Monday, September 1, 2008

சேலம் முஸ்லிம் லீக் செயற்குழுவில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்!

சேலம் செயற்குழுவில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்!

http://www.muslimleaguetn.com/news.asp?id=201

புனித ரமளான் மாத நோன்பு காலம் முழுவதும் முஸ்லிம் லீக் பிரைமரி அமைப்புக்கள் சிறப்பான பணியாற்றுவதன் மூலம் சமூக நல்லிணக்கதையும். சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரின் நல்வாழ்வுக்கும் துணைபுரிய வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் மாநிலத்தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி தலைமையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட முடிவுகள்:

ரமளான் செயல்திட்டங்கள்:
புனித ரமளான் நோன்பு காலம் தற்போது துவங்க உள்ளது. இறைவனின் அருள் நிறைந்த இம்மாதத்தில் முஸ்லிம் லீகினர் அனைவரும் சமூக நலப் பணிகளில் திட்டமிட்டு ஈடுபட வேண்டும்.

ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் ஏழை எளியவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு தேவையான உணவு. உடை. உறைவிட வசதிகளுக்கு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தர்மகாரியங்களை தாராளமாகச் செய்யும் இம்மாதத்தில். தரவேண்டியவர்களிடமிருந்து ஏழை வரியை பெற்று பெறவேண்டியவர்களுக்கு வழங்கும் பணியை முஸ்லிம் லீக் அமைப்புக்கள் செய்ய வேண்டும். இதற்காக பைத்துல்மால் அமைப்புக்களை தோற்றுவித்து முறையாக இந்த பணிகளைச் செய்யலாம்.

முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோரை கண்டறிந்து அவர்களுக்குரிய அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி அதில் சர்வசமயத்தவர்களையும் பங்கேற்கச் செய்து சமூக நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும்.

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு:
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முஸ்லிம்களுக்கான 3.50 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து துறைகளிலும் முறையாக கிடைக்க அரசு உத்தரவுகள் பிறப்பித்தும் சில துறைகளில் இதுபின் பற்றப்படவில்லை என்ற புகார் வந்து கொண்டிருக்கிறது.

பெரியார் பல்கலைக் கழகத்தில் உதவிப் பதிவாளர், இளநிலை உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்களில் ஒரு சதவீத முஸ்லிம்கள் கூட நியமிக்கப்படவில்லை.

இப்பல்கலைக்கழகம் இந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்ட விளம்பரப்படி 6 பேராசிரியர்கள், 6 இணை பேராசிரியர்கள் மற்றும் 24 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு இந்த இட ஓதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றும், இதே நிலை அரசின் கட்டுப் பாட்டில் உள்ள மருத்துவம், சட்டம், பொறியியல் மற்றும் வேளாண் பல்கலைக் கழகங்களிலும் உள்ளதால் அனைத்து துறைகளிலும் 3.50 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள இச்செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மண்டல மாநாடு:
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய ராமநாதபுரம் மண்டலத்தில் முஸ்லிம் லீக் மாநாட்டை நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் ரமளான் நோன்பு முடிந்த ஓரிரு நாட்களில் நெல்லை மாவட்டம் தென்காசியில் இந்த 6 மாவட்டங்களின் நிர்வாகிகளால் நடத்தப்பட்டு அக்கூட்டத்தில் மாநாட்டு தேதியையும் இடத்தையும் முடிவு செய்வது.

-மேற்கண்டவாறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

மஹல்லா ஜமாஅத் பாரம்பரியத்தை சீர்குலைப்பதை நிறுத்தாவிட்டால் வக்ஃபு வாரிய தலைவருக்கு எதிராக முஸ்லிம் லீக் நடவடிக்கை! பேராசிரியர் எச்சரிக்கை!!

மஹல்லா ஜமாஅத் பாரம்பரியத்தை சீர்குலைப்பதை நிறுத்தாவிட்டால் வக்ஃபு வாரிய தலைவருக்கு எதிராக முஸ்லிம் லீக் நடவடிக்கை! பேராசிரியர் எச்சரிக்கை!!

http://www.muslimleaguetn.com/news.asp?id=198


மஹல்லா ஜமாஅத் பாரம்பரியமாக பின்பற்றி வரும் நடைமுறைகளிலெல்லாம் சீர்குலைத்து வரும் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவரின் செயல்பாட்டில் மஸ்ஜிதுகளிலும். தர்கா நிர்வாகங்களிலும் பல்வேறு. குழப்பங்கள் ஏற்படுவதாக தமிழ்நாடு முழுவதிலுமிருந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்தப் போக்கை வக்ஃப் வாரிய தலைவர் நிறுத்திக் கொள்ளாவிட்டால் புனித ரமளான் முடிந்ததும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இது விஷயத்தில் நேரடி நடவடிக்கையில் இறங்கும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.. கூறினார்.

