Wednesday, September 12, 2012

லஞ்சம் வாங்காகாதீர்கள், கொடுங்கள் ஆர்- நடராஜன் !


லஞ்சம் வாங்காகாதீர்கள், கொடுங்கள் ஆர்- நடராஜன் ! http://rssairam.blogspot.com/2012/09/blog-post_6.html மக்கள் நினைத்தால் தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இய்க்க மாத இதழ், ஆசிரியர் இல். சு. ஜெகநாதன் 9444939698 இவர்களை அணுகி உறுப்பினராகலாம். கூட்டங்கள் அறிவுரைகள் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். 500 டூபாய் செலுத்தி அடையாள அட்டை வாங்கிக் வைத்துக் கொண்டால் லஞ்சம் கொடுக்காமல் காரியங்கள் நடக்கும். மேலும் ஒரு இணைய தளத்தில் லஞ்சம் கொடுத்த விபரத்தை முகவரியுடனோ, முகவரி இல்லாமலோ பதிவு செய்யலாம். அந்த இணையதளம் வடநாட்டில்தான் இயக்கப்படுகின்றது என்று கருதுகின்றேன்.எனது வலைப்பூவிலும் பதிவு செய்துள்ளேன் தேடினேன், உடனே கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் இத்துடன் இணைய முகவரி இணைக்கப்பட்டு விடும்.. தாங்கள் சொல்வதெல்லாம் சரிதான். துணிச்சலுக்கும், நேர்மைக்கும் ஆயிரம் வணக்கங்கள். நாம் என்ன செய்ய வேண்டும் ? அதையும் சொல்ல்லித் தாருங்கள் .நன்றி. LKM பப்ளிகேஷன்ஸ் கார்த்திகேயன் 33/4 ( 15/4 )இராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17, 24361141, 24340599 வழங்கியுள்ள பதிப்புரை :- ஆர்.நடராஜன் நாட்டின் அரசியல் தலைவர்களுக்கும், முக்கிய அதிகாரிகளுக்கும் அறிமுகமாகியுள்ள, அவர்களுடன் பழகியுள்ள, எழுத்தாளர்; பத்திரிகையாளர். இரு குடியரசுத் தலைவர்கள் இவரது நூல்களைப் பாரட்டியுள்ளார்கள். குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோது இவர் எழுதியிருந்த ஒரு நூலுக்கு அணிந்துரை தந்துவிட்டு, குடியரசுத் தலைவர் பதவியிலிருந்தும் விலகிவிட்டார். விலகியவுடன் இவரது இன்னொரு நூலையும் வெளியிட்டார். ஒரு பிரதமர் லண்டனில் இவரது நூலை வெளியிட்டார். இன்னொரு பிரதமர் இவருடன் மதிய விருந்தில் தேர்தல் போக்குகள் பற்றி விவாதிதார். பிரதமராக இருந்தபோது தன்னைப்ப் பற்றி இவர் எழுதிய நையாண்டிச் சிறுகதையின் மொழிபெயர்ப்பை, ஒரு முன்னாள் பிரதமர், இவரிடமிருந்தே கேட்டு வாங்கிப் படித்தி ரசித்தார். இவரை விருந்துக்கு அழைத்தார். ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ,இப்போதைய மத்திய அமைச்சருமான ஒருவர், இவரது இன்னொரு நூலை வெளியிட்டார். ஒரு முன்னாள் அமைச்சர் தன் டாக்டர் பட்ட ஆய்வேடு வெளியாக, இவர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்திருக்கின்றார். ஒரு தேசியத் தலைவர் சென்னையில் இவருடன் தனியாக அரசியல் பற்றி விவாதிக்க அரைமணிநேரம் ஒதுக்கினார். நான்கு தமிழக முதல்வர்கள், மூன்று கவர்னர்களுடன் இவர் பழகியிருக்கின்றார். சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இவரது கதைகளையும், கட்டுரைகளையும் பாராட்டியிருக்கிறார்கள். இவரோ, நட்பு, பழக்கம், தாட்சண்யம் பாராமல் மனதுக்குப் பட்டதை அப்பட்டமாக எழுதுகின்றார். இவரது