Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Wednesday, March 11, 2009

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதி விருது: மார்ச் 30 கடைசி

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதி விருது: மார்ச் 30 கடைசி


கோவை, மார்ச் 10: கலை, இலக்கியம், விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது வழங்கப்படவுள்ளது.

இவ் விருது பெற விரும்புவோர் மார்ச் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பாரதி யுவ கேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒவ்வொரு மாவட்டங்களிலும் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப்பணி, பரத நாட்டியம், பேச்சு, கவிதை, சமூகப்பணி உள்பட அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது, விவேகானந்தர் விருது ஆகியவை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

பாரதி யுவ கேந்திரா அறக்கட்டளை சார்பில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்.

விழாவில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர், ஆர்ஷ வித்யா பீடம் சுவாமி ததேவானந்த சரஸ்வதி, கருமாத்தூர் விவேகானந்த சேவாஸ்ரம் தலைவர் சுவாமி ஸதா சிவானந்தா, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தா, சுவாமி கருணானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இசை, ஓவியம், விளையாட்டு போன்றவற்றில் சிறப்பாக விளங்கும் மாணவ, மாணவிகள் தங்களது சுயகுறிப்பு மற்றும் பரிசு சான்றிதழ் நகல்களை நெல்லை பாலு, நிறுவனர் பாரதி யுவ கேந்திரா, ஜி52, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை-625016 என்ற முகவரிக்கு மார்ச் 30-ம் தேதிக்குள் அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி எண்கள்:9443930815, 9442630815.

Sunday, January 4, 2009

ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விருது வழங்கும் விழா

ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விருது வழங்கும் விழா

www.muduvaivision.com


ஜன. 3: ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில், முன்னாள் சங்கத் துணைத் தலைவர் த. குழந்தைசெட்டியார் நினைவு தினவிழா மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டோருக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு சங்கத் தலைவர் மை. அப்துல் சலாம் தலைமை வகித்தார். சங்கச் செயலர் கண் மருத்துவர் சந்திரசேகரன், பொருளாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கு.விவேகானந்தன் வரவேற்றார்.

சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தை செட்டியாரின் உருவப்படத்தை, உறுப்பினர் எஸ்.கே. பால்ச்சாமி செட்டியார் திறந்துவைத்தார்.

கவிஞர் வேலுச்சாமிதுரை, ஆசிரியர் பாஸ்கரன், கலைச்செல்வன், கரு.நா. விசுவநாதன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

திருச்சி கவிஞர் நந்தலாலா நடுவராகவும் கவிஞர்கள் முத்துநிலவன், மதுக்கூர். ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.

பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

எஸ்.ஆர். வெங்கிடாஜலம் (வணிகர்), டாக்டர் கே. ஜோசப்ராஜன் (மருத்துவர்), புலவர் கு. முனியாண்டி (தமிழ்ப்பணி), சா. கஸ்தூரிபாய் (சமூகப்பணி) ஆர். வாசு (சிறந்த இசைப்பணி), கரு.நா. விசுவநாதன் (சிறந்த நாடகப்பணி).

சிறந்த சமூகப்பணி செய்துவரும் அமைப்பு என்ற முறையில், விபத்து மீட்புச் சங்கத்திற்குரிய விருதை, அச்சங்க இணைச் செயலாளர் பாலமுருகன் பெற்றுக் கொண்டார்.

சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு உரப்புளி ஜெயராமனுக்கும், 2-வது பரிசை பழ. முருகேசன், செய்யதா தேன்மொழி ஆகியோரும் பெற்றனர்.

சிறப்புப் பரிசாக தமிழரசி உதயக்குமார், சந்திரசேகரன் ஆகியோருக்கு, சங்கப் பொருளாளர் சுந்தரமூர்த்தி பரிசுகள் வழங்கினார்.

Monday, December 8, 2008

ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருக்கு விருது

ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருக்கு விருது


பட்டுக்கோட்டை, டிச. 7: சென்னை ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநர் அதிராம்பட்டினம் எஸ். முகமது அஸ்லமுக்கு "தேசிய சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.

அண்மையில் தில்லியில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் பொருளாதார குழுமம் சார்பில் "அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை மற்றும் பணிகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் சமூக பொருளாதார, முன்னேற்றத்துக்காக உழைத்து, சாதனை நிகழ்த்தியவர்களுக்கு தேசிய சாதனையாளர் விருது மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

இதில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளர், எம்.கே.என். மதரஸô அறக்கட்டளைச் செயலர் மற்றும் சென்னை ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருமான எஸ். முகமது அஸ்லமுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரகுமான்கான் "இந்திரா காந்தி சத்பவன விருது' வழங்கியும், இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி தங்கப்பதக்கம் அணிவித்தும் பாராட்டினர்.

