Showing posts with label பொறியியல். Show all posts
Showing posts with label பொறியியல். Show all posts

Tuesday, March 24, 2009

அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி

அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி


சென்னை, மார்ச் 23: அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு ( AIEEE-2009 ),"எய்ம்ஸ் கல்வி நிறுவனம்” ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கிறது.

தேசிய தொழில்நுட்ப கழகங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக சி.பி.எஸ்.இ. சார்பில் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பிளஸ் 2 முடித்த சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.

நுழைவுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு எய்ம்ஸ் கல்வி நிறுவனம் ஆன்லைன் மூலம் ஏப்ரல் 14 முதல் 24 வரை பயிற்சி வகுப்பு நடத்துகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தும் மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளிப்பர்.

பயிற்சியின் முடிவில், முதல் 3 இடங்கள் பிடிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப், ஐ-பாட் பரிசு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மேலும் விவரங்களை கீழ்க்கண்ட இணையதளத்தில் காணலாம்.

www.topperlearning.com

Monday, February 2, 2009

சேது பொறியியல் கல்லூரி 10_வது பட்டமளிப்பு விழா அமைச்சர் அன்பழகன் பங்கேற்பு

சேது பொறியியல் கல்லூரி 10_வது பட்டமளிப்பு விழா அமைச்சர் அன்பழகன் பங்கேற்பு
மதுரை,பிப்.2


சேது பொறியியல் கல்லூரியின் 10_வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பழகன் கலந்துகொண்டு மாணவ_மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.




மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 10_வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் முகமது ஜலீல் பட்டமளிப்பு விழாவை துவக்கிவைத்து வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் அ.செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.




இந்த விழாவில் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் கலந்துகொண்டு 250 மாணவ_மாணவிகளுக்கு பொறியியல் பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:_




தமிழ்நாட்டில் அண்மையில் கடந்த 50 ஆண்டு காலத்தில் நடைபெறாத வளர்ச்சி கல்வித்துறையில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐ.டி.துறை உலக அளவில் இந்திய நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட ஐ.டி.துறையில் கைதேர்ந்த இளைஞர்கள் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஐ.டி.துறையில் சிறந்து பணியாற்றி வருகிறார்கள். இது நமது மாநிலத்தை உலக அளவில் அறியச்செய்துள்ளது. ஒரு காலத்தில் பலருக்கு கல்வி மறுக்கப்பட்டது.




இன்னார்தான் கல்வி அறிவு பெறவேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு இருந்தது. அதையெல்லாம் மாற்றி தற்போது யார் வேண்டுமானாலும் கல்வியை பெறலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வியை புகுட்டுவது ஒரு அரசின் கடமை. கல்வி யாருக்கும் மறுக்கப்பட கூடாது என்ற நிலை இப்போது உள்ளது. எனவே இதை பயன்படுத்தி அனைத்து இளைஞர்களும் முன்னேற வேண்டும். அதற்கான முயற்சியில் ஞிங்கள் ஈடுபட வேண்டும். இங்கு படித்து பட்டங்களை பெற்றுச்செல்லும் ஞிங்கள் உங்களது தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ஏராளமாக சம்பாதித்து வீட்டையும் நாட்டையும் வளப்படுத்த எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.




பட்டமளிப்பு விழாவில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதன்மை கல்வி அதிகாரி சீனி முகைதீன் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை தலைவர் கிறிஸ்டோபர் ரமேஷ் நன்றி கூறினார்.

Monday, June 16, 2008

முகவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி

முகவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி

முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, தமிழகத்தில் முதல் சுயநிதி கல்லூரியாக 1984ல் துவக்கப்பட்டு, மாநிலத்தின் முன்மாதிரி பொறியியல் கல்லூரியாக திகழ்கிறது. ஐஎஸ்ஓ 9001-2000 அங்கீகாரம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தால் தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.

இக்கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் போன்ற பொதுவான பொறியியல் படிப்புகளும், மரைன், ஏரோனாட்டிகல், ஆர்கிடெக்சர், கெமிக்கல் போன்ற சிறப்பு பொறியியல் படிப்புகளும், சிறந்த ஆசியர்கள் கொண்டு நடத்தப்படுகின்றன.

