Showing posts with label திருச்சி. Show all posts
Showing posts with label திருச்சி. Show all posts

Tuesday, January 26, 2010

திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அர‌பிக் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் வ‌ஃபாத்து

திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அர‌பிக் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் வ‌ஃபாத்து
திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அர‌பிக் க‌ல்லூர் முத‌ல்வ‌ர் மௌலானா காரி உபைதுல்லாஹ் சாஹிப் அவ‌ர்க‌ள் இன்று காலை ( 27.01.2010 ) வ‌ஃபாத்தானார்க‌ள்.
இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னார‌து மஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்ய‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.
ஈமான் ச‌ங்க‌ம்
துபாய்
www.imandubai.org



---------- Forwarded message ----------
From: AIMAN SANGAM - Abu Dhabi
Date: Wed, Jan 27, 2010 at 9:05 AM
Subject: [AIMAN Times] Moulana Qari Ubaidullah Sahib passes away
To: aimantimes@yahoogroups.com




Assalamu alaikum.

Aiman Sangam regrets to announce the sudden demise of Moulana Qari Ubaidullah Sahib, Principal of Jamia Anwarul Uloom Arabic College, Trichy at his residence early morning today. Innalillahi wa inna ilaihi rajioun. He was an invitee of Aiman Sangam in 1992, when he visited Abu Dhabi.

May Almighty Allah give him the place of honour in Aakirah and may Almighty Allah give all his family members and our society the strength and courage to bear this loss.

Wassalam.
AIMAN SANGAM, Abu Dhabi

Wednesday, January 6, 2010

சென்னை, திருச்சி, திருநெல்வேலியில் வீட்டு ம‌னைக‌ள் வாங்க‌ ..............

சென்னை, திருச்சி, திருநெல்வேலியில் வீட்டு ம‌னைக‌ள் வாங்க‌ ..............


சென்னை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட‌ த‌மிழ‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளிலும் அழ‌கிய‌ வீட்டு ம‌னைக‌ள் விற்ப‌னைக்கு உள்ள‌ன‌.
வீட்டு ம‌னைக‌ள் வாங்க‌ விரும்புவோர்

அமீர‌க‌த்தில் தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொட‌ர்பு எண்க‌ள்

அன்வ‌ர் 050 922 1202 / 050 894 6518 / ச‌ர்புதீன் 050 788 6919

Al Hira Real Estate & Builders
24 Baba Tower
Thennur High Road
Trichy 620 017
94435 58224
99445 50250
luckyhomeindia@gmail.com


site visit plz contact
Mr. Fasal (managing director)
9840332113
9976922786

Thursday, May 7, 2009

திருச்சி எம்.ஐ.இ.டி. க‌ல்லூரி

திருச்சி எம்.ஐ.இ.டி. க‌ல்லூரி

திருச்சி எம்.ஐ.இ.டி. க‌ல்லூரி விடுதியில் ஆர்.எஸ்.எஸ். சிந்த‌னை கொண்ட‌ மாணாவ‌ர்க‌ள‌து ஆட்ட‌ம் அதிக‌ரித்து வ‌ருவ‌தாக‌ அங்கு ப‌யின்று வ‌ரும் ஒரு மாண‌வ‌ரின் த‌ந்தை த‌க‌வ‌ல் தெரிவித்துள்ளார்.

மேலும் விடுதியைக் க‌ண்காணிக்க‌ ச‌முதாய‌ ந‌ப‌ர‌ல்லாது வேறு ந‌ப‌ர் இருப்ப‌தால் அவ‌ர்க‌ளைக் கட்டுக்கு கொண்டு வ‌ர‌ முடிய‌வில்லையாம்.

விடுதி உண‌வு ச‌ரியில்லை.

தொழுகைக்கு முறையான‌ வ‌ச‌தியில்லை.