தேசிய சாதனையாளர் விருது பெற்ற முகமது அஸ்லமுக்கு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன இயக்குநர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20081208003926&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=12/9/2008&dName=RgN%F4%EEo&Dist=

Wednesday, November 26, 2008

தமிழக விஞ்ஞானிக்கு சவூதி இளவரசர் விருது

தமிழக விஞ்ஞானிக்கு சவூதி இளவரசர் விருது


புற்றுநோய் ஒரு கொடிய நோய் என்பது எல்லோருக்கும் தெரியும்.இந்த நோயின்
கடுமையிலிருந்து தப்ப இரண்டே வழிகள் தான்.முதலாவது நோய் வராதவாறு
பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது.இரண்டாவது, தப்பித் தவறி வந்தால்
இதை துவக்கக் கட்டத்திலேயே கண்டறிவது.

இந்த முயற்சியில் உலகெங்கும் பல்வேறு விஞ்ஞானிகளும் மருத்துவர்களும்
தொடர்ந்து முயன்று வருகிறார்கள்.இந்த ஓட்டப்பந்தயத்தில் டாக்டர்.வ.மாசிலாமணி
என்ற தமிழக விஞ்ஞானி ஒரு அற்புத சாதனைப் படைத்து சவூதி இளவரசர் மேதகு
நாயிஃபா ( Prince Naifa) அவர்களிடம் பரிசும் பட்டயமும் பெற்றுள்ளார்.பரிசுத் தொகை
இந்திய மதிப்பில் ஆறரை லட்சம் ரூபாய்.அவருக்கும், அவருக்குத் துணையாக இருந்த
மருத்துவர்கள்,விஞ்ஞானிகள்,ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் பாராட்டி ,பரிசுகள்
வழங்கி ரியாத் சவூதி மன்னர் பல்கலைகழகம் 3-11-2008 அன்று விழா எடுத்து சிறப்பு
செய்தது.அரபு நாடுகளில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்குக் கொடுக்கப்பட்ட
முதல் கௌரவம் இது.முதன் முதலில் இதைப் பெற்றவர் ஒர் தமிழக விஞ்ஞானி.
இந்தியாவும் - குறிப்பாய் தமிழகமும் பெருமைக் கொள்ள வேண்டிய விஷயம்.

அவர் அப்படி என்னதான் செய்தார்?

இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து அதில் உள்ள உயிர்மூலக் கூறுகளை
லேசர் ஒளி மூலம் பகுத்தெடுத்தார்.இதேபோல் அதிகாலையில் வரும் முதல் சிறுநீர்த்துளியின் மூலக்
கூறுகளையும் பகுத்தெடுத்தார்.இவைகளை ஆய்வுக்குட்படுத்தி நோயற்றவர்களிடம் இல்லாத
சில மூலக்கூறுகள் புற்றுநோய் உள்ளவர்களிடம் அளவுக்கு மீறி இருந்தன.இதைக் கொண்டு புதிதாக
மாசிலா புற்றுநோய் ஆய்வு (Masila Cancer Diagnostic) என்ற புதியக் கருத்தமைவை (Technique)கொண்டுவந்தார்
இதன் மூலம் வெறும் 5 மி.லி இரத்தமும் 5 மி.லி சிறுநீரும் கொண்டு ஒருவருக்கு புற்றுநோய்
இருக்கிறதா இல்லையா , இருந்து குணமாகி விட்டதா அல்லது மீண்டும் வந்திருக்கிறதா என்பன போன்ற பலவிஷயங்களை கணிக்கமுடியும்.இந்தப் புதிய முறை இந்திய மத்திய அரசின் ICMR ல்
தர நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறையின் தொடர் ஆராய்ச்சிக் காரணமாகத்தான் நுரையீரல் புற்று நோய்க்கு மட்டும்
தனித்துக் காட்டும் புது உயிர்மூலக்கூறு பற்றியும் கண்டுபிடித்தார்.இந்த முறையின்
நம்பகத்தன்மை (Reliablity) 80% என்பதும் இதுவரையில் இத்தகைய்ய Biomarker நுரையீரல் புற்றுநோய்க்கு கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த புதிய முறையின் துணைக் கொண்டு நுரையீரல் புற்று நோயின் துவக்க நிலையைக் கண்டறிவது
மட்டுமன்றி தொடர்ந்து பலகாலம் புகை பிடித்துக் கொண்டிருப்பவரில் யாருக்கு இந்நோய் வந்து
கொண்டிருக்கிறது என்பதையும் நிர்ணயித்து எச்சரிக்கை மணி அடிக்க முடியும்.

