Showing posts with label நீடூர். Show all posts
Showing posts with label நீடூர். Show all posts

Monday, May 26, 2008

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் திறப்புவிழா மலரில் தங்களின் ஆக்கம் இடம் பெற…

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் திறப்புவிழா மலரில் தங்களின் ஆக்கம் இடம் பெற…

உங்களின் ஆக்கங்களை உடன் அனுப்பி வையுங்கள்.

கீழ்காணும் இலக்கங்களில் மலர்க்குழுவை தொடர்பு கொள்ளுங்கள்:

ஹாஜி S.A.இக்பால் கைபேசி: +919443123763

ஜாமிஆ மஸ்ஜித் தொலைபேசி: +914364250107


http://niduronline.com/?p=559

Thursday, March 13, 2008

நீடூர் அ.மு. சயீத் வாழ்க்கை வரலாறு


நீடூர் அ.மு. சயீத் வாழ்க்கை வரலாறு


சிந்தனைச் சித்தர், தமிழ்மாமணி நீடூர் அ.மு. சயீத் அவர்களது வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிடும் முயற்சியினை நவமணி பதிப்பகத்தின் சார்பில் மயிலாடுதுறை நம்ம ஊரு செய்தி மாத இதழ் ஆசிரியர் முனைவர் அ. அய்யூப் மேற்கொண்டுள்ளார்.

அல்ஹாஜ் அ.மு. சியீத் நாடறிந்த எழுத்தாளர். தீந்தமிழ்ப் பேச்சாளர். திக்கெட்டும் புகழ் பரப்பும் வழக்கறிஞர்.

நீடூரில் 09.10.1933 இல் பிறந்த இவர் எழுபதைத் தாண்டிய இளைஞர். நெடுங்கால சமுதாய ஊழியர். நீடூர் நெய்வாசல் J.M.H. அரபிக் கல்லூரியின் தலைவர்.

சென்னை வானொலியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சுழற்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர். மயிலாடுதுறை பல்சமய உரையாடல் மையத்தின் இஸ்லாமியப் பிரிவுத் தலைவர்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவரான இவர் உலகளாவிய நிலையில் பத்து மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவர்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், இலங்கை, தெற்கு வியட்நாம், சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தவர். ஹஜ் கடமையை ஆறு முறையை நிறைவேற்றிய பேறு பெற்றவர்.

தமிழ்மாமணி, சிந்தனைச் சித்தர், சிந்தனைச் செம்மல், பொன்மொழிச்செம்மல், போன்ற சிறப்புப் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிந்தனைக் களஞ்சியம், சிந்தனைத் துளிகள், இஸ்லாமியச் சட்டம், சிந்தனைச் செல்வம், புனித ஹஜ் உம்ரா பயணக் குறிப்புகள், பெருமானாரின் புனித ஹஜ் உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.

இவரது ஆக்கங்கள் மணிச்சுடர், மணிவிளக்கு, முஸ்லிம் முரசு, மனாருல் ஹ¤தா, மஞ்சரி, பிறை, சமரசம், மறுமலர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தமிழக, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவருடைய அன்பர்கள், நண்பர்கள் அவரைப் பற்றிய செய்திகளை எழுதி அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் படங்களையும் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நவமணி பதிப்பகம்
எண் 44 எல்டாம்சு சாலை
தேனாம்பேட்டை
சென்னை 600 018