க‌ட‌ந்த‌ ந‌வ‌ம்ப‌ர் மாதம் ந‌டைபெற்ற‌ செம‌ஸ்ட‌ர் தேர்வில் அர‌பி மொழித்தேர்வுக்கான‌ விடைத்தாள்க‌ள் க‌ல்லூரி ஊழிய‌ர்க‌ளின் க‌வ‌ன‌க்குறைவு கார‌ண‌மாக‌ தொலைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இத‌னால் மாண‌வ‌ர்க‌ளுக்கு தேர்வு முடிவுக‌ளில் ஆப்செண்ட் வ‌ழ‌ங்க‌ப்பட்டுள்ள‌ன‌.
இதுகுறித்து கேட்கும் மாண‌வ‌ர்க‌ள் மிர‌ட்ட‌ப்ப‌டுகிறார்க‌ளாம்.

ச‌மீப‌த்தில் அமீர‌க‌ம் வ‌ருகை புரிந்த‌ எம்.ஐ.இ.டி. க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முனைவ‌ர் பீ. மு. ம‌ன்சூர் த‌ன‌து க‌ல்லூரியின் பெருமை குறித்து எடுத்துரைத்தார்.

மேற்க‌ண்ட‌ த‌க‌வ‌ல்க‌ள் ச‌ரிதானா ? என்ப‌து குறித்து யாரேனும் முறையாக‌ விசாரித்து த‌க‌வ‌ல் த‌ந்து உத‌வினால் க‌ல்லூரியின் நில‌வ‌ர‌ம் குறித்து அறிந்து கொள்ள‌வும், ச‌முதாய‌ மாண‌வ‌ர்க‌ள் வ‌ரும் கால‌த்த்தில் ச‌ரியான மாண‌வ‌ரைத் தேர்வு செய்ய‌வும் உத‌வியாய் இருக்கும்.

Wednesday, September 3, 2008

துபாயில் நாளை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் நாளை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி


துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நாளை 04 செப்டம்பர் 2008 வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் லேண்ட்மார்க்கில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

சிறப்பு விருந்தினராக அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிறுவனர்களில் ஒருவரும், பாபநாசம் ஆர்.டி.பி. கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் முனைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா, ஈடிஏ ஸ்டார் சர்வதேசப் பள்ளிகளின் கல்வி இயக்குநர் பேராசிரியர் எஸ்.எம். கலந்தர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்ட அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.

இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்னாள் மாணவர் சங்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள 050-5489609/050-5356650 எனும் தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





The Organizing Committee of

Alumni of Jamal Mohamed College

UAE Chapter

has the pleasure to invite all the Jamalians to

A Grand IFTHAR Party

Guest of Honour

Dr. M.A. Dawood Batcha

(Founder Patron - JMC Alumni, UAE Chapter)

(Founder & Chairman, RDB College, Papanasam)



Prof. S.M. Khalanthar

(Director of Education – SEMS Group)

(ETA Star International Schools, U.A.E)

will preside over the function

Venue: Landmark Hotel, Level-1

(Nasser Square, Deira, Dubai)

Date: 4th Sep 2008 (Thursday) at 06:00 pm

“We meet to reminisce our college days”

“Your pleasing presence will be cherished by each one of our fellow Jamalians”

For further information, please contact 050-5489609/050-5356650

Wednesday, August 27, 2008

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி


துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 04 செப்டம்பர் 2008 வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் லேண்ட்மார்க்கில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

சிறப்பு விருந்தினராக சவுதி அரேபிய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ராஜகிரி அப்துல் மாலிக் கலந்து கொள்ள இருக்கிறார். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்ட அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.

இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்னாள் மாணவர் சங்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள 050 5489 609 எனும் தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Friday, August 22, 2008

திருச்சி : சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


திருச்சி, ஆக. 21: முதியோர் நலனுக்காக சேவை புரியும் சமூக சேவகர்களுக்கான விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2008-09 ஆம் ஆண்டுக்கான சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, அவ்விழாவில் முதியோர் நலனுக்காக சேவை புரியும் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் முதியோர் நலனுக்காக நடப்பாண்டில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் இவ்விருதை பெற விண்ணப்பிக்கலாம்.