masilamaniv@yahoo.com

Friday, September 12, 2008

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியின் விருது

Islamic personality of the year announced
Staff Report
Last updated: September 12, 2008, 01:54
http://www.gulfnews.com/nation/Heritage_and_Culture/10244198.html

Dubai: The Dubai International Holy Quran's Islamic personality of the year has been awarded not to a personality, but to an organisation - the King Fahd Complex based in Madinah, for publishing the Holy Quran.

The award was announced in a ceremony held at the Cultural and Scientific Association in Mamzar on Thursday.

The winner gets a Dh 1 million reward for contributions and achievements in the Islamic world.

The Dubai International Holy Quran Award is now its 12th year and is held under the patronage of His Highness Shaikh Mohammad Bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai.

Eighty-five contestants from different countries participated in the prestigious Quran recitation competition this year.

This is the second time that an organisation has been awarded this honour. Earlier, Al Azhar won it in the sixth year.


NEWS FROM GULF TODAY


Saudi centre wins Islamic Personality Award

BY IMRAN MOJIB

The organisers of Dubai International Holy Quran Awards will honour Saudi Arabia's services for Islam during the concluding ceremony of the 12th session of the annual event by bestowing the Islamic Personality of the Year Award upon the King Fahad Complex for the Printing of the Holy Quran.

The King Fahad Complex is the only second organisation to get this award since its inception over a decade ago. The first organisation was the famous Al Azhar University of Cairo.

King Fahd Bin Abdel Aziz, the Custodian of the Two Holy Shrines, laid the cornerstone of the Complex in 1403 AH and inaugurated it in 1405 AH. The average annual production of the Complex is 10 million copies, the distribution is the same. It has produced more than 90 editions and 165 million copies and has so far distributed more than 142 million copies to Muslims all over world continents. The Complex has published 55 different translations of the Holy Quran in 39 languages.

It always makes continuous studies and researches for the service of the Holy Quran and the Sunnah.

The Complex has the most advanced printing technologies in the world. The Complex offers each pilgrim a copy of the Mushaf on his way back home after completing Hajj rituals. Important considerations have accounted for the establishment of the Complex:

First, the increasing need of the Muslim world for the Glorious Quran and its related fields of study.

Second, the importance of providing the best services for the Sunnah of the Prophet (PBUH), the important role which the Kingdom of Saudi Arabia plays in the service of Islam and Muslims.

Besides printing and distributing the Holy Quran, the complex also produces audio-recordings of the Holy Quran, translates the meaning of the Holy Quran and its interpretation, promotes Quranic fields of study, the study of the Sunnah and the Prophet's Biography, supports Islamic studies and researches and provides domestic and international networks with the Complex publications.

Since its inception in 1998, organisers of the DIHQA has honoured several eminent personalities with the Islamic Personality of the Year Award including Sheikh Zayed Bin Sultan Al Nahyan, Dr Yusuf Al Qardawi, Maulana Abul Hasan Nadwi, Mohammed Mutwali Al Shaarawi, Dr Alija Izetbegovic, Dr Abdullah Bin Abdul Mohsin Al Turki, Al Azhar University, renowned Islamic scholar Dr Mohammed Saeed Ramadan Al Bouti and renowned Islamic scholar Dr Abdul Rahman Abdul Aziz Al Sudais.

Friday, August 22, 2008

திருச்சி : சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


திருச்சி, ஆக. 21: முதியோர் நலனுக்காக சேவை புரியும் சமூக சேவகர்களுக்கான விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2008-09 ஆம் ஆண்டுக்கான சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, அவ்விழாவில் முதியோர் நலனுக்காக சேவை புரியும் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் முதியோர் நலனுக்காக நடப்பாண்டில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் இவ்விருதை பெற விண்ணப்பிக்கலாம்.

இவ்விருதுகளை பெற தங்களது பெயர், முதியோர் நலனுக்காக செய்துள்ள பணிகள் மற்றும் சாதனைகள் குறித்த விவரங்களை, மாவட்ட சமூக நல அலுவலர், எண் 11, அரபிக் கல்லூரித் தெரு, காஜாநகர், திருச்சி 20 என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்கலாம்.

