Monday, June 7, 2010

என் பெயர் நூர்ஜஹான்

என் பெயர் நூர்ஜஹான்

என் பெயர் நூர்ஜஹான்
என் வயது இருபத்து எட்டு.

எங்கள் வீடு இன்றைக்கு
பரபரப்பாக இயங்கியது
அந்த பரபரப்புக்கு
நான்தான் காரணம்
என்றாலும் குஉட
எனக்கு மட்டும் ஏனோ
எந்த பரபரப்பும் இல்லை.
எனக்கு இயல்பாகவே
இவையெல்லாம் இருந்தன.

இது எத்தனையாவது முறை?
உனக்க ஞாபகம் இல்லை
ஒன்று இரண்டு முறையென்றால்
ஒரு வேளை ஞாபகமிருக்கும்

என்னைப் பெண் பார்க்க வருவதை
என் அம்மா யாரிடமோ
சொல்லிக் கொண்டிருந்தாள்
‘சென்ற முறை வந்தவர்கள்
என்ன சொன்னார்கள்?’
எதிர்த்தரப்பிலிருந்து இளக்காரமாய்
கேள்வி பிறந்தது
‘பெண்ணென்றால் ஆயிரம் பேர்
பார்த்து விட்டு செல்வது
இவ்வுலகில் நடப்பதுதானே…
யாருக்கு யார் என்று
இறைவன் எழுதி வைத்துள்ளானோ
அப்படித்தானே எல்லாம் நடக்கும்’
எதிர்கேள்விக்கு பதில் சொல்லி
என் அம்மா சமாளித்துப் பேசுவாள்
ஆம்…
இப்படிப் பேசியே என் அம்மா
சுமாதானம் கொள்வாள்.

வாசலில் ஆட்டோ சப்தம்
அவர்கள் வந்து விட்டார்கள்.
காத்திருந்த தந்தையார்
ஓடிப்போய் வரவேற்று
அழைத்து வந்தார்.
இப்படி எத்தனை முறை
என் தந்தை ஓடியிருப்பார்?
ஏன் அவருக்கு மட்டும்
இன்னும் சலிப்பே இல்லை?
எனக்கு ஆச்சரியமாய் இருக்கும்.
அதுதான் பெற்றவரின் கடமையா?

என்னைச் சுற்றியும் மாப்பிள்ளை வீட்டார்
என்ன படித்திருக்கின்றாய்?
என்ன ஓதியருக்கின்றாய்?
இப்படியான கேள்விகளுக்கெல்லாம்
படபடவென்று பண்புடனே
பதில் உரைப்பேன்ஃ
‘நல்ல புத்திசாலி பொண்ணு’
வியப்புடன் மாப்பிள்ளை வீட்டார்
விழிகளை உயர்த்துவார்கள்.
இப்படியான கேள்விகள்
எனக்கொன்றும் புதிதல்லவே.
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்
எனக்குள் பதிந்து போனவைதானே….
எத்தனை முறை
இப்படி பதிலுரைத்திருப்பேன்…
எனக்கல்லவா தெரியும்.

‘எங்களுக்குப் பெண் பிடித்து விட்டது.
இருபது பவுன் நகையும்
இருபது ஆயிரம் பணமும்
எங்களுக்குக் கொடுத்து விடுங்கள்!’

என் பொண்ணுக்குச் செய்ய
எனக்கும் ஆசையிருக்கு.
ஆனால் அவ்வளவு முடியாதுங்களே…’
என் தந்தையின் தழுதழுத்த குரல்
எனக்கு அழுகையை வரவழைத்தது.
பெண்கள் மட்டும் என்ன
ஏலச்சந்தையில் விடப்படும்
ஏலப்பொருட்களா?

என் வயதொத்த தோழிகள்
இடுப்பில் குழந்தையுடன்
செல்லுகின்ற போதெல்லாம்
எனக்கும் இப்படி ஆசை பிறக்கும்
‘இறைவா… எனக்கும்
திருமண பாக்கியம் கொடுப்பாயாக’
இறைவனிடம் இறைஞ்சுவேன்.

