Sunday, July 27, 2008

தண்ணீர் சிக்கனம்: மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

தண்ணீர் சிக்கனம்: மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

சென்னை, ஜூலை 19: தண்ணீர் பயன்பாடு பற்றி பள்ளிக்கூட மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை ஹென்கெல் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

சுற்றுச் சூழல் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது.

10, 11, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், எதிர்காலத்தில் தண்ணீரின் பயன்பாடு குறித்த கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி இதற்கு அனுப்பலாம்.

தண்ணீர் சிக்கனம், மறுசுழற்சி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தருவது இதன் நோக்கம்.
2500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரைகளை எழுதி Henkel.Ecopetition@in.henkel.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு henkel.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

திருக்குர்ஆனும் - திருக்குறளும்

திருக்குர்ஆனும் - திருக்குறளும்

தொகுப்பு : எம். முஹம்மது மஸ்தான், எம்.ஏ., பிஎஸ்ஸி
தலைமையாசிரியர் - ஓய்வு


விதிப்பற்றி திருக்குரானும்,திருக்குறளும்

இறைவன் கொடுத்ததை தடுப்பவன் எவனுமில்லை.
இறைவன் தடுத்ததை கொடுப்பவன் யாருமில்லை.
இறைவனின் அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை.
இதை திருக்குர்ஆன்( 15 145 ) தெளிவு படக் கூறுகிறது.

மேலும் எந்த ஆன்மாவும் ( முன்னரே ) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க அல்லாஹ்வின் அனுமதியின்றி மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் நற்பலனை ( மட்டும் ) விரும்பினால் நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்கிவிடுவோம். இன்னும் எவர் மறுமையினையும், நன்மையையும் விரும்புகிறானோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம். நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாய் நற்கூலி கொடுக்கிறோம்.

இதையே வள்ளுவர் தமது வான்மறையில் ஒரு கோடி பொருளை சேர்த்து ஒழுங்குப்படுத்தி வைத்திருந்தாலும் இறைவன் விதித்த வகையால் அல்லாமல் அவற்றை அனுபவிக்க முடியாது என்ற கருத்தை -

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
கொடுத்தார்க்கும் துய்த்தல் அரிது

என்ற குறலால் விளக்கப்படுகிறது.

கஞ்சத்தனமும், ஊதாரித்தனமும்

திருக்குர் ஆனில் ‘கஞ்சத்தனமுமாக உம்முடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர். உம்முடைய வாயை முற்றிலும் விரித்து விடாதீர் ( 17 : 29 ) இதனை வள்ளுவர் கஞ்சத்தனமிக்கவன் இந்த பூமிக்கு பாரம் என்பதை -

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

என்ற குறளிலும் ஊதாரித்தனம் இல்லாமல் முறையாக செலவு செய்வது பற்றி

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி

என்ற குறளிலும் தெளிவாக விளக்குகிறார்.

தீயசெயல் பற்றி திருக்குரானும், திருக்குறளும்

மனிதர்களே : உங்களுடைய அடாத செயல்கள் ( தீய செயல்கள் ) உங்களுக்கே கேடாக முடியும் குரான் ( 10 : 23 ) இதனை வள்ளுவர்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

என்ற குறளில் தீயைக் காட்டிலும் தீயவை கொடுமையானது என்று கூறுகிறார்.

புறங்கூறுதல் பற்றி குரானும், குறளும்

பிறர் குறைகளை நீங்கள் துருவித் துருவி கொண்டிராதீர். அன்றியும் சிலர் சிலரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம் 50 : 2(16) இது பற்றி திருக்குறள் கீழ்வரும் குறள்களில் தெளிவாக விளக்குகிறது. பிறர் குறைகளைக் காண்பதுபோல் தம் குறைகளைக் கண்டு உணர்ந்தால் இந்த மண்ணுலகில் தீதில்லை என்பதை -

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டா மன்னும் உயிர்க்கு ?

என்ற குறளிலும், ஒருவன் தர்மம் என்னும் சொல்லைக்கூட சொல்லாமல் தீயவை செய்து ஒழுகினாலும் அவன் புறங்கூறமாட்டான் என்று நற்பெயர் எடுப்பதே நல்லது என்பதை -

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

இக்குறளிலும் விளக்குகிறார்.

இன்னா செய்யாமை பற்றி இறைமறையும் இனிய குறளும் :

இறைமறையில், நன்மையும், தீமையும் சம்மாகமாட்டா. நீங்கள் ( தீமையை ) தன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது யாருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர் நண்பரே போல் ஆகிவிடுவார். 41:5(34) இதை திருக்குறள் நமக்கு தீங்கு செய்பவரை தண்டிப்பது அவர் வெட்கம் அடையும்படி அவருக்கு நல்லதைச் செய்தலே ஆகும். இதனால் அவர் தாம் செய்த செயலுக்கு வருந்தி வெட்கப்பட்டு திருந்துவார் என்பதை -

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

என்ற குறளில் விளக்குகிறார்.

ஷக்கராத் பற்றி திருக்குறள்

எல்லா மனிதருக்கும், இறக்கும் தருவாயில் ‘சக்கராத்' என்ற நிலை ஏற்படும். அந்த நிலை வருவதற்கு முன்பாக எல்லாம் வல்ல இறைவன்பால் ஈமான் கொண்டு நல்வினை ஆற்றிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது திருக்குரான். இதனையே திருவள்ளுவார் நாக்கு பேசமுடியாமல் செத்துவிக்கும் முன்பே நல்ல செயல்களை செய்திடல் வேண்டும் என்ற கருத்து மேலோங்கி கீழ்வரும் குறளில் சொல்லுகிறார்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்

எல்லாப்புகழும் இறைவனுக்கே :

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று திருக்குர்ஆன் ‘அல்ஹம்துலில்லாஹ்' என்ற வாக்கியத்தின் மூலம் இயம்புகிறது. இதனை திருவள்ளுவர் தலைமைக் குணங்களுடைய இறைவனின் மெய்யான புகழை இடைவிடாது அன்போடு சொல்லுபவர்பால் ‘இருள்சேர் இருவினையும் சேரா'என்பதை சொல்லுவது மூலம் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதை வலியுறுத்துகிறது.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்பரிந்தோர் மாட்டு

என்ற குறளில் தெளிவுபடக் கூறுகிறார்.

நன்றி : இஸ்மி
ஜூலை 2005

ரியாத்தில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு

ரியாத்தில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு

ரியாத்தில் திருக்குர் ஆன் மற்றும் தொழுகையை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சி ரியாத்தில் ரெயில் வணிக மையத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.


மேலதிக விபரம் பெற மௌலவி இப்ராஹிம் IBRAHIM – 055 7779305 / 01 2048163


INSHA ALLAH, WE HAVE PLANNED TO START OUR SECOND SESSION OF THE SAME COURSE "UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY" ON 1ST AUGUST, 2008.

THE DETAILS ARE AS FOLLOWS ::

FREE COURSE

DATE : 1, 8, 15, 22 & 29 AUGUST 2008 (ON FRIDAYS)
TIME : 4.00 PM TO 6.00 PM – 2 HOURS PER WEEK (5 WEEKS = 10 HRS)
PLACE : RAIL BUSINESS CENTRE, FIRST FLOOR, ROOM NO.117,
RAIL STREET (OLD ALKHARJ ROAD, BEFORE SLEEP HIGH SHOW ROOM), RIYADH.
LOCATION MAP IS ENCLOSED HEREWITH FOR YOUR REF.
TOTAL SEATS - 20 NOS. (SEATS WILL BE ALLOTTED ON FIRST COME, FIRST SERVE BASIS)
CONTACT : MOULAVI IBRAHIM – 055 7779305 / 01 2048163

குர்ஆனின் குரல் இணையத்தில்

குர்ஆனின் குரல் இணையத்தில்


http://www.quraaninkural.com/

கல்வி விழிப்புணர்வு பெறும் முத்துப்பேட்டை

கல்வி விழிப்புணர்வு பெறும் முத்துப்பேட்டை

தமிழ் நாட்டின் முதன்மையான மீன் பிடி பகுதியாகவும மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள அலையாத்தி காடுகளுக்கு இரண்டாவது இடத்தினை பெற்று விளங்கும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியானது, கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக விளக்குகிறது. இங்கு தற்போது பத்துக்கும் மேற்பட்ட கல்விக்கூடங்கள் மக்களுக்கு கல்வியினை போதிக்கும் பணியினை திறம் பட
செய்து வருகிறது.

அங்குள்ள ஒரு சில கல்வி நிறுவனங்களுக்கு நேரிடையாக சென்று,அவர்கள் எவ்வாறு கல்வி சேiவையினை செய்து வருகிறார்கள் என்பதினை பற்றி வாசகர் ஒருவர் தொகுத்த கட்டுரையின் சாராம்சம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மகனோ அல்லது மகளோ 8வது அல்லது 10வது படித்தால் போதும் என்ற மனப்பான்மையயுடன் தான் ஒவ்வொரு பெற்றோரும் இருந்தனர். ஆனால் இன்றோ என்னுடைய மகனும் மகளும் படிக்க வேண்டும் என்ற உயாந்த நோக்கில் ஒவ்வொரு பெற்றோரும் மாறி விட்டார்கள். இந்த மாற்றத்தல் விளைத்தது தான் முத்து நகரில் பல கல்வி நிறுவனங்கள்.

1. அரசு உதவி பெறும் ஆவன்னா நேனா துவக்கப்பள்ளி
2. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
3. பிரிலியண்ட மெட்ரிக்குலெஷ்ன பள்ளி
4. ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
5. வின்னர்ஸ் மெட்ரிக்குலெஸன் பள்ளி
6. அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளி
7. இந்து சமய அறநிலை ஆட்சித்துறைக்கு உட்பட்ட கோவிலூர் பெண்கள் மேல்நலைப்பள்ளி
8. சரஸ்வதி வித்யாலா மெட்ரிக்குலேஷன் பள்ளி
9. பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
10. முத்துப்பேட்டை கல்வி பேரவை
11. கணிப்பொறி மென்பொருள் பயிற்சி மையம்

20.5.1941 ஆம் ஆண்டு ஜனாப். முகம்மது இஸ்மாயில் ராவுத்தர் அவர்களால் துவங்கப்பட்ட, ஆவன்னா நேனா பள்ளியானது நகரின் புராதன பள்ளிக்கூடமாக இன்றும் விளக்குகிறது. தற்போது இங்கு 510 மாணாக்காகள் கல்வி பயிலுகிறார்கள். 14 ஆசிரியர் மற்றும் ஆசிரியை பணி புரிகிறார்கள். 1 முதல் 5 வகுப்புகள் இங்கு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 3 உட் பிரிவுகள் உள்ளன என்பதினை பள்ளியின் தலைமையாசிரியை
திருமதி. பெ. சீதா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அல்லாஹ் பிச்சை ராவுத்தர் அறக்கட்டளையின் சார்பில்நகரின் எல்லைப்பகுதயில் 16.6.1986 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிரிலியண்ட. மெட்ரிக்குலேஷன் பள்ளியானது கல்வி சேவையினை 26 ஆண்டுகளாக செய்து வலருகிறது. இப்பள்ளியின் சிறப்பு அம்சங்கள் என்றால், முத்து நகரில் துவங்கப்படட்ட முதல் மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புமுதல் திறமையும் தகுதியும் வாய்நத
ஆசிரியர் ஆசிரியைகளை கொண்டு பாடங்கள் போதிக்கப்படுகிறது. பரிவுடன் பண்புடன் கல்வியினை போதித்து ஒழுக்கத்திற்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. 11க்கும் மேற்பட்ட கணிப்பொறிகளை கொண்டு மாணாக்கர்களுக்கு கணிப்பொறி பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் 3வது மொழியாக ஹிந்தியும் கற்பிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி.
குழந்தைகள் அமைதியாக படிப்பதற்கு பள்ளியை சுற்றிலும் இயற்கையான சூழல் பரந்த விளையாட்டு மைதானம்.

மேலும், தாளாளர் மற்றும் முதல்வரான. ஜனாப்ஃ முகம்மது யாகூப் ஆ.ய.இ டீளஉ.இ டீ.வ அவர்கள் கூறும் போது எங்கள் பள்ளியில் தற்போது 49 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பணிபுரிகிறார்கள். அதில் 3 ஆசிரியைகள் இஸ்லாமியர்கள். 1467 மாணாக்கர்கள் கல்வி பயில்கிறார்கள். நல்ல தரத்துடன் நாங்கள் மாணாக்கர்களுக்கு கல்வியினை கற்று தருகிறோம். அல்லாஹ்வின் கிருபையால் நல்லதொரு பள்ளிக்கூடம்
என்று சுற்று வட்டார மக்கள் எங்கள் பபள்ளியினை சொல்கிறார்கள். பெற்றேர்கள் அனைவரும் தன்னுடைய சந்ததிகளுக்கு இம்மைக்கு கொடுக்கக்கூடிய கல்வியினை கொண்டு மறுமைக்கு விளைநிலைமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