இவ்விருதுகளை பெற தங்களது பெயர், முதியோர் நலனுக்காக செய்துள்ள பணிகள் மற்றும் சாதனைகள் குறித்த விவரங்களை, மாவட்ட சமூக நல அலுவலர், எண் 11, அரபிக் கல்லூரித் தெரு, காஜாநகர், திருச்சி 20 என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்கலாம்.

Monday, March 31, 2008

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடு

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடு

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் எதிர்வரும் மே 18,2008 ஞாயிறன்று
இஸ்லாமிய இலக்கிய கழகம் மாநில மாநாட்டை நடத்த இருப்பதாக அதன்
பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகம் இதுவரை ஏழு அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய
மாநாடுகளை நடத்தியிருக்கிறது. ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்த வேண்டும்
என்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தீர்மானத்தின்படி, முதல் மாநில மாநாடு
மே 18, 2008 அன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நிகழ இருக்கிறது.

சிறப்பு நிகழ்வுகள்

கருத்தரங்கம் : கருத்தரங்கக் கரு

தமிழக இலக்கிய, சமூக, கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியில்
முஸ்லிம்களின் பங்கு என்பது இம்மாநாட்டுக் கருத்தரங்கப் பொருளாக ( Theme
of the Conference ) இருக்கும்.

1. இதுவரை ஆய்வு செய்யப்படாத இஸ்லாமிய இலக்கியங்கள்
2. தமிழகக் கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பாடுபட்ட
முஸ்லிம் சான்றோர்கள்
3. கல்வி வளர்ச்சியில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு
4. மார்க்கக் கல்வி வளர்ச்சியில் மதரஸாக்களின் பங்களிப்பு
5. தமிழகப் பண்பாட்டு ( உணவு, உடை,அணி,இசை, கட்டிடக் கலை, கைவினைப்
பொருள், நாடகம், பிறப்பு, திருமணச் சிறப்புச் சடங்குகள், ஈத், கந்தூரி,
விளையாட்டு, குடிப்பெயர், தொழில், வணிகம், மொழி) வளர்ச்சியில்
முஸ்லிம்களின் பங்கு
6. முஸ்லிம்களின் மத நல்லிணக்கப் பணிகள்
7. நாட்டுப்புறவியல்
8. மார்க்க இலக்கியம்
9. நவீன இஸ்லாமிய இலக்கியம்

பேராளர் :

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களும், புரவலர்களும் மட்டுமே
பேராளர்களாகக் கலந்து கொள்ள முடியும். பேராளர்களுக்கும்,
வெளியூர்க்காரர்களுக்கும் உணவும், தங்குமிடமும் ஏற்பாடு செய்து
தரப்படும்.

பேராளர்களுக்கெனத் தனிக் கட்டணம் இல்லை

கட்டுரைகள் ஏ4 அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல், கணினி அச்சு செய்து
அனுப்ப வேண்டும்.
கட்டுரைகளைத் திருத்த ஆய்வரங்கக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

மாநாட்டுச் சிறப்பு மலர் :

சிறப்பு மலருக்குப் பொருத்தமான வகையில் ஏ4 அளவில் 6 பக்கங்களுக்கு
மிகாமல் ஒளியச்சு செய்த கட்டுரைகள், 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதைகள்
வரவேற்கப்படுகின்றன.

விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரக் கட்டணப்பட்டியல்

மலர் அளவு : 22 செ மீ x 28 செ மீ

ஒரு பக்க வண்ண விளம்பரம் ரூ 8000
ஒரு பக்க கறுப்பு வெள்ளை விளம்பரம் ரூ 5,000
அரைப் பக்க விளம்பரம் ரூ. 3,000

மாநாட்டு மலருக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பரக் குழு

அல்ஹாஜ் நூர் முஹம்மது, ஒலிம்பிக் கார்ட், சென்னை
அல்ஹாஜ் அஹ்மது ரிபாயி
அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லா
அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஷாஜஹான், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
ஹாஜியானி பாத்திமா முஸாஃபர்
அல்ஹாஜ் பி. அப்துல் காதர், எம்.எம்.எஃப் லெதர்ஸ்