கண்ணாடியில் முகம் பார்த்தேன்
என் தலையில் ஒன்றிரண்டு வெள்ளை முடிகள்.
‘உனக்குன்னு ஒருத்தன்
பிறக்காமலா போயிருப்பான்?’
அடிக்கடி என் பாட்டி
அன்புடனே சொல்லிக் கொண்டிருப்பாள்.
‘எனக்குன்னு ஒருத்தன்
பொறக்காமலா போயிருப்பான்?’
எனக்கும் நம்பிக்கை ஆசைகள்
அப்போதெல்லாம் பிறக்கும்.

என் பெயர் நூர்ஜஹான்
என் வயது இருபத்து ஒன்பது!

மு. அய்யூப் கான்(கவிஞரை தொடர்பு கொள்ள 97887 81404)

கவியேறு உமறுப் புலவரவர்களின் வரலாற்றுச் சுருக்கம்

கவியேறு உமறுப் புலவரவர்களின் வரலாற்றுச் சுருக்கம்


பெருமானார் முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் இப்னு பாகிர் என்பார் வாழ்ந்திருந்தார். பெருமானாரின் திருத்தோழராகும் பேறு பெற்ற அன்னார், அண்ணலாரின் அரிய வாழ்த்தினைப் பெற்றவர்.அவாரின் வழித்தோன்றல்கள் அனைவரும் காலமெல்லாம் கமழ்மணத்துடன் வாழவேண்டும் என்றே அண்ணலார் ஆசி கூறினார். அந்த பரம்பரையில் வந்தவரே 'சேகு முதலியார்' என்ற செய்கு முஹம்மது அலியார் ஆவர். அன்னார் மலையாள நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்க்கு வந்து,திருநெல்வேலியைச் சார்ந்த நாகலாபுரத்தில் குடியிருந்து கொண்டு, அதையடுத்திருந்த எட்டையபுரத்து மகாராஜாவிடம் வாசனைத் திரவியங்களை எடுத்துப் போய் விற்றுக் காலம் கழித்து வந்தார்.உயர்ந்த மணப்பொருட்களை வழங்கித் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சேகு முதலியார் தம் அருகிலேயே வாழ்ந்து வரவேண்டு மென்று மன்னர் விரும்பினார்.என்வே, சேகு முதலியாரும் மன்னரின் விருப்பிற்க்குக் கட்டுப்பட்டு, நாகலாபுரத்திலும் எட்டையபுரத்திலுமாக வாழ்ந்து வந்தார். அக்காலத்தில்தான், அவருடைய ஒப்பற்ற அருந்தவக் கொழுந்தாக 'உமறு' என்ற அழகிய குழந்தை பிறந்தது. இளமையிலே எழிலும் கல்வியார்வமும் வாய்க்கப் பெற்ற சிறுவர் உமறு, எட்டையபுரத்து அரண்மனைத் தமிழ்ப்புலவராயிருந்த 'கடிகை முத்து புலவர்'என்பாரிடம் தமிழ்க் கல்வி பயிலத் தொடங்கினார்.பல்வகைக் கல்வி-கேள்விகளில் தேர்ந்த உமறு,தம் ஆசானின் பெருமதிப்பிற்குாரிய மாணவரானார். இவ்வாறிருக்கையில், ஒருநாள் வடநாட்டிலிருந்து ஆாரியமும் அருந்தமிழும் கற்றுப் புலமை பெற்ற 'வாலை வாருதி' என்ற புலவர் எட்டையபுர அரசவைக்கு வந்து சேர்ந்தார்.தம்மை வாதில் வெல்லத் தக்கார் யாருமிலார் என்று அவர் மார் தட்டிப் பேசிப் பிற புலவர்களை வாதுக்கழைத்தார். அதன்படியே எட்டையபுரத்து அரசவையிலும் வந்து அறிவித்தார். மன்னரும் ஆவன செய்ய இசைந்தார்.புலமைத் திறத்தாலன்றி, மாய மந்திரங்களாலேயே பல அரசவைப் புலவர்களை வெற்றிகொண்ட வாலைவாருதியைப் பற்றிக் கடிகைமுத்துப் புலவர் கேள்வியுற்றிருந்தார். அதனால், வித்தைகள் புரியும் வித்துவானைத் தம்மால் எவ்வாறு வெற்றிகொள்ள முடியுமென்ற நீங்காக் கவலையில் ஆழ்ந்திருந்தார்.