Tuesday, June 24, 2008

மனமே.. சிந்திந்து.. செயல்படு..

மனமே.. சிந்திந்து.. செயல்படு..



வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி ஏற்படும். வெற்றி மட்டுமே
வாழ்க்கையாக மாறாது. தோல்வி மட்டுமே வாழ்க்கையாக மாறாது. முதலில்
உங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டு முடிவு செய்தால்,
பின்னர் அதனையே விரும்புங்கள். அதற்காக திட்டமிட்டு உழையுங்கள். உணர்ந்து
செயல்படுங்கள். உற்சாகத்தினை பெறுங்கள். நீங்கள் விரும்பியதை விரைவில்
அடைய முடியும்.

நல்லது மற்றும் கெட்டது எது என்பதை ஆராயும் திறனை ஏக இறைவனாகிய அல்லாஹ்
நமக்கு கொடுத்து இருக்கும் போது சிலர் தோல்வி மற்றும் சோக மயமான எதிர்
மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதன் காரணம் என்னவென்று தெரியவில்லை.

எந்த சூழ்நிலையிலும் கடந்த காலத்தில் செய்த தவறுகள், பிழைகள், தப்புகளை
மனதில் நினைத்துக்கொண்டு, அதற்காக தன்னைத்தானே தண்டித்துக்கொள்வதும்
தனக்கு தானே தண்டனைக்கொடுத்துக்கொள்வது தீர்வாக அமையாது. நேற்று நான்
தோற்றுப் போனான், இன்றும் தோற்றுப்போவேன், நாளையும் தோற்பேன் என்ற
மனோரீதியில் தோல்விக்கு காரணம் கற்பிக்கப் பழகுதல் கூடாது. கடந்த
காலத்தில் செய்த பிழைகள், தோல்விகள், கசப்பான அனுபவங்கள் ஆகியவை மறந்து
போகாமல் இருக்கலாம் இருப்பினும் அதையே நினைத்து மனம் கலங்காமல் அதில்
இருந்து பெற்ற அனுபவத்தினையும் மற்றும் படிப்பினையும் துணையாக்கிக்கொண்டு
சரியான விதத்தில் புரிந்து கொண்டு நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும்
சந்திக்கப் பழக வேண்டும்.

விழிப்புணர்வுடனும் பொறுமையுடனும் ஒரு காரியத்தை செய்யும் போது அதில்
எந்தத் தவறும் ஏற்படுவதில்லை. அப்படியே தவறு வந்தாலும், அதை நமது
விழிப்புணர்வு சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்யும். எந்த ஒரு
சூழ்நிலையிலும் எதிர்மறையான மற்றும் தோல்வி தொடர்பு சம்மந்தமான எண்ணங்கள்
ஏற்பட்டால் அதை உதறித் தள்ளி விட்டு தொடர்ந்து செயலாற்றும்
மனப்பக்குவத்தினையும், மனநிலையை நாமே நமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செயல்பட்டால் நாளடைவில் தோல்வி தொடர்பான எண்ணங்கள் வலுவிழந்தும்
பயனற்றும் போய்விடும்.

சரி.. எதிர் மறையான எண்ணங்கள் மனதில் ஏற்பட்டு விட்டது. என்ன செய்வது.
இதற்கும் ஒரு எளிய வழிமுறை இருக்கிறது. எதிர்மறையான எண்ணங்களை மாற்ற
முயற்சிக்கும் போது அதைப்பற்றியே நினைக்காமல் நல்ல எண்ணங்களை மனதில்
வளர்த்துக்கொள்ளலாம்.