பெண்களும் கல்வி பயில வேண்டும் என்ற உயர்நத நோக்கில் 10.6.1996 அன்று முத்துப்பேட்டை அப்துல் காசிம் நகரில் ரஹ்மத் அறக்கட்டளை சார்பில் துவங்கப்பட்ட ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியானது தன்னுடைய கல்வி பணியினை நன்கு செய்து வருகிறது. அப்பள்ளியின் முதல்வரான திருமதி. சகுந்தலா ஆ.யு ஆ.நுன.இஆ.Phடை.இ அவர்களை நேரில் சந்தித்து உரையாடும் போது, எங்கள் பள்ளியானது அரசு
அங்கீகாரம் பெற்ற பள்ளியாகும். இங்கு படித்து வெளியில் சென்ற பல மாணவிகள் பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற துறைகளில் சாதனை படைக்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படைக்கொண்டு படித்து வருகிறார்கள். தற்போது எங்கள் பள்ளியில் 900 மாணவிகள் பயில்கிறார்கள். அதில் மாற்று மத மாணவிகள் 300 பேர்கள். மதநல்லிணம் அடிப்டையில் செயல்படும் எங்கள் பள்ளியில் 40 ஆசிரியைகள் 40
பேர்கள் மாற்று மதத்தினர். நாங்க் பெண்கள் கல்வியின் அவசியத்தினை உணர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக கல்வியினை போதித்து வருகிறோம். இங'கு ஐங்கால தொழுகை மற்றும் இஸ்லாமிய அடிப்படைகள் கொள்கைகளும் போதிக்க்ப்படீகறது. பள்ளியின் உள்ளே தற்போது பள்ளி வாசல் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. மதியம் 12 முதல் 1230 வரை அரபி வகுப்புகள் பயிற்று விக்கப்படுகிறது புனித மாதமான ரமலானில்
சிறப்பு தொழுகை நடைபெறும். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இஸ்லாமிய கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதற்காக 3 ஆசிரியைகள் பிரத்யேக நியமிக்கப்ட';டுள்ளனர்.

எங்கள் ரஹ்மத் அறக்கட்டளையானது, பல சேவைகளை செய்து வருகிறது. தற்போது 11ம் வகுப்பில் சோந்துள்ள அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு இலவசக்கல்வி அதாவது பள்ளிகட்டணம் விடுதிக்கட்டணம் பத்தகம் போன்றவற்றை அளித்து வருகிறது. மற்றும் 10ம் வகுப்ப தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ மாணவிகளுக்கு முத்துப்பேடடை முஸ்லிம் ஜமாத் கொடுத்து வருகிறது. அதில் எங்கள்
பள்ளியின் பல மாணவிகள் பயன் பெற்றனர்.

ஊடகத்துறையிலும் எங்கள் அறக்கட்டளையானது பல சேவைகளை செய்து வருகிறது. இணையத்தளம் மூலமாக திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் போன்ற வற்றை நூhலாக வெளியிட்டு வருகிறது.அதனை வெளிநாட்டவர்கள் விரும்பி பார்க்கிறார்கள். பல எழுத்தாளர்களை ஊக்ககுவிக்கும் பணிகளை எங்கள் நிறுவனம் செய்து வருகிறது. சில மாதங்களுக்கு முத்துப்பேட்iயில் நடைபெற்ற விழா ஒன்றில் இலங்கை சார்ந்த
எழுத்தாளர் மானா மக்கீன் அவர்கள் எழுதிய முத்தான முத்துப்பேட்டை என்ற நூலானது வெளியிட்ப்பட்டது. மற்றும் ஜுலை 6 - 2008 அன்று சிங்கப்பூரில் எழுத்தாளார் ராணி மைந்தன் அவாகள் எழுதிய முஸ்தபா - சிங்கப்புபபூரில் ஒரு வெற்றி தமிழர் என்ற நூhலானது வெளிளிட';ப்பட்து. அந்த வழாவிற்கு சிங்கை மற்றும மலேஷியாவை சார்ந்த பல தமிழர் அமைப்புக் கலந்துக்கொண்டது.

எங்கள் பள்ளியின் ஆலோசகர்களாக, திரு; மலைச்சாமி ஐ.ஏ.எஸ்., கவிப்பேரரசு. திரு. வைரமுத்து, கவிக்கோ. அப்துல் ரஹ்மான்ஈ திரு; மு. கல்யாண சுந்தர தேவர் அவர்களும் உள்ளனர். பள்ளயின் நாட் குறிப்பிபில் திரு;. வைரமுத்து அவர்கள் எழுதிய நாளை உலகம் நமக்கு.. நன்மை யாவும் நமக்கு.. நாங்கள் சேர்ந்து கைகள் தட்டினால் விடிந்து போகும் கிழக்கு.. என்ற பாடலானது பள்ளி பாடலாக இடம் பெற்றுள்ளது.