Thursday, June 19, 2008

அமீரக தொழிலதிபருக்கு மாநாட்டில் சமயநல்லிணக்கத்துக்கான விருது


அமீரக தொழிலதிபருக்கு மாநாட்டில் சமயநல்லிணக்கத்துக்கான விருது


துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் கீழக்கரை அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன், கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, கிறிஸ்தவ பிரமுகர் மறைதிரு வின்சண்ட் சின்னதுரை உள்ளிட்டோருக்கு சமய நல்லிணக்கத்துக்கான சிராஜுல் மில்லத் விருது இந்திய யூனியன் முஸ்லிம் 60 ஆம் ஆண்டு மணி விழா மாநாட்டில் சனிக்கிழமை வழங்கப்பட இருக்கிறது.

துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தில் சுமார் 70,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பல்வேறு இன,மொழி, நாடு உள்ளிட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமய பேதமில்லாது சர்வ சமய மக்களும் பணிபுரிந்து வரும் கேந்திரம் ஈடிஏ அஸ்கான் நிறுவனம், சமயநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இடம். இதில் 70,000 பேர் என்றில்லாது 70,000 குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றன.

இதேபோல் சம்ய நல்லிணக்கப் பணிகளை மேற்கொண்டு வரும் நல்லகண்ணு, வின்சண்ட் சின்னதுரை உள்ளிட்டோருக்கும் இவ்விருது வ்ழங்கப்பட்டுகிறது.

மேலும் இயக்க வளர்ச்சிக்காக 50 ஆண்டுகள் உழைத்தோருக்கு காயிதெமில்லத் விருது, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவையாற்றியோருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கப்படுகிறது.மேலும் சாதனைப்பெண்மணிகளுக்கும் விருது வழங்கப்படுகிறது.

அமீரக அமைப்புகள் வாழ்த்து : சமய நல்லிணக்க விருது பெறும் செய்யது எம் ஸலாஹுதீனுக்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் எம். ஜே. முஹம்மது இக்பால், துபாய் தமிழ்ச் சங்க தலைவர் சபேசன், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன், தமிழ்த் தென்றல் இதழ் ஆசிரியர் அப்துல் ரவூஃப், வானலை வளர்தமிழ் நிர்வாகி காவிரி மைந்தன், சுடர் வம்சம் நிறுவனர் ரகுராஜ், உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் சலாஹுதீனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tuesday, June 10, 2008

சிறந்த பத்திரிகையாளர் விருது

Blog: T Azeez Luthfullah

Post: H. Abdur Raqeeb awarded best Journalist award!

Link: http://azeez-luthfullah.blogspot.com/2008/05/h-abdur-raqeeb-awarded-best-journalist_31.html

Saturday, May 24, 2008

தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சமுதாய நல்லிணக்க அமைப்பின் தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தனிநபர், ஓர் அமைப்பு, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்பட பல்கலைக்கழகத்தில் செயல்படும் மாணவர் பேரவை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒரு தனிநபர் தேசிய ஒருமைப்பாடு, சமுதாய நல்லிணக்கத்திற்காக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வயது 35-க்கு மேல் இருக்க வேண்டும். சட்டப் பேரவை, நாடாளுமன்றம், அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இல்லாமல் இருக்க வேண்டும்.
அமைப்பைப் பொருத்த வரையில், அந்த அமைப்பு சட்டப் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் துறையில் 5 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுகிற மாணவர் பேரவை சம்பந்தப்பட்ட துணைவேந்தர் விருதுக்கான செயற்குறிப்பை பரிந்துரைக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் குறைந்தது 5 ஆண்டுகால அளவில் தொடர்ச்சியாக, குறிப்பிடும்படியாக செயலாற்றியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதியில் சமுதாய நல்லிணக்க அமைப்பு ஏற்பாடு செய்யும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

தகுதியுடையவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையைப் பொருத்தவரை மாநகர காவல்துறை ஆணையரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூன் 30-ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும்.

Thursday, May 1, 2008

சிறந்த மருந்தாக்கியல் வல்லுநர் விருது பெற்ற முதல் முஸ்லிம்

மருந்தாக்கியல் துறையில்
யூசுப் சிறப்பு விருது பெற்றார் !