உதாரணமாக பள்ளிக்கூட சிறார்கள் தேர்வில் தோற்றுப்போய் இருப்பார்கள்.
ஆனால் அவர்களிடம் இனியும் நான் தோற்றுப்போவேன் என்று கலங்கித் தவித்தால்
தோல்வி தான் கிடைக்கும். இல்லை நானும் வெற்றி பெறுவேன்.. இதனை விட அதிக
மார்க் வாங்குவேன்.. பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும்
பாராட்டு பெறுவேன் என்ற புதிய எண்ணங்களை உருவாக்கி கொண்டு நினைத்தால்
நிச்சயமாக வெற்றிக்கனி கைக்கு கிடைக்கும். இந்த செயல்பாடுகள் மூலமாக
படிப்படியாக எதிர்மறையான எண்ணங்களின் பாதிப்பு அவர்களை விட்டு அகன்று
விடும். இந்த மாதிரியான நல்ல எண்ணங்களையும் புதிய எண்ணங்களையும் நாம்
நமக்குள் வளர்த்துக்கொண்டு நம்முடைய பிள்ளைகளும் சொல்லி தரவேண்டும்.

நம்பிக்கையை மறு பரிசீலனை செய்யுங்கள். என்னால் இந்தச் செயலை செய்ய
முடியாது. அப்படியே செய்தாலும் அதை சிறப்பாக செய்ய முடியாது என்ற எண்ணம்
தோன்றும் போது அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த எண்ணம் உண்மைகளின்
அடிப்படையில் தோன்றிய ஒன்றா? அல்லது தவறான புரிதலால் நிகழ்ந்த ஒன்றா?
என்று ஆராய வேண்டும். அப்போது உங்களுக்குள் நீங்களே சில கேள்விகளை
கேட்டுக்கொண்டால் அது பற்றி தெரியவரும் அந்தக்கேள்விகள்.. இந்த எண்ணம்
தோன்றியது சரியான உண்மைகளின் அடிப்படையிலா? தவறாக புரிந்து கொண்டதால்
ஏற்பட்ட ஒன்றா? இந்த சூழலில் மற்றவர்கள் இருந்தாலும் இதே முடிவு தான்
எடுக்கும் நிலை வருமா? சரியான காரணம் இல்லாத சூழலில் ஏன் தோல்வி எண்ண
பயத்துடன் செயல்பட வேண்டும்?

இந்த கேள்விகளுக்கு உண்மையான விடை தேட வேண்டும் உங்கள் மனதை எந்த
நிலையிலும் ஏமாற்றிக் கொள்ளாமல் பதில் தேடுங்கள். அப்போது உங்கள் மனதில்
தோன்றிய எண்ணம் உண்மையின் அடிப்படையில் தோன்றியதா? அல்லது தவறாகப்
புரிந்து கொண்டதால் ஏற்பட்டதா? என்பது தெரியவரும். இந்த முடிவின்
அடிப்படையில் உங்களது எண்ணங்களின் போக்கை மாற்றிக்கொள்ள முடியும்.

எதை நீங்கள் அடைய விரும்புகிறீர்களோ அதை ஆழமாக விரும்புங்கள். அப்போது
ஏற்படும் சக்தியே உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். அதாவது
நீங்கள் எதனை அடைய விரும்புகிறீர்களோ.. அதை உங்கள் மனதில் நிலையாக
நிறுத்திக் கொள்ளுங்கள். அதை அடிக்கடி உங்கள் மனதில் நினைவு கூர்ந்து
உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். அதையே மனதில் தினமும்
தியானியுங்கள். உற்சாகமான இந்த புதிய சிந்தனையே உங்கள் மனதில் இருக்கும்.
எதிர்மறையான எண்ணங்களை விரட்டியடிக்கும். எதை அடைய விரும்புகிறீர்களா அதை
அடைய வேண்டும் என்ற எண்ணம் தீவிரம் அடையும் போது அதை அடைவது
எளிதாகின்றது.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'ஈமான் என்றால் என்ன?' என்று வினவினார்.
அண்ணலார் விடையளித்தார்கள்: 'ஒரு நற்செயல் உனக்கு மகிழ்ச்சி அளித்தால்,
தீய செயல் உம்மைத் துக்கத்தில் ஆழ்த்தினால் அப்பொழுது நீர் ஈமான் உடையவர்
ஆவீர்' அதற்கு வந்தவர் கேட்டார்: 'இறைத்தூதரே! பாவம் என்றால் என்ன? 'எது
உனது உள்ளத்தை உறுத்துகிறதோ அதை விட்டு விடு!' அறிவிப்பாளர்: அபூ உமாமா
(ரலி) ஆதாரம்: அஹ்மத்,