வரைவோலை / காசோலை : ISLAMIA ILAKKIYA KHAZHAGAM
என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க அளவில் அனுப்பப்பட வேண்டும்
( விளம்பரச் செய்தியைத் தனியாகத் தட்டச்சு செய்து தர வேண்டுகிறோம் )





செயல்திட்டங்கள்

1 திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 'இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப்
பண்பாட்டு இருக்கை'யினை நிறுவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

2. இயங்காமல் இருந்த தஞ்சைப் பல்கலைக்க கழக 'இஸ்லாமிய ஆய்வு இருக்கை'யை
பிரசிடெண்ட் ஓட்டல் தலைவர் ஜனாப் அபுபக்கர் வாயிலாகப் ( துணைத்தலைவர்,
இஸ்லாமிய இலக்கியக் கழகம்) புதிதாக நிதி உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு
விட்டது.

3. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய கழக வேண்டுகோளின்படி,
பினாங்கு டத்தோ ஜனாப் பரக்கத் அலி அவர்கள் நிறுவிய மர்ஹூம் ஹாஜி 'மாயின்
அபூபக்கர்' பெயரில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டுச்
சொற்பொழிவிற்கான அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.

4. முனைவர் பேராசிரியர் ஜனாப் நெயினார் முஹம்மது பெயரில் ஏதேனும் ஒரு
பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச்
சொற்பொழிவு நிறுவப்பட உள்ளது.

5. அறங்கக்குடி வள்ளல் ஒய்.எம்.எச். ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் பெயரில்
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிறுவ ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

6. நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா, சேலம் ஈ.வெ.ரா.,
கோவை பாரதியார், அண்ணாமலை, அன்னை தெரசா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்,
வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய எஞ்சியுள்ள பல்கலைக்கழகங்களில்
இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிறுவ
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7. வருகிற மே 18 ஆம் தேதி 2008 இல் இவ்விழாவில் சதாவதானி சேகுத்தம்பிப்
பாவலரின் நினைவு அஞ்சல் தலையினை மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமிகு.
ராசா அவர்கள் ( தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ) வெளியிடுகிறார்.

8. இவ்வாண்டும் 'அல்ஹாஜ் மர்ஹூம் பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா
அறக்கட்டளை' சார்பாக உமறுப்புலவர் விருதும், ரூபாய் ஒரு இலட்சமும்
வழங்கப்படுகிறது.

9. கல்வித்தந்தை சமூக வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் அவர்களுக்கும்,
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தை நிறுவிய பெரும்புலவர் சி.நயினார் முஹம்மது
அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.

10. பொற்கிழியுடன் கூடிய சிறப்பு விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.

நூல் வெளியீடு

மாநாட்டில் புதிய நூல்கள் வெளியிடப்படும். நூல்களை வெளியிட விரும்புவோர்
இப்போதே பதிவு செய்ய வேண்டுகிறோம். நூல்கள் 2007,2008 ஆம் ஆண்டுகளில்
வெளிவந்ததாக இருக்க வேண்டும். 80 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க
வேண்டும். 100 படிகள் பேராளர்களுக்கு வழங்க 2008 ஏப்ரல் இறுதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டும்.

நூல் அன்பளிப்பு

பேராளர்களுக்குத் தங்கள் நூல்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புவோர் 300
படிகளுக்குக் குறையாமல் மாநாட்டு அலுவலகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

அரிய நூல் பதிப்பு

இதுவரை அச்சு வடிவம் பெறாத அரிய இஸ்லாமிய இலக்கியங்கள் இம்மாநாட்டில்
வெளியிடப்படவிருக்கின்றன.

