vaalkaikalvi.blogspot.com
www.thanjai-meera.blogspot.com
எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.

Subscribe to:
Posts (Atom)