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தின் மதிய இடைவேளையின் போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த. தலைவர் பேராசிரியர் இந்த ~கெடுவையும். எச்சரிக்கையையும் வெளியிட்டார்.

செய்தியாளர்களின் நேர்காணலின் போது அவர் மேலும் கூறியதாவது:-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநில செயற்குழு கூட்டம் இங்கே நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. மாநில நிர்வாகிகள். அணிகளின் அமைப்பாளர்கள். அனைத்து மாவட்டங்களின் தலைவர். செயலாளர். பொருளாளர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என 170 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் ஜி.எம். பனாத்வாலா மற்றும் முஸ்லிம் லீக் முன்னோடிகளின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்தவர்கள் மற்றும் அதில் பங்கேற்றோரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக. தமிழக அரசில் முதன் முறையாக சிறுபான்மையினர் இயக்கு நரகம் உருவாக்கித்தந்துள்ள முதல்வர் கலைஞர் அவர்களை பாராட்டும் நேரத்தில் கர்நாடகம். ஆந்திர மாநிலங்களை போன்றும். மத்திய அரசில் உள்ளது போன்றும். தனியாக தமிழ்நாட்டிலும் சிறுபான்மை நல அமைச்சகம் உருவாக்கி சிறப்பான முறையில் சிறுபான்மை யினருக்கான நலத் திட்டங்களை செய்ய வலியுறுத்கிறோம்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரை மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியிலும் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும் உள்ளது தொடர்ந்து இதே கூட்டணியில் இருக்கும் - இருப்போம். இக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளும் உள்ளனர்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டிலும் நீடித்து நிலைக்க வேண்டும். இதற்கு டாக்டர் ராமதாஸ் ஆவன செய்ய வேண்டும். ஏனெனில் தமிழக நன்மைக்காக கலைஞர் தலைமையிலான அரசு தொடர வேண்டும்.

ஒரிஸ்ஸா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் ஆசிரமம் நடத்தி வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் லஷ்மணானந்த. சரஸ்வதியும். அவரது சகாக்கள் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளால் இந்த படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. யார் இதை செய்திருந்தாலும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த சம்பவத்தை. காரணமாக வைத்து ஒரிஸ்ஸா மாநிலத்தில் கிறிஸ்தவ சமூகத்திற்கெதிரான வன்முறை கட்ட விழ்த்து விடப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். ஏராள மான பொருட்சேதம் ஏற்பட்டு ஊரடங்கு உத்தரவும் பதற்ற நிலையும் நீடித்து வருகிறது. இந்த வன்முறை கண்டத்திற்குரியது. இது உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

அமர்நாத் ஆலயத்திற்கான நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று கஷ்மீர் மாநிலம் முழுவதும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. அமர்நாத் கஷ்மீரில் அமைந்துள் ளது. அங்கேயுயுள்ள பனி லிங்கத்தை நூற்றுக்கணக்கில் - ஆயிரக்கணக்கில் தரிசித்து வந்தவர்கள் இப்போது லட்சக்கணக்கில் வழிபடுகின்றனர். இது இந்துக்களின் மத நம்பிக்கை.

எந்த மதமாக இருந்தாலும் வழிபாட்டிற்கு உரிய வசதிகள் செய்து கொடுப்பது அரசுகளின் கடமை.

இந்த அடிப்படையில் கஷ்மீர் மாநில அரசும். அமர்நாத் யாத்ரீகர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுத்து வந்துள்ளது. இந்த நன்மைகளை எந்த அரசாக இருந்தாலும் செய்து கொடுத்தே ஆக வேண்டும்.

இப்படி வசதிகள் செய்து கொடுக்கப்படும் நிலையில் இப்போது 100 ஏக்கர் நிலம் கேட்கிறார்கள். இதன் காரணமாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. கஷ்மீர் தனித்தன்மை வாய்ந்ததாகவும். எல்லைப்புற மாநிலமாகவும் இருப்பதால் பதற்றமும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.