விழிப்புணர்வு அரசியல் கட்டுரைத் தொகுப்பை வெளியிடுவதில் எங்கள் பதிப்பகம் பெருமைப் படுகின்றது. எழுத்தாளர் ஆர். நடராஜனின் முன்னுரையிலிருந்து :- நாட்டின் பலமும் பலவீனமும் மக்களே. நம் பலவீனங்களைப் புரிந்துகொள்வதற்காகவே அரசியல்வாதிகளின் ச்யநலப் போக்குகளை படம் பிடித்துக் காட்டி வருகின்றேன். மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டே மக்களைச் சுரண்டும் அரசியல்வாதிகளைப் புரிந்துகொள்ளாதது நம் பலவீனமே. எழுதுவதற்குள்ள துணிவு இப்போது பதிப்பிபதற்கும் வேண்டும். லஞ்சம் வாங்காதீர்கள் கொடுங்கள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பை, வெளியிட்டுள்ல நண்பர் சென்னை எல்.கே.எம். பதிப்பக உரிமையாளர் திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு என் நன்றி. வாசகர்களின் கருத்தை வரவேற்கிறேன், என்கிறார், எழுத்தாளர், ஆர். நடராஜன். அவரது, மின்னஞ்சல் முகவரி :- hindunatarajan@hotmail.com லஞ்சம் வாங்காதீர்கள் ! கொடுங்கள்! லோக் சத்தா என்ற மராத்தியப் பத்திரிகை லஞ்சம் கொடுத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு வாசகர்களிடம் கேட்டுக்கொண்டது. நாற்பது கடிதங்கள் வ்ந்தன. பத்திரிகையாளர் பிரபாகர் குல்கர்னி தொகுத்த கடிதங்களின் சாரம்சம் இவைதான்:- மின்வாரியம், மாநகராட்சி, வருவாய்த்துறை, வட்டாரப் போக்குவரத்துத்றை அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்ரும் லிஃப்ட் சான்றிதழ்கள், மரணச் சான்றிதழ் அலுவலகங்கள், ”லஞ்சம் இல்லாமல் வேலை நடக்காது. நாங்கள் ல்ஞ்சம் கொடுத்திருக்கின்றோம்.” என்றே கூறியிருந்தனர். மும்பை லிஃப்ட் தயாரிக்கும் ரமேஷ் போஸ்லே சான்றிதழ் பெற லிஃப்ட் ரூ.3000 முதல் ரூ.10000 வரை லஞ்சம் தர வேண்டியிருந்ததாம்.லிஃப்ட் நிறுவனங்கள் லைசென்சுக்கு ரூ.50000 முதல் ஒரு லட்சம் தருவதால், அந்த அலுவலகத்தின் எட்டு இன்ச்ப்ர்க்டர்கள் மாதம் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுகிறார்கள். இஞ்ஜினியர்களும் ஆர்கிடெக்ட்களும் சம்பாதிப்பதவிட அதிகமான தொகையை மும்பை முனிசிபல் கார்ப்பொரேஷனைச் சேர்ந்தவர்கள் கட்டட ஒப்பந்தக் கோப்புகளில் பெற்ரு விடுகிறார்கள் என்கிறார் பெயர் சொல்லி வம்பில் மாட்டிக் கொள்ள விரும்பாத ஒரு ஆர்கிடெட் ஒருவர். .தாதர்ரில் உள்ல ஒரு மருத்துவ மனையின் டைரக்டர் ராஜ்ஸ்ரீ கேல்கர், வெளிநாட்டில் வசித்துவிட்டு இந்தியாவிற்கு வந்தவர். தாநாட்டில், தனக்கும் மகனுக்கும் பாஸ்போர்ட்டில் முகவரி மாற்ரத்திற்கு விண்ணப்பித்தபோது, ஒவ்வொரு பாஸ் போர்ட்டிற்கும் ரூ.300/- லஞ்சம் தர வேண்டியிருந்ததாம். புரோக்கட்கள் புழங்குமிடம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம். சுரேந்திரநாத் மற்ரும் உமேஷ் கடம் ஆகியோருக்கு லஞ்சம் கொடுர்ஹ்ர்ஹ பின்னர்தான் லசென்ஸ் கிடைத்ததாம். சந்தீப் தாமோதர் எல்ர்க்ட்ரிக் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார்.சம்பந்தப்பட்ட அலுவலரை டீ சாப்பிட அழைத்தார். 500ரூ.