Monday, May 31, 2010

அரிய ஆமை....

அரிய ஆமை....

உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று பேசத் தெரியாது – அதனால்
புறம் மட்டும் பேசுவோம்!

ஒன்றுக் கூடி நிற்போம் என்று
குழு குழுவாகக்
குரல் கொடுப்போம்
தனித் தனியாக!

கட்டி அணைப்போம்
மாற்றாரை;
எட்டி உதைப்போம்
உறுப்பின் ஒரு பகுதி சதையை!

துள்ளி எழுந்தோம்
கிள்ளி எறிய அறியாமையை;
ஒற்றுமை என்றால்
ஒய்யாரமாய் நடக்கும்;
நாங்களெல்லாம் அரிய ஆமை!!

மறுமை என்பதை
மறந்துவிட்டு
மணிக்கணக்கில் பேசுவோம்
மேடைப் போட்டு;
ஒற்றுமை என்றுச் சொல்லி
தோளைத் தொட்டுச் சொன்னால் நடக்கும்
எங்களுக்குள் ஜல்லிக்கட்டு!!

வரிக்கு வரி பதில் சொல்லுவோம்
குர்-ஆன் சுன்னா வழிமுறையில்;
எதிர்த்துக் குரல் கொடுத்தால்
குரல்வலையை நெரிப்போம் வலி முறையில்!!

வேண்டாம் இந்த விதிமுறை;
என்னாவாகும் நம் தலைமுறை!
கிடப்பில் போடுவோம் தற்புகழ்ச்சியை;
வெறுப்பால் காட்ட வேண்டாம் காழ்ப்புணர்ச்சியை!!

ஆளுக்கொரு மூலையிலே அமைப்பாக;
சொல்லிச் சொல்லி
சுருண்டுவிட்டோம் களைப்பாக!!

வேண்டிக் கேட்பதெல்லாம்
நமக்குள் ஒற்றுமையை;
வேரருத்துவிடுவோம் நம் வேற்றுமையை!!

கரத்தோடு கரம் கோர்த்து
மனதோடு மார்க்கம் நுழைத்து
சொத்தான சுவர்க்கம் செல்ல
சத்தான அன்பைத்தருவோம்;
ஆதரவுத்தருவோம்!!!!


-யாசர் அரஃபாத்

Saturday, May 29, 2010

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 2 ஆவது மாநாடு

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 2 ஆவது மாநாடு

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் தனது மற்றுமொரு இலக்கிய மாநாட்டை இவ்வருடம் ஜூலை மாதத்தில் கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

1999 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு தனது பத்தாவது நிறைவு விழாவையும் இம்மாநாட்டுடன் சேர்த்துக் கொண்டாடவிருக்கிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு அரச அனுசரணையுடன் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்திய இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் 2008 ஆம் ஆண்டில் புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தின் நூற்றாண்டு விழாவையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 2007 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கும் இவ்வருடம் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடத்திய ஒரு நாள் காப்பியக் கருத்தரங்குக்கும் ஒத்தாசையாக செயற்பட்டது.

தற்போது தமிழகத்தின் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஒரு சகோதர இயக்கமாகவும் இயங்கும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இவ்வருடம் இலக்கிய மாநாட்டை உள்ளூர்ப் புரவலர்களின் ஆதரவுடன் இரண்டு தினங்களுக்கு நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்தியாவிலும் இலங்கையிலும் இடம்பெற்ற மாநாடுகள் இஸ்லாமிய பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி விரிவாகப் பேசியதுடன் அழியும் நிலையிலிருந்த பல முன்னோரிலக்கியங்களையும் மீள் பதிப்புச் செய்து சமூகத்தின் பயன்பாட்டுக்கும் இருப்புக்கும் ஆதாரமாகச் செயற்பட்டுள்ளன. தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு 1960 க்கும் பின்னரான இலங்கையின் முஸ்லிம் படைப்பாளிகளைப் பற்றியும் அவர்களது படைப்புக்கள் பற்றியும் பேசுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல் நாள் சம்பிரதாயபூர்வமாக மாநாடு தொடக்கி வைக்கப்படுவதுடன் உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்களதும் பிரமுகர்களதும் உரைகளும் இடம்பெறும். இரண்டாம் நாள் ஆய்வரங்கில் வளவாளர்கள் தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பார்கள். அதனைத் தொடர்ந்து இசையரங்கும் பாராட்டு அரங்கும் இடம்பெறும். இதில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் தீர்மானித்துள்ள அறிஞர் பெருமக்களும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் கௌரவிக்கப்படுவார்கள். இம்மாநாட்டின் கவியரங்கில் இலங்கைக் கவிஞர்கள் பங்கு கொள்வார்கள். இறுதி நிகழ்வு சிறப்புரைகளுடனும் நாடகத்துடனும் நிறைவு செய்யப்படும்.

இம்மாநாட்டுக்கு இந்தியா, மலேஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்தும் பேராளர்கள் பலர் வருகை தரவுள்ளனர். இலங்கைப் பேராளர்களாக இலக்கியவாதிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் முந்நூறு பேரை மாத்திரமே பதிவு செய்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையர்களான யாரும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்ற போதும் இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் முன்னுரிமை பெறுவார்கள்.

இதுபற்றிய விபரங்கள் விரைவில் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படவுள்ளன.

மாநாடு பற்றிய மேலதிக விபரங்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும். டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் - 011 2730378 - 077 2721244, அஷ்ரஃப் சிஹாப்தீன் - 0777 303 818, டாக்டர் தாஸிம் அகமது - 011 2438801 - 077 966 4063 மாநாட்டில் இடம் பெற வேண்டிய விடயங்கள் குறித்த முன்மொழிவுகளை யாரும் எழுத்து மூலம் தெரிவிக்க முடியும்.

அனுப்ப வேண்டிய முகவரி

President, Sri Lanka Islamic Iiterary research forum, 16 School Avenue, Off Station Road, Dehiwala.

Thursday, May 27, 2010

காலம் கடந்து...

காலம் கடந்து...

உள்ளூரில் விலைப் போவாததால்
வெளி நாட்டில் நான்!
வெள்ளை முடியும் பல் இழிக்க
கலர்ச் சாயம் தேடியது கண்கள்
கறுப்புச் சாயத்தை தவிர்த்து!

முதுமையென
முத்திரையிட்டால்
முடியாது இனி வளைகுடாவில் குப்பைக் கொட்ட!

நரைத்த ரோமங்கள்
விதைத்த நினைவுகளால்
விடுப்புக் கேட்டு விரைந்தேன்
விமான நிலையத்திற்கு!

சிறகுகளோடு பறந்த விமானத்தில்
சிறகுகளே இல்லாமல் நானும் பறந்தேன்!

தொட்டுப் பார்க்க என் மழலை;
முத்தமிட என் மனைவி;
கட்டியணைக்க என் தாய் - எனக்
கட்டாத கோட்டையுடன்
கனவுகளில் நான்!!

முடிந்துவிட்டது எல்லாம் ;
எரிகிற வைக்கோலாய்
முடிந்து விட்டது எல்லாம் உள்ளுக்குள்ளே!

பாசங்களுக்கு பதில் சொல்லாமலே
பயணித்துவிட்டேன்
என் இறுதி இலக்கிற்கு!!

இருக்கின்ற காலத்தை
இழந்துவிட்டேன் கடல் கடந்து;
எல்லாம் முடிந்து உணர்ந்து பயனென்ன
காலம் கடந்து!!!

- யாசர் அரஃபாத்

--

Free online Arabic course.

Free online Arabic course.

Visit:

www.lqtoronto.com

Sunday, May 23, 2010

தயக்கத்திலே....

தயக்கத்திலே....

பேசும் பொழுதெல்லாம் உன்
அழுகைச் சப்தம் என்னை
பேசாமல் செய்யும்!

ஆறுதல் சொல்லிச் சொல்லி
ஆண்டுகள் பல ஒடிவிட்டன!

முடித்துவிட்டு வந்துவிடு என
முத்தமிட்டுச் சொன்னப் போதும்;
அடக்கி வைத்த அழுகை மட்டும்
அடங்காமல் காட்டிக் கொடுக்கும்!!

தூங்கிய வயிறும் வீங்கிவிட;
காதோடு நீ சொல்ல வெட்கப்பட்டதை
கைப்பேசியில் கண்ணீருடன் கதைத்தாய்!!

குழந்தைக்குப் பரப்பரப்பாய்
பெயரினை நான் தேட;
நீயோ உன் பத்தாம் மாத்திற்கு
என் விடுப்பை விரல் விட்டு
எண்ணிக் கொண்டிருந்தாய்!!

உன் இடுப்பு வலிக்கு
நான் இங்கு துடியாய் துடித்தேன்;
வியர்த்த உள்ளங்கையுடன்
என் விரல் கைப்பேசியில்;

ஒருகாலத்தில்
இனிப்புடன் என் நண்பர்கள்;
இழித்துவிட்டு இனிப்பைக் கடித்துவிட்டு
கடுப்பேற்றிப் பார்ப்பேன் அவர்களை;
குழந்தைக்காக இனிப்பா என்று!!

அனைத்தையும் எண்ணிப்பார்க்க
நேரமில்லாமல் நான்;
இன்று கடை கடையாய் ஏறிக்கொண்டிருந்தேன்;
இனிப்புகள் வாங்க!!

அரை மயக்கத்திலும்
அச்சு பிசாகமல் கேட்டாய்;
வரவில்லையா இன்னும்;
பதில் சொல்வதற்குள்
மீண்டும் சென்றுவிட்டாய் மயக்கத்திலே;
கைப்பேசியை துண்டித்துவிட்டு
காரணம் சொல்லமுடியாமல் நான் தயக்கத்திலே!!!


-யாசர் அரஃபாத்

Friday, May 21, 2010

சமுதாய வழக்கறிஞர்கள்

சமுதாய வழக்கறிஞர்கள்


Ghouse Ali Khan. B.A.B.L
V Floor, ‘ALSA COURT’
72, Harrington Road,
Chetpet, Chennai-600 031.
First Floor, Bank of Mysore Building,
Chennai-600 001.

M.M. Md. Sadakathulla B.Sc., B.L.
215, Thambu Street, 2nd Floor
George Town, Chennai-600 001.

F.A. Rasheed M.A.B.L
20-A, Bawa Rawthor Road, Alwarpet,
Chennai-600 018.
No. 21, Sunkurama Street, District.
(Opposite to High Court Buildings),
Chennai-600 001.


M.A. Abdul Huck B.A., B.L.
No. 35, Jones Street, 1st Floor,
Mannady, Chennai-600 001.

Asif Ali B.A.B.L
7, Thayar Sahib Street, Market Lane,
Mount Road, Chennai-600 002.
92, Law Chambers, High Court Buildings,
Chennai-600 104.

S. Nazeer Ali B.A., B.L.
(Ground Floor), Hospital Road,
West Saidapet, Chennai-600 015.
No. 132, New Law Chambers,
High Court Buildings, Chennai-600 104.


M.M. Bukhari B.A.B.L
No. 87, Sheik Maistry Street,
Chennai-600 013.
No. 153, Thambu Street,
Chennai-600 001.


U. Md. Rahamathullah B.A., B.L.
No. 10, Muktharunnisa Begam Street,
5th Lane, Mount Road,
Chennai-600 002.
No. 68, Law Chambers, High Court
Buildings, Chennai-600 104.


M. Liagat Ali B.A.B.L
No. 9, Sathyamurthy Road, Chetpet,
Chennai-600 031.


S. Mohamed Sheik Naina B.Sc., B.L.
No. 148, Coral Merchant Street,
George Town, Chennai-600 001.


S. Mohammed Yacoob B.A.B.L
No. 112, Dr. Besant Road,
Royapettah, Chennai-600 014.
No. 20, Law Chambers,
High Court Buildings,
Chennai-600 104.


M.A. Md. Karamathullah B.A., B.L.
No. 21, 2nd Pensioners Lane,
Old Washermenpet, Chennai-600 021.


M. Md. Amanullah B.Sc., B.L.
No. 39, Mannadi Street,
Chennai-600 001.


M. Shafiur Rahaman B.A., B.L.
No. 10, Perianna Maistry Street
Mac. Far Lane, II Floor, Periamet,
Chennai-600 003.


A. Abdul Rahim B.Sc., B.L.
AI-124, 8th Main Road,
Shanthi Colony, Anna Nagar,
Chennai-600 040.


Muniruddin Sheriff M.A., B.L.
No. 17, 21st Avenue, Ashok Nagar,
Chennai-600 083.


A. Abdul Ravoof B.A., B.L.
No. 13, 2nd Floor, Driver Street,
Pudupet, Chennai-600 002.

Md. Sulaiman Basha B.A., B.L.
9, Dr. Vijayaraghavalu Road,
Dr. Vijayaraghavalu Nagar,
Old Washermenpet, Chennai-600 021.


A. Abdul Kader B.A., B.L.
123, Coral Merchant Street,
Il Floor, Mannady, Chennai-600 001.


N.S. Ziauddeen B.A., B.L.
9/23, Mangesh Street, T. Nagar,
Chennai-600 017.
130, Thambu Street,
Chennai-600 001.


Inamdar Ameenur Rahman Salam B.Sc., B.L.
No. 50, Kandappa Street,
Pursawalkam, Chennai-600 007.

S. Haja Mohideen Gisthi B.L.
New No. 26, Old No. 15,
Andavar Street, Choolaimedu,
Chennai-600 094.
XXII ‘B’, Law Chambers,
High Court Buildings,
Chennai-600 104.

P. Davoodu M.A., L.L.B., PGDPM&IR
B-90, G-2, NMK Street,
Ayanavaram, Chennai-600 023.
No. 103, Angappa Street,
Chennai-600 001.


S.A. Syed Haroon B.A., B.L.
No. 69, Jani Jahan Khan Road,
Royapettah, Chennai-600 014.
No. 132, Addl. Law Chambers,
High Court Buildings, Chennai-600 104.


A. Mohamed Gouse B.L.
Flat 1, SSR Pankajam Castle
No. 4, SSR Pankajam Road,
1st Cross, Saligramam,
Chennai-600 093.
No. 9, Arunachalam Road,
Saligramam, Chennai-93.


