துபாய் கல்விக் கண்காட்சியில் சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம்
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label கல்வி. Show all posts

Friday, May 8, 2009
துபாயில் தேரிழந்தூர் ஜமாஅத் நடத்திய கல்விக் கருத்தரங்கு

துபாயில் தேரிழந்தூர் ஜமாஅத் நடத்திய கல்விக் கருத்தரங்கில் எஸ்.எம். இதாயத்துல்லா, அல்ஹாஜ் செய்யது அப்துல் காதர் ( சினா தானா )
Labels:
கருத்தரங்கு,
கல்வி,
துபாய்,
தேரிழந்தூர்,
ஜமாஅத்
Friday, May 1, 2009
இளையான்குடி டூ திண்டுக்கல் : ஒரு கல்வி விழிப்புணர்வு மாநாடு ( 05 மே 2009 )

திண்டுக்கல் நகர அனைத்து பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள் & முக்கியஸ்தர்கள் கூட்டமைப்பு கல்வி விழிப்புணர்வு மாநாட்டினை 05.05.2009 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை திண்டுக்கல் முஹம்மதியாபுரம் ஈதுஹா மஹாலில் நடைபெற இருக்கிறது.
மேற்படிப்பு, கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக ஆலோசனையினை இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் எஸ். ஆபிதீன் வழங்க இருக்கிறார்.
இந்நிகழ்வில் மாணாக்கர்கள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கும், மாணவியருக்கும் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு : 99768 58392 / 98940 57709
இந்நிகழ்ச்சியினை தங்களது ஊரிலும் நடத்த விரும்புவோர் முனைவர் எஸ். ஆபிதீனை 99658 92706 எனும் அலைபேசியிலோ அல்லது abideen222270@yahoo.com என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
தகவல் உதவி :
முனைவர் எஸ். ஆபிதீன் 99658 92706 ( abideen222270@yahoo.com )
திண்டுக்கல் ஜாபர் சாதிக் ( jabarsathik@yahoo.co.in )

இளையான்குடி,
கல்வி,
திண்டுக்கல்,
மாநாடு,
விழிப்புணர்வு
Saturday, April 25, 2009
துபாயில் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை நடத்திய கல்வி விழிப்புணர்வு விழா

துபாயில் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை கல்வி விழிப்புணர்வு விழாவினை வெள்ளிக்கிழமை தேரா லாஸ்ட் ஹவர் ரெஸ்டாரெண்ட்டில் நடத்தியது.
துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. பொறியாளர் எல். ஷேக் முஹம்மது தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் எஃப். சவுக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
என்ன ? எங்கே ? படிக்கலாம் என்ற உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டுதலை திருச்சி அய்மான் கல்லூரி செயலாளர் சையது ஜாபர் நடத்தினார். மடிக்கணினி உதவியுடன் கல்வி குறித்த தகவலை விவரித்தார்.
பெற்றொர்கள் அயல்நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் பிள்ளைகள் தாயகத்தில் இருக்கும் போது அவர்களை கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக எந்த வகையில் ஆலோசனை கூறுவது என்பன போன்ற மனநல ஆலோசனைகளை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நலத்துறை மேலாளர் முஹைதீன் பாட்சா வழங்கினார். குறிப்பாக பிள்ளைகள் நல்ல விஷயங்கள் செய்யும் போது அவர்களை பாராட்டி உற்சாக மூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
காயல்பட்டணம் மருத்துவர் பி.எம். செய்யது அஹ்மது அவர்கள் மருத்துவம் படித்த நிகழ்வுகளை விவரித்தார். மவ்லவி ஆவூர் இஸ்மாயில் ஹஸனி ஆலிம் பட்டம் பெற்ற தான் உயர்கல்வி கற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதை விவரித்தார். தேரிழந்தூர் தாஜுத்தீன் கல்வி விழிப்புணர்வு பாடலை பாடினார். முதுவை ஹிதாயத் கல்வித் தகவல்களை வழங்கினார்.
இனிய திசைகள் சமுதாய மேம்பாட்டு இதழை வாசகர் வட்ட பொறுப்பாளர் வி. களத்தூர் கமால் பாஷா வெளியிட இதழை மனநல மேம்பாட்டு ஆலோசகர் முஹைதீன் பாட்சா பெற்றுக்கொண்டார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை அப்துல் காதர், நூர் முஹம்மது, சையது பாஷா, சபியுல்லா, முஹம்மது ராஷித், அப்துல் சலாம், அஹமது அலி, முஹம்மது அலி, சவுக்கத் அலி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
வி.களத்தூரைச் சேர்ந்த சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்தாலும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை,
கல்வி,
துபாய்,
விழா,
விழிப்புணர்வு
Thursday, April 2, 2009
துபாயில் கல்வி வழிகாட்டி நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம்