இந்தப் பிரச்சினை கஷ்மீர் மாநிலத்திற்குள்ளேயே சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும் என்ப தையே நாட்டு நலனில் அக்கறையுள்ள அனைவரும் விரும்புகின்றனர். அரசும் இதற்காக பெரு முயற்சி செய்து வருகிறது. இம்முயற்சி வெற்றிபெற அனைத்து தரப்பினரும் முடிவுக்கு வரவேண்டும்.

எந்தக் சூழ்நிலையிலும் கஷ்மீர் இந்தியாவன் பிரிக்க முடியாத பகுதி என்பதே இந்திய முஸ்லிம் களின் உறுதியான நிலைப்பாடு.

மஹல்லா ஜமாஅத் பாரம்பரியத்தை தகர்க்கும் வக்ஃபு வாரிய தலைமை
தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் சுன்னத் வல் ஜமாஅத் நடைமுறைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் முஸ்லிம்களுக்காக தமிழ் நாட்டில் பன்னிரண்டா யிரத்திற்கும் மேற்பட் பள்ளிவாசல் மஹல்லா ஜமாஅத் அமைப்புகள் உள்ளன. இந்த மஹல்லா ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல்கள். தர்காக்கள் வக்ஃபு வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

சுன்னத் ஜமாஅத் நடைமுறையை ஏற்றுக்கொள்ளாதவர்களின் பள்ளிவாசல்கள். மதரஸாக்கள் நூற்றுக்கும் குறைவானவையே இவை பெரும்பாலும் வக்ஃபு வாரியத்தில் இணைக்கப்பட்டிருக்காதவை.

சுன்னத் ஜமாஅத் கொள்கையை பின்பற்றும் பள்ளிவாசல் தர்காக்கள் நிர்வாகங்கள் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன.

துரதிருஷ்டவசமாக இககொள்கையில் நம்பிக்கை. இல்லாத ஒருவர் வக்ஃபு வாரியத்தின் தலைவராக ஆக்கப்பட்டதால் அவர் பின்பற்றும் கொள்கையுடையவர்களை பள்ளிவாசல் நிர்வாகத்தில் திணிப்பதற்காக திட்டமிட்டு செயல்பட்டு பாரம்பரிய நடைமுறைகளை தூக்கி எறிந்து விட்டு புதிய செயல்முறைகளையும் தேர்தல் நடைமுறைகளையும் புகுத்துவதாகவும். தர்கா ஜியாரத்தில் நம்பிக்கையற்ற இவர் தர்காக்களில்கூட இவர் கொள்கையுடையவ அறங்காவலராக நியமிக்க முயற்சிப்பதாகவும் மாநிலம் முழுவதிலுமிருந்தும் பரவலாக புகார் சொல்லப்படுகிறது. இதனால் 90 சதவீத முஸ்லிம்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான நானும். சட்டமன்ற உறுப்பினராக கலீலுர் ரஹ்மானும். உறுப்பினர்களாக உள்ளோம். முஸ்லிம் சமுதாயத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை சார்ந்தவர்கள் நாங்கள்.

சமுதாயம் எதிர்பார்த்த வர்களுக்கு வக்ஃபு வாரிய தலைவர் என்ற கண்ணியம் தரப்பட்டிருந்தால் அது சமுதாயத்திற்கு மனநிறைவை தந்திருக்கும். ஆனால் வக்ஃபு வாரிய தலைவரின் செயல்பட்டால் முஸ்லிம் சமுதாயம் வேதனையில் உள்ளது.. இது தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வக்ஃபு வாரிய தலைவருக்கு ஒருமாத காலக் கெடு அளிக்கிறோம். முஸ்லிம் சமுதாய பாரம்பரிய நடைமுறைகள் பள்ளிவாசல் நிர்வாகங்களில் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டால் முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கையில் இறங்கும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் லீக் பதிப்பகம் வழங்கும் ஸஹர் நேர ஒளிபரப்பு பிறை மேடை!

முஸ்லிம் லீக் பதிப்பகம் வழங்கும் ஸஹர் நேர ஒளிபரப்பு பிறை மேடை!

http://www.muslimleaguetn.com/news.asp


02-09-2008 செவ்வாய் முதல் ரமளான் முடியும் வரை விஜய் தொலைக்காட்சியில் அதிகாலை 3-30 முதல் 4 மணிவரை பிறை மேடை என்ற தலைப்பில் ஸஹர் நேர ஒளிபரப்பு ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்.

முஸ்லிம் லீக் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது