Sunday, January 4, 2009

ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விருது வழங்கும் விழா

ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விருது வழங்கும் விழா

www.muduvaivision.com


ஜன. 3: ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில், முன்னாள் சங்கத் துணைத் தலைவர் த. குழந்தைசெட்டியார் நினைவு தினவிழா மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டோருக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு சங்கத் தலைவர் மை. அப்துல் சலாம் தலைமை வகித்தார். சங்கச் செயலர் கண் மருத்துவர் சந்திரசேகரன், பொருளாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கு.விவேகானந்தன் வரவேற்றார்.

சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தை செட்டியாரின் உருவப்படத்தை, உறுப்பினர் எஸ்.கே. பால்ச்சாமி செட்டியார் திறந்துவைத்தார்.

கவிஞர் வேலுச்சாமிதுரை, ஆசிரியர் பாஸ்கரன், கலைச்செல்வன், கரு.நா. விசுவநாதன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

திருச்சி கவிஞர் நந்தலாலா நடுவராகவும் கவிஞர்கள் முத்துநிலவன், மதுக்கூர். ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.

பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

எஸ்.ஆர். வெங்கிடாஜலம் (வணிகர்), டாக்டர் கே. ஜோசப்ராஜன் (மருத்துவர்), புலவர் கு. முனியாண்டி (தமிழ்ப்பணி), சா. கஸ்தூரிபாய் (சமூகப்பணி) ஆர். வாசு (சிறந்த இசைப்பணி), கரு.நா. விசுவநாதன் (சிறந்த நாடகப்பணி).

சிறந்த சமூகப்பணி செய்துவரும் அமைப்பு என்ற முறையில், விபத்து மீட்புச் சங்கத்திற்குரிய விருதை, அச்சங்க இணைச் செயலாளர் பாலமுருகன் பெற்றுக் கொண்டார்.

சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு உரப்புளி ஜெயராமனுக்கும், 2-வது பரிசை பழ. முருகேசன், செய்யதா தேன்மொழி ஆகியோரும் பெற்றனர்.

சிறப்புப் பரிசாக தமிழரசி உதயக்குமார், சந்திரசேகரன் ஆகியோருக்கு, சங்கப் பொருளாளர் சுந்தரமூர்த்தி பரிசுகள் வழங்கினார்.

No comments: