Sunday, August 1, 2010

”கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”

”கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”
டாக்டர். S.ஆபிதீன்

http://www.mudukulathur.com/educationdetails.asp?id=326

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். S.ஆபிதீன் தனது பேராசிரியர் பணியுடன் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இஸ்லாமிய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி விழிப்பு உணர்வு, மேற்படிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். மாணவர் களுக்காக பல ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி வரும் இவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
கல்வி வழிகாட்டும் முகாம், மேற்படிப்பு குறித்த ஆலோசனை முகாம், பெண் கல்வியின் அவசியம், வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் என்ற தலைப்புகளில் தமிழகத்தின் நகரங்களில் மட்டுமன்றி பல்வேறு சிற்றூர்களிலும் முஸ்லிம் அமைப்புகளின் முயற்சியில் கல்விக் கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தப்படுவது உண்மையிலேயே ஓர் உற்சாகமான விஷயம் தான்.
அதிக பண செலவு, உடல் உழைப்புடன் சமுதாயத்தில் கல்வி விழிப்பு உணர்வை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் கல்வி கருத்தரங்குகளில் பாதிக்கும் மேல் போதுமான மாணவர்கள் வருகையின்றி ஓரு சடங்காகவே முடிந்து வருகிறது.
இது மாதிரியான நிகழ்ச்சிகள் சில ஊர்களில் தோல்வியடைவதும் அல்லது அவைகள் வெறும் சடங்குகளாகவே நடந்து முடிந்து விடுவதன் காரணத்தை ஆராயும் போது சில உண்மைகள் நாம் அறிய வந்தது. அந்த வகையில் …
கல்வி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற அமைப்புகள், தங்களின் அமைப்பு சார்ந்த விளம்பரங்களில் காட்டுகின்ற ஆர்வத்தினை மாணவர்களை அழைத்து வருவதில் காட்டுவதில் மிகுந்த குறைபாடு தெரிகிறது. இதுபோன்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எங்கு நடைபெறுகிறது என்பதனைத் தேடி அலைந்து கலந்து கொள்கின்ற மாற்று சமுதாய மாணவர்களுக்கு மத்தியில் தங்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அழைப்பிதழ் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து முடங்கிக் கிடக்கிறது நமது இஸ்லாமிய மாணவச் சமுதாயம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமுதாய விழிப்புணர்விற்காக இதையும் செய்யத் தயாராகிக் கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சி மாணவர்களுக்குத் தானே …! தமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற அறியாமையில் ஒதுங்கி நிற்கும் பெற்றோர்களிடம் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு சரி நிகராக பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை ஏற்பாட்டாளர்கள் பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும்.
அடுத்த கொடுமை. இன்றும் சில ஊர்களில் மிக அதிக பொருள் செலவில் ஏற்பாடு செய்து அதீத முயற்சியின் காரணமாக “கல்வி விழிப்பு உணர்வு மற்றும் மேற்படிப்பு வழிகாட்டும் முகாம்” என்ற பெயரில் மாணவர்களை அழைத்து வந்து முகாம்கள் நடத்துகின்றனர். மூன்று மணிநேர நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்களின் முகஸ்துதி வார்த்தைகள், வாழ்த்துரைகள், ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்திக்கொள்ளுதல் என்று இரண்டே முக்கால் மணிநேரத்தை விரயம் செய்துவிட்டு இறுதியாக சிறப்பு அழைப்பாளர்களிடம் பளீஸ் 10 -15 நிமிடத்திற்குள் முடித்துக் கொள்ளுங்கள், லுகருக்கு நேரமாச்சு…! என்று அன்புக் கட்டளையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் 21/2 மணி நேரம் மாணவர்களுக்கு கூற வேண்டிய அறிவுரைகள் வெறும் 15 நிமிடங்களில் எந்த வகையிலும் எடுத்துக் கூற முடியவே முடியாது என்பதை புரிந்து கொண்டு நிகழ்ச்சி நிரலை சரி வர அமைத்துக் கொள்ள முயற்சி செய்யலாமே !
இதுபோன்று மாற்றிக் கொள்ளவேண்டிய, ஆதங்கப்பட வைக்கின்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்தாலும் பல ஊர்களில் மிகவும் போற்றத்தக்க வகையில் கல்வி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. உதாரணமாக, கடந்த 09.05.2010 அன்று கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சிதறிக்கிடக்கும் சுமார் 1500 இஸ்லாமிய மாணவர்கள், கள்ளக்குறிச்சியின் மிகப்பெரிய மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் 2.30 மணிவரை நடத்திய கருத்தரங்கில் (இஸ்லாமிய மாணவர்கள் மட்டும்) மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டது மிகவும் எழுச்சியாக இருந்தது. இது போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. அதற்கு அல்லாஹ்விற்கு நன்றி கூறிக் கொள்வோமாக !
பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் – மே மாதங்களில் தான் இது போன்ற மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இனிவரும் ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடவேண்டும். காரணம், பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதத்திலேயே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. +2 மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களின் மேற்படிப்பிற்கான இலக்கினை மார்ச் மாத இறுதியிலேயே அவர்களின் மனதில் விதைத்து விடவேண்டும்.
இன்னும், உயர் கல்விக்கு முஸ்லிம் மாணவர்களை வழி காட்டுகின்ற அதே வேளையில் உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியோடு சேர்வதற்கான அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்ற சூட்சுமத்தையும் கற்றுத்தர வேண்டும். மாணவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து அவர்களின் உயர் கல்வி இலக்கை இலகுவாக அடையும் “தன்னம்பிக்கை மேம்பாட்டுப் பயிற்சியையும் ஒவ்வொரு கல்வியாண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகள் அந்தந்த ஊர்களில் நடத்த முற்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இஸ்லாமிய மாணவ சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.
ஆக, கல்வியின் மாண்பை உணராமல் பலகாலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இந்த சமுதாயம் தூக்கம் கலைந்து புரண்டு படுத்து இப்பொழுதுதான் எழுந்து உட்கார முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இனி உட்கார்ந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கு நிகராக ஓட ஆரம்பிப்பதற்கு சில காலங்கள் கண்டிப்பாக அவசியம். அதற்காக சமுதாயத்தின் கல்வி விழிப்புணர்வு முயற்சிகளில் வல்ல இறைவன் நம்மை சோர்ந்து விடவோ அல்லது பின்வாங்கச் செய்துவிடவோ மாட்டான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
பேராசிரியர் ஆபிதீனைத் தொடர்பு கொள்ள : 99658 92706

E-mail : abideen222270@yahoo.com


Thanks : Samarasam Tamil Fortnightly
May 16-31,2010

இறைவனிடம் கையேந்துங்கள்-அல்லாஹ்......

இறைவனிடம் கையேந்துங்கள்-அல்லாஹ்
என்றுமே இல்லையென்று சொல்வதில்லையே!
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி(ஐ.பீ.எஸ்(ஓ)

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=329

இறைவன் இறைக்கின்றான் என்று அல்லாஹ்வினை நம்புகிறவர்களும்-
இறைவன் இல்லை என்று வாதிடும் நாத்தீகர்களும் உலகில் உண்டு.
ஆனால் ஒன்றுமட்டும் உறுதியானது. அது என்னவெனில் இறைவனை நம்பி அவனிடம் கையேந்துவதால் உங்களுக்கு எந்த இழப்புமில்லை.

இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருந்து இன்னல் வரும் நேரத்தில் கைகொடுப்பவன் என்பது மட்டும் உறுதியானது. சமீபத்தில் இந்தியாவின் மங்க@ர் ஏர்போர்டில் துபாயிலிருந்து 158 பயணிகளுடன் வந்த ஏர் இந்திய விமானம் ஓடுகிற தளத்தினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி பயணம் செய்த எட்டு பேர்களை தவிர்த்து அனைவரும் மரணம் அடைந்தது அனைவரும் தெரிந்ததே. ஆனால் அதில் அதிர்ஸ்டவசமாக தப்பித்த கிருஷ்ணன் என்ற பயணி சொல்லும் போது, ‘விமானம் எரிந்து துண்டு, துண்டாக சிதறியபோது விமானப்பகுதியில் ஒரு ஓட்டை தெரிந்தது. அதனைக் கடவுளின் கருணையாகக் கருதி அதன் வழியாக தப்பித்தேன்’ என்று சொல்லியுள்ளார். ஆனால் இதற்கு நேர்மாறாக இறவா அல்லாஹ்வினை நம்பாது இறந்த மனிதர்கள் அடக்கஸ்தலத்தலமான இராமநாதபுரம் ஏர்வாடி மட்டும் மதுரை கோரிப்பாளையம் தர்காக்களை நம்பி படையெடுத்து தன் ஒன்ரறை வயது ஒரே ஆண் மகனான காதர் யூசுப்பினை இழந்த சிரின் பாத்துமாவின் பரிதாபமும் அவனை மூட நம்பிக்கையினம் மொத்த உருவிற்கு நரபலி கொடுத்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் அப்துல் கப+ரின் கதையினையும் 27.7.2010 அனைத்துப் பத்திரிக்கைகளும் விலா வாரியாக எழுதியிருந்து மூட நம்பிக்கை இஸ்லாமியர்களிடையே எவ்வாறு வேரூன்றியிருக்கிறது என்று பறைசாற்றகின்றன. தப்லீக் ஜமாத்தும், தவ்ஹீத் ஜமாத்துக்களும், சமுதாய தொண்டு நிறுவனங்களும் எவ்வளவோ மக்களிடம் விழிப்புணர்ச்சிகள் மேற்கொண்டாலும் எங்கே அவைகளெல்லாம் பயனற்றுப் போய்விட்டதோ என்ற ஐயப்பாடு எழுந்துவிட்டது இயற்கையே.. ஆனால் அவர்கள் தங்களின் முயற்சிகளில் இன்னும் தீவிரம் காட்டி எல.;லாம் வல்ல அல்லாஹ்வினைத் தவிர யாரிடமும் நீங்கள் உங்கள் தேவைக்கு கையேந்தாதீர்கள் என்று பறை சாற்ற வேண்டும் என்பதிற்காக உருவானதே இந்த மடல்.



துன்பம் வரும்போது இறைவனை நினைக்கும் நாம் இன்பத்தில் திளைக்கும்போது மட்டும் இறைவனை மறந்து விடுகிறோம். சில சமயங்களில் இறைவன் இருப்பது சிலருக்கு சந்தேகம் எழுவதுண்டு. இறை மறுப்பாளர்கள் வைக்கும் வாதமெல்லாம், ‘இறைவன் இருக்கிறானென்றால் உலகில் ஏழை பணக்காரனென்ற ஏற்றத்தாழ்வு ஏனிருக்க வேண்டும், சிலருக்கு கிடைக்கும் நல்லருள் பலருக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தால் இறைவன் இருப்பதினையே சந்தேகப்படுகின்றனர். அது அவர்கள் அறியாமை என்றே சொல்ல வேண்டும். இறைவனின் அருள் எல்லோருக்கும் சமமாகத்தான் வழங்கப்படுகிறது. ஆனால் ஒருவனுடைய உள்ளம் அமைதியாகவும், சந்தோசமாகவும், கோபமடையாமலும், தீய எண்ணங்கள் அவன் உள்ளத்தில் இருள் கவ்வாமலும் இருந்து இறைவனிடம் தன் குறைகளைச் சொல்லிவிட்டு வாளாதிருக்காமல் தன் முயற்சியில் ஈடுபட்டால் இறைவன் தன் அடியாருக்கு பக்க துணையாக இருக்கிறான். இறைவனுக்கும் அடியாருக்கும் இடையில் மூன்றாமவருக்கு எந்த வேளையுமல்ல. ஆகவே சிலர் அந்த மூன்றாவரை தேடி தர்காக்களுக்கும், சாமியார்களிடமும், போலி மந்திரவாதிகளிடமும், குறி சொல்வர்களிடமும் சோரம் போகிற படியால் தான் மேலேக் குறிப்பிட்ட 27.7.2010 முஸ்லிம் சிறுவன் நரபலி போன்ற உலகில் விரும்பத்தகதாக அனாட்சரமான சம்பவங்கள் முஸ்லிம் மக்களிடையே மட்டுமல்லாது அனைத்து மதத்தினரிடமும் ஏற்படுகிறது.
நாம் கம்புயூட்டரின் செயல்பாட்டினை எடுத்துக் கொள்வோம். கனினியில் ஒரு செய்தியினை அனுப்புகிறோம். அதனை அனுப்புகிறவர் அடியான் என்று வைத்துக் கொள்வோம். அதனை ஏற்றுக் கொள்ளும் ரிஸீவரை இறைவன் என எடுத்துக் கொள்வோம். அனுப்பிய மெசேஜ் குழப்பம் இல்லாததாகவும், அதனை அனுப்புகிறவர் நல்லொழுக்கம் கொண்டவராகவும், தீய எண்ணங்கள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் அப்போது தான் அவர் இறைவனிடம் விடுக்கும் வேண்டுகோள்(மெசேஜ்) இறைவனிடம் முறையாக சேர்ந்து அவனுடைய கோரிக்கைகளை இறைவன் நிறைவேற்றுகிறான். உதாரணத்திற்கு ஒரு குழந்தை பசியால் கதறுகிறது. அந்தக் குழந்தையின் கதறல் சப்தம் தாயினால் தான் உணர முடியும். அந்தக் குழந்தையின் குரலைக் கேட்டு தாய் தன் உதிரத்தில் உதிர்த்த அமுதத்தினை குழந்தைக்கு தாரைவார்க்கிறாள். அதுபோல் தான் அல்லாஹ்வும் தன் அடியார்கள் ஓர்மையுடன் விடும் வேண்டுகோளை நிச்சயம் நிறைவேற்றுவான். அதனை விட்டு விட்டு தர்காக்களுக்கும், கபர்ஸ்தானுக்கும் சென்று வேண்டுகோளை நிறைவேற்ற கையேந்தினால் பல்வேறு விரும்பத்தகாத செயல் மதுரை கோரிப்பாளைத்தில் ஒரு அப்பாவி தாயினுக்கு தன் பாலகனை பலிகொடுத்த கதையாகவும், தர்காக்களில் தங்கும் பெண்களின் கற்புக்கு பாதகம் வரும் நிலையும், மனநிலை பாதித்தவர் மேலும் நோய் அதிகமாகி பராரியாக அலையும் பரிதாபமும் ஏற்படும்.
சில சமயங்களில் நாம் தொழும் போது நமது மனம் பல விசங்களில் அலைமோதி எத்தனை ரக்காத்துகள் தொழுதோம் என்றே நமக்கு மட்டுமல்ல ஏன் சில தொழுகை நடத்தும் இமாம்களுக்கே மறந்து விடுகிறது. அப்படிப்பட்ட நிலையிலிருந்து விலகி மனதினை ஓர் முகப்படுத்தி இறையட்சத்தில் ஈடுபடும்போது நாம் விரும்பும் காரியம் நிச்கயம் நடக்கும். அதற்கு நாம் எண்ண செய்யவேண்டும்:

1) பள்ளிக்குச் செல்லும் போது சுத்தமான ஆடைகள் அணியப் பழகவேண்டும். சிலர் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சுத்தமான ஆடையணிந்துவிட்டு பள்ளிக்கு வரும் போது வெறும் படம், எழுத்துகள் பொறித்த சட்டை பணியன்களை அணிந்து வருகின்றனர். அதனால் தொழுபவர் அவர்கள் மேலங்கிகளை பார்வையிட்டு அதில் என்ன படம் போட்டிருக்கிறது அல்லது எழுதியிருக்கிறது என்ற கவனத்தினை செலுத்துகின்றனர். ஆகவே தொழச்செல்லும் போது இறை பயத்துடனும,; சுத்தமான ஆடையுடனும் செல்லவேண்டும்.

2) மனதில் மகிழ்ச்சியான விசயங்களை நிலை நிறுத்த வேண்டும். நமது வாழ்வில் தினந்தோறும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கின்றோம், இன்ப துன்பங்களுக்கு ஆளாகின்றோம்.. அப்படிப்பட்ட சூழலில் வாழ்வின் தாழ்வுகளையும், துன்புங்களையும் பிரதானமாக எடுத்துக் கொள்ளலாமா? ஒரு சமயம் நண்பர் ஒருவருடன் விமானப்பயணத்தில் ஈடுபட்டேன். அந்த நண்பர் தன்னுடைய வாழ்வில் நடந்த சோக சம்பவங்களையே பிரதானமாக பேசிக் கொண்டு வந்தார். ஆனால் அந்த சோக சம்பவங்களிடையே அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதினை அவருக்கு ஞாபகமூட்டி உங்கள் வாழ்வில் நீங்கள் பலருக்குக் கிடைக்காத விமானப்பயணத்தினை மேற்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதினை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள் என்று தேற்றினேன. ஆகவே துன்பங்களை நினைத்துப்பார்த்து இறைவனை குறை கூறுவதினை விட கிடைத்த இன்பத்தினை நினைத்து மகிழ்ச்சியடைய பழக வேண்டும்.

3) நாம் நல்லவைகளையே பார்க்க வேண்டும்-பேச வேண்டும். நல்ல போதனைகளை செவிமடுத்து கேட்க வேண்டும். சிலர் சொல்வர் ‘களவையும் கற்று மற’வென்று. ஆனால் விஷம் எப்படியிருக்கிறது என்று சுவைத்துப்பார்த்தால்தான் தெரிய முடியுமா என்று நீங்கள் கேட்க வேண்டும். இனிய சொற்களிருக்க கடும் சொற்களை பேசக்கூடாது. அதனால் பல குடும்ப வாழ்வில்-நட்புகளில் குழப்பங்கள் வரக் காரணமாக அமைந்து விடுகிறது.

4) அடுத்தவர்களின் தீய செயல்களிலிருந்து அவர்களை வெளியேற்ற உதவ வேண்டும். மனிதன் ஆறறிவுள்ளவன் அவனுக்கு தீயது எது நல்லது எது என்று பகுத்துப் பார்க்கும் சக்தியிருக்கிறது. அனால் மது, மாது , சூது போன்ற தீய செயல்களில் மூழ்கி இறைவனிடமிருந்து விலகும் நிலையினைத் தவிர்க்க வேண்டும்.. சிலர் சுயநலவாதிகளாக இருப்பதினை காணலாம். அவர்கள் பணம் படைத்து நிம்மதியிழந்து வாழ்வதினையும் காணலாம். தன்னுடைய வருமானத்தின் ஒரு பகுதியினை, உடல் உழைப்பின் ஒரு பகுதியினை ஏழை, எளியவர்களுக்காக, மாற்றுத்திரனாளிகளுக்காக, விதவைப்பெண்கள், முதியோர் மறுவாழ்விற்காக செலவிடுபவர்கள் மன நிம்மதியுடன் வாழ்வதினைக் காணலாம்.
• தினந்தோறும் சிலநேரம் தொழுகைக்காக ஒருக்குவதின் மூலம் நீங்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்கும் மன வலிமையினைக் கொடுக்கும். சமீபகால பெரிய எழுத்தாளர், நார்மன் டீலே, ‘நீங்கள் மனதினை ஓர்நிலைப்படுத்தி இறையச்சத்துடன் தொழுது வந்தால் உங்கள் அனேகப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்’ என்று சொல்லியுள்ளார். நான் எழுதுவதிற்கு மறந்த சில விசயங்கள், செய்வதிற்கு விடுபட்ட முக்கிய வேலைகள் கூட மனதினை ஓர்முகப்படுத்தி தொழும்போது நினைவிற்கு வந்ததுண்டு. மனிதர்களால் கைவிடப்பட்டு இறைவனிடம் வேண்டுகோள் வைத்து வெற்றிபெற்ற மனிதரின் கதையினை உங்களுக்கு உதாரணமாக சொல்ல ஆசைப்படுகிறேன். நான் சில சதித்திட்டங்களால் சென்னை மத்திய சிறையிலிருந்தபோது நண்பர் குணங்குடி ஹனிபா அவர்களும் இருந்தார்கள. நான் சென்னை சட்டம், ஒழுங்கு டி.சியாக 1991-1994 வரை இருந்த போது ஒருநாள் அலுவலகத்தில் அவர் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் தான் ஒரு ஆட்டோ டிரைவராக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்ததாகவும், சமுதாய சேவை செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் தொழிலை விட்டு விட்டதாகச்சொன்னார். ஆனால் துரதிஸ்டவசமாக அவரை மத்திய ஜெயிலில் பார்வையாளர் நேரத்தில் சந்திக்கும் வாய்பு;பு எனக்குக் கிடைத்தது. அப்போது அவரை அவருடைய துணைவியார் சந்திக்க வந்திருந்தார். அவரிடம் ஹனிபா சொல்லும்போது, ‘அல்லாஹ்விடம் துவா செய், ஏழு வருடமாக சிறையில் வாடுகிறேன், இறைவன் கண்திறக்கவில்லை’ என்றார். இதனை 2007 ஆம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நான் எழுதிய, ‘காக்கிச்சட்டை பேசுகிறது’ என்ற புத்தகத்தில் எழுதியதினை ஆசிரியர் இன்குலாப் அவர்கள் வெளியிட்டார். இதனை ஏன் குறிப்பிடுகிறேனென்றால் மைனாரிட்டி முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கு ஆளாகும் போது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணையினைத்தான் நாடவேண்டும். அப்படி நாடியதால் தான் நண்பர் குனங்குடி ஹனிபா இன்று சுததந்திரக் காற்றினை சுவாசித்துக் கொண்டுள்ளார் என்பதினை நாம் மறக்கக் கூடாது.