ஆசானின் கவலையை அறிந்த மாணவர் உமறு,அவரை அணுகி,கவலைக்கான காரணத்தை விளங்கிக்கொண்டார். எனவே, வாலை வாருதியுடன் வாதிடுவதற்கான குறிப்பிட்ட நாள் வந்ததும், தம் ஆசிரியாரிடம் அவருக்குப் பகரமாக அரசவை செல்லுவதற்கான அனுமதியை வலிந்துப் பெற்று,எட்டையபுரத்து அரசவைக்கு வந்து சேர்ந்தார்.உடல் நலக் குறைவால் கடிகைமுத்துப் புலவர் வரவில்லையென்றும்,அவருக்குப் பகரமாக அவாரின் மாணவர் வந்திருக்கிறார் என்றும்,வாலை வாருதி தம் சொற்பொழிவைத் தொடங்கலாம் என்றும் மன்னர் உத்தரவிட்டார்.அதைச் செவியேற்ற வாலைவாருதி,தம் வலக்கையிற் போட்டிருந்த தங்கக் கடகத்தை அசைத்து மேலேற்றினார்.வழக்கமாக அக்கடகத்திலிருந்து ஒலிக்கும் 'வாலைவாருதி என்றறியீரோ' என்ற சொற்கள், அன்றைக்கு மட்டும், 'வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய்!'என்று உண்டாயின.அப்போது உமறுப் புலவர்,தம் இடுப்பில் செருகியிருந்த யாழ்ப்பாணத்து எழுத்தாணியை எடுத்து நிலத்தில் ஊன்றி,"என் எழுத்தாணியே! இவருக்கெதிர் பேசு!"என்று கட்டளையிட்டார். ஒன்றும் நிகழவில்லை!பின்னும் உத்தரவிட்டார்.அப்போதும் ஏதும் நிகழவில்லை!மூன்றாவது முறையிலும் முயன்று தோல்வி கண்ட உமறு, கண்கள் சிவக்க,முகத்தில் தீக்கனல் பறக்கக் கடுஞ்சினம் கொண்டு, எழுத்தாணியைப் பார்த்து, 'பேசு!'என்று உரக்கக் கூறி உத்தரவிட்டார். அவை கிடுகிடுத்த அவ்வோசையைத் தொடர்ந்து, அவ்வெழுத்தாணியிலிருந்து கீழ்க்காணும் பாடல் உதிர்ந்து உள்ளங்களை அதிர வைத்தது:"சமரதுர கததுங்க மனருஞ்ச பாசென்றுசாரிசமா சனமீதிலேஅமரவொரு நரகொம்பு தினமுஞ்சு மாசெல்லுமமுதகவி ராஜனானேதிமிரபகை வரைவென்ற பருதியெனு மெமதெட்டத்தீரனணி வாயில்வித்வான்உமறுகுமு றிடிலண்ட முகடும்ப டீரென்னுமுள்ளச்சம் வையும்பிள்ளாய்!"இதனைச் செவியுற்ற புலவர் வாலைவாருதி,உளம் பதறி,மெய் நடுக்குற்று,தனது மந்திரச் சக்தியெல்லாம் இத்தகைய அற்புதத்தின் முன் அற்பம் என்றுணர்ந்து, எழுந்து சென்று உமறு புலவாரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரி,அரசவையை விட்டு அகன்றார்.இந்நிகழ்ச்சி, மன்னருக்கு உமறுப் புலவர் மீது ஒப்பற்ற மதிப்பை ஏற்படுத்திற்று. மகிழ்ச்சிப் பெருக்கால், மன்னர் தம்மிடமிருந்த விருதுகள் பலவற்றையும் உமறுப் புலவருக்கு வழங்கி அனுப்பிவைத்தார். வெற்றி பெற்று வீடு திரும்பிய தம் மாணாக்கரை இறுகத் தழுவிக்கொண்ட கடிகைமுத்துப் புலவர்,தாம் அப்போது முதுமை எய்திவிட்டதால், அன்றுமுதல் உமறே எட்டையபுரத்து அரண்மனை அவைப் புலவராக இருக்கவேண்டுமென்று ஆசி கூறி அனுப்பி வைத்தார். அன்று முதல் உமறுப் புலவர் எட்டையபுரத்து அரண்மனையை அலங்காரித்து வந்தார்.* * * * * * * *
சீறாப்புராணம் இயற்றப்பெற்ற வரலாறு