துபாயில் தேரிழந்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் கல்விக் கருத்தரங்கம் மற்றும் கல்வி வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா 02.04.2009 வியாழக்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு ஸ்கை சீ குரூப் இயக்குநர் செய்யது எம். அப்துல் காதர் ( சி.த. ) தலைமை வகித்தார். அவர் தனது உரையில் தனது கல்லூரிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். ஜப்பானியர்கள் இந்தியாவை பிடித்து விடுவார்கள் என நினைத்து சிலர் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டனர். அந்த அளவு கல்வியின் மீது எதிர்கால சூழலை கருத்தில் கொண்டு ஆர்வ மிகுதியில் கற்கும் திறனை வளர்த்துக் கொள்ள கேட்டுக் கொண்டார். மேலும் வேலை செய்யும் இடங்களில் அந்நிறுவன முதலாளியிடம் நேரடியாக தொடர்பு இருக்குமாறு பணிபுரிந்தால் மிகவும் நலமாக இருக்கும். குமரி அனந்தனனின் சகோதரர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் வசந்த் குறைந்த சம்பளத்தில் விஜிபியிடம் பணிபுரிந்து அவரது அனுபவத்தை கேட்டறிந்து வாழ்வில் உயர்வு பெற்றதைக் குறிப்பிட்டார்.
முன்னதாக மவ்லவி ஜெய்னுலாபுதீன் இறைவசனங்களை ஓதினார். கல்விக் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரும், அமீரகத்தின் தீனிசை வேந்தருமான் தேரிழந்தூர் தாஜுத்தீன் துவக்கவுரை நிகழ்த்தினார். அவர் கல்விக் கருத்தரங்கின் நோக்கம் தாயகத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை துவங்குவது என்ற கருத்தினை வலியுறுத்திப் பேசினார். இதுபோன்ற கல்விப் பணிகளுக்கு அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பினை தருமாறு கேட்டுக் கொண்டார்.
இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம்.இதாயத்துல்லா அவர்கள் தனது உரையில் கழகத்தின் மூலம் கல்வி உதவி நிதி, அரசுத் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வி விழிப்புணர்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நடைபெற்று வருகின்றன. இதில் கவிக்கோ அப்துல் ரஹ்மான், கேப்டன் அமீர் அலி, முன்னாள் துணைவேந்தர் சாதிக் உள்ளிட்ட பலர் பங்கேற்று வருகின்றனர்.
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி பேராசிரியர் முனைவர் எஸ். ஆபிதீன் அவர்கள் எழுதிய என்ன, எங்கே, எப்படி ? படிக்கலாம் என்ற நூலை எஸ்.எம். இதாயத்துல்லா வெளியிட முதல் பிரதியை தொழிலதிபர் செய்யது எம். அப்துல் காதர் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் கவிஞர் அப்துல் கத்தீம், அமீரக காயிதெமில்லத் பேரவை இணைச்செயலாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான், சுன்னத வல் ஜமாஅத் பேரவை ஒருங்கிணைப்பாளர் முஹம்மது மஃரூப், பொறியாளர் வி. களத்தூர் ஷேக், பொறியாளர் சீர்காழி அப்துல் மாலிக் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, வளைகுடா தமிழர் பேரவை நிறுவனர் எஃப்.எம். அன்வர் பாஷா, ஏ. அஷ்ரஃப் அலி, ஆவூர் மவ்லவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி, எமிரேட்ஸ் அப்துல் லத்தீப்,உம்முல் குவைன் தமிழ்ச் சங்க தலைவர் அப்துல் காதர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்தீக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேரிழந்த்தூர் தாஜூத்தீன், முதுவை ஹிதாயத், ரபீக் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். ஊடகத்துறை ஏற்பாட்டினை முதுவைவிஷன்.காம் இணையத்தளம் செய்திருந்தது.

கருத்தரங்கம்,
கல்வி,
துபாய்,
நூல்,
வழிகாட்டி,
வெளியீடு
Subscribe to:
Posts (Atom)