தினந்தோறும் இறைவனைத் தொழுவதிற்கு பத்து வழிவகைளைக்
கூறலாம் என நினைக்கிறேன்

1) கடமையாக்கப்பட்ட ஐவேளை தொழுது கொள்ளுங்கள்.

2) தொழ முடியாத நேரத்தில் இறைவனை நினைத்து தஸ்பி எண்ணிக் கொள்ளுங்கள்.

3) அல்லாஹ்வினை நினைத்து உங்கள் மொழியில், தெளிவான வேண்டுகோளை வையுங்கள்.

4) உங்கள் தேவைகளை நிறைவேற்றவே தொழவேண்டும் என நினைத்துத் தொழவேண்டாம்.
உங்களைப்படைத்து தொழ வாய்ப்புக்கொடுத்து உயிரோடு இருக்கச்செய்ததிற்காகவாது தொழுங்கள். சிறு உதவிகளைச் செய்யும் மானிடருக்கு விழுந்து, விழுந்து நன்றி சொல்லும் போது அழகான மனித உயிரினை உங்களுக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள்.

5) உங்களுக்கு வசதி வாய்ப்பு இருக்கிறது என்று நாற்காலியில் இருந்து தொழவேண்டாம். கூடுமானவரை குனிந்து, நிமிர்ந்து, இறைவனுக்கு ஸஜ்தா செய்து தொழுக முயற்சி செய்யுங்கள்.

6) நீங்கள் தொழும் போது இறைவனின் குறை தீர்க்கும் சக்தி மீது அவ நம்பிக்கை கொள்ளாது, அல்லாஹ்தான் எல்லாக் குறைகளையும் களையும் வல்லமை மிக்கவன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள்.

7) சாதாரணமாக இறைவன் நாம் கேட்கும் பலனுக்கு மேலாக பன் மடங்கு பலன் கொடுப்பவன். அவன் கொடுக்கும் பலன் எதுவானாலும் அது அருட்கொடை என ஏற்கும் மன பக்குவம் வேண்டும்.

8) நமது குடும்ப தேவைகளை புறக்கணித்து இறைதளமே கதியென வாளாதிருக்கக்கூடாது. எந்த மதமும் அவ்வாறு சொல்லவில்லை. ஆகவே நீங்கள் தேவைகளைப் ப+ர்த்தி செய்யும் நல்ல கணவராக மனைவிக்கும், சிறந்த தந்தையாக பிள்ளைகளுக்கும், பேணிக்காக்கும் மகனாக உங்கள் வயதான பெற்றோர்களுக்கும் காட்சி தரவேண்டும்.

9) உடன் பிறந்தோர்-உற்றார் உறவினர் செய்த தவறுகளை மறப்போம் மன்னிப்போம் என்றும்., உங்களுக்குத் தீங்கிளைத்தவருக்கும் நன்மை செய்ததின் மூலம் நீங்கள் இறைவனின் உள்ளத்தில் இடம் பிடிப்பது நிச்சயமாகிறது.

10) தீர்வுகாண முடியாத செயல்களுக்கு அல்லாஹ்வினிடம் கையேந்தி நாடவேண்டும். அதற்கு உதாரணமாக ஒரு உண்மைச் சம்பவத்தினைச் சொல்லி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
நான் 18.6.2010 அன்று என் துணைவியார் என் மகன் சதக்கத்துல்லாஹ் ஆகியோருடன் அமெரிக்க தலைநகர் வாஷிங்கடனைச் சுற்றிப்பார்த்துக் கொண்டு விட்டு போர் நினைவுச்சின்னம் அணிவகுப்பு(சேன்ச் ஆப் கார்டு) நிகழ்ச்சியினை பார்த்துவிட்டு ஜூம்மாத்தொழுவதிற்காக அங்குள்ள பெரிய இஸ்லாமிக் கம்யூனிட்டி பள்ளிவாசலுக்கு ஒரு டாக்ஸியில் ஏறினோம். அதனை ஒரு கறுப்பினத்தின எபி என்ற டிரைவர்; ஓட்டி வந்தார். நாங்கள் போகுமிடம் குறிப்பிட்டு சொன்னோம். அந்த டிரைவர் எங்களிடம் நீங்கள் டூரிஸ்டா எனக் கேட்டார். ஆம் என்றோம். அவர் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். அடுத்தது அவர், ‘நீங்கள் தொழும்போது உலக அமைதிக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்’ என்று கூறியது எனக்கு வியப்பாக இருந்தது. ஏனென்றால் வல்லரசு என்று தம்பட்டம் அடித்து அனைத்து இஸ்லாமிய நாடுகளை மட்டுமல்லாமல் மற்ற வளரும் நாடுகளையும் பயமுறுத்தும் அமெரிக்காவின் சாதாரண குடிமகன் அமைதியினை விரும்புகிறானே என்றுதான். அதுவும் உலக அமைதிக்காக யாரிடம் வேண்டச் சொல்கிறானென்றால் இறைவனிடம் தான். ஆகவேதான் மைனாரிட்டி இஸ்லாமிய சமுதாயம் நமது தனிப்பட்ட, இல்லத்துப் பிரச்னைகள், சமுதாயப் பிரச்னைகள்; ஆகியவற்றிற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்துங்கள் என்று சொன்னது சரிதானே சொந்தங்களே!

தோப்புத்துறை –சேதுமாதவபுரம்

From: AJ 100


மணிச்சுடர் நாளiதழில் வெளiயான கட்டுரை-தோப்புத்துறை ஜாமிய மஸ்ஜித் திறப்பு விழா சிறப்பு மலர்.

தோப்புத்துறை –சேதுமாதவபுரம்

தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்

அமைப்பாளர், அமெரிக்கா காயிதெ மில்லத் பேரவை
(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற அமைப்பு)



தமிழக கிழக்கு கடற்கரையோரத்தில் இருக்கும் ஊர்களiல் தோப்புத்துறை சரித்திரம் கொண்ட பசுமை நிறைந்த ஒரு பழைமையான துறைமுக நகரமாகும். பலதரப்பட்ட உள்நாட்டு வணிகம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி வணிபம் பெரிய அளவில் நடைப்பெற்ற தொன்மைமிக்க ஊர், கடலும் அதை சார்ந்த இடமும் இருப்பதால் சங்க கால தமிழர்கள் வழக்கப்படி தோப்புத்துறை நெய்தல் நிலம் என்று வகைப்படுத்தப்பட்டது. தோப்பும் துறைமுகம் சார்ந்த ஊர் தோப்புத்துறை எனவே பன்னாட்டு விமானநிலையம் மற்றும் துறைமுகத்திற்கு வழங்கப்படும் குறியீடு சுருக்க எழுத்து வழங்கப்பட்டுள்ளது என்பது நமக்கு தெரியாத விசயம். தோப்புத்துறை துறைமுக குறியீடு – TPH (INTPH-International Port code)