நல்ல நண்பர்களுடன் பழக வேண்டும். தினந்தோறும் அவர்களுடன் நல்ல
செய்திகளையும் நல்ல விஷயங்களையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள். தாங்கள்,
இன்று ஒரு நல்ல செய்தியினை ஊடகத்துறை மூலமாக கேட்டு இருக்கலாம் அல்லது
படித்து இருக்கலாம். அதனை பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களும்,
அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை பற்றி உங்களிடம் மகிழ்வுடன்
பகிர்ந்துக்கொள்வார்கள். தனிமையை விட்டு தூரமாக இருக்க முயற்சி
செய்யுங்கள். தனிமையாக இருந்தால் நமக்குள் ஷைத்தான்கள் குடிப்புகுந்து
விடுவான். அப்படியே தனிமையில் இருந்தால் நல்ல விஷயங்ளை பற்றி
காகிதங்களில் எழுதிக்கொண்டு இருக்கவும். நண்பர்களுடன் காட்டுங்கள்.
ஏதேனும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கவும் என்றும் அவர்கள் ஆலோசனை
சொல்வார்கள். கேட்டு கொள்ளுங்கள். நல்ல புத்தகங்களை படிக்கவும்..
அதனையும் அவர்களுக்கு கொடுக்கவும். அவர்களும் தாங்களுக்கு நல்ல
புத்தகங்களை பரிசாக கொடுப்பார்கள்.

லட்சியம் எது என்று முடிவு செய்த பின்னர் அதை அடைவது குறித்த உங்கள்
செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள்
தகுதி, திறமை என்ன என்பதையும் உங்கள் லட்சியத்தை அடைய அது எந்த அளவுக்கு
உதவியாக இருக்கும் என்பதையும் பகுத்து உணர்ந்து கொள்ளுங்கள். நம்மால்
முடியுமா..? முடியும் என்றால் அதை அடைவது எப்படி? முடியாது என்றால்
அதற்கு காரணம் என்ன? முடியாது என்பதை முடியும் என்று மாற்ற முடியுமா..?
அதற்கு எவ்வாறு திட்டமிட வேண்டும், உழைக்க வேண்டும்? இவற்றை அலவி
ஆராய்ந்து தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

உங்களது திறமையை நீங்களே புதைத்து விட வேண்டாம். அல்லாஹுதலா நாம்
எல்லோருக்கும் ஏதேனும் ஒரு திறமையினை கொடுத்து இருப்பான். சிலருக்கு
பேச்சு திறமை இருக்கும், சிலருக்கு எழுத்து திறமை இருக்கும். அதனை நாம்
நமக்குள் மூடி வைத்துக்கொண்டால் அதுவே திறன் இல்லாமல் மறைந்தும் மறந்தும்
போய் விடும். நம்முடைய திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டிய வாய்ப்பினையும்
மற்றும் அமைப்பினை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

திறமையை குறைத்து மதிப்பீடு செய்து கொண்டு வெற்றி இலக்கை தவறவிடுவதும்
கூடாது. தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று ஆழம் தெரியாமல் காலை
விட்டு தோல்விகளைச் சந்திக்கவும் கூடாது. ஆகவே இறைவன் நமக்கு கொடுத்த
சிந்திக்கும் திறனை கொண்டும் பகுத்தறிவினைக்கொண்டும் சிந்தித்து செயல்பட
வேண்டும். அப்போது விதியை மதியால் வெல்லலாம். சில நேரங்களில் ஆகுமான
செயல்கள் கூட ஹராமான (விலக்கப்பட்ட) செயல்களுக்குக் காரணமாகி விடுகின்றன.
இதனால் இறை நம்பிக்கையாளர்களுக்கு முன்னால் ஆகும் எனும் அம்;சம் மட்டுமே
இருக்கக்கூடாது. மாறாக ஆகுமான செயல் தப்பித்தவறி விலக்கப்பட்ட
செயல்களுக்குக் காரணமாகிவிடக் கூடுமோ என்ற அச்சத்துடன் அவர்கள்
விழிப்புடன் இருக்க வேண்டும்.