A. Abu Thalha B.A., B.L.
65, New Avadi Road, Kilpauk,
Chennai-10.


Mohamed Badruddin B.A., B.L.
No. 7, Paripurna Vinayagar Koil Street,
Mylapore, Chennai-600 004.

S. A. Samiullah B.A., B.L.
No. 15, Kutty Maistry Street,
Seven Wells, Chennai-600 001.
No. 110, Addl. Law Chambers,
High Court, Chennai-600 104.


M. Fazulul Haq B.A., L.L.B.
S3, Srinivasa Arcade,
No. 1/2, Arunachalam Road,
Saligramam, Chennai-600 093.


M.J. Jaseem Mohamed B.Com., M.L.
No. 121, Thambu Street,
3rd Floor, Chennai-600 001.


M.B. Zeenath Unnissa Begum M.Com, M.Ed., B.L.
No. 54, 2nd Street,
Second Floor, Vasantha Garden,
Ayanavaram, Chennai-600 023.


K. Mohamed Ismail B.A., B.L.
No. 101 (Old No. 271),
Linghi Street,
Chennai-600 001.

K. Abdul Rahman B.Sc., B.L.
No. 58/4, 10th Street,
Sowrashtra Nagar,
Choolaimedu, Chennai-600 094.

Y. Mohamed Ghouse B.Sc., B.L.
48/1, Rama Street,
Royapuram, Chennai-600 013.
134/281, Thambu Street,
Royapuram, Chennai-600 013.


Syed Mansoor M.A., M.L.
66, First Floor, Ellis Road,
Anna Salai, Chennai-600 002


S. Mardhuns Raziaq Ali M.A., M.L.
Old No. 35/3, New No. 85/3,
Siyali Street, Pudupet, Chennai-600 002


Mohamed Amjad B.Com., B.L.
Block ‘E’, No. 11/1,
Anna Nagar East, Chennai-600 102.


M.I. Mohammed Abusuguman B.A., B.L.
Old No. 109/C1, New No. 256-C1,
Palani Andavar Street,
Ayanavaram, Chennai-600 023.


S. Kader Hussain M.A., B.L.
105, Srinivasa Street, Udumalpet,
Pincode-642 126N.


Shaw Nawaz Khan B.A., B.L., D.L.L.
44, Nachimuthu Street, Pollachi,
1, Maranaicken Street, Pollachi-642 001.


H. Syed Mohammed B.A., B.L.
34, Shanmuga Theatre Road,
Coimbatore-641 002.
248, Oppanakkara Street, Coimbatore.


M. Rahiman Sheriff M.A., B.L.
188, Nehruji Road, Villupuram-605 602

M. Bava Faharuddeen M.Com., L.L.B.
7, Kandasamy Layout,
II Street, Villupuram-605 602.
8-A, Kandasamy Layout, II Street,
Villupuram-605 602.


B. Muneer Ahmed B.Sc., L.L.B..
72/9, Telephone Exchange Road,
Hosur-635 109


R. Syed Anver Basha B.A., L.L.B.
No. 14/14, G.5 II Cross,
Balaji Nagar, Hosur-635 109.
No. 41, (F)3, Ist Floor,
Taluk Office Road,
Hosur-635 109.

S. Hakkim Mohamed B.A., B.L.
No. 69, N.G.O. Colony, Dindigul-624 009,
'AIWA' Complex, 1st Scheme Road,
Dindigul District-624 001.


A. Jahangeer B.L.
Thamarai Illam, Sathya Nagar, Natham,
Dindigul District-624 401. District.
10, Spencer Compound, Dindigul.


K.N. Allah Bux B.A., B.L.,
29, Ram Nagar, Race Course Road,
Dindigul-624 005.



I. Faizuddin B.Sc., B.L.
23, State Bank Road, J.B. Clinic (Upstairs),
Erode-638 001.


A. Mahaboob Basha M.A., B.L.
MIG-255, Housing Unit,
Manickampalayam, Narayanavalasu,
Erode-638 011.
11, Law Chambers,
Sampath Nagar, Erode-638 011.


K.T. Mohideen Abdul Khader B.A., B.L.
No. 13, 1st Street, State Bank Colony,
Anna Nagar, Pammal,
Chennai-600 075.M. Ahamed Khan B.A., B.L.
No. 39-B, Alen Street, Court Road,
Nagercoil-629 001


Syed Ismail B.A., B.L.
Neerazi House, Thiruvithancode,
Kalkulam Taluk.


S. Vazirudeen B.Com., B.L.
40, Ponmeni Narayanan Street,
S.S. Colony, Madurai-625 016.


S. Raja Mohamed M.A., B.L.
No. 14, Narendra Dev Street,
Samadarmapuram, Theni-626 531.


J. Syed Nazer B.A., B.L.
20, Ansari Nagar, 4th Street
Madurai-625 010


S. Sultan Sikkander B.A., B.L.
13, Mohammadiar Street,
Goripalayam, Madurai-625 002.
31, Pallivasal Street, Goripalayam,
Madurai-625 002.


Shahul Mohamed B.Com., B.L.
No. 114, Melur-Madurai Road,
Opp. District Munsif Court,
Melur-625 106.

M. Sultan Syed Ibrahim M.A., B.L.
S.I.R. Illam, 85, Subban Chettiyar Street,
Theni-625 531.


H. Mumtazuddin B.A., B.L.
I/C, West Veli Street,
Madurai-625 001.


M. Imam Hussain B.L
D-393, Housing Board Colony,
Sivagangai Road, Madurai-625 020.
8/C, Yanaikkal Street, Madurai-625 001.

M. Jahangeer B.Sc., B.L.
Pallivasal Street, Mangulam Post (Via), Alagar Koil,
Madurai District.
15, 4th Street, Kamarajar Naga

A. Akkbar Basha B.A.,B.L.
4, Thaikkal V Street,
Simmakkal, Madurai-625 001M.


Jamal M.A., B.L.
23, A. Jawahar Street,
‘Papthi Manzil’, Gandhi Nagar,
Madurai-625 020.
No. 4, Puthumandapam,
Madurai-625 001.

M.A. Mohamed Ibrahim B.A., B.L.
8, Pattaraikara Street, Goripalayam,
Madurai-625 002.K.K.


Jamal B.Sc., B.L.
No. 2-1/17, L.F. Road,
Uthamapalayam-626 533.


S. Abdul Rahiman B.A., B.L.
249, N.H. Scheme, Rajagopalapuram,
Pudukkottai-622 003.
T.S. No. 3726, South 4th Street,
Pudukkottai.


M. Zafarulla B.Sc., B.L.
L-77, Park Town, Rajagopalapuram,
Pudukkottai-3.
No. 22, Old Bus Stand, Pudukkottai.


S.M.M. Hamid Hasan B.A., B.L.
No. 79, Salai Street,
RamanathapuramM.


Noor Mohamed Meera B.A., B.L.
4/1-64, Vanian Koil Street,
Tirupattur-630 211

J. Mohamed Sultan B.A., B.L.
1/1061, Bharathi Nagar,
Ramanathapuram
District-623 503.


K. Ahamad Ali M.A., B.L.
6/9D, Paramakudi Road,
Ilayangudi Town,
Sivagangai District-630 702.
Room No. 2, 661, Co-optex Buildings,
Kamarajar Road,
Ilayangudi, Sivagangai District-630 702.


K.A. Mohamed Mustafa B.Sc., B.L.
No. 4-D, Old Market Street,
Mohammedpura, Salem-1.
20, Paul Street Fort, Salem-1.

M.A. Kalibullah Khan B.A., B.L.
No. 26A, Saiyath Kasim Street, Fort, Salem-1.
No. 1, Jalal Khan Sahib Street, Fort,
Salem-1.

H. Zamrooth Begum B.Sc., B.L.
No. 19, Pension Line Main Road,
Gugai, Salem-636 006.


K. Nister Alikhan B.A., B.L.
No. 32, Old Post Office Street,
Omalur Post, Pin Code-636 455.


K. Shanavas B.Sc., M.A., B.L., D.L.L.
49-A, Kannara Street, Shevapet,
Salem-636 002.

S.S. Hussain Mian B.Sc., B.L., D.C.A.C.J.
71/A, M.M. Yacoob Rowather Street, Salem-636 001
10/RSTU, Old Market Street,
Salem-636 001.

A. Shaik Allaudin B.Sc., B.L.
G.G. Block, Sir Ahmed Street,
Nagapattinam-1.

Thursday, May 20, 2010

தீராத எங்கள் தாகம்...

தீராத எங்கள் தாகம்...

பசுத்தோல் போர்த்திய புலியாய்
அதற்கு நாங்களெல்லாம் பலியாய்!

வையகம் ஒங்கும் மார்க்கத்தின்
சொந்தக்காரர்கள் நாங்கள்;
திக்குத் தெரியாமல்
தட்டுத்தடுமாறும் தமிழர்கள்!

புலியென்று உனக்கு
பெயரிட்டவன் யாரடா – நான்
தொழும்போது என் முதுகில்
சுட்டவன் நீயடா!!

குழிப்பறித்த உனக்கு
குள்ளநரி என்பதே சரி - இனி
வரலாறு உரைக்கும் இந்த வரி!!

காலத்தால் மறைந்திருக்கும்
எங்கள் இரத்த வாடை;
மாறாமல் தோற்றமளிக்கும் உன்
தோட்டாக்கள் என் பள்ளியில் ஜாடை!!

புலியும் சிங்கமும் உள்ள
வனத்திற்கு நடுவே எங்கள் இனம்;
குரல் கொடுக்க ஆளுண்டு
விரல் விட்டு எண்ணுமளவிற்கு!!

அரவணைக்க இடமுண்டு ஈழத்தமிழனுக்கு;
அகதிகளாவதற்குக் கூட
அருகதையில்லையா இந்த தமிழ் முஸ்லிமுக்கு!

வெதும்பிய உள்ளத்துடன்
தழும்பிய விழிகளுடன்
விடுகதைக்கு விடைத்தேடி
வீதியில் நாங்கள்;


கலங்கிப் போய் நின்றாலும்
கைக் கொடுக்க எவருமில்லை;
விட்டில் பூச்சியாய்
விடுதலைக்காக ஏக்கத்திலே;
காலம் மட்டும் காலமானது தர்க்கத்திலே!!

இனியாவது கூடட்டும் ஒற்றுமையென்னும் மேகம்;
ஏக்கத்துடனே எதிர்ப்பார்க்கும் தீராத எங்கள் தாகம்!!


-யாசர் அரஃபாத்
--

Thursday, May 13, 2010

உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம் தொடர்ச்சி:

உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம் தொடர்ச்சி:



தமிழக அரசு மாற்றுத்திரனாளிகளுக்கு கீழ் கண்ட ஊக்கத் திட்டத்தினை அறிவித்துள்ளது. அதனை சமுதாய மக்கள் பயன்படுத்த வேண்டுகிறேன்.:


அரசு பஸ்களில் நான்கில் ஒரு பங்கு கட்டணச் சலுகை

கூடுதல் எண்ணிக்கையில் அவர்களுக்கு கடனுதவி பெறும் வகையில் அரசு உத்திரவாதத் தொகை ரூபாய் நான்கு கோடியிலிருந்து ரூபாய் எட்டுக் கோடியாக உயர்த்தல்.

திருமண உதவித் தொகை ரூபாய் 20 ஆயிரத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தல்
பத்தாவது மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடத்தில் வெற்றியினை தட்டிச் செல்பவர்களுக்கு ரொக்கத்தொகை மூன்று மடங்காக உயர்த்துதல்.

ஓன்றுக்கு மேற்பட்ட குறைபாடுகள் உடையவர்களுக்கு ஆண்டுக்கு 1500 மடக்கு சக்கர நாற்காலி வழங்குதல். முடக்கு வாதத்தால் பாதித்தவர்களுக்கு 500 பேருக்கு சிறப்பு நாற்காலி வழங்குதல்.

தசைப்பயிற்சி மையம் சென்னைஇ திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில் அமைத்தல்.

அங்கன்வாடி ஊழியர்கள் வேலையில் முக்கியத்துவம் கொடுத்தல்.

(பெரும்பாலான ஏழை முஸ்லிம் பெண்கள் வீட்டு வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு அங்கன் வாடியில் வேலை வாய்ப்பினை பெற்று அவர்களை அரசு அரவணைக்கும் ஊழியர்களாக ஆக்க வேண்டும் சமுதாய, மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஓய்வூதியமும் உண்டு என்று சமீபத்தில் அறிவிப்பு வந்துள்ளது)

Tuesday, May 11, 2010

தாய்'

தாய்' என்னும் தலைப்பில் "கவிதைமுகம்" கேட்டதற்கு என் கவிதை வரிகள்......

கருவறையில் காத்த தாயே..!!!
கல்லறையில் உறங்கச் சென்றாயே -நான்
வரும்வரையில் படுத்திரு ; எனக்கும்
தருவர் குழி உனக்கு அடுத்தே
என்முகம் காணாமல் புதைத்த அன்று;
உன் அகம் எப்படி பதைத்தது என்று
கனவில் வந்து கதறினாயே; உன்னருகில்
அணைத்ததும் உதறினாயே..!!!
"இறந்தவரை கனவில் அணைத்தால்
இருப்பவர்க்காகாது ' என்பதைக் கூட
என்பால் நீ வைத்த
அன்பால் தானே இறந்தும் அப்படி
அக்கறைக் காட்டினாய்
"செத்தும் கொடுத்த" உன் அன்புக்கு
பித்தனாகி விட்ட என்னால்
என்ன வேண்டும் தாயே ............

(நீண்ட உன் அன்பை மீண்டும் ஒரு நீண்ட கவிதையில் வடிப்பேன்; என் முதல் கவிதை நூலில் அச்சடிபேன்; வரி வரம்பு இட்டனர் இங்கே அதனால் கண்ணீரோடு முடிக்கின்றேன் இத்தோடு........)

உன்னிடம் குடித்த "தமிழ்ப்பால்" மணத்துடன்,
"கவியன்பன்" கலாம்

முயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம்.

முயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம்.
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

நான் சில மாதங்களுக்கு முன்பு, ‘நாளை நமதா?’ என்ற தலைப்பில் சமுதாய மக்களை வெறும் வியாபாரிகளாக அல்லாமல் தொழில் முனைவர்களாகுங்கள் என்று எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையினைப் படித்து விட்டு கனடா நாட்டு தலைநகர் டொரண்டோவில் வாழும் சகோதரர் ஹ_சைன் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மலேசியா, சிங்கப்பூர், துபை, கனடா போன்ற நாடுகளில் பெரும்பாலான வாழ்க்கையினை அடுத்தவர்களுக்கு வேலை பார்த்து தொழிலாளியாக இருந்து விட்டேன், தனக்கு வயது 45 ஆகிறது, இனிமேல் இருக்கிற சேமிப்பினை வைத்து ஏதாவது ஒரு தொழில் தமிழத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரிலோ அல்லது பக்கத்திலுள்ள பெரிய நகரிலோ ஆரம்பிக்கலாம் என்று நினைப்பதாகவும் ஒரு ஆலோசனை சொல்லுங்கள் என்றார். அவருக்கு சில ஆலோசனை வழங்கினேன். அவருடைய உணர்வினைப் பாராட்ட வேண்டும். காலம் முழுவதும் கசக்கி பிழியப்பட்டு, கைகட்டி நிற்கும் வேலைக்காரனாக இருப்பதினை விட்டு விட்டு கம்பீரமாக தொழில் முனைவராக ஆகவேண்டும் என்ற முயற்சிக்காக. இது போன்று எண்ணற்ற சகோதரர்கள், சகோதரிகள் வாழ வழி தெரியாது திக்குத்தெரியாத காட்டில் வாழ்வதினைப் போன்றுள்ளனர். அவர்களை நீங்களும் தொழில் முனைவர்களாக்கலாம் என்பதினை வழியுறுத்தவே இந்த கட்டுரையினை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.
தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின்ப பணத்தினைத் தேடுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது தொழில் ஆரம்பித்தால் வெற்றி பெறலாம். அந்தத்தேவைக்கேற்ப தொழில் கண்டுபிடிப்பு பற்றி சிறிய உண்மை சம்பவத்தினைச் சொல்லி உங்களுக்கு விளக்கலாம் என ஆசைப்படுகிறேன். சென்னையில் சிறந்த பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் விஷ்னு என்ற சிறுவன் விடுமுறைக்கு தன் பாட்டி ஊரான காரைக்குடிக்குச் சென்றான். ஆனால் எந்த விடுமுறையினை இனினையாகக் கழிக்கலாமென்று வந்தானோ அந்த குதுகூலம் காரைக்குடி வந்ததும் மறைந்தது. ஏன்? அங்கு சென்னையிலில்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்தது. அங்குள்ள அனைவரும் அவதிப்படுவதினை அறிந்தான். உடனே அவன் வாலாதிருக்கவில்லை. தான் தங்கியிருந்த அறைக்கு சுய கண்டுபிடிப்பில் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்படி? தன் பாட்டி வீட்டிலிருந்த பசுமாட்டிலிருந்து 2கிராம் சாணத்தினை எடுத்து 2 மில்லி தண்ணீர் ஊற்றி கலக்கி அதில் 5செ.மீட்டர் நீளம் 4செ.மீட்டர் அகலம் உள்ள எலக்ட்ரிக் வயரை விட்டு ஒரு லைட் எரியும் அளவிற்கு மின் உற்பத்தி செய்தான். அதற்கான செலவு வெறும் ரூபாய் 125 தான். பின்பு கலவையினைக் கூட்டி மின் விசிறி ஓடச் செய்தான். அவனுடைய கண்டு பிடிப்பிற்காக ‘ஐ. ஸ்வீப’; என்ற எரிசக்தி, பொறியியல் ஒலிம்பிக்கில் அவன் அமெரிக்கா டெக்ஸாசில் நடந்த பொருட்காட்சியில் கவுரவிக்கப்பட்டான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று இதிலிருந்து விளங்குகிறதா?
மேற்கூறிய உண்மைச் சம்பவத்தினை நான் உங்களுக்குச் சொல்லக் காரணம் நமதூர்களிலும் மின்வெட்டு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அரசினையும் அதன் அதிகாரிகளையும் சாடிக்கொண்டு வாழா வெட்டியாக உட்கார்ந்து விசிறியால் அல்லது காலண்டர் அட்டையால் வீசிக்கொண்டு இருப்போம். ஆனால் அந்தச் சிறுவன் அந்தத் தேவைக்கு என்ன வழி என்று ஒரு மாற்று சக்தியினைக் கண்டுபிடித்துள்ளான். அவன் கண்டு பிடிப்பு இரண்டு கோடி மாடுகள் உள்ள இந்தியாவில் வருங்காலத்தில் மின் உற்பத்தி மாற்றுத்தொழில் ஏற்படுத்துவதிற்கும் வழியாகுமல்லவா? ஆகவே நமது சிறிய சேமிப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகிறது.
மானியம் வழங்கப்படும் தொழில்கள்:
மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
வுhகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
மருந்துப் பொருட்கள் உற்பத்தி
சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
ஏற்றுமதி ஆபரணங்கள்
மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
விளையாட்டுப் பொருட்கள்
சிக்கன கட்டுமானப் பொருட்கள்
ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்
அரசு வழங்கும் சலுகைகள்:
15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.
சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு((வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.
உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971 ஆம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் அரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.
தொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவி செய்கின்றன. அதனைப் பொறுவது எப்படி? வெறும் கையினை வைத்து முழம் போட முடியுமா என சிலர் கேட்பதுண்டு.
தொழில் தொடங்கி கோடீஸ்வரர்களான சென்னையிலிருக்கும் வி.ஜி.பி, எம்.ஜி.எம், சரவண பவன் உரினையாளர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து வெறுங்கையுடன் வந்து ஹோட்டலில் வேலை பார்த்து இன்று பெரிய பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாகவில்லையா? ஏன் அவர்களைப் போல உங்களால் வெறும் கையினை வைத்துக் கர்ணம் போட்டு சாதிக்க முடியாதா? முடியும். உங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்க வங்கிகளின் மானேஜரை அனுகி உங்கள் தொழில் தொடங்கும் திட்டம் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகம் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம்(சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேணடும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்பு வங்கிக்கடன் மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யம் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம். சிலர் கடன் வாங்கினால் வட்டி கட்டவேண்டும் அது இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்லலாம். அரசு வங்கிகளால் வழங்கப்படும் பணம் மக்களாகிய உங்களுடையது. அந்தப்பணத்தினை பணமதிப்பீடுக்கிணங்க கடனை கூடுதலாக செலுத்துகிறீர்கள். (உதாரணத்திற்கு சென்னை மண்ணடியில் ஒரு கிரவுண்ட் நிலத்தினை இந்த ஆண்டு ஒருவர் ரூபாய் 80 லட்சத்திற்கு வாங்குகிறார் அந்த இடம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய மதிப்பீடுக்கிணங்க ரூபாய் ஒருகோடியே இருபது லட்சத்திற்கு விற்பதில்லையா? அது லாப நோக்கத்திற்காக விற்பதுதானே! ஆகவே நீங்கள் குற்ற உணர்வுடன் அரசு வங்கிளிடமோ அரசு நிறுவனங்களிடமோ கடனைப் பெறுவதினை நோக்க வேண்டாம். அது உங்கள் பணம் என்று உரினையுடன் நினைக்க வேண்டும்.
இரண்டு வாரத்திற்கு முன்பு வெள்ளியன்று சென்னை மண்ணடி செம்புதாஸ் தெருவிலுள்ள பள்ளிவாசலுக்கு தொழுக சென்றிருந்தேன். தொழுகை முடிந்து வரும்போது 35 வயது மிக்க திடகார்த்தமான ஒரு பெண் ‘நாலணா எட்டணா’ கொடுங்கள் என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார் அவருடன் நடுத்தர பெண்களும் இருந்தார்கள். ஏன் இந்த நிலை என்று சமுதாய அமைப்பு சகோதரர்கள் சிந்திக்க வேண்டாமா? ‘டாஃபே’ என்ற டிராக்டர் நிறுவனம் நடத்தும் சிவசைலம் மகள் மல்லிகா சீனிவாசன் ஆயிரம் கோடி தொழில் அதிபதி என்று இருக்கும் போது நாம் ஏழை எளிய முஸ்லிம் பெண்களுக்கு அரசு ஏற்படுத்தியிருக்கும் சுய வேலை திட்டத்திலாவது அவர்களுக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்யலாமே என்ற ஆதங்கம் எனக்கு இருக்கத்தானே செய்யும்! இந்திய தாராள பொருளாதார கொள்கைக்கு பின்பு இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படியுள்ளது என்று அறிய பொருளாதார நிபுணர் டெண்டுல்கர்(கிரிக்;கட் வீரர் அல்ல) தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி கொடுத்த அறிக்கை பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அது என்ன? வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் தொகை 25 சதவீதத்திலிருந்து 2009ல் 37.2 சதவீதமாக அதிகரித்து விட்டது என்பது தான் அது. ஆகவே வறுமைக் கோட்டின் கீழ் துவண்டு கொண்டுள்ள பெண்களுக்கு சுய வேலை திட்டத்தில் தொழில் துவங்க வழி வகை செய்யலமே!.
சுயவேலை தொழில் எப்படி தொடங்குவது?
ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு. வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில்(என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர்களுக்கு ஏற்படுத்தலாமே!
ஓருங்கினைப்பு:
முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்:
செயல் துறைத் தலைவர்(வழிகாட்டுதல் குழு),
தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,
19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,
சென்னை-600001
தொலைபேசி: 044-28553118, 285553866
ஃபேக்ஸ்: 28588364
தொழில் நுணுக்கங்கள்:
தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கையாளர்களை நம்முடைய அனுகுமுறை வைத்தே தக்க வைக்க முடியும் என்பதிற்கு ஒரு உதாரணத்தினைச் சொல்லலாம் என நினைக்கிறேன். சென்னை ராதாக்கிருஷ்ண சாலையிலுள்ள ‘நீல்கிரிஸ் டிப்பார்ட்மெண்ட்’; ஸ்டோரில் நாங்கள் மாதாந்தர மளிகை சாமான்கள் 1991 ஆம் ஆண்டு முதல் வாங்குவது; வழக்கம். முதலில் ஒரு வயதானவர் அவரின் மூத்த மகன் கவனித்து வந்தார்கள். வாடிக்கையாளர்கள் மீது கவனம் வைத்து தொழில் செய்து வந்தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பெரியவரின் இளைய மகன் மேற்பார்வையிட்டார். அவர் எம்.பி.ஏ படித்தவர் என்று கேள்விப் பட்டேன். வழக்கம் போல் வாங்கும் மளிகை சாமான்களுடன் வெண்டைக்காய் வற்றல் பாக்கட்டில் அடைத்ததினை வாங்கினேன். வீட்டில் வந்து தேவைக்கு பிரித்தபோது அது பூசனம் அடைந்திருந்தது. உடனே அதனை எடுத்துச் சென்று அந்த இளைஞரிடம் காட்டினேன், அவர் மாற்று வெண்டைக்காய் வற்றல் தரமறுத்து விவாதம் செய்தார். நானும் அதனை பெரிது படுத்தவில்லை. ஆனால் அந்த இளைஞர் வந்து மூன்று மாதத்திற்குள் வுhடிக்கையாளர்கள் கூட்டிம் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தினை அவர் அணுகு முறை மூலம் கொடுத்துவிட்டார். அதன் பின்பு வேறு நிர்வாகத்தினர் இப்போது நடத்துகின்றனர்.
உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். மற்றவர்களை கவரும் அனுகுமுறைக்கு தொழில் அதிபரும் வாழும் சீதக்காதியுமான பி.எஸ். அப்துர் ரஹ்மானுடைய உதாரணத்தினைக் கூறலாம். 2007 ஆம் ஆண்டு பி.எஸ்.ஏ பற்றி சிலம்பொலி சு. செல்லப்பன் எழுதிய சரிதை வண்டலூர் இன்ஜினீரியங் கல்லூரியில் நடந்தது. அதில் பி.எஸ்.ஏ உறவினர் சுயம் ஆலிம்சா அவர்கள் பி.எஸ்.ஏ வாடிக்கையாளர்களை கவரும் குணத்தினைச் சொன்னார். பி.எஸ்.ஏயும் சுயம் ஆலிம்சாவும் உறவினர்கள். இருவரும் வியட்நாம் தலைநகர் செய்கோன் நகரில் ஒருவரிடம் வைரம் இருப்பதாக 1960ஆம் ஆண்டுக்கு முன்பு சென்றார்கள். அவர்களுக்கு வியட்நாம் நாட்டு மொழி தெரியாது. அந்த வியாபாரியினை இருவரும் சந்தித்து வைரங்களின் விலையினைக் கேட்டார்களாம். வியட்நாம்காரர் விலை ரூபாய் ஏழு லட்சம் என்றாராம். ஆனால் இவர்கள் கொண்டு சென்றது வெறும் ரூபாய் மூன்று லட்சமாம். பேரம் நடந்தது. வியட்நாம் காரர் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு குறைந்து முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் பி.எஸ்.ஏ அவரை விட வில்லையாம் அந்த வைரங்களின் தரத்தினை எடுத்துச் சொல்லி அந்த விலைதான் பெரும் என்றாராம். வியட்நாம்காரருக்கு ஒரு நாள் டைம் கொடுத்துவிட்டு தாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்து விட்டார்களாம். சுயம் ஆலிம்சா நாம் தங்கி பிரஜோனம் இல்லை ஊருக்குப் போய் விடலாம் என்றாராம். ஆனால் பி.எஸ்.ஏ, ‘பார் அந்த வியட்நாமி நாளைக்கு நம்மை வரச்சொல்லுவார்’ என்றாராம். அதன்படியே அடுத்த நாள் வியட்நாமி வியாபாரி அவர்களை வரச்சொல்லி பி.எஸ்.ஏ வாதத்தினை பாராட்டி வைரத்தினை பி.எஸ்.ஏ கேட்ட ரூபாய் மூன்று லட்சத்திற்கே கொடுத்தானாம். ஆகவே தொழிலில் சுமுகமான அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது பி.எஸ்.ஏயின் அணுகுமுறை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமே!
ஆகவே சிறிய முதலீட்டினை வைத்து சிறப்பாக சமுதாய மக்களை தொழில் அதிபராக்க அனைத்து அமைப்புகளும் முன் வரவேண்டும் என வேண்டுகிறேன்.