தோப்புத்துறை தோற்றம் மற்றும் வரலாறு பல நூற்றாண்டு காலத்திற்கு முன் என்று பலரும் நம்புகிறார்கள். தமிழக கடற்கரை ஊர்களாக காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், முத்துபேட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை ஊர்வாசிகள் போன்றே தோப்புத்துறை மக்களும் சத்திய மார்க்கத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதுடன், அரபியா மக்களுடன் திருமண பந்த தொடர்பு உறவு முறைகளை கலிபா காலத்திலிருந்து குறிப்பாக கலிபா அபுபக்கர் (ரலி) அவர்கள் காலத்திலிருந்து இருந்ததாக நம்பிக்கை செய்தியாகும். நம்பிக்கைகள் சில நேரத்தில் உலக அளவில் சரியாக இருக்கலாம் அல்லது சந்தேகத்துடன் வலம் வருவது இயற்கையான விசயம் தான். இந்த காலத்தில் தான் நம் ஊர்களiல் இறைநேசர்களாக கடல் மார்க்கமாக வந்தவர்கள் இஸ்லாமிய நெறிகளை போதித்து மக்களை ஏகத்துவநெறியின் பக்கம் அழைத்து அதன் படி தங்கள் வாழ்க்கை அமைத்து கொடுத்தார்கள், அத்துடன் மக்களுடன் கலந்து இறைபோதனையும் மார்க்க நெறிகளையும் வாழ்ந்து காட்டி தங்கள் வாழ்க்கை இறுதி நாள் வரைஇங்கே இருந்துள்ளார்கள்.

விஜய ரகுநாத சோக்கலிங்கர் ஆட்சி காலத்தில் நம் பகுதி அவர்களiன் ஆட்சியின் கீழ் செயல்பட்ட காரணத்தால் வேதாரண்யம்-திருமறைகாடு சுற்றியுள்ள பல சாலைகளுக்கும், ஊர்களுக்கும், வழிபாடு தளங்களுக்கும் அவர்கள் ஆட்சிபகுதியில் இருந்த சமுத்திரத்திற்கு சேது என்ற பெயர் சேர்த்து அழைக்கப்பட்டது. தோப்புத்துறைக்கு சேதுமாதவபுரம் என்ற பெயரும் இருந்தாக சொல்லப்படுகிறது.

தோப்புத்துறை பகுதியும் சாலை மற்றும் வீதிகளiன் அமைப்பு

தமிழ்நாடு தலைநகர் சென்னை மாநகத்திலிருந்து 365 கீ.மீ தூரத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஊர். தோப்புத்துறை 20 கீ.மீ கீழ் பகுதியில் Point calimere என்று அழைக்கப்படும் கோடிக்கரை/காடு உள்ளது. அக்கரைபள்ளi என்று சொல்லப்படும் கடல் பகுதியிலிருந்து தொடங்கும் அடப்பாறு தோப்புத்துறை வழியாக பல ஊர்களை கடந்து நாகப்பட்டினம் வரை ஓடுகிறது. ஒரு காலத்தில் இந்த ஆறுவழியாக தான் விளைநிலங்களiல் சாகுபடி செய்து நெல் மற்றும் தானியங்களை தோனி என்று சொல்லப்படும் பாய்மரசிறுபடகுகள் மூலம் கொண்டு வந்துள்ளார்கள். இந்த ஆறுவழியாக தான் மரகலங்களை செலுத்தி கடல்முகத்துவரத்து சென்று கடல்வழியாக பல்வேறு நாடுகளுக்கு சென்று வணிகம் செய்துள்ளார்கள். தோப்புத்துறை சாலைகள், தெருகள் பல்நோக்கு பார்வையில், வரும்முன் காக்கும் யோசனையுடன் அமைக்கப்பட்டுள்ளது இன்று நம்மவர்களுக்கு ஆச்சிரியமான விசயம் தோப்புத்துறை ஊர் அமைப்பு ஆகும், ஒரு தேர்ச்சி பெற்ற வல்லு\நர் மூலம் திட்டமிட்டு அமைத்து போல் இருக்கும். வேதாரண்யம்-நாகப்பட்டினம் பிரதான சாலை தொடங்கி ஒவ்வொரு தெரு முடிவும் அடப்பாறு சொல்லப்படும் ஆறு வரை சென்று அடையும். மழை காலங்களiல் மழைநீர் அந்தந்த சாலை தெருவழியாக அடப்பாறு சென்று கலக்கும் இதனால் ஊரில் எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலை இருக்காது. தெருகளiன் அலகம் வசதியான வகையில் அமைக்கப்பட்டுள்ளது அத்துடன் ஊரின் மத்திய பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அரபிய கட்டிட கலை அமைப்பில் 5 மண்டபம் கொண்ட ஜாமிaய பெரிய பள்ளi மற்றும் அடக்கஸ்தலமும் ஊர் தெருகளiன் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட உயரம் உயர்த்தி நிறுவப்பட்டு உள்ளது. இந்த பள்ளiயை மாற்றி இன்றைய மற்றும் எதிர்கால தேவைக்கு ஏற்றவாறு தற்போது நவீன அரபு கட்டிட கலையில் வடிவமைப்பில் புதிய ஜாமியா பள்ளi பலத்தரப்பட்ட கொடையாளர்களiன் பங்களiப்பின் மூலம் கட்டி முடிக்கப்பட்டு இன்றைய தினம் இறைஇல்லத்தை ஊர் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

தோப்புத்துறை பெயரில் கப்பல் பதிவு

சிங்கப்பு>ர் மையமாக செயல்படும் கப்பல் பெயர் தோப்புத்துறை என்று பதிவு பெற்றுள்ள ஆவணம் இங்கிலாந்து கப்பல் பதிவேடுகளiல் வெளiயிடப்பட்டுள்ளது.

1911 –ல் இஸ்லாமிய கல்வியாளர் வரிசையில் தோப்புத்துறை மைந்தன்.

வேதம் வழங்கப்பட்ட கிருஸ்த்துவர்களால் குறைகூறப்பட்ட மறுமை வாழ்வை பற்றி தௌiவாக இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பதில் கூறும் விதமாக புத்தகம் ஒன்று தோப்புத்துறை இஸ்லாமிய கல்வியாளர் மரியாதைக்குரிய முத்து மரைக்காயர் என்பவரால் எழுதப்பட்டு 1911 –ல் அச்சு பதிப்பை வெளiட்டுள்ளார்கள். இதன் மூலம் தமிழக இஸ்லாமிய அடையாள பிரதிபலிப்பு மற்றும் அச்சு பதிப்பு கலாச்சாரம் பங்களiப்பை அவர்கள் கொடுத்து தோப்புத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