தமிழகத்தில் ஆங்காங்கிருந்த முஸ்லிம் மக்கள் இலக்கிய ஆர்வத்துடன் கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இலக்கியங்களின் உபந்நியாசங்களைக் கேட்டு வருவது அன்றைய வழக்கமாக இருந்தது.அக்காலத்தில்,இராமநாதபுரச் சேதுபதி மன்னாரின் அமைச்சராய் இலங்கி வந்த செய்கப்துல் காதிர் என்ற 'சீதக்காதி மரைக்காயர்'அவர்கள் இதனை உணர்ந்து,முஸ்லிம்கள் அவர்களின் மார்க்க அடிப்படையில் அமைந்த போரிலக்கியங்களின் உபந்நியாசங்களைக் கேட்கவேண்டும் என்ற பெருவிருப்பை உடையவராயிருந்தனர். தமது இவ்வேட்கையைத் தணிப்பதற்கான நல்வாய்ப்பை எதிர்நோக்கியும் காத்திருந்தார்.இவ்வாறிருக்கையில்,ஒருநாள் அரசாங்க வேலையின் நிமித்தம் சீதக்காதி மரைக்காயர் அவர்கள் எட்டயபுர அரசவைக்குச் செல்ல நேர்ந்தது.ஆங்கு உமறு என்ற பெயாரில் ஒரு புலவர் இருக்கக் கண்டு,'இவரே பெருமானாரின் வாழ்க்கையைக் காப்பியமாகப் பாட வல்லவர்'என்று ஓர்ந்தார். சின்னாட்கள் கழிந்த பின்னர் தமதில்லத்தில் நிகழ்ந்த விருந்தில் கலந்துகொள்ள உமறுப் புலவர் வந்த போது தமது உள்ளக் கிடக்கையை அன்னாரிடம் வௌரியிட்டார் சீதக்காதி வள்ளல்.புலவரும் இத்னை அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். எனினும்,வள்ளல் பெருமானாரின் வரலாற்றுச் செய்திகளை உரையாகத் தருவது யார் என்ற கேள்வி எழுந்தது.சீதக்காதி வள்ளல் தம் ஆன்மீக வழிகாட்டியான 'இறைநேசர் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா'அவர்களை அணுகி,பெருமானாரின் வாழ்க்கைச் சாரிதையினைக் காவியமாகப் பாட உமறுப் புலவருக்கு உரை வழங்குமாறு கோரி நின்றார்கள்.உமறுப் புலவாரின் அலங்கோலத் தோற்றத்தைக் கண்டு,உரை கொடுக்க அப்பா அவர்கள் இசையவில்லை.உளம் வாடிய உமறுப் புலவர்,பெருமானாரின் வாழ்வைக் காவியமாக்கி, அதன் நிமித்தமாக அன்னாரைத் தாம் காணும் நாள் எந்நாளோ என்று ஏங்கி,பள்ளிவாயி லுக்குள் சென்றமர்ந்து தம் உள்ளத்து உணர்ச்சிகளைப் பாக்களாகப் பாடிக்கொண்டிருந்தார். இவ்வாறு எண்பத்தெட்டு பாடல்கள்* பாடி முடித்தபோது புலவரைத் துயில் ஆட்கொண்டது. பெருமானார்(ஸல்) அவர்கள், புலவாரின் கனவில் தோன்றி,மறுபடியும் அப்பா அவர்களிடம் சென்று உரை கேட்குமாறு பணித்தனர்.கண் விழித்த உமறுப் புலவர் கருணை நபியவர்களின் கட்டளையைச் சிரமேற்கொண்டு,அப்பா அவர்கலிடம் சென்று உரை கோரினர்.