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் அண்ணாநகர் மண்டலத்தின் செயலாளரும், அண்ணாநகர் ஜாவீத் பள்ளிவாசலின் செயலாளருமாகிய அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப், பி.ஃபார்ம், இந்த ஆண்டின் சிறந்த மருந்தாக்கியல் வல்லுநராகத் ( Best Pharmacist of the Year ) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.

அகில இந்திய அளவில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் இந்த விருது முதன்முதலாக முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். மருந்து உற்பத்தி, மருந்துத் தரம், பகுப்பாய்வுத் துறையில் செய்த செம்மையான சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற பெரும் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாக்கியல் பட்டதாரிகளின் முன்னிலையில் தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா விருது வழங்கிக் கௌரவித்தார்.

அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப் சென்னை மருத்துவக் கல்லூரியில் பி.ஃபார்ம் இளங்கலை பட்டம் பெற்றவர். இதற்கு முன்பும் மருந்தாக்கியல் துறையில் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த இவர் பல தன்னார்வத் தொண்டு இயக்கங்களில் பங்கு கொண்டு சமுதாயத் தொண்டாற்றி வருகிறார். இவர் சிறந்த எழுத்தாளரும் ஆவர்.

இவர் எழுதிய பல இஸ்லாமியக் கட்டுரைகள் பல இஸ்லாமிய மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும், சிதறிய முத்துக்கள், வான்முறைதரும் வழிமுறை, மரணம் ஓர் சிந்தனை, இறைமறை துஆக்கள், நபிலான வணக்கங்கள், அறவேள்வியும் பொருள் வணக்கமும் ( நோன்பு, ஜகாத் ) இஸ்லாமிய வாழ்வில் ஓர் இனிய பயணம் முதலிய நூல்களையும் அவர் எழுதியுள்ளமை பாராட்டுக்குரியதாகவும்.

தகவல் உதவி :

இனிய திசைகள்
பிப்ரவரி 2008

27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115

Tuesday, April 29, 2008

முன் னாள் போலீஸ் சூப்பிரண்டண்ட் அப்துல் ரவூப் முஸ்லிம் லீகில் இணைந்தார்

முன் னாள் போலீஸ் சூப்பிரண்டண்ட் அப்துல் ரவூப் முஸ்லிம் லீகில் இணைந்தார்



பல விருதுகளைப் பெற்ற வரும் சமூக நல்லிணக்கத் திற்கு பாடுபட்டவரும் முன் னாள் போலீஸ் சூப்பிரண்டு மான அப்துல் ரவ+ப் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. முன்னிலை யில் இணைந்தார்.

~பல முஸ்லிம் இயக்கங் களை ஆய்வு செய்தபின் பேராசிரியர் தலைமையில் உள்ள இயக்கத்தில் இணை கிறேன் என்று அப்துல் ரவ+ப் கூறினார். கம்பம் முஸ்லிம் லீக் சார்பில் மணிவிழா மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேராசிரியர் கே.எம்.கே. பங்கேற்றார். அப்போது முன்னாள் எஸ்.பி. அப்துல் ரவ+ப் பேராசிரியருக்கு பொன்னாடை அணிவித்து முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை வரவேற்ற பேராசிரியர் அவருக்கு பொன்னாடை அணி வித்து கவுரவப்படுத்தினார்.

விழாவில் அப்துல் ரவூஃப் பேசும் போது கூறியதாவது-

தனிமனிதனாக இருந்து கொண்டு சமுதாயத்துக்கு பெரிய அளவில் சேவை செய்துவிட முடியாது. ஏதாவது சமூக இயக்கத் துடன் இணைந்து கொண்டு செயல்பட்டால் சமூகத்துக்கு நல்ல பல சேவைகளை செய்ய முடியும். காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் நான் தனியாக முஸ்லிம் சமுதாயத்துக்கு பணியாற்றுவதைவிட ஏதாவது ஒரு முஸ்லிம் இயக்கத்தில் சேர்ந்து பணி யாற்றினால் நல்லது என்ற முடிவுக்கு வந்தேன்.

அதன்பிறகு முஸ்லிம் சமுதாயத்தினரால் முஸ்லிம்களுக்காக நடத் தப்படும் பல இயக்கங் களை ஆய்வு செய்தேன். அந்த ஆய்வுக்குப் பின் முஸ்லிம்களுக்கு பாரபட்ச மற்ற முறையில் பணி யாற்றி வரும் இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தான் என்று உணர்ந்தேன். அந்த இயக்கம் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த இயக்க மாகும்.