Sunday, May 9, 2010

Yoginder Sikand's Interview With Akhtarul Wasey

Yoginder Sikand's Interview With Akhtarul Wasey


Profesor Akhtarul Wasey is the head of the Department of Islamic Studies and the Director of the Zakir Husain Institute of Islamic Studies at the Jamia Millia Islamia, New Delhi. Editor of three Islamic journals, and member of numerous Muslim committees and organisations, he is the author of numerous books on issues related to Islam and Muslims. In this interview with Yoginder Sikand, he discusses the vexed issue of Muslim community leadership in contemporary India.


Q: In pre-Partition late nineteenth and twentieth century India, the Muslim middle-class played a key role in providing leadership to the Indian Muslims in various spheres. This is in contrast to the situation, today. How do you account for this?


A: The Revolt of 1857 was a disaster as far as the Indian Muslims were concerned, and so was the Partition in 1947. But it also saw the emergence and development of the modern Muslim middle class, which proved to be a powerful motor for social change. This was best represented by Sir Syed Ahmad Khan and the movement that he spawned. Not all of those who were influenced by, or agreed with, him on the need for modern education agreed with his pro-British politics. Indeed, some of them were forceful champions of both modern education as well as Indian independence. Raja Mahendra Pratap, head of the first Indian government in exile, was from the Aligarh school, as were other confirmed anti-imperialists such as Hasrat Mohani, Syed Mahmud, Khan Abdul Ghaffar Khan, and the Ali brothers. It is true that many Aligarhians were vociferous supporters of the Muslim League and its Pakistan demand, but there were many others who were with the Congress and even with the Communist Party as well.


It was not just in politics that this new Muslim middle class, largely a product of Syed Ahmad Khan’s Aligarh school, played a key role. It also made a powerful impact in the fields of literature, culture, and economic development.


But, with the Partition things changed drastically. It led to an exodus of a large section of the Indian Muslim middle-class that had been a crucial motor for social change to Pakistan. Their vested economic interests had made them firm backers of the Pakistan scheme, because they felt that there they would face no competition from the Hindus.


Partition was nothing short of a tragedy of momentous proportions for the Muslims, not just of India but of Pakistan as well. The Muslims who were left behind in India faced three choices. Firstly, they could forfeit all their rights since, as right-wing Hindutva forces argued, with the creation of Pakistan they had ‘got their due’. Secondly, they could have the rights of ‘tenants’ as concessions, which is to say they could live in India but not be co-owners of it and would have no role in its development, because it ‘belonged’ to others. Thirdly, they could be equal citizens, with the same rights and duties as other Indians. This third view was, and still is, we must recognize, shared by a large number of Hindus. Indeed, the Indian Constitution gave numerous guarantees to all its minorities, including Muslims. This, we must never forget, was possible only in India. Despite all the provocations of the Hindutva forces and the opposition of some Hindus, the Indian leadership did not agree to declaring India a Hindu state, although it could easily have done that as a reaction to the creation of a so-called ‘Islamic’ Pakistan.


Q: But my question was about the role of the Muslim middle-class in providing leadership to the community at large.


A: I am coming to that point. In post-47 India, Muslims were faced with a unique predicament, one that they had never faced before. They were not a ruling community, but nor were they a ruled community. Rather, they were, in theory, co-rulers, along with other communities. This new status, which they had never enjoyed before, demanded a new sort of community leadership.


Our leaders have a host of issues to tackle, some of which they have failed to address at all. One of these is the lamentable level of Muslim representation in various government services. There is an urgent need for the government to turn its attention to this. It must also do away with the discriminatory provisions that deny Muslim (and Christian) Dalits Scheduled Caste status. Today, Muslim youth want to have their share in the country’s development. They want to participate in the task of building the country. When you speak to government officials, they will tell you that Muslims have all the freedom to do so, but the ground realities are quite different. The Indian Muslims are like the twelfth player in a cricket team, who is kept simply as a ‘reserve’. He is part of the team but is not brought out onto the field along with the other eleven players. He simply sits in the dressing room in the stadium. The Indian Muslim is like that. He is forced to sit in a corner. Ignored, indeed shunned, he spends his time praying that at least one of the eleven players gets hurt so that he can then be called into the field where he can display his talent and make his team win.


But, the point is, we Indian Muslims are no longer willing to be non-playing or ‘reserve’ players in the process of building our country. We demand to be included in the team. And, whenever and wherever we have been included, we have proven our mettle beyond any shade of doubt.


Q: To come back to my question, how do you think that the marginalization of the modern Muslim middle-class in the wake of the Partition, especially in north India, where the bulk of the Indian Muslims live, impacted on the nature of the Indian Muslim community leadership?


A: The vacuum created by the exodus of a sizeable section of the north Indian Muslim feudal and middle class was filled by the ulema of the traditional madrasas. Many of these ulema, particularly a large number of Deobandis, had forcefully opposed the Partition. They condemned the Pakistan scheme and the so-called ‘two-nation theory’ it was based on as un-Islamic. They were passionate advocates for a united India. Following the Partition, they sought to lead the community. They were also the only forces who were able to do so, as they had a strong base among the Muslim masses. The first task they were faced with was to set aside the fears of the Muslims who remained behind in India, to persuade them not to migrate to Pakistan, to rehabilitate tens of thousands who had been displaced in the violence in the wake of the Partition, and to help them build bridges with the rest of the Indian society. This task they did with considerable success, despite the grave odds they faced. One has only to go through the records of the Jamiat ul-Ulema-i Hind in the late 40s and early 50s to see how valiantly these ulema struggled to do all this.


Another issue of immense concern to the Muslims who stayed behind in India after the Partition were the threats to their religious and cultural identity and their religious institutions. The ulema gave a great deal of attention to this vital task. This is something that we just cannot ignore. We cannot ignore the immense sacrifices the ulema made at such a critical juncture in our history. It would be uncharitable to ignore all of this.


Different periods of history have their own requirements and their own priorities. So, from the mid-1960s onwards, you have the emergence of a different set of people who sought to lead the Muslims, including many non-ulema. Many of their demands were also different. This process was reflected, for instance, in the short-lived experiment of the Muslim Majlis, led by Dr. Faridi. At the same time, Hyderabad witnessed the growing influence of the Majlis-e Ittihadul Muslimeen, again a largely non-ulema Muslim formation. This was a time when the Muslims were coming out of their ghettos, less encumbered by the burden of the Partition that had been thrust on them. They were no longer mesmerized by the Congress, which had failed to protect their interests and even their lives.


Q: And what about today? How do you see the role of the Muslim middle-class in terms of leading the community in various fields?


A: The Muslim middle-class in western and southern India is way ahead of its counterpart in the north. In western and southern India, middle-class Muslims are providing a more progressive, socially-engaged and socially-relevant form of leadership. They have set up a large number of institutions for a variety of purposes. Opportunities to do so exist in other parts of the country, but the initiative for doing so is less marked. And, then, the state also often does not provide enough such opportunities. In many places, it prefers to build police stations rather than schools in Muslim localities.


Today, even in ‘backward’ north India, there is a visible demand for modern education among Muslims. In a sense, this was a consequence of the destruction of the Babri Masjid in 1992, when Muslims were forced to realize that their extreme backwardness on the educational front had rendered them weak and ineffective, bereft of influence in the corridors of power. If you go to any Muslim ghetto today, you will be surprised at the number of Muslim-run ‘convent’ or so-called ‘English-medium’ schools that flourish there. Some people quickly dismiss them as ‘teaching-shops’ of woeful quality. Admittedly, their standards may be low and may leave much to be desired, but, then, from quantity comes quality in due course. As a minority, we must strive even harder than others to achieve quality in our institutions, for only then will we gain the respect of others. And only then, of course, can we survive and thrive in the market, which is now characterized by such fierce competition.


Q: What, in your view, should be the main issues that Muslim leaders should concentrate on?


A: Economic and educational advancement should be top priorities of the emerging Muslim leadership. This does not, however, mean that we should ignore politics. Rather, we must be politically active, but in a sensible way. We can’t, and shouldn’t, go it alone in the political sphere. We have to work with others for common interests and concerns. Even on the issue of countering Islamophobia and the targeting of Muslims, it has been found that brave non-Muslim activists, such as Teesta Setalvad and Manisha Sethi (both women) can be better spokespeople for Muslims than many of our so-called leaders.


On this let me add a point that we tend not to think about. Just as non-Muslim fellow Indians like Teesta and Manisha and many others are struggling for justice to Muslims, we Muslims, too, must raise our voice for, and work for and with, non-Muslims who face similar problems—Dalits, workers, Adivasis, and so on. Our leadership must not remain obsessed with specifically ‘Muslim’ issues, very narrowly defined. We need to wholeheartedly participate in movements on general issues, issues that affect everyone, as well as in the movements of other marginalized people. Only then can we be in a position to give, rather than just take. Only then can we win the respect and regard of others. We can’t keep demanding things and not helping others, or even ourselves. We have to recognize the urgent need to be much more inclusive and open.


Our Muslim organizations also need to be much more professional than they are. They cannot afford to carry on being individual-centric or starkly sectarian. The feudal ethos that characterizes most them is really appalling.


That said, I can somewhat understand why Muslim organizations tend to focus solely on Muslim-specific issues, although I do not condone this attitude. If your own house is on fire and our own life is under threat, you are simply unable to help others even if you want to. You can’t expect me to come rushing to douse the flames engulfing your house if my house, too, is on fire.


Q: What do you feel about the Muslim media’s role, if at all, in promoting a more relevant and progressive Muslim leadership?


A: It has done precious little at all in this regard. It has remained confined only to Muslim issues and has an impact only on some sections of the Muslims themselves. It does not have a wider, cross-community appeal or influence. Often, Muslim papers serve as vehicles for the personal economic and political interests of their owners and editors.


Q: And what about Muslim elected representatives in the Parliament and state assemblies?


A: On the whole, they do not appear very vocal about Muslim issues. Maybe this is because they are bound to follow the whip of their political parties. They cannot be called ‘Muslim’ leaders unless they are elected from exclusively Muslim constituencies, and even then they would themselves not, and indeed should not, claim that they represent Muslims alone. We do, however, have a new breed of Muslim political leaders who might be able to play a more meaningful role in highlighting issues that concern Muslims—people such as Omar Abdullah, Mehbooba Mufti, Salman Khurshid, Rashid Alavi, Haroon Yusuf and so on. I don’t expect or advocate that they should come on one platform and concern themselves solely with Muslim issues. After all, they are meant to respond to their constituencies, which include non-Muslims, too. However, I feel they should have a common minimum programme for the Muslim community across party lines. This programme should be based on the understanding that India’s interests coincide with those of its Muslim citizens and that as long as Muslims remain backward the country as a whole cannot advance as it should.


Q: How do you account for the fact that while the ulema (despite their limitations) are deeply involved in community issues, middle-class Muslims (notable exceptions notwithstanding) are not?


A: Our university-educated Muslims are so engrossed in their own personal issues and concerns that they simply don’t have any time for others. I think this seriously needs to be critiqued and changed. They, too, must be actively involved in community affairs, instead of leaving this task just to the ulema and some self-appointed Muslim politicians. I think universities such as the Aligarh Muslim University and the Jamia Millia Islamia must play a leading role in this regard. Their researchers must seriously study Muslim issues, to come up with prescriptions and to dialogue with agencies of the state and civil society groups. This is something that they have, I must say, largely failed to do.


Q: The lament is often heard that the ulema and modern-educated Muslim leaders and others are divided by a yawning gulf and that this dualism is a major problem that urgently needs to be solved. This is said to be one of the principal factors for the absence of a proper community leadership. What do you feel about this?


A: I think this issue of the divide between the ‘old’ and the ‘new’ systems of knowledge, represented by two different sets of leaders, is becoming increasingly irrelevant today. This is a very heartening development. We need both forms of education and both types of leaders. We need religious as well as modern education, because Islam is not just about the Hereafter. Rather, it gives equal stress to the this-world or duniya. As the Prophet Muhammad remarked, the world is the field of the Hereafter. This is to say, one will sow in the Hereafter what one reaps in this world. Islam stresses both worship (ibadat) and social affairs (muamilat).


The notion that in Islam there is a rigid distinction between ‘religious knowledge’ (ilm-e din) and ‘worldly knowledge’ (ilm-e duniya) is wholly tenable. It is the product of the period of Muslim decline. Admittedly, it has ruined us. The only distinction that Islam countenances in knowledge is between what is ‘useful’ (nafe) and ‘useless’ (ghair nafe). So insistent was the Prophet Muhammad that his followers should gain proper education that he even offered to release non-Muslim prisoners of war, taken in the aftermath of the battle of Badr, if they educated those of his followers who were illiterate, Now, these were no ordinary non-Muslims. Rather, they were fierce enemies of Islam and the Prophet, who had waged war against them. Obviously, not only did they know nothing about Islam, they were wholly against Islam. Naturally, therefore, what they taught the illiterate Muslims was not the Quran or the Hadith, but worldly knowledge, or what we today call ‘secular’ knowledge. So, if the Prophet considered this sort of knowledge perfectly legitimate, how can it be considered impermissible?


Let me end this by mentioning the Quranic story of the creation of Adam. When God told the angels that he was going to create Adam, the angels, who otherwise were always obedient to Him, objected. He asked them to explain the names of things, but they could not. However, Adam did so. Then, God ordered the angels to bow down before Adam. Accordingly, the rule was established that those who do not know must always defer to those who do. God decided this on the very day Adam was created. This is why till Muslims ‘knew’, till they embraced and promoted all forms of useful knowledge, others respected them. But, ever since they stopping ‘knowing’ and began wallowing in ignorance, they were forced to be subordinate to others. So, if today Muslims find themselves bowing before others, it is their own fault for having abandoned the pursuit of knowledge.


Hence, we must stop blaming others for all our ills and realize that for much of our present sorry plight we are ourselves responsible. The point, therefore, is that the pursuit of knowledge, including what is called ‘secular’ knowledge is indispensable if we Muslims are to drag ourselves from out of the morass we find ourselves stuck in today—not just in India, but all across the globe.


* Yoginder Sikand works with the Centre for the Study of Social Exclusion at the National Law School, Bangalore.
--

உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுகோள்

உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுகோள் செய்தியை விகடன் இணையம் வெளியிட்டுள்ளது சென்று பாருங்கள்

http://www.vikatan.com/vc/2010/jan/vc.asp

http://youthful.vikatan.com/youth/Nyouth/umarthambi080510.asp

நீங்கள் உங்கள் கட்டுரையை மீள் பதிவு செய்ய அனுமதியளித்தால் இன்று உமர் மாமா அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற செய்தி நல்ல வலுபெற்று வருகிறது

தாஜூதீன்

tjdn77@gmail.com

Thursday, May 6, 2010

மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி

மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி

இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது இன்னுயிரை தியாகம் செய்த நாள். அதனையொட்டி அவரது தியாகத்தை நினைவுக்கூறும் விதமாக இந்தக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.

'கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: 'இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்" எனக் குறிப்பிடுகிறார்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், '30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது'. என்று குறிப்பிட்டான்.

போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், 'இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்' என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். "அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்" என்று பதறுகிறான் அவருடைய பணியாள். "முட்டாள்... வாயை மூடு" என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! "ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்" என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.

திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி
ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப் பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாக திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது 'அக்னி சிறகுகள்' என்ற நூலில் தான் அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation - DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, 'இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 'ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.

வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை
திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.

இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள் கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச் செய்து வந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால் வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விளைந்தார் திப்புசுல்தான்.

நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்
அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரை கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: "மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?" என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியை தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடைச்செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடைச்செய்தார்.

அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு
'எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் நாயர் சமூக பெண்களால், சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக அச்சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்சத்திற்கு சென்று சூத்திர பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி பலர் கன்னியராகவே இறந்தனர்.

வரதட்சணை கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்."

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.

திப்புவின் மத நல்லிணக்கம்
திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.

திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுத் தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.

இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது 'திப்புவின் சமயக் கொள்கை' என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வுக் கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் 'திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிரமாணர்கள் தற்கொலைச் செய்துக் கொண்டனர்' என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி.,ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இதனைக் கண்ணுற்று திடுக்கிட்டு இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்கு காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார் பி.என்.பாண்டே.

திப்புவின் விவசாயக்கொள்கை
"எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்" என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பிராமணர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.

சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக் கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும்பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

1911 இல் ஆங்கிலேய பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக்கட்ட பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். இந்த அணைநீரை பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.

திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. "விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்" என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

போர்களத்தில் நேர்மை
"தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.”

மக்கள் சக்தியை திரட்டியவர்
ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. "அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்".என்பதே அந்த ஆணை.

தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.

திப்புவை மாவீரனாக மாற்றியது எது?
இவ்வாறு போர்வீரராக, ஆட்சியாளராக, நிர்வாகியாக, பொருளாதார அறிஞராக, தொழில் நுட்ப வல்லுநராக, சீர்திருத்தவாதியாக, ஒழுக்க சீலராக திகழ்ந்த திப்புசுல்தானின் வாழ்க்கையை பார்க்கும் பொழுது ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் வாழ இயலுமா என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.

உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் திப்பு சுல்தானும் ஒருவர் என நாம் நம்மை சமாதானப்படுத்திவிட முடியாது, அல்லது பொதுவுடைமைவாதிகள் கூறுவது போல் பிரெஞ்சுப்புரட்சியைப்பார்த்தோ, மாறிவரும் உலமைப்புரிந்துக்கொள்ளும் கண்ணோட்டமோ அல்ல திப்புவை வெற்றிகரமான மனிதராக மாற்றியது. அவ்வாறெனில் எந்தக்கொள்கை அவரை மாற்றியது? அதுதான் இஸ்லாம்.



திப்பு மேற்கூறப்பட்டது போன்ற பண்புகளை மட்டுமன்றி அவர் பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் என்ற இறைவனை நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையும், அவர் படித்த திருக்குர்ஆனும் அவருக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது. உத்வேகத்தை அளித்தது. நீதியாளராக மாற்றியது. ஒழுக்க சீலராக பரிணமிக்க வைத்தது.
கடைசியில் அச்சுறுத்தலுக்கும், ஆசைவார்த்தைகளுக்கும் அடிபணியாத உயிர்தியாகியாகவும் மாற்றியது. ஆகவே திப்புவின் வெற்றிகளுக்கு பின்னணியில் இஸ்லாம் என்ற இறைக்கொள்கைதான் காரணமே தவிர வேறொன்றுமில்லை.

விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.
சஞ்சய்கான் ’the sword of tippu' என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிட்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை ’கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.

புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை ‘கற்பனை கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.

சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.

அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவுக்கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன.
அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், வறுமை, லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும். அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

Source : http://paalaivanathoothu.blogspot.com/2010/05/blog-post_8711.html

பாலையில் நீ......

பாலையில் நீ......
மணம் வீசும்
மண வாழ்வில்
மணாளனாய் நீ எனக்கு;

வெட்கம் தீர்வதற்கு முன்னமே
தீர்ந்துவிட்டது உன் விடுப்பு;

சுற்றம் சூழ
தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்
பாலைக்கு!

வீங்கிய இமைகளும்
தூங்க மறுக்க;
சாயம் போகா மருதாணியும்
புதுப்பெண் என்ற பட்டமும் இன்னும் எனக்கு!!
மருந்தாய் உன் குரல் மட்டும்;
விருந்தாய் உனக்கொரு செய்தி;

சிக்கிய எச்சிலோடும்
சிணுங்கிய கண்களோடும்
இல்லாத வார்த்தைகளால்
சொல்லாமல் நான் தவிக்க;
வருட வேண்டிய நீயோ
வருத்தெடுத்துவிட்டாய் வார்த்தைகளால்;
யோசித்துவிட்டு அழைப்புக் கொடு என்று!!

புன்னகையைக் கூட
பூக்கிறேன் என்றதுக்கு பின்தான்
புரிந்துக்கொள்ளும் தூரத்தில்
நீயும் நானும்!!

கேட்டது கிடைக்கும் மசக்கையில்
என்று யாரோ சொல்ல;
கேட்டேன் உன்னை ஒரு முறை வா என்று!!


இதோ இதோ என்று
இன்னொரு வருடமும் ஒடிவிட்டது;
என் மனமும் ஒடிந்துவிட்டது!!

எங்களை வாழ வைப்பதாக எண்ணி
பாலையில் நீ;பாதியில் நம் உறவு;

நீயிருந்தும் முதிர்க்கன்னியாக நான்
காய்ந்துப் போன மனதுடன்
தீய்ந்துப் போன வயதுடன்
இறுதிவரை இருந்திருக்கலாம் மகளாக
என் பெற்றோருக்கு!!



-யாசர் அரஃபாத்

அன்று................

அன்று
பிரேமானந்தா !
இன்று
நித்தியானந்தா !

வஞ்சிக்கொடி
ரஞ்சிதாவை
வஞ்சகவலைவிரித்து
கொஞ்சிவிளையாடிய
பஞ்சமாபாதகனே !

பகலில் ஆன்மீகம்
இரவில் பெண்மோகமா ?
காமக்களியாட்டதிற்கு
காவி அவதாரமா ?

சிற்றின்ப
சுகபோகத்துக்கு
முற்றுந்துறந்த
முனிவர் வேஷமா?

பெண்பித்து
பிடித்து அலைந்தவனே
பிரம்மச்சாரியமா
பேசிவந்தாய் ?

அரேபியச்சட்டமின்று
அமுலிலே இருந்திருந்தால்
அன்றே கல்லெறிந்து
கொல்லப்பற்றிப்பாய்


அன்று ......
ஆன்மிகத்தைப் போதிக்க
ஆசிரமங்கள் தோன்றியது

இன்று ........
ஆபாசத்தை அனுபவிக்க
ஆசிரமங்கள் தோன்றுகிறது

அந்தபுரங்கலேல்லாம்
ஆசிரமங்கலாகிவரும்
அவலநிலை இன்று
அன்றாடம் அரங்கேறுது

கடவுள் பெயரால்
கருவறைக்குள்ளேயே
காமக்களியாட்டங்களை
காண முடிகின்றது

ஆன்மீகத்தின் பெயரால்
அன்றாடம் நிகழுகின்ற
போலிச்சாமியார்களின்
காளித்தனங்களும்

கடவுளின் பெயரால்
மடங்களிலே நடக்கும்
மூடநம்பிக்கை களும்
முடிவுக்குவந்திட

மக்களின் மனங்களிலே
மண்டிக்கிடக்கின்ற
மூடநம்பிக்கை களை
தோண்டி எறிந்திடவெண்டும்

கடுமையான சட்டங்கள்
காலதாமதமின்றி
நடைமுறைக்கு வந்திட
நடவடிக்கை உடனடியாக
எடுத்திடவேண்டும்
காயல்............................சிந்தா


theakmujeb@yahoo.com

How to Prepare an Effective Resume’

How to Prepare an Effective Resume’


1. Resume Essentials


Before you write, take time to do a self-assessment on paper. Outline your skills and abilities as well as your work experience and extracurricular activities. This will make it easier to prepare a thorough resume.


2. The Content of Your Resume


Name, address, telephone, e-mail address


All your contact information should go at the top of your resume.
Avoid nicknames.
Use a permanent address. Use your parents' address, a friend's address, or the address you plan to use after graduation.
Use a permanent telephone number and include the area code.
Add your e-mail address. (Note: Choose an e-mail address that sounds professional.)


Objective or Summary


An objective tells potential employers the sort of work you're hoping to do.
Be specific about the job you want. For example: To obtain an entry-level position within a software development firm requiring strong analytical and organizational skills.
Tailor your objective to each employer you target/every job you seek.


Education


Fresh graduates without a lot of work experience should list their educational information first. Alumni can list it after the work experience section.

Your most recent educational information is listed first.
Include your degree (M.C.A, M.Sc., B.Sc, B.A., etc.), major, institution attended, etc.
Add your grade point average (Percentage / GPA) if it is impressive.
Mention academic honors.


Work Experience


Briefly give the employer an overview of work that has taught you skills. Use action words (such as achieved, organized, conducted etc.,) to describe your job duties. Include your work experience in reverse chronological order—that is, put your last job first and work backward to your first, relevant job. Include:

Title of position,
Name of organization
Location of work (town, state)
Dates of employment
Describe your work responsibilities with emphasis on specific skills and achievements.




Other information


You may add:

Key or special skills or competencies
Leadership experience in volunteer organizations
Participation in sports


References


Ask people if they are willing to serve as references before you give their names to a potential employer.
Do not include your reference information on your resume. You may note at the bottom of your resume: "References furnished on request."


3. Resume Checkup


You've written your resume. It's time to have it reviewed and critiqued by a career counselor. You can also take the following steps to ensure quality:


Content:


Run a spell check on your computer before anyone sees your resume.
Get a friend to do a grammar review.
Ask another friend to proofread. The more people who see your resume, the more likely that misspelled words and awkward phrases will be seen (and corrected).


Design:


These tips will make your resume easier to read and/or scan into an employer's data base.

Use white or off-white paper.
Print on one side of the paper.
Use a font size of 10 to 14 points.
Use non-decorative font types.
Choose one font type and stick to it.
Avoid italics, script, and underlined words.
Do not use horizontal or vertical lines, graphics, or shading.
Do not fold or staple your resume.
If you must mail your resume, put it in a large envelope.

Online Arabic Tuition Centre

Online Arabic Tuition Centre

Assalamualaikum (Peace be Upon You),

We are planning on releasing an online Tuition Centre in mid-June (1-to-1 online tuition). We will teach a range of courses from beginner to advanced levels to suit the requirements of students. Our teachers will be native Arabic teachers with a range of skills in English, French, German and other foreign languages. The only requirement for students is an internet connection, PC, microphone and webcam (optional).

Students who have registered their interest in the service will be given priority in lesson bookings on a first-come first-served basis. To submit your name to the priority list - please visit the link: http://www.madinaharabic.com/tuition_interest.php . This will take you to a form where you can submit your name and email to be contacted when we start the Tuition Centre. This helps us to manage the demand for the service which is likely to be very high.

We will teach a range of subjects and courses including Modern Standard and Classical (Qu'ranic) Arabic and offer tuition across all time zones (24 hours a day, 7 days a week). For more information on hourly lesson charges / rates and requirements you can also visit: http://www.madinaharabic.com/tuition_services.html .

Kind Regards,
MadinahArabic.com Team

உலக வெப்பமயமாதல்:

உலக வெப்பமயமாதல்:

மரம் வளர்ப்போம் !