லஞ்சம் கொடுக்கவும் தயாராய் இருந்தார். அவர் ஏதேதோ சொல்லி 7000/- ரூ. கறந்து விட்டார். இதனால் அவர் வெறும் எலெக்ட்ரீஷியனாக இருந்தால் போதும் என்ற முடிவிற்கு வந்து விட்டார். மரணச் சான்றிதழ் பெற்ரிட மாநகராட்சியில் 500/- ரூ.லஞ்சம் கொடுத்த அவலத்தை அருண், ராஜாராம் ஜோஷி ஆகிய வாசகர்கள் கூறினர். சொத்துச் சான்றிதழ் பெற வருவாய்த்துறை அலுவலகத்திற்கும், பிராவிடெண்ட் ஃபண்ட் அலுவலகத்திற்கும் லஞ்சம் கொடுத்தகதை இரு வாசகர்களுடையதாக இருந்தது. பத்திரிகைகள் லஞ்சப்புகார்களைக் கேட்க ஆரம்பித்தால், இது புதிய லோக்பால் சட்டம் என்று சொல்லி, லஞ்சம் கொடுத்தவர்களையே அரசு ஜெயிலில் தள்லிவிடும் அபாயமும் உண்டு. ஒரு சமயம் குல்சாரிலால் நந்தா , லஞ்சமில்லாத நிர்வாகத்திற்காக “சதார்த்த சமிதி” என்ற அமைப்பைத் துவக்கினார். உறுப்பினராகத் தகுதி, 1) லஞ்சம் பெறக் கூடாது 2) லஞ்சம் தரக் கூடாது என இரண்டுதான். தன் நண்பர் ஸ்ரீபிரகாசாவை ( காங்கிரச் காலத்தில் தமிழ் நாட்டில் கவர்னராக இருந்தவர் ) அந்த சமிதியில் உறுப்பினராகுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு ஸ்ரீவத்சா, ” லஞ்சம் வாங்கக் கூடாது; என்ற நிபந்தனை சரி. லஞ்சம் கொடுக்காதே, என்று சொல்லாதீர்கள். லஞ்சம் கொடுக்காமல் இருக்க முடியாது. எனக்கும் காரியம் ஆக வேண்டாமா ?” என்று பதிலளித்தார். ஆன்னானப்பட்ட கவர்னருக்கே இந்தக் கதி என்றால், அப்புறம் மக்கள் எந்த மாத்திரம்? லஞ்சம் போன்ற சமதர்ம, சமத்துவவாதி வேறு யாரும் இல்லை. கடவுள் வேறுபாடு பார்ப்பதில்லை. சமூக நீதியுடன் இயங்குவது லஞ்சம் மட்டுமே. லஞ்சத்தை ஒழிக்க ஒரே வழி வேறு வார்த்தையை அகராதியில் பதிய வேண்டியதுதான். இந்த நூலில் 54 தலைப்புக்களில் கட்டுரைகள் உள்ளன. அத்தனையும் முத்துக்கள். அவசியம் வாங்கி வீட்டு நூலகத்தில் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம். எழுத்தாளர் மின்னஞ்சல் முகவரி மேலே உள்ளது. நூலை விமர்சனம் செய்வோம். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம். அதுதான் படைப்பாளிக்கு நாம் கொடுக்கும் பரிசு. கிடைக்குமிடமும் மேலே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பதிப்புரை ஒன்றே போதும், இந்தநூலினை வாங்கிடத் தூண்டும். லஞ்சம் கொடுப்போமா? த்விர்ப்போமா ? தீர்மானிக்க வேண்டியது நாம்தான் ! இன்னும் சில பொன்மொழிக் குறிப்புகள்:- 1. ஒருவரிடம் பதவி இருக்கிறது; மற்றவரிடம் அதிகாரம் இருக்கிறது. 2.பிரதமர் பதவியே அதிகாரத்தில் கூனிக் குறுகிப் போய்விட்டதே ! 3.பத்திரிகை உலகம் ஏன் சோனியா பற்றி “சதிகார மெள்னம்”காக்கிறது? 4. சட்டம் தன் வேலையைச் செய்கிறது. பணமும் தன் வேலையைச் செய்கிறது. 5.அரசியல் சுழற்சியில் தரகர்கள் இல்லாமல் பணப்புழக்கம் இல்லை. . 6. கூட்டணிதர்மம் அரசியல் சாசனத்தைவிட சிரேஷ்டமானது. 7.இந்திய ஜனநாயகம் இப்பொழுது ஆம்புலன்சில் ஏறியிருக்கிறது. இத்தலைப்புக்களுரியவை கட்டுரைகளைக்கிடையேதான் வரும் VVI POINTS தேடிப்படிப்பதும் ஒரு சுகமல்லவா?