சமுதாய நலனுக்கு தாய்ச்சபையாக இயங்கி வரும் இயக்கமும் அது தான் என்பதை கண்டு கொண்டேன். சமூக நல்லி ணக்கத்துக்கு பாடுபடக் கூடிய இயக்கமும் லீக் தான் என்பதை கண்டு கொண் டேன்.

இந்த இயக்கம் பேராசிரியர் தலைமையில் மரபு நெறி பிறழாமல் பாரம் பரிய பெருமைகளுடன் முஸ்லிம்களுக்காக சிறப் பாக பணியாற்றி வருகிறது என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.

எனவே பேராசிரியர் தலைமையில் என்னை இந்தபேரியக்கத்தில் இணைத்துக் கொள்கி றேன்.

என் போன்றே பணியி லிருந்து ஓய்வு பெற்று சமூக பணியாற்ற விரும் பும் பலர் இருக்கிறார்கள். அவர்களை சென்னை மணி விழா மாநாட்டின் போது முஸ்லிம் லீகில் இணைக்க பாடுபடுவேன். இவ்வாறு அப்துல் ரவ+ப் கூறினார்.

பின்பு பேராசிரியர் பேசும்போது அப்துல் ரவூஃப் லீகில் இணைந்ததை வரவேற்றார். அப்துல் ரவூஃப் போன்ற பலர் அரசு போன்ற துறைகளிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள். அனுபவமும் ஆற்றலும் மிக்க அவர்கள் உணர்வுப் பூர்வமாக முஸ்லிம்களுக்கு சேவை செய்ய முஸ்லிம் லீகில் தங்களை இணைத் துக் கொள்ள வேண்டும்.

அப்துல் ரவ+ப் காவல் துறைப் பணியில் இருக்கும் போது பல விருதுகளை பெற்றவர். சுனாமி நிவாரணப்பணிகளிலும் பாராட்டு பெற்றவர். சமூக நல்லிணக்கத்திற்காக பாடு பட்டவர். இப்படிப்பட்ட வர்கள் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற முன் வர வேண்டும்

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. கூறினார்


http://www.muslimleaguetn.com/news.asp

Wednesday, February 13, 2008

துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது



துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் துபாய் கராச்சி தர்பார் உணவகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல தமிழக மருத்துவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹானுக்கு 'முதுவை நகர் சாதனையாளர் விருது' 22.01.2008 செவ்வாய்க்கிழமை மாலை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் தலைமை தாங்கினார். முன்னதாக மார்க்க ஆலோசகர் மௌலவி ஏ.சீனி நைனார் முஹம்மது தாவுதி இறைவசனங்களை ஓதினார்.

பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் தனது துவக்கவுரையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விவரித்தார்.

ஆடிட்டர் ஹெச்.அமீர் சுல்தான் 'முதுவை நகர் சாதனையாளர் விருதை' டாக்டர் ஏ. அமீர் ஜஹானுக்கு அவரது சமூக நல்லிணக்கம் மற்றும் மருத்துவப் பணிகளை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக வழங்கினார்.

அமீர்சுல்தான், மௌலவி சீனி முஹம்மது, எம். காஜா நஜுமுதீன், சிக்கந்தர், பக்ருதீன், ஷேக் முஹம்மது, சாதிக் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

டாக்டர் அமீர் ஜஹான் தனது ஏற்புரையில் கல்வி, செல்வம், வீரம் ஆகியவை ஒரு சமூகத்தின் அடையாளம் என்றார். ஜமாஅத்தினர் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பனிகளைப் பாராட்டினார். தான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த போது தான் முதுகுளத்தூர் என்றதும் தன்னை ராகிங் செய்யாமல் ஒதுங்கிக் கொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்தார். தங்களை உருவாக்கிய மண்ணை நினைவு கூர்ந்து அதற்காக செயலபட்டு வருவது போற்றத்தக்கது என்றார்.

டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தனது உரையில் முதுகுளத்தூர் மாணவர் ஒருவருக்கு மருத்துவம் பயில ஏ.ஜெ.கல்வி அறக்கட்டளை மூலம் உதவிட உறுதியளித்தார். மேலும் முதுகுளத்தூரில் மருத்துவ முகாம் இலவசமாக நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

பொருளாளர் ஏ. அஹம்து இம்தாதுல்லா நன்றி கூறினார்.




நன்றி : இனிய திசைகள் - பிப்ரவரி 2008