உங்களுக்கு என்ன தேவை என்பதை தீர்மானிக்கும் தன்மை பள்ளிப்பருவத்திலேயே
வந்து விட வேண்டும். விரும்பிய பாடத்தைப் படிக்கும் போது அதில்
கவனத்துடன் பர நுணுக்கங்களை விரும்பி கற்றுக்கொள்ள முடியும். அதை
கருத்தில் கொண்டு தான் ஒவ்வொருவருக்கும் விருப்பப்பாடம் என்ற ஒன்றை
தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு 12 ஆம் வகுப்புகளிலும் மற்றும்
கல்லூரிகளிலும் அளிக்கப்படுகிறது. நாம் அங்கு விரும்பாக எடுத்த
பாடத்தொடர்பானது வேலையாக மாறும் போதும் சரியே பணியாற்று போதும் சரியே
என்பது அன்பின் வெளிப்பாடாக அது அமையும். அன்பின் வெளிப்பாடாக வேலை
அமையும் போது உற்பத்தி திறன் கூடும். களைப்பு தோன்றாது. திறமை அதிகரிக்க
வாய்ப்பாக அது அமையும்.

எனவே வாழ்க்கையினை தீர்மானிப்பது என்பது நம்முடைய சிந்தனையே தவிர
வேறில்லை. அதாவது பகுத்தறிவுத் துணை கொண்டு தீர ஆராய்ந்து முடிவு
எடுங்கள். இன்றைய மதியே நாளைய விதியாகும். இன்று முதல் சரியாக சிந்தித்து
செயல்படத் துவங்கிவிட்டால் நாளை என்பது இன்று என்பதின் துவங்கமே..

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் தைரியத்தையும் இழந்து விட வேண்டாம், கவலையும்
பட வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால்,
நீங்கள் தாம் மிக்க மேலானவர்கள். அல்குர்ஆன் 3:139

http://www.tamilmuslim.com/sinthi.htm



M.M.Mohamed Ikbal M.C.A,
IT - Support Engineer,
Apple Centre,
Al Moayyed International,
Manama,
Kingdom Of Bahrain.
Website: www.almoayyedintl.com
Email: nnikbal@gmail.com, nnikbal@yahoo.com

मुस्लिम लीग मला

Muslim League MLA

M. A. Khaleelur Rahman
263 Sha Nagar
Pallapatti 639 207
Karur Dist
Tel : 04320 - 241399

நீதியின் குரல்

நீதியின் குரல்

http://neethienkural.googlepages.com/home


குவைத்தில் வெளிவரும் இதழ்

தகவல் : முபாரக் ரஸ்வி

sithima@gmail.com


Sugumaran R.
tosatrumun@googlegroups.com
dateTue, Jun 24, 2008 at 9:01 PM
subjectRe: neethienkural website as e-paper (forward this mail address for ur tamil friends)

வணக்கம்,

"நீதியின் குரல்" "எம்.ஜி ஆர்" காலத்தில் "ஜேபிஆர்" - ஆல் நடத்தப்பட்ட பத்திரிக்கை, அப்போது அந்த பத்திரிக்கையின் செய்தியாளராக நான் இருந்துள்ளேன்.

பழைய நினைவை நினைவு படுத்துகிறது பத்திரிக்கையின் தலைப்பு.

அன்புடன்
இரா.சுகுமாரன்