முதுநிலை படிப்புகளாக எம்.இ., அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ், எம்.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங், எம்.இ., தெர்மல் இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்புகளும் கற்பிக்கப்படுகிறது.

மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதி, பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு சாப்ட்வேர் பார்க் அமைக்கும் முயற்சியில், முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹமீது அப்துல் காதிர், செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எம். கபீர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

விளையாட்டு துறையிலும் இக்கல்லூரி சாதனைகளை செய்துள்ளது. இயக்குநர் பைசல் பி.அப்துல் காதர், முதல்வர் டாக்டர் வேமுரிலட்சுமி நாராயணா ஆகியோர் வழிநடத்துகின்றனர்.

கல்லூரியின் அறக்கட்டளை சார்பில், சென்னையில் முகம்மது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முகம்மது சதக் ஏ.ஜெ.பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், கீழக்கரையில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற 13 கல்வி நிறுவனங்களும் செயல்படுகின்றன.

பிளஸ் 2 தேர்வில் 1,100க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இக்கல்லூரி இலவசமாக இடமளிக்கிறது.

மற்ற மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும், இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வளாக தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது. மொத்தத்தில் இக்கல்லூரி ஒரு முன்னோடி கல்வி நிறுவனமாக உள்ளது.

Mohamed Sathak Engineering College
Kilakarai-623806
Website:www.msec.in | Phone:04567-241327,242327 | Fax:04567-245344

For Admissions:

Tel: 04567 – 245343, 241327
Fax: 04567 – 245344

For Enquiry : enquiries@msec.in






http://www.msec.in/

http://www.sathaktrust.com/

Sunday, May 25, 2008

பொறியியல் கல்லூரிகள்

Adhiyamaan College of Engineering
Dr M G R Nagar
Hosur 635 109
Krishnagiri District
Tel : 04344 261025/260570/261002
Fax : 04344 260573

E mail : aeri_admission@yahoo.com
info@adhiyamaan.ac.in
www.adhiyamaan.ac.in


Chennai Office :

Madras Institute of Social Science
621 Anna Salai
Khiviraj Motors Bldg
Chennai 600 006
Tel : 044 28295110 / 2829 3218 / 2829 3112
Fax : 044 2829 5110

Wednesday, April 9, 2008

இஸ்லாத்தை பற்றி சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்களின் ......

இஸ்லாத்தை பற்றி சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்களின் கீழ்காணும் கேள்விகளுக்கு மருத்துவர் K.V.S .ஹபீப் முஹம்மது அவர்கள் தொலைகாட்சியில் மானுட வசந்தம் நிகழ்சி மூலம் அளித்த பதில் இதோ உங்கள் முன் www.tamilmuslimtube.com ல்

Part 1.இறைவனை ஏன் நம்ப வேண்டும்? நல்ல காரியங்கள் பல செய்து நாத்திகராக வாழ முடியாதா?
Part 2.குர்'ஆன் அன்பை போதிக்கிறது, ஆனால் முஸ்லிம்கள் ஏன் மனித நேயமற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள்?
Part 3.இந்துக்கள் பசுவை தெய்வமாக வணங்கும் போது, முஸ்லிம்கள் அதை உணவாக உண்ணலாமா?
Part 4.முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் "786"ன் முக்கியத்துவம் என்ன?
Part 5.இஸ்லாத்திற்கும் , கிறிஸ்துவதிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
Part 6.இறைவன் ஏன் பல வேத நூல்களை படைக்க வேண்டும், ஒன்றை மட்டும் படைத்திருந்தால் உலகில் குழப்பம் ஏற்படாதல்லவா?
Part 7.முஸ்லிம்கள் கொடுக்கும் புனித பொருட்களை இந்துக்கள் உபயோகிக்கும் போது இந்துக்களின் புனித பொருட்களை முஸ்லிம்கள் வாங்கி ஏன் உபயோகிப்பதில்லை?


thamizhmuslim@gmail.com