முன்போலன்றி, புலவரை எதிகொண்டழைத்து உபசாரித்த அப்பா அவர்கள்,சீறா உரை கொடுக்கச் சம்மதித்தனர்.அப்பா அவர்கள் தாங்களாகவும்,தம் மாணாக்கராகிய மஹ்மூது பந்தர் என்று வழங்க பெற்ற 'பறங்கிப் பேட்டையைச் சார்ந்த 'மாமூ நைனார் லெப்பை' என்பார் மூலமும் உமற்ப் புலவருக்கு உரை வழங்கினர்.அச்செய்திகளைக் கொண்டு சீறாக் காப்பியம் படைக்கத் தொடங்கினார் நம் புலவர்.இதற்கிடையில்,சீறாவைப் பாடப் பேருதவியாக இருந்த சீதக்காதி மரைக்காயர் அவர்கள் இறையடி சேர்ந்தனர்.காப்பியம் படைத்து வந்த உமறுப் புலவாரின் உள்ளத்தில் போரிடி விழுந்தது. அந்நிலையில், புலவாரின் இரங்க தக்க நிலையை உணர்ந்த 'அபுல்காசிம் மரைக்காயர்' என்ற வள்ளல் பெருமான்,புலவரை அன்புடன் ஆதாரித்து,சீறாவை இயற்றத் தாம் உறுதுணையாயிருப்பதாக வாக்களித்துப் பல உதவிகளும்செது ஊக்கினார். 'சீறாப்புராணம்"என்ற ஒரு பெருங்காவியம் உருவெடுத்தது. ஈடிணையில்லா இப்பேருதவி- களுக்கு நன்றி சொலும் முகத்தான், உமறுப் புலவர், அபுல் காசிம் மரைக்காயரைத் தம் சீறாப்புராணத்தில் பல இடங்களில் மறவாமல் நினைவு கூர்ந்து போற்றி புகழ்ந்துள்ளார்.உமறுப் புலவாரின் 'சீறாப்புராணம்'அண்ணல் பெருமானாரின் வாழ்க்கை முழுவதையும் கூறவில்லை என்பது, வியப்பிற்குாரியதும், வருந்தத் தக்கதுமாகும்!யாது காரணத்தாலோ சீறாவில் நபியவர்களின் வரலாறு முழுமையாகக் கூறப்பெறவில்லை. இருப்பினும், இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் சீறாப் புராணத்திற்க்கு தனியோர் இடமுண்டு.பெருமானாரின் தூய திருவாழ்க்கையின் எஞ்சிய பகுதிகளை பனூ அகமது மரைக்காயர் யாத்து முடித்தார்கள்.இதுவும் 'சின்ன சீறா'என்ற பெயாரில் பிரபலமாகியுள்ளது.பண்டிதர்களிடையே ஓரளவு பழக்கத்தில் இருக்கும் சீறா,சாதாரண வாசகர்களிடையே நிலையான ஓர் இடத்தைப் பெறாமல் போனது வியப்பிற்குாரியதாகும்.

சீறாவின் பிரதிகள் எளிதில் கிடைக்காமல் இருந்தது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். பாடல்களில் விரவிக் கிடக்கும் அரபி,பார்சிச் சொற்கள்,படிப்போருக்கு மலைப்பைக் கொடுத்திருக்கலாம். இக்குறைகளை ஓரளவுக்குச் சாரிசெய்வதற்கு நாங்கள் முயன்றுள்ளோம். இப்பணியில் எங்களை ஈடுபடுத்திய வல்ல நாயனுக்கு மீண்டும் மனம்,மெய் மொழி ஆகியவற்றால் நன்றி கூறி அமைகிறோம்.