-அல்ஹாஜ் எல்.எம்.ஏ. ஷேக் அப்துல் காதர்

இந்த பிரபஞ்சம் (Universe) என்பது என்ன? எங்கிருந்து வந்தது? எங்கே முடியப் போகிறது? பெரிய தத்துவ ஞானிகள் முதல் சாமன்யர்கள் வரை அனைவரது மனத்திலும் இயற்கையாய் உதிக்கும் கேள்விகள் இவை. 15 ஆயிரம் கோடி வருடங்களுக்கு முன்பு நமது பிரபஞ்சத்தில் ஒரு பெரிய வெடிப்பு (Big Bang) நடந்ததாகவும் ஹைட்ரஜன் வாயு மேகங்களும், நட்சத்திரங்களும் உருவானதாகவும், பின்னர் வெகுகாலம் கழித்து நம் சூரியன் போன்ற மூன்றாம் தலைமுறை நட்சத்திரங்கள் உருவான போது தோன்றிய கிரகங்களின் வயது நம் பூமியைப் போல 450 கோடி வருடங்கள் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து தெளிவு அடையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். சூரிய குடும்பம் என்பது ஒன்பது கோள்களுடன் அடங்கிய நிலவுகள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்கள் ஆகும். சூரிய மண்டலத்தைத் தாண்டிப் பால்வீதி (Milky Way) மண்டலம் போல் பல கேலக்ஸிகளை (Galaxy) இந்த பிரபஞ்சம் அடக்கிக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கேலக்ஸியும் பல சோலார் சிஸ்டத்தைக் கொண்டது. நட்சத்திர மண்டலம் – கேலக்ஸி என்பது பத்தாயிரம் கோடி நட்சத்திரங்களை அடக்கியது; அதன் கிரகங்கள் ஒளிவீசி சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றன; வாயு மண்டலங்கள் எனப்படும் நெபுலாக்கள் (ஹிளணுற்யிழி) மற்றும் வெற்றுப் பிரதேசம், தூசி, அணுதுகள்கள் ஆகியவற்றை அடக்கியது. இப்பிரபஞ்சத்தில் குறைந்தபட்சம் 5000 கோடி கேலக்ஸிகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு கேலக்ஸியும் தன்னைத் தானே சுற்றிவருகின்றது. நம் கேலக்ஸியான பால்வீதி மண்டலத்தில் சூரியன் ஒரு முறை சுற்றிவர இருபது கோடி வருடங்கள் ஆகிறது. சூரியன் ஏற்கனவே 450 கோடி ஆண்டுகள் வாழ்ந்தாகிவிட்டது. இன்னும் ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகள் வாழும். அதனாலேயே இது நடுத்தர வயதுடைய சூரியன் என்று அழைக்கப்படுகிறது. இந்த சூரியன் பாக்கியுள்ள 450 கோடி ஆண்டுகளில் சூரிய அணு உலை முழுவதுமாக நின்று நெருப்பு கோலமாக மாறிப் பல மடங்கு அதனுடைய விட்டம் பெரியதாகிப் பூமியைக் கண்டிப்பாக விழுங்கிவிடும். அத்துடன் நமக்கு அடுத்துள்ள செவ்வாயையும் பதம்பார்க்கும், இறுதியில்…! இப்படி, இந்த பிரபஞ்சம் விஷயம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பும் பொழுது பூமி வெப்பமடைதலை ஏன் கடுமையான வசனம் கொண்டு தாக்கு கின்றார்கள் ! நம் சந்ததியினர்களுக்கு வாழ்க்கை இல்லை என ஏன் சொல்லுகின்றார்கள்? மேலே சொன்னவை பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு சிறிய குறிப்புகள் தான்.

சூரியக் குடும்பத்தில் 2வது சுற்றில் வெள்ளியும் (Venus), 3வது சுற்றில் பூமியும் (Earth), 4வது சுற்றில் செவ்வாயும் (Mars) சுற்றிக் கொண்டிருக் கின்றன. இதில் 3வது சுற்றில் உள்ள பூமி இரண்டாவது சுற்றில் உள்ள வெள்ளியில் மோதாமல் போவது போல கற்பனை செய்தால் என்ன நடக்கும்? (வெள்ளியில் Co2 – 96% சராசரி உஷ்ண நிலை 482*C ) உஷ்ணம் நிறைய உள்ள வெள்ளியில் ஆக்ஸிஜனும் இல்லை. நீரும் இல்லாத நிலையில் உயிர் வாழ முடியுமா? அதேபோல் பூமி நான்காவது சுற்றில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு மோதாமல் போனால் என்ன ஏற்படும்? செவ்வாயில் ( வெள்ளியில் Co2 – 96% , ஹி2=3%, நு2 = 0.2 % ) உஷ்ணம் -126*C வரைக்கும் இருக்கும் அப்படியென்றால், ஆக்சிஜன் இல்லை, நீர் உறைந்துள்ள நிலையில் இருந்தால் எவ்வாறு உயிர்கள் வாழ முடியும் ?
சூரிய குடும்பத்தில் 3வது சுற்றில் உள்ள பூமியைப் போன்ற அபூர்வ மான கிரகம் உயிரினங்களுக்குத் தேவையான சூழ்நிலையைக் கொண்டதுமாகும் என்பனவற்றை மனதில் கொள்ள வேண்டும். வேறு கிரகத்தில் உயிர்கள் வாழும் சூழ்நிலையை இதுவரைக்கும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. மேலும் சூரிய குடும்பத்தை அல்லாத கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதாகக் கண்டு பிடிக்கவில்லை. ஆகையால்தான், நம் பூமி உயிர்கோளாகக் கருதப்படு கின்றது.

மக்கள் தொகை பெருக்கத்தால் வறுமை, வேலையின்மை, சுற்றுச் சூழல் பாதிப்பு, தண்ணீர் பஞ்சம் ஏற்படும். இதனால் வன்முறை, கொலை கொள்ளைகள் அதிகமாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. உலகில் இன்று ஏற்பட்டுள்ள மாசுக்களில் மிகப்பெரிய மாசு மக்கள் தொகை பெருக்கம்தான். சுற்றுச் சூழலை மாசுபடுத்துவது மனிதனே என்றாலும் அந்த சுற்றுச்சூழல் மாசுவில் இருந்து உலகைக் காப்பாற்றும் சக்தி படைத்தவனும் மனிதனே. எனவே இன்றைய மிக முக்கிய தேவை மக்கள் தொகைக் கட்டுப்பாடு. அத்துடன் மரங்களை வளர்த்து ஆதாயம் அடையலாம்.

மரங்கள்/ செடிகள்/ கொடிகள் எல்லாம் இயற்கையாகவே ஒளிச் சேர்க்கை (Photosynthesis) மற்றும் சுவாசம் (Respiration)செய்வதால் நாம் பெறும் பயன்களைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.


1. உணவு

Glucose,Starch –உள்ள பழங்கள் எல்லா வகையான உணவுகளையும் தயாரிக்க மரங்கள் உபயோகப்படுகின்றன. காற்றிலுள்ள கார்பன் –டை- ஆக்ஸைடை ( CO2 ) இலைகள் மூலம் உறிஞ்சிக் கொண்டு, வேரிலுள்ள நீரில் ( H2O ) இருக்கும் ஹைட்ரஜனை ( H2 ) மட்டும் எடுத்துக்கொண்டு சூரிய ஒளியைப் பயன்படுத்தி குலுக்கோஸை (Glucose - C6H12O6 ) தயாரிக்கிறது. அதாவது உயிரினங்களுக்கு தேவையான உணவுகளை தயாரித்துக் கொடுக்கின்றன.


2. ஆக்சிஜன் ( O2 ):

உணவுகளைத் தயாரிக்கும் அதே வேளையில் மரங்கள் உயிரினங் களுக்கு உயிர் வாழத் தேவைப்படும் சுவாசத்திற்குத் தேவையான ஆக்ஸிஜனையும் உற்பத்தி செய்கின்றன. அதாவது உணவு தயாரிக்க நீரிலுள்ள ஹைட்ரஜனை மட்டும் எடுத்துக் கொண்டு மீதம் உள்ள ஆக்ஸிஜனை வாயு மண்டலத்தில் வெளிவிட்டு உயிரினங்களை மரங்கள் காப்பாற்றுகின்றன. மேலும் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனின் அளவு 21%க்கு மாறாமல் சமநிலையிலும் வைத்துக்கொள்கின்றன. 21% நிலையிலிருந்து ஆக்ஸிஜனின் அளவு 50% க்கு மாறினால் உலகம் தீப்பிடித்து எரியும். அதேபோல் 5% குறைந்தால் கூட மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படும் என்ற அபாய நிலையும் உள்ளது. வளி மண்டலத்தில் சமநிலையை ஏற்படுத்த மரங்கள் பெரிதும் பயன்படு கின்றன.


ஒளிச்சேர்க்கையின்போது நீரிலுள்ள ஹைட்ரஜனை( H2 ) மட்டும் எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை ( O2 ) வெளிவிடுகின்றன. மாறாக ஆக்ஸிஜனை ( O2 ) எடுத்துக்கொண்டு ஹைட்ரஜனை ( H2 ) வெளி விட்டால் மீண்டும் தீப்பிடித்து உலகமே அழிந்து விடும் என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும்


3. நீர் ( H20 ):

உயிரினங்களுக்கு மிகவும் இன்றியமையாதது உணவு, ஆக்ஸிஜன் மற்றும் நீர். இவை மூன்றும் இருந்தால்தான் உயிரினங்களுக்குத் தேவையான சக்தியும், வெப்பமும் கிடைக்கும். மரங்கள் மழைநீரைத் தந்து நீர் கிடைக்கச் செய்கின்றது. நீர் ஆதாரத்தைப் பெருக்கி எல்லா வளத்தையும் கூட்டுகின்றது. மரங்கள் தனக்காகவும், மற்ற உயிரினங் களுக்காகவும் மழையைக் கொண்டு வருகின்றது. இல்லாவிடில் நம் ஊர் பாலைவனமாக மாறும். துபை போன்ற பாலைவன நாடு சோலை வனமாக மாறியதற்குக் காரணம் அங்கு 30 வருடமாக விடாமுயற்சியில் ஏற்படுத்திய மரம் வளர்ப்புதான் என்பதை யாவரும் அறிவோம்.


4. நைட்ரஜன் ( Nitrogen – N2 )

மரங்கள் வெளியிடும் ஆக்ஸிஜனை எல்லா மூலை முடுக்குகளிலும் சந்து பொந்துகளிலும் இருக்கும் உயிரினங்களுக்கு எடுத்து செல்லவும், அதே சமயம் உயிரினங்கள், பாறைகள், கடல்கள், எரிமலைகள் வெளி விடும் CO2 - ஐ மரங்களுக்குப் பக்குவமாக எடுத்துச் செல்லவும் இந்த நைட்ரஜன் பயன்படுகிறது. நைட்ரஜன் வாயு மண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனை ஓர் அளவிற்கு எடுத்துக் கொண்டு நைட்ரஜன் ஆக்ஸைடாக (Nitrogen Oxides) மாறிப் பூமியில் நைட்ரஜன் உரங்களைத் தயாரித்து மண்ணை வளமாக மாற்றுகின்றது. மண் செழிப்பிற்கு நைட்ரஜன் முக்கிய காரணமாகின்றது. நைட்ரஜன் வாயு மண்டலத்தில் 78% ஆக உள்ள நிலையிலும் வாயு மண்டலத்தில் அதிகமாக உள்ள வாயு என்ற நிலையிலும் எந்த ஓர் உயிர்க்கும் தீங்கு செய்யாமல் எல்லா உயிர்களும் உயிர் வாழ உதவுகின்றது.


மேலும் காற்று மண்டலம் ஆக்ஸிஜன் நு2- 21% மும், நைட்ரஜன் N2 - 78% சேர்ந்த கலவையாக (Mixture) உள்ளது. அதாவது ஒன்றோடு ஒன்று எந்த கிரியையும் (Reaction) செய்யாமல் எளிதில் பிரிக்கக்கூடிய கலவையாக உள்ளது. இது பிரிக்க முடியாத கலவையாக மாறினால் நமக்கு ஆக்ஸிஜன் கிடைக்காது. உயிரினங்களும் உயிர் வாழ முடியாது. மேலும் நைட்ரஜனும், ஆக்ஸிஜனும் சேர்ந்து ( N20 ) நைட்ரஸ் ஆக்ஸைடு என்ற சிரிப்பைக் கொடுக்கும் வாயு (Laughing gas) ஏற்படுகிறது. இதனை மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சையின் போது போதை கொடுக்க (Anesthesia) மருத்துவர்கள் பயன்படுத்து கிறார்கள். ஹி2நு அளவு கூடினாலும் எல்லோரும் சிரிக்கும் விபரீதம் வாராதா? எல்லாம் இயற்கையின் கட்டுப்பாட்டிலுள்ள மரங்கள் அதற்கு ஒத்துழைக்கின்றன.


5. கார்பன் வியாபாரம் (Carbon trading)

மரங்கள் CO2 ஐ எடுத்துக்கொண்டு உயிர் வாழத் தேவையான உணவு, ஆக்ஸிஜன், நீர் போன்ற பொருள்களை ஒளிச்சேர்க்கை (Photo Synthesis) மூலம் கொடுக்கின்றன என்பதை அறிவோம். அதே சமயம் புவி வெப்பமடைதலுக்குக் காரணமாக CO2 ஐ எடுத்துக்கொண்டு காற்று மண்டலத்தைச் சுத்தம் செய்யும் வேலையையும் செய்கிறது. இப்படி CO2 வாயு மண்டலத்தில் குறைக்கும் ஒவ்வொரு மரத்திற்கும் ஐ.நா வில் பணம் கொடுக்கின்றார்கள். இதைத்தான் (Carbon trading) என்கிறோம். ஒவ்வொரு மரமும் அந்தந்த அளவுக்குத் தகுந்தாற்போல் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு 500 டன் கார்பன் –டை – ஆக்ஸைடை எடுத்துக் கொள்கின்றது. இப்படிப்பட்ட வியாபாரம் செய்ய மரங்கள் உதவுகின்றன.

மேலும் மரங்கள், பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இருப்பிடத்தைத் தருகின்றன. வெயில் கொடுமையிலிருந்து காப்பாற்றி நிழல்கள் தருவது மரங்கள்தான். மரங்களை உயிர் உள்ள ஏர் கண்டிசனர் (Air conditioner) என்றும் அழைப்பதுண்டு. தொகுப்பு மரங்கள் சுமார் 1*C வெப்பம் குறைக்கும் என்று சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். மருத்துவக் குணமுள்ள காய், கனி, இலைகள் போன்றவற்றை மரங்கள் தருகின்றன.