இஸ்லாமிய இலக்கியக் கழகம்

சிறப்பு நெறியாளர்கள்

பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முஹம்மது
நீதியரசர் சி.மு. அப்துல் வகாப்
டாக்டர் சே.சாதிக்


நெறியாளர் : கவிக்கோ அப்துல் ரகுமான்
தலைவர் : கேப்டன் என்.ஏ. அமீர் அலி
துணைத்தலைவர் : பிரசிடெண்ட் ஏ. அபூபக்கர்
பொதுச்செயலாளர் : எஸ்.எம். ஹிதாயத்துல்லா - 044 2846 0128 / 98 400 40067
பொருளாளர் : எஸ்.எஸ். ஷாஜஹான்

அமீரக ஒருங்கிணைப்பாளர்

முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் 050 452 4990
முதுவை ஹிதாயத் 050 51 96 433


விளம்பரம் அனுப்ப வேண்டிய முகவரி :

எஸ்.எம். ஹிதாயத்துல்லா
பொதுச்செயலாளர்
இஸ்லாமிய இலக்கிய கழகம்
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணா சாலை
சென்னை 600 002
தொலைபேசி : 044 2846 0128 / 98 400 40067




மாநாட்டுப் புரவலர்கள்

1. அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன்
மேலாண் இயக்குநர், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமங்கள்
2. அல்ஹாஜ் எஸ்.எம். ஹமீது அப்துல் காதர்
தலைவர், சதக் அறக்கட்டளை
3. அல்ஹாஜ் டி.இ.எஸ். பத்ஹுர் ரப்பானி
தாளாளர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
4. அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. அப்துல் காதர் புஹாரி ( சீதக்காதி அறக்கட்டளை )
5. அல்ஹாஜ் முஹம்மது இல்யாஸ், பேங்காங்
6. அல்ஹாஜ் சேகு நூர்தீன், ஏ.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை
7. அல்ஹாஜ் எம்.ஏ. முஸ்தபா, ரஹ்மத் அறக்கட்டளை
8. அல்ஹாஜ் ஒய்.எம். ஹபீபுர் ரஹ்மான், அரங்கக்குடி
9. அல்ஹாஜ் எஸ். அஹமது மீரான், புரபஷனல் கொரியர்
10. அல்ஹாஜ் ஆர். தாவூத் பாட்சா , நிறுவனர் ஆர்.டி.பி.கலை அறிவியல் கல்லூரி
11. அல்ஹாஜ்.எல்.கே.எஸ். சையது அஹமது, திநகர் எல்கேஎஸ். கோல்டு ஹவுஸ் பி லிட்
12. அல்ஹாஜ் எஸ் முஹம்மது ஜலீல், தாளாளர் , சேது பொறியியல் கல்லூரி
13. அல்ஹாஜ் ஏ. அபூபக்கர், தலைவர், பிரசிடெண்ட் ஹோட்டல்
14. அல்ஹாஜ் ஹெச். நூர் முஹம்மது, எம்.டி, ஒலிம்பிக் கார்ட்,சென்னை
15. அல்ஹாஜ். பஷீர் அஹமத்,யூசிமாஸ்
16. அல்ஹாஜ். ஷாகுல் ஹமீது, நோபிள் மரைன்
17. அல்ஹாஜ். பி. அப்துல் காதர், எம்.எஃப்.லெதர்ஸ்
18. அல்ஹாஜ் ராஜா ஹசன் ( ஐக்கிய ஜமாஅத் தலைவர், மதுரை )
19. டாக்டர் எஸ்.ஏ. சையது சத்தார் ( ரப்பானி வைத்திய சாலை )
20. அல்ஹாஜ் எஸ்.எம். அப்துல் வாஹித், தலைவர் அல்ஹாஜ் மர்ஹும்
பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா அறக்கட்டளை
21. வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது
அறங்காவலர், வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளை
22. சீனாதானா அல்ஹாஜ் எஸ்.எம். செய்யது அப்துல் காதர்
தலைவர், ஸ்கை நிறுவனம்,
23. அல்ஹாஜ். சபியுல்லாஹ் ( நிஜாம் பாக்கு, புதுக்கோட்டை )
24. அல்ஹாஜ். ஒயிட் ஹவுஸ் பாரி
25. அல்ஹாஜ் ரபீக் ( தாஜ்மஹால் புகையிலை, புதுக்கோட்டை )
26. அல்ஹாஜ் அமானுல்லாஹ், ஈரோடு
27. அல்ஹாஜ் கே.கே.எஸ்.கே. ஹைதர், ஈரோடு
28. கே. செய்யது முஹம்மது ( இலாஹி இண்டர்னேஷனல் )