எங்கள் பள்ளியின் தாளாளர் ஜனாப். எம். ஏ. முஸ்தபா அவர்கள், தனிப்பட்ட முறையில் 20 இலட்சம் ஊக்கத்தொகையினை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு, ஆய்வினை செய்யும் மாணாக்கர்களுக்கு கொடுத்து உதவி உள்ளார்.

20.1.1992 ஆம் ஆண்டு துவங்கபட்ட வின்னர்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியானது நகரின் மைய பகுதியான புதுத்தொருவில் உள்ளது. இதன் முதல்வர் மற்றும் தாளாளர் ஹெச். எம். ரஷீஸ் கான் எம்.ஏ.பி.எட.அவர்களை நேர் காணும் போது, தற்போது எங்கள் பள்ளியில் 237 மாணவ மாணவிகள் கல்வி பயில்களிறார்கள்.15 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பணி புரிகிறார்கள். பத்தாம் வகுப்பு தேரிவில் எங்கள் ப்ளியானது100 சதவீதம்
தேர்ச்சி பெற்று வருகிறது. எங்கள் பள்ளியானது இந்தகல்வியாண்டு முதல் ஆலங்காடு என்ற பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. மாணாக்கர்களுக்கு சிநறந்த கல்வியனை நாங்கள் நன்றாக செய்து வருகிறோம்.

இந்த பள்ளியின் முதல்வரை பற்றி சில தகவல்கள் முத்துப்பேட்டை ஹெச். எம். ஆர் என்று அன்பாக இங்குளள மக்களால் அழைக்கப்படும் இவர் சிறந்த எழுத்தாளர். இவரின் திருமணமானது 31.8.1961 ஆம் ஆண்டு காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் அவர்களால் நடத்தி வைக்க்பட்டது. 1964 ஆம் ஆண்டு 1994 வரை முத்துப்பேட்டை அரசு உயர்நநைப்ப்pளயில் 30 ஆண்டுகள் ஆசிரியர் பணி புரிந்தார்.

இவர் நர்கிஸ் - பத்திரிகையின் கடைசி பக்க சிந்தனை, முஸ்லிம் முரசு, ஆனந்த பொலிவு, நூhருல் இஸ'லாம் குண்டூசி போன்ற பத்திரிகைகள் மற்றும் பல விழா மலர்கள் நீடூர் மதரஸா ஆண்டு மலர், நர்கிஜ் மாத இதழின் 15ஆம் ஆண்டு மலர், மயிலாடுதுறை மீலாது விih மலர், பள்ளி வாசல் தறிப்பு விih மலர்கள் போன்வற்றில் இவரின் படைப்புகள்.

அன்பு, அறிவு, பொறுமை பற்றிய இவர் எழுதிய தத்துவர்ந்த நூலானது வாஷிங்டன் உலக நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. மற்றும் சிங்கை வாசக சாலையிலும் இவரின் நுநாலானது இடம் பெற்றுள்ளது.

சிற்ந்த கல்வி மான்களை உருவாக்க வேண்டும் என்ற உயாந்த நோக்கில் பல கல்வி நிறுவனங்கள் முத்து நகரில் முத்தாக விள்க்குகிறது. அத்துடன் பல இஸ்லாமிய அமைப்புகளும் , முஸ்லிம்இயக்கங்களும், வெளிநாட்டு வாழ் அமைப்புகளும் , தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கல்வி சேவைகளை செம்மையாக செய்து வருகிறது. வரும் காலத்தில் முத்துப்பேட்டை நகரானது கல்வியில் மேன்பாடு பெற்ற நகராக மாற
உள்ளது. எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே.


தொகுப்பு : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

மக்கள் சக்தி இயக்கம்

Dear Mr. Bala - Gurusamy.
Well written.

Since you are talking about "Self development" - following link could be useful for those people.
This is by the famous "writer" on Self development Dr. MS Udayamurthy.
These days - lot of youngsters have joined and making their monthly magazine on socio-political change.

Interested could read from this.http://www.makkalsakthi.org/index.php?option=com_content&task=view&id=36&Itemid=45

http://www.makkal-sakthi-eiyakkam.blogspot.com/

MAKKAL SAKTHI EYAKKAM

Dr.M.S.UDAYAMURTHY17A, South avenue
Thiruvanmiyur, Chennai - 41
Tamil Nadu
India
600041

044-24421810 ,9443562030http://www.makkal-sakthi-eiyakkam.blogspot.com/