மரங்கள் கடுங்காற்று மற்றும் சூறாவளிக்குத் தடுப்பாகச் செயல் படுகின்றன. மண் அரிப்பைத் தடுக்கின்றது. இலைகளும், பூக்களும் மண்ணுக்கு உரமாகின்றன. பல ஆயிரம் வருடத்திற்கு முன் புதையுண்ட மரங்கள் இப்போது நிலக்கரியாகவும் (Petrolium crude oil) எண்ணையாகவும் திரும்பக் கிடைக்கின்றன. புகை மற்றும் தூசிகளைத் தடுக்கவும் வடிக்கட்டும் வடிகட்டியாகவும் பயன்படுகிறது. கால்நடை களுக்குத் தீவனமாகவும் பயன்படுகிறது. புதிதாய் பிறக்கும் இளம் தளிர்கள் நடைபழகும் பிஞ்சு மழலைகள், இப்பூவுலகில் நம்பிக்கை யுடன் பாதம் பதிக்க, பிரபஞ்சத்தில் ஒரே உயிர்க்கோளும் நமது ஒரே வீடுமான பூவுலகைப் பத்திரமாய் வைத்திருப்போம்.

நன்றி : இனிய திசைகள் – ஏப்ரல் 2010
--

Wednesday, May 5, 2010

எப்போது விடுமுறை?

எப்போது விடுமுறை?



ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தாலும்
என் மூளையில் இருப்பதென்னவோ நீதான்!

தொடமுடியாத தூரத்தில் நீ
தொட்டுப் பார்க்கும் என் விரல்கள் உன் கடிதத்தை!!

நிழாலாய் உன்
நினைவுகள் - இங்கே
கனவுகளோடு
காலம் தள்ளும் உன்
கணவன்!

இருக்க இடம் எங்கே என்று நீ கேட்க ;
படுப்பதற்க்கு மட்டுமே இடம் என்று நான் உரைக்க
பதறிப் போனாய் நீ!

குடும்பத்தோடு இருந்தும்
தனிமையாய் நீ அங்கே;
குடும்பத்திற்காகவே தனிமையாய்
நான் இங்கே!!

அருகில் வரவே
இனிப்புகள் இலஞ்சமாய்
என் குழந்தைக்கு;
வாங்கவும் மறுக்கிறான்
வரவும் மறுக்கிறான்;

வெடித்துப் போய்
விளக்கம் கேட்டால்;
கத்திச் சொன்னான்
அடிப்பாள் அம்மா
கண்டவரிடம் வாங்கினாள்!

வரும் உன் அழைப்பையும் துண்டித்து விட்டு
கூடவே கொஞ்சம் கண்டித்துவிட்டு
பேசக் கூட நேரமில்லை என்று
வேலையில் நான்;
கண்ணீரோடு கனைத்துவிட்டு
மெதுவாய் நீ கேட்பாய்;
எப்போது விடுமுறை என்று!!


இப்படி
மலறும் நினைவுகளோடு
கதறும் உள்ளம்;
சுடும் கண்ணிரோ
என் தலையணையை நனைக்க
முடிவெடுத்துவிட்டேன் இனி
போதாது எனக்கு ஒரு தலையணை என்று!!



- யாசர் அரஃபாத்

நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?

நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
-சு ராஷித் அலி (சு. ராஜேஸ்வரன் )

சமீபத்தில் பெரியார்தாசன் ‘அப்துல்லாஹ்’ ஆக இஸ்லாத்தில் இணைந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஓசைப்படாமலேயே இஸ்லாத்தை உணர்ந்து இணையும் நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்தவர் சு. ராஜேஸ்வரன். திருச்சி தேசிய கல்லூரியில் M.Sc., (Geology) பயின்று சுய தொழிலாக மெடிகல் ஷாப் வைத்துச் சமூக சேவை ஆற்றி வருபவர். இவரது பெற்றோர் சுப்புசாமி – அழகம்மாள் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயக் கூலிகள் ஆவர். தீவிர அம்பேத்கர் இயக்கத் தவராகத் திகழ்ந்த சு. ராஜேஸ்வரன் மொழி, இனம், பொதுவுடைமை, கம்யூனிசம் எனும் இவையெல்லாம் சமூக ஏற்றத்தாழ்வை ஒழிக்க இயலாதவை; உண்மையான சமத்துவத்தை ஏற்படுத்த இயலாதவை என்பதைத் தெளிந்து, ஏகத்துவத்தை ஏற்று அதன் வழிதான் சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியுமென்பதை உணர்ந்து இஸ்லாத்தில் இணைந்துள்ளார். சு. ராஜேஸ்வரன் இப்போது சு. ராஷித் அலியாகவும் இவரது மனைவி சாந்தி இப்போது சாரா பீவியாகவும் சமுதாயச் சேவையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.

இஸ்லாத்தில் இணைவதற்குத் தனக்கு அடிப்படைச் சிந்தனையாக அமைந்தது எது என்பதை இதோ அவர் விளக்குகிறார்.

‘’மொழியாலோ, இனத்தாலோ, பொதுவுடைமையாலோ, கடவுள் மறுப்பாலோ சமூகத்தில் புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் ஒரு சமுதாயம் உருவாக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் சாதிய கட்டமைப்பு ஒழிக்கப்படாதவரை அது ஓர் உண்மையான நிலையான சமத்துவமிக்க சமுதாயமாக இருக்க சாத்தியமே இல்லை என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியலை மையமாக கொண்டதே எனது கருத்தியல்.

மொழி, இனம், பொதுவுடைமை, கடவுள் மறுப்பு என்கிற கருத்து நிலைகளை மையமாக வைத்துக் கொண்டு சதுரங்கம் விளையாடுகிற அலங்காரமான அரசியல்வாதிகளை அல்லது சீர்திருத்தவாதிகளைக் கடந்த காலங்களிலும் சமகாலத்திலும் பார்க்க முடிகிறது. ஆனால் இவர்களெல்லாம் சமத்துவத்தை உருவாக்க கூடிய மூல செயல் வடிவமான சாதி ஒழிப்பை மட்டும் லாவகமாகத் தவிர்த்துவிட்டே வந்திருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. சாதி ஒழிப்பைக் கூர்மைப்படுத்தினால் இந்துத்துவம் உடைந்து சுக்கு நூறாகி இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துபோய்விடும்… என்பதை இவர்களெல்லாம் அறியாதவர்கள் அல்ல.

இவர்களை பொறுத்தவரை முதலில் இந்துத்துவத்தைக் காப்பாற்றி வைத்துக் கொண்டுதான் மற்ற எல்லா வகையான சீர்திருத்தத்தையும் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். காரணம் என்ன வென்றால் அடிமைகள் இருந்தால்தானே தனக்கான தளம் இருக்கும். அப்படிப்பட்ட தளம் இருந்தால்தானே அதன் மேலே வலுவாக நின்று கொண்டு தொடர்ந்து கூச்சல் போட முடியும். அப்படி கூச்சல் போட்டால் தானே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு தனது பிழைப்பை நடத்த முடியும் என்கிற தீர்க்கமான முற்போக்கான அறிவாளிகள்தாம் இந்த தேசம் முழுக்கப் பரவிக் கிடக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கருத்துநிலை சீர்திருத்தங்கள் எல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுகள் தாம் அவற்றால் விளிம்பு நிலை மனிதர்களுக்கு எவ்விதமான சமூக விடுதலையையும் ஏற்படுத்தித் தரமுடியாது என்பதையும் உணர முடிந்தது. விளிம்பு நிலை மனிதர்களுக்கான தீர்வு சமூக சீர்திருத்தமா? அல்லது சமூக விடுதலையா? என்கிற கேள்வி வருகிறபோது சமூக விடுதலைதான் என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தான் நிரந்தரமானது என்கிற உண்மையை அறிவுத் தளத்தில் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆனால், தனது அற்ப பிழைப்பு வாதத்துக்காக விளிம்பு நிலை மக்களின் சமூக விடுதலையை விட்டு விட்டு வெறும் சீர்திருத்தநோக்கிலேயே செயல்பட்டு வரும் இவர்களை எண்ணி நெஞ்சம் ரணமாகிறது.

மொழியால், இனத்தால், பொதுவுடைமையால் கடவுள் மறுப்பால் மக்களை ஒன்று சேர்ப்பதாகவும் அதன் மூலம் சமத்துவம் உருவாகும் என்றும் சொல்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வி எழுகிறது.

மொழியாலும் அந்த மொழி பேசுகிற இனத்தாலும் ஒன்றுபடலாம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் ஊரை உருவாக்கும்போதே சேரியை உருவாக்கி அந்த மக்களைத் தீண்டதகாதவர்களாக்கிப் பொதுப் பாதை, பொதுக்குளம், பொதுக்கோயில் இப்படி அனைவருக்கும் பொதுவான அனைத்து வகையான இடத்திலிருந்தும் தள்ளிவைத்து அவர்கள் வாழும் சேரி, குடிசைகளைக் கொளுத்திக் கொலை வெறித் தாண்டவம் ஆடியது யார்? ஜெர்மானியமொழி பேசுகிற ஜெர்மானியர்களா? அல்லது சீனமொழி பேசுகிற சீனர்களா? இல்லையே விளிம்பு நிலை மனிதர்கள் தாய்மொழியாக கொண்ட அதே தமிழ் மொழி பேசுகிற தமிழ் இனம்தானே.

பொதுவுடையைப் பேசுகிற கம்யூனிசவாதிகளாவது உழைக்கும் வர்க்கமெல்லாம் ஒரே வகைப்பாடுகளில் உள்ளவர்கள், நமக்குள் வர்க்க வேற்றுமைதவிர சாதிய வேற்றுமைகள் எதுவும் கிடையாது. உழைக்கும் வர்க்கம் என்கிற அடிப்படையில் ஒரே இடத்தில் வாழ் விடங்களை அமைத்துக் கொள்வது, சமூக ஒழுங்கிற்கு உட்பட்டு உழைக்கும் வர்க்கத்தாரின் யாருடைய வீட்டிலும் யாரும் திருமண பந்தம் வைத்துக் கொள்வது என்கிற செயலாக்கத்தைக் கொண்டு வந்தார்களா? மாநில அளவில் வேண்டாம் குறைந்தபட்சம் ஒரே ஒரு கிராம அளவிலாவது இந்தியாவின் எந்த மூலைப் பகுதியிலேனும் ஒரு புரட்சிகரமான கிராமத்தை அவர்களால் உருவாக்க முடிந்ததா? (சாதிய கட்டமைப்புகளைக் கொண்ட இந்தியாவில் மார்க்சியம் செல்லுபடியாகாது) என்று சொன்ன புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தானே இன்று உண்மைக்குச் சாட்சியாக நிற்கிறது.)

கடவுள்தான் சாதிய கட்டமைப்புகளை உருவாக்கி வழிநடத்துகிறது என்றும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் சாமிதான் காரணம் என்றும் “கடவுளை மற மனிதனை நினை” என்று சொல்லி வந்தார்களே இவர் களாவது சாதி ஒழிப்பை முன்னெடுத்தார்களா? சாதி மறுப்புத் திருமணங்கள், வாழ்விடங்கள் குடியிருப்புகள் என ஒரே இடத்தில் அமைத்துக் கொண்டு வாழ்வது போன்ற அடிப்படையான விஷயங் களில் ஒன்றிணைந்தார்களா? கடவுள் மறுப்பாளர்கள் என்பதால் புரோகிதர் மறுப்பில் கவனம் செலுத்தியவர்களால் பாவம் சாதி மறுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை போலும். (இப்படி கூறுவதனால் பகுத்தறிவாதிகளைக் குற்றம் குறை சொல்லுவதாகவோ அவர்கள் விளிம்புநிலை மக்களுக்காக நடத்திய போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகவே எண்ணி மிகுந்த பிணக்கு கொள்வார்கள்.)

மேற்படி கொள்கைவாதிகளிடம் கேட்பதற்கு இன்னும் ஆயிரக் கணக்கான கேள்விகள் உண்டு. இங்கே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் மிக மிக சாதாரண அடிப்படையானவைகள் மட்டும்தான். இதற்கே இவர்களிடம் பதில் இருக்காது. அவர்களைப் பார்த்து, அம்பேத் கரியம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்; உங்களின் போராட்டங்கள், தியாகங்கள், உயிரிழப்புகளுக்கான கருத்தியலால் சாதி ஒழிக்கப்பட்ட சமத்துவ சமூகத்தை இன்றுவரை ஏன் உருவாக்க முடிய வில்லை. அப்படியானால் “சாதிய கட்டமைப்பை அழித்தொழிக்காமல் எந்த கருத்தியலும் மக்களிடம் புரட்சியை உருவாக்காது. அப்படி ஒரு புரட்சி நடக்காமல் சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்க முடியாது” என்று கூறிய இருபதாம் நூற்றாண்டின் பேரறிஞர் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னவைதாமே இன்றைக்கும் விளிம்புநிலை மனிதர் களாக, பஞ்சைப் பராரிகளாக குடிசைகளிலே வாழ்க்கை நடத்தும் கடைசி மனிதர்களுக்கு உண்மைகாட்சியாய் நிற்கிறது. அத்தனை பெரிய அறிவு படைத்த மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1936 ம் ஆண்டில் சாதியை ஒழிக்கும் வழிகளாக (Annihilation Of caste) மிகத் தீர்க்கமான கருத்தியலை முன் வைத்தார்கள். யாராவது கண்டு கொண்டார்களா?

தன் வாழ்நாளின் இறுதி மூச்சு நிற்கும் வரை விளிம்பு நிலை மனிதர் களுக்காகவே வாழ்ந்த அந்த மாமனிதர் இறுதியாக தனது நெஞ்சம் நிறைந்த துன்பத்தோடும் மிகுந்த ஆதங்கத்தோடும் அதிர்ச்சியோடும் சொன்னார்கள்:

சாதியத்தின் மூலம் இழிவுகளையும் ஏற்றத்தாழ்வு பாகுபாடுகளையும் உருவாக்கியது இந்துத்துவம்தான். இப்படி மனிதனைச் சாதி ரீதியாகக் கொடுமைப்படுத்திய கொடூரம் உலகத்தின் எந்த மூலையிலும் நடத்தப் படவில்லை. ஆகவே இந்திய தேசத்தில் சமத்துவ சமூகத்தை உருவாக்க முனையும் எவராக இருந்தாலும் இந்துத்துவம் என்கின்ற ஒன்று ஒழிக்கப்பட்டால்தான் சமத்துவம் சாத்தியமாக்கப்படும் என்பதையும் இந்துத்துவத்தை ஒழிக்க முனையும் முன்பாக முதலில் தன்னை இந்து அல்லாதவனாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆனாலும் தன்னை ஒரு இந்துவாகவே நிலைப்படுத்திக் கொண்டேதான் இந்துத்துவத்தை வேரறுக்கப் போகிறேன் என்கிறார்கள். இது விந்தையாக இருக்கிறது.