வேதாரண்யம்/கோடியக்கரை(பாயிண்ட்காலிமர்) பகுதிக்கு துறைமுகம் தோப்புத்துறை மட்டுமே.
இந்திய துறைமுக சட்டம் 1908 படி வேதாரண்யம் துறைமுகமாக செயல்படவில்லை. அப்போதைய அரசு அனுமதிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து துறைமுகம் தோப்புத்துறை மட்டும் வேதாரண்யம் சுற்றியுள்ள பகுதிக்கு என்று திறக்கப்பட்டது. தோப்புத்துறை பகுதியில் தத்தர்கள் மற்றும் மரக்கல ஆயர்கள் வாழ்ந்த பு>மியாகும். மரக்கல ஆயர்கள் கடல் வணிபம் மூலம் கொண்டு வரும் பொருள்களை தத்தர்கள் குதிரை மூலம் தரைவழியாக அனைத்து ஊர்களுக்கும் செய்து வியாபாரம் செய்தார்கள். இன்று கிட்டங்கி தெரு என்று பெயர் மறுவி அழைக்கப்படும் லெப்பை அப்பா பள்ளi அருகில் அமைத்துள்ள பண்டகச்சாலையில் ஏற்றுமதி மற்றம் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கான கிடங்குகளாக பயன்படுத்தப்பட்டன. இன்று துறைமுக செயல்பாடுகள் இல்லை என்றாலும் கடலோர சுங்கத்துறை அலுவலகம் முழுநேரமாக செயல்படுகிறது.

விசாகப்பட்டினம்/தோப்புத்துறை துறைமுகம்

1949-50 வருடங்களiல் இந்த இரண்டு துறைமுகத்திலும் நடந்த கப்பல் வர்த்தகம் 6.87 லட்ச டன் மேல் தாண்டியதாக அரசு ஆவணங்களiல் பதிப்பட்டுள்ளது.


கல்வி பணியில் தனிப்பங்களiப்பு தோப்புத்துறை சிங்கப்பு>ர் முஸ்லிம் சங்கம்

தமிழ் முஸ்லிம்கள்f கல்வியில் சிறந்து விளங்கினார்கள். இவர்கள் தொழில் மற்றும் நிறுவன அதிபர்களாக இருந்து சிங்கப்பு>ர் பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியா தமிழக பொருளாதார மேம்பாட்டிற்கு பெரும் பகுதியை கொடுத்துள்ளார்கள். கடையநல்லு\ர் முஸ்லிம் லீக் மற்றும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் போன்றவைகள் மற்றவர்கள் பார்த்து பெருமை கொள்ளும் அளவிற்கு இந்த சங்கத்தின் பங்களiப்பு சமூகம், மதம் மற்றும் கல்வி தேவைகளுக்கு பெரும் உதவி புரிந்துள்ளார்கள். தோப்புத்துறை சங்கத்தில் செயல்பாடுகள் அரசு பதிவேட்டில் பதியப்பட்டு பெருமை கொள்ளும் அளவில் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி குறிப்பு எழுதப்பட்டுள்ளது. சிங்கப்பு>ர் சங்கம் தான் தோப்புத்துறை வளர்ச்சியில் முதல் வழிக்காட்டியாகும்.

முதல் நூலகம்

தோப்புத்துறையில் இக்பால் நூலகம் ஹுஜ்ரத் சேகு அப்துல் காதிர் வலி தர்ஹா மற்றும் ஆரிபின் பள்ளiவாசல் பரிபாலன சங்கம் நிர்வாகத்தின் மூலம் தொடங்கி புத்தகம் படிக்கும் ஆவலை தோப்புத்துறை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். ஊரில் இருக்கும் சங்கங்களiல் இது மிகவும் பழைமையானது. வருடந்தோரும் வரவு செலவு கணக்குகள் பார்வையில் தவறாமல் வைக்கும் சங்கம் என்ற பெருமையும் உண்டு.


தோப்புத்துறை துறைமுகத்தில் சுங்கவரி வச>ல்

பொதுவாக 20 முதல் 30 சதவீதம் வரை சுங்கவரி ஏற்றுமதி மற்றம் இறக்குமதி பொருகளுக்கு வரி விதிக்கப்பட்டு இந்த வரி வருமானத்தில் ஒரு பகுதியை நவவித்திலாயா பள்ளiயில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.


தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகம்

1938 இந்தியன் புவியியில்துறை சஞ்கையில் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுக பட்டியில் வெளiயிட்ட பதிவில் தோப்புத்துறை துறைமுகம் இடம் பெற்றுள்ளது.

தமிழ் பணியில் தோப்புத்துறை வாசிகள்

சிங்கப்பு>ரில் வெளiவரும் நாளiதழ் தமிழ் மலர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம், தமிழ் கல்வி கூட்டமைப்பு, சிங்கப்பு>ர் தமிழ் இளைஞர் மன்றம், தமிழ் நூலகம் மற்றும் சங்கங்கள் அனைத்திலும் தோப்புத்துறை சார்ந்தவர்களiன் பங்களiப்பு இருந்துள்ளது. மக்கள் தொகை சரிபார்க்கும் ஆவண பதிவில் எது குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர போரட்டத்தில் முக்கிய நிகழ்வு உப்பு சத்தியா கிரகம்

1930 ஏப்ரல் 13 தேதியில் இராஜாஜி தலைமையில் ஆங்கில அரசுக்கு எதிராக நடைப்பெற்ற உப்பு சத்தியா கிரகம் நிகழ்வுகளiல் தோப்புத்துறை ஜமாத் பெரிய உதவிகளை செய்துள்ளது. உப்பு சத்தியா கிரகத்தில் பங்கு கொள்ள வந்த முகம்மது இஸ்மாயில் தலைமையில் மதுரையிலிருந்து 30 மேற்பட்ட தொண்டருடன் வந்தவர்கள் இவர்கள் தோப்புத்துறை பள்ளiவாசல் மற்றும் தர்ஹா வாளாகத்தில் தங்க வைத்தார்கள். இதை அறிந்த ஆங்கில அரசு காவல் துறை இவர்களை சிறைப்பிடிக்க வந்த போது இது புனிதமிக்க வழிப்பாடுதளம் இங்கு தங்கிருப்பவர்களை கைது செய்ய கூடாது எதுவாக இருந்தாலும் நாளை பகல் நேரத்தில் வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். தடையை மீறி அவர்களுக்கு உணவு மற்றும் வசதிகளை தோப்புத்துறை ஜமாத் மக்கள் செய்து கொடுத்தார்கள். பள்ளiவாசலில் தங்கியவர்கள் காலை 3 மணிக்கு அகஸ்தியன்பள்ளiக்கு சென்று உப்பு சத்தியா கிரகத்தில் பங்கு பெற்றார்கள்.

தோப்புத்துறை ஜமாத் மக்கள் செய்த இந்த பெருமை கொள்ளும் உதவி பற்றி அரசு ஆவணங்களiல் காணமுடிகிறது.

சர்தார் வேதரத்தினம்பிள்ளை குருகுலம் பெண்கள் கல்விக்கு கலங்கரை விளக்கம்.
வேதாரண்யம் பகுதியில் உப்பு சத்தியா கிரக தியாகி சர்தார் வேதரத்தினம்பிள்ளை அவர்களால் தொடங்கப்பட்ட குருகுலம் வேதாரண்யம் சுற்றி இருக்கும் பெண்களiன் கல்விக்கு திருப்புமுனையாக இந்த கல்வி நிறுவனம் செயல்படுகிறது. குறிப்பாக தோப்புத்துறை முஸ்லிம் பெண்கள் தொடக்க கல்வி மட்டுமே பெற்று வந்த காலம் மாற்றம் பெற்று என்று அறிவியல் கலை பட்டதாரிகளாகவும், டாக்டர் மற்றும் பொறியாளர் என்று ஒரு தன்னிரைவு அடைய இந்த குருகுலத்தின் பங்கு மேன்மையானது.

தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் துபாய்

ஊரின் பல்வேறு நலத்திட்டங்களை துபாய் வாழ் தோப்புத்துறைவாசிகள் சங்கம் மூலம் செய்து வருகிறார்கள். குறிப்பாக மார்க்க கல்வி கருத்தில் கொண்டு பெண்கள் அரபி கல்லு\ரி தொடங்கப்பட்டுள்ளது.


சமய நல்லிணகத்திற்கு ஓர் எடுத்துகாட்டான ஊர்

தோப்புத்துறை மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களiல் இருக்கும் மாற்று மத சகோதரர்களுடன் பல நூற்றாண்டுகளாக உறவு முறை கூறி அழைத்து பழகி நட்பு பாராட்டும் நிலை இன்றும் தொடர்கிறது. அனைத்துவித வைபவங்கள், விழாகள், திருமண நிகழ்வுகளiல் ஒற்றுமையுடன் பங்கு கொண்டு வருகிறார்கள்.


இன்றைய தோப்புத்துறைவாசிகள்..

கடந்த 10 வருடங்களiல் கல்வியில் மேம்பட்டவர்களாக உருவாகி பல்வேறு பணி மற்றும் தொழில் அலுவல் காரணமாக உள்நாடு மற்றும் வெளiநாடு சிங்கப்பு>ர், மலேசியா, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் பல்வேறு நாடுகளiல் குடும்பமாகவும், தனியாகவும் வசித்து வருகிறார்கள். தொழில் என்று ஒரு சிலரே செய்கிறார்கள்.

இணையதளத்தில் தோப்புத்துறை

தோப்புத்துறை பற்றி மேலும் விபரங்களுக்கு இந்த http://www.thopputhurai.com இணையதளத்தை பார்க்கவும்.




http://www.thopputhurai.com/malarpdf/mani_2.pdf


GATEWAY OF THOPPUTHURAI

--- www.thopputhurai.com ---

(International Port Code: TPH)


விரைவில் புதுப்பொழிவுடன் அனைத்து வித மக்களுக்கு பொதுவாக தோப்புத்துறை டாட்காம் சேவையை தொடரும்
ஆரிபா குழுமம் மற்றும் அல்ஜப்பார் பாத்திமா கனிகல்வி அறக்கட்டளை வழங்கிய தோப்புத்துறை ஜாமியா மஸ்ஜித் நேரடி ஒளiப்பரப்பை தோப்புத்துறை டாட்காமில் 121 நபர்கள் பார்த்த விபரமும், இந்த 121 நபர்களும் 7 நாடுகளiலிருந்து பார்த்த விபரமும் பதிவாகியுள்ளது பற்றி உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். அத்துடன் வீடியோ காட்சிகளை 43 நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளார்கள்.

அத்துடன் தோப்புத்துறை ஜாமியா மஸ்ஜித் திறப்பு விழா சிறப்பு மலர் முழுவதும் தோப்பத்துறை டாட்காமில் வாசகர்களiன் வசதிக்காக 32 பாகங்களாக வெளiயிடப்பட்டு இதுவரை 200 நபர்களுக்கு மேல் இந்த மலரை படித்தும், பதிவிறக்கம் செய்துள்ளார்கள்.
அத்துடன் மணிச்சுடர் மற்றும் மஸ்ஜித் சம்பந்தமான அனைத்து செய்திகளும் வெளiயிடப்பட்டுள்ளது.
விரைவில் புதுப்பொழிவுடன் அனைத்து வித மக்களுக்கு பொதுவாக தோப்புத்துறை டாட்காம் சேவையை தொடரும். இந்த இணையதளம் குறிப்பிட்டவர்களுக்கு சார்புடையது இல்லை. பொதுவான தகவல் தளம்.

மகிழ்ச்சியுடன் தொடர்ந்து தோப்புத்துறை தகவல் தொடர்பில் பாலமாக தோப்புத்துறை டாட்காம் (www.thopputhurai.com) குழுமம்

www.thopputhurai.com
thopputhurai@hotmail.com

*************************************************************************************************
"Where you seek brightness wisdom lives" Al-Noor Indian Matriculation School Always at your service,
www.alnoorschools.com alnoorschools@live.com alnoorvrm@dataone.in

அறிவாளிக்கு ஒரு சூடே ................

அறிவாளிக்கு ஒரு சூடே போதும். நல்ல மாடாகவே இருப்போமே...


From: Ghouse, Mohammed (Petrocon – Al Khobar) : mohammed.ghouse@petrocon-arabia.com



பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

கணவரும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
"யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.
"கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.
"புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.
"கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர்.

இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர்.

நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கவுரவவுமே முக்கியக் காரணம்.

போலி கவுரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.

உலகில், போலி கவுரவத்தின் தலைமையகம் அமெரிக்காதான் என்றால் அது மிகையல்ல. அடுத்த பத்தாண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய எல்லா கடன் சலுகைகளையும் இப்போதே பெற்று நீயா, நானா என்று போட்டி போட்டு கவுரவம் பார்ப்பதில் அமெரிக்கர்கள் கில்லாடிகள். கிடைக்கிறது என்பதற்காக சக்தியை மீறி வாங்கிய வீட்டுக்கடன்களில் திவாலாகி, "அமெரிக்காவில் வீடு வேண்டுமா? ரொம்ப சீப்'' என்று இங்கு டீக்கடை முன்பு நில புரோக்கர்கள் கிண்டலாக கேட்கும் அளவுக்கு கடந்த ஆண்டு அங்கு பெரும் நெருக்கடி.

"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.

இந்த போலி கவுரவம் படித்தவர்களையும் வாட்டி எடுக்கும் சக்தி கொண்டது.

"சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டி விட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது'' என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கவுரவத்தின் அறியாப்பருவம். "இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார். என் கவுரவம் என்னாவது?'' என்று ஒரு டீச்சரே தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கவுரவத்தின் விபரீத வளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கவுரவத்திற்கும் என்ன சம்பந்தம்?

நாம் கவுரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கவுரவம்.

பாழாய்ப்போன டூவீலர் என்ஜின் திடீரென எக்குத்தப்பாகி பெட்ரோலைக் குடித்து விடுகிறது. வண்டி பாதி வழியில் நின்று விடுகிறது. மனைவி ஒரு பக்கம், மற்றவர் ஒரு பக்கம், அவ்வளவுதான். போயே விட்டது நாம் கட்டிக்காத்த கவுரவம்! அருகில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குக்கு வண்டியைத் தள்ளிச் சென்றால் உடலுக்கு கவுரவம்தான். ஆனால் உள்ளத்துக்கும், உடன்வரும் செல்லத்துக்கும் அது கவுரவக் குறைச்சல் ஆயிற்றே. "என்ன ஆச்சு?'' என்று ஏதோ வண்டியில் குண்டு வெடித்த மாதிரி சிலர் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்தால், அது போலி கவுரவம். வண்டி பிரச்சினைக்கும், வாழ்க்கை கவுரவத்திற்கும் என்ன தொடர்பு? - யோசித்துப் பாருங்கள்.