ஒரு மரத்தின்மீது அமர்ந்துகொண்டு அந்த மரத்தை ஆணி வேரோடு சாய்க்கமுடியாது என்பது எந்த அளவிற்கு அறிவுப்பூர்வமான உண்மையோ அதைப் போன்றுதான் மேற்படியாளர்களின் இந்துத்துவ ஒழிப்பு என்பதும் என்று கூறிய புரட்சியாளர் அம்பேத்கர், நம்மை சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளிக் கடைசி மனிதனாகக் குடிசையிலே உட்காரவைத்து சமூகத்தில் உள்ள அனைத்துக் கொடூரங் களையும் செய்து வருகின்ற இந்து சமூகத்தில் இருந்து நம்மை நாமே வெளியேற்றிக்கொண்டு தான் நம்மீது திணிக்கபட்டுள்ள சாதிய இழிவைத் துடைக்க முடியுமே ஒழிய வேறு எத்தகைய தீர்வும் சாத்தியமானது அல்ல என்று உறுதிபட கூறினார்.

அதனடிப்படையிலேயே மொழியும் இனமும் எம்மைசமமாகப் பார்க்க வில்லை. பொதுவுடைமையும் கம்யூனிசமும் எமது இழிந்த நிலையை ஒழிக்கவில்லை, ஆகவே கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு சாதிய சகதியில் உழலுவதைவிட இறைவனை ஏற்று கொண்டாவது சாதியத்தை ஒழிப்பதுதான் எமக்கான சமூக விடுதலை என்று உறுதியாக எண்ணியே “லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்கிற உயிர்ப்பான வரிகளை நெஞ்சம் நிறையச் சொல்லி இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டேன்”

நன்றி : இனிய திசைகள் ( ஏப்ரல் 2010 )

Saturday, May 1, 2010

2011-க்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு

2011-க்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
மிக மிக முக்கியமான கட்டுரை

[ அரசாங்க அதிகாரிகள் மக்கள் கணக்கெடுப்பு பணிக்காக வரும்போது நமது ஜமா அத்தார்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அத்துடன் விபரமறியாத மக்கள் அதிகமிருக்கும் நம் சமூகத்திலுள்ளவர்களுக்கு சரியான விளக்கத்தையும் முன் கூடியே கொடுத்தால் அவர்களது பெயர் விடுபட்டுப்போகாமல் இருக்கும். ஆகவே ஒவ்வொரு மஹல்லாவைச் சேர்ந்தவர்களும் தங்கள் மஹல்லாவிலுள்ள எல்லோருடைய பெயரும் இடம்பெற துணை புரிய வேண்டும்.

120 கோடிக்கு மேற்பட்ட மக்களை தனித்தனியாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்குவது உலகிலேயே இதுதான் முதல் முறை. எந்தவொரு கிராமமும் விட்டுப்போகாத அளவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கணக்கெடுப்புடன், முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்படுறது. இந்தியாவில் மிகப்பெரிய திட்டமாக இது வகுக்கப்பட்டு மிக நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.

மறந்துவிடாதீர்கள்! மண்ணின் மைந்தர்களாகிய எல்லோருடைய பெயரும் இந்த கணக்கெடுப்பில் இடம்பெறுவது மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். - Adm]
நாட்டில் உள்ள எல்லா கணக்கெடுப்புகளுக்கும் அடிப்படையானது மக்கள்தொகை கணக்கெடுப்பு. இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடைபெறுகிறது. தற்போது 2011-க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

1872 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது 15-வது கணக்கெடுப்பாகும். சுதந்திரத்துக்குப் பின் 7-வது கணக்கெடுப்பாகும். சுதந்திரப் போராட்டம், பாகிஸ்தான் பிரிவினை, போர்கள், வெள்ளம், நிலநடுக்கம் போன்றவை நிகழ்ந்தபோதும் பத்தாண்டுக்கு ஒரு முறை தடைபடாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் சந்திரமௌலி தெரிவித்தார்.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி சென்ற மாதம் முதல் தொடங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் பதிவு செய்வதன் மூலம் இப் பணி தொடங்கப்பட்டது..

o தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமியில் 2.7 சதவீத பரப்பளவை கொண்டுள்ள இந்தியாவில், உலக மக்கள் தொகையில் 17.5 சதவீத மக்கள் வசிக்கின்றனர். 28 மாநிலங்கள், 7 ஞ்னியன்கள், 640 மாவட்டங்கள், 7,742 நகரங்கள், ஆறு லட்சத்து 8 ஆயிரத்து 786 கிராமங்கள் மற்றும் 30 கோடிக்கும் அதிகமான வீடுகள் இந்தியாவில் உள்ளன. இங்கு பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர்.


o இந்தியாவின் 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தற்போது நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு தனி மனிதன் குறித்த பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்படும். 15 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் அடையாள அட்டையும், அடையாள எண்ணும் வழங்கப்படும்.

மேலும் அடையாள அட்டையில் புகைப்படம், அவரது கைரேகை ஆகியவை பதியப்படும். அது மட்டுமின்றி, ஒவ்வொருவரின் கண் விழிகளையும் பதிவு செய்வது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.

o ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1824-ம் ஆண்டில் அலகாபாத் நகரிலும், 1827-ம் ஆண்டில் பனாரஸ் நகரிலும், 1830-ம் ஆண்டில் டாக்காவிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதி காரப் பூர்வமாக முதன் முதலாக 1860-ம் ஆண்டில் தொடங்கி 1871 வரை கணக்கெடுப்பு நடந்ததாக வர லாற்று குறிப்புகள் உணர்த்துகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, பின்னர் ஒன்றாக இணைக்கப்பட்டு 1872-ம் ஆண்டில் வெளி யிடப்பட்டது. பின்னர் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்த திட்டம் வகுக்கப்பட்டது. o 1931-ம் ஆண்டில் மட்டும் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் அந்த மாதிரியான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. விடுதலைப் போராட்டம், நாடு பிரிவினை, மதக்கலவரம், நிலநடுக்கம் ஆகிய காலங்களில் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பு நடத்த முடியாத பகுதிகளில், இடைக்கணிப்பு முறையில் மக்கள் தொகை கணிக்கப்பட்டு பட்டியலில் சேர்க் கப்பட்டது.

o 1981-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்கள் தொகை பதிவேடுகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் முழுமையான தகவல்கள் அழிந்து போயின! அதே ஆண்டில் அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் கலவரத்தால் கணக்கெடுப்பு நடத்தப் படவில்லை. 1991-ம் ஆண்டில் ஜம்மு காஷ் மீரில் தீவிரவாதிகளின் பிரச்சினையால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் படவில்லை. தமிழ்நாட்டில் ஜுன் முதல் தேதியில் இருந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. o 120 கோடிக்கு மேற்பட்ட மக்களை தனித்தனியாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்குவது உலகிலேயே இதுதான் முதல் முறை. எந்தவொரு கிராமமும் விட்டுப்போகாத அளவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்புடன், முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்படுறது. இந்தியாவில் மிகப்பெரிய திட்டமாக இது வகுக்கப்பட்டு மிக நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.

o தற்போது நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், புதுமையாக செல்போன், கம்ப் ஞ்ட்டர், இன்டர்நெட் வசதி, குடிநீர் பயன்பாடு, குடிசை, மாத வருமானம், வங்கி சேமிப்பு ஆகிய 35 தகவல்கள் இடம் பெறுகின்றன! இந்த கணக்கெடுப்புக்கு மட்டும் சுமார் 2300 கோடி ரூபாயும், பதிவேடுகள் தயாரிப்பதற்கு ஏறக்குறைய 3550 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அடையாள அட்டை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

o கடந்த 1901-ம் ஆண்டில் 24 கோடியாக இருந்த இந்தியாவின் மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்து கடந்த 2001-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 103 கோடியை தொட்டது! இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரவாணிகளையும் சேர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதில் வீடுகள் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் வணிக வளாகங் கள் போன்ற நிறுவனங்கள் தொடர்பான விவரங்களும் கணக்கெடுக் கப்படும்.

உலகிலேயே அதிக மக்களை ஒரே புள்ளி விவரப் பட்டியலுக்குள் கொண்டு வர செய்யப்படும் மாபெரும் முயற்சியாகும் இது. இது குறித்து செய்தியாளர்களிடம் மத்திய உள்துறைச் செயலர் கோபால் கே.பிள்ளை கூறியதாவது:

o பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.

o 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இப் பணியில் 25 லட்சம் பேர் ஈடுபடுவர். இதற்காக ரூ.2,209 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. o இப் பணியில் முதல் முறையாக செல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் வைத்துள்ள விவரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறதா போன்ற விவரங்களுடன் வீட்டிலுள்ள அனைவரது புகைப்படங்களும், கைரேகைகளும் பெறப்படும்.

o உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்க இந்த விவரங்கள் உதவிகரமாக இருக்கும்.ர்நாட்டில் தற்போது உள்ள சுமார் 120 கோடி மக்கள் குறித்த விவரங்களை சேகரித்தபின் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படும். o இதில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் விவரமும் பதிவு செய்யப்படும். இப்படிப்பட்ட பதிவேடு தயார் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு ரூ.3539.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

o பதிவேடு தயாரானவுடன் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாள எண் தரப்படும். o மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி 2 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்புக்கான விவரங்கள் சேகரிக்கப்படும். இப் பணி அந்தந்த மாநிலத்துக்கு ஏற்றவாறு ஏப்ரல் முதல் ஜூலை வரை பல்வேறு காலகட்டங்களில் 45 நாள்கள் மேற்கொள்ளப்படும்.

o இப்பணி 640 மாவட்டங்களில் 5,767 தாலுகா, 7,742 நகரங்கள், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெறும்.

o 2-வது கட்டத்தில், இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்கள் 2011 பிப்ரவரி 9 முதல் 28 வரை தொகுக்கப்படும் என்றார் பிள்ளை. நாட்டில் உள்ள எல்லா கணக்கெடுப்புகளுக்கும் அடிப்படையானது மக்கள்தொகை கணக்கெடுப்பு. இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பில் எத்தனை வீடுகள் உள்ளன, எவ்வளவு உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களது வயது, கல்வித்தகுதி, வருமானம், தொழில், குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்பு குறித்த அடிப்படை திட்டங்களும் இதன் மூலம் உருவாக்கப்படும்.

சென்சஸ் கணக்கெடுப்பு விவரங்களை அனுமதியின்றி வெளியிட்டால் சிறை

சென்சஸ் கணக்கெடுப்பின்போது பெறும் விவரங்களை அரசின் முன் அனுமதியின்றி வெளியிட்டால் சிறை தண்டனை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2011 பணி நாடு முழுவதும் 2 கட்டமாக நடக்கிறது. வரும் ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை முதல்கட்ட பணியும், 2ம் கட்ட பணி 2011 பிப். 9 முதல் 28 வரை நடக்கிறது.

இப்பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான மத்திய அரசு அறிவித்துள்ள உரிமைகள் & கடமைகளை:
o சென்சஸ் பணிக்காக உள்ளூர் வழக்கத்திற்குட்பட்டு ஒவ்வொரு வீடு, வளாகத்திற்குள் செல்லலாம்.

o தேவைக்கேற்ப கட்டடம், வீடுகளில் சென்சஸ் எண்களை எழுதலாம்.
o வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு அட்டவணையில் கேட்கப் பட்டவாறு எல்லா கேள்விகளையும் கேட்கலாம்.

o அட்டவணையில் அச்சடிக்கப்பட்டுள்ள கேள்விக்கான பதிலை பதிலளிப்பவரிடமிருந்து பெற உரிமையுள்ளது.
கடமை: கணக்கெடுப் பவர்,மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டவர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பணியை கவனத்துடன் செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

o ஒருவருக்கு தரப்பட்ட கடமையை செய்ய மறுப்பது அல்லது அவ்வாறு பணி செய்பவரை தடுப்பது.

o ஒருவரின் மனதை பாதிக்கும்படி, பொருத்தமற்ற கேள்விகளை கேட்பது அல்லது தெரிந்தே தவறான விவரங்களை பதிவது. o சென்சஸ் கணக்கெடுப் பின்போது பெற்ற விவரங்களை அரசின் அனுமதியின்றி வெளியிடுதல். இதுபோன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சகோதரர்களே!
நமது ஜமா அத்தார்கள் அரசாங்க அதிகாரிகள் மக்கள் கணக்கெடுப்பு பணிக்காக வரும்போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

அத்துடன் விபரமறியாத மக்கள் அதிகமிருக்கும் நம் சமூகத்திலுள்ளவர்களுக்கு சரியான விளக்கத்தையும் முன் கூடியே கொடுத்தால் அவர்களது பெயர் விடுபட்டுப்போகாமல் இருக்கும். ஆகவே ஒவ்வொரு மஹல்லாவைச் சேர்ந்தவர்களும் தங்கள் மஹல்லாவிலுள்ள எல்லோருடைய பெயரும் இடம்பெற துணை புரிய வேண்டும்.

மறந்துவிடாதீர்கள்! மண்ணின் மைந்தர்களாகிய எல்லோருடைய பெயரும் இந்த கணக்கெடுப்பில் இடம்பெறுவது மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.


--
http://lalpetexpress.blogspot.com/2010/05/2011.html#links
லால்பேட்டை எக்ஸ்பிரஸ்
http://lalpetexpress.blogspot.com/