சாப்பிடாவிட்டால் கூட சிலரின் உடல் வஞ்சனை இன்றி வளர்ந்து விடுகிறது. இதற்காக உடலின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டுமேயன்றி, 'எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்' என்று கவுரவம் பார்த்து வெளியில் வருவதைக் குறைக்கக் கூடாது.

வீட்டுக்கு போலீஸ் வருவது பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாகத்தானே. இதில் 'மற்றவர்கள் வேறுமாதிரி நினைத்து விடப்போகிறார்கள்' என பயப்படுவது ஏன்?

இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கவுரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. 'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர். 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்விïக்களை அவர்கள் வெல்ல முடியும். 'ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள். நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. 'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.

உடைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் கல் சிலையாவதில்லை; உருக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் தங்கம் நகையாவதில்லை, பிசையப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் மண் பாத்திரமாவதில்லை; அடித்து, துவைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் துணி சுத்தமாவதில்லை;

நம் குறைகள் நம்மிடமிருந்து நீங்க, நமக்கு வேண்டியவர்கள் நம்மை கையாளும் போதுதான் நம் அறிவு முழுமையாகிறது. இதை யார் பார்த்தால் என்ன? எங்கு பார்த்தால் என்ன? நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒரு விஷயம் நிஜ கவுரவமா அல்லது போலி கவுரவமா என்பதுதான் கேள்வி.

போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல;

பிறர் பார்க்க… நம்மைத் திருத்திக் கொள்வது… அவமானமே அல்ல!


மிகச்சரியான… நெத்தி அடி!

இன்றே, இத்தருணமே நாம் திருந்த முயற்சிப்போமே?

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

Assalamu Alaikkum

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்



ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!
“நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)
மேற்கண்ட வசனத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை
1. நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
2. இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்!
3. பின்னர் அலக் என்பதை ஒரு தசைப் பிண்ட மாக்கினோம்!
4. பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்!
5. பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
6. பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்!
மேற்கண்ட இந்த ஆறு அம்சங்களையும் ஒவ்வொன்றாக அலசுவோம் வாருங்கள்
ஆண் விந்துத் துளி பற்றிய அறிய தகவல்கள்
ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் ஒருவகையான நீர் விந்துத்துளி என்று அறிவியல் உலகம் வர்ணிக்கிறது. இந்த விந்துத்துளியைப் பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிட்டுள்ளான் இதைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது
”ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா? குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.” (அல் குர்ஆன்: 86:5-7)

இதோ மேலே காணும் படம் ஒரு ஆண் மகனுடைய விந்தணுவாகும் இது உருவாக 74 நாட்களாகிறது என்றும் விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பெண்ணின் சினைமுட்டை பற்றிய அறிய தகவல்கள்
பெண்ணின் சினை முட்டையின் வடிவம் 0..2 மி.மீ அளவு கொண்டது என்றும் இந்த சினை முட்டை வட்ட வடிவமுடையது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதோ மேலே கண்ட படம் பெண்ணின் சினை முட்டையாகும் இதை சற்று கவனித்துப் பாருங்கள் இது முட்டையைப் போன்று வட்ட வடிவமாக காணப்படுவதால் இதற்கு சினை முட்டை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது!
பெண்ணின் சினைமுட்டையானது அவளுடைய சினைப் பையிலிருந்து வெளியாகிறது என்றும் இந்த சினை முட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் மேலும் இந்த சினை முட்டை சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருகிறது
ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இதோ விந்தணுவின் படத்தை சற்று கவனியுங்கள்


இந்த ஆணுடைய விந்துநீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது! ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையுடன் கூடுகிறது என்ற நிகழ்ச்சியை படமாக விளக்கியுள்ளேன் கீழே உள்ளதை பாருங்கள்

பெண்ணுடைய சினைப் பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள் ஆகும். மேலும் சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும். இவ்வாறு நுழையும் விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் மேலும் இந்த ஆணின் விந்தணு 24-48 மணி நேரத்தில் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது என்றும் அதே போன்று பெண்ணின் சினைமுட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதன் மூலம் நாம் விளங்குவது என்னவெனில் ஆணுடைய விந்தணு பெண்ணுடைய சினைமுட்டையுடன் 24 மணிநேரத்திற்குள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கருத்தரிக்க வைக்க வேண்டும் என்பதே!

ஆணுடைய விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து 23 குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG அதாவது கருமுட்டையாகும்


கருமுட்டை கர்பப்பை குழாய் எனப்படும் FALLOPIAN TUBE வழியாக கருப்பையில் சென்றடைகிறது பின்னர் கர்ப்பப் பை படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது இந்த வளர்ச்சியை கீழே உள்ள படத்தின் உதவியால் காண இயலும்!

பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.

கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது

கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன

கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது

கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.

கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன

பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாகச் (மனிதனாகச்) செய்தோம்
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது

கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது

கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது

கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!


கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.

கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.

கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.

கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது!

கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.


கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன

கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.

கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.


கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.

மேலே தாங்கள் கண்ட அனைத்து அறிவியல் அதிசயங்சளையும் கீழ்கண்ட அருள்மறை குர்ஆனின் வசனம் மெய்ப்படுத்துகிறதா? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்
“நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாகச் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)
அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்!
அல்ஹம்துலில்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்!


”இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்............ .

__._,_.___
.

உடைந்த மரக்கலம்

உடைந்த மரக்கலம்
( கவிஞர் : சீர்காழி இறையன்பனார் )

நதியின் அலைகள் கரையை மோதும்
நாவால் இறையின் நாமம் ஓதும்;
உதிரும் பூக்கள் உண்மையைக் கூறும்
உலக வாழ்க்கை எத்தனைக் காலம் ?

மழையின் துளிகள் முத்துக்களாகும்
மனித உள்ளம் சிப்பிகளாகும் ;
இழையும் வாய்மை இதயங்களாகும்
இரவும் பகலும் உதயங்களாகும் !

மூடிமறைக்கும் மெளனராகம்
முன்னுரையில்லா புத்தகமாகும் ;
மோதிமருட்டும் இடியின் முழக்கம்
முன்னவன் ஆற்றலின் முத்திரையாகும் !

விட்டிலின் தொட்டில் விடிவிளக்காகும்
விதியின் பட்டியில் விபத்துக்களாகும் ;
நட்டமும் லாபமும் நம்கணக்காகும்
நாணயமில்லா சில்லரையாகும் !

கற்பனை விற்பனை வாணிபம் யாவும்
கயிறாய் மணலைத் திரிப்பதாகும் ;
நற்பயனில்லா அமல்கள் யாவும்
நட்டாற்றில் உடைந்த மரக்கலமாகும் !
( நர்கிஸ் பெண்கள் மாத இதழ் - மே 2010 )