Showing posts with label பள்ளிவாசல். Show all posts
Showing posts with label பள்ளிவாசல். Show all posts

Sunday, March 14, 2010

பள்ளிவாசல் ‘மினாரா’ பேசுகிறேன்!

பள்ளிவாசல் ‘மினாரா’ பேசுகிறேன்!

(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0822-the-holy-call-from-minaret.html
http://www.mudukulathur.com/religiondetails.asp?id=147

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே! என்னைப் பற்றிய அறிமுகம் அவசியமில்லையென்றாலும் சிலவற்றை கூறாமல் இருக்க முடியாது. என்னைத் தெரியாதவர்கள் உலகில் யாருமே இருக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்கு நான் மிகவும் பிரபலமானவன். எனது கம்பீரத்திற்கு இணையாக உலகில் வேறு எதையும் நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள் எனபதை தைரியமாக சொல்வேன்!
என்னடா இது, மினாரா ஆணவப் போதையில் உளறுகிறது என நீங்கள் நினைத்தாலும் எனக்கு கவலையில்லை. நீங்கள் தரையில் நின்று கொண்டு எனது உச்சந்தலையை பார்த்தால் நான் வானத்தை உரசிக்கொண்டு நிற்பது போன்றதொரு மனப்பிரம்மை உங்களுக்குத் தோன்றும். நான் வானத்தை உரசி நிற்கவில்லையென்றாலும், வானத்தின் எல்லாப் பகுதிகளிலும் எனது அசைவுகள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும்.
இவ்வளவு சிறப்புகளும் எனக்கு எங்கிருந்து வந்த்தென ஆச்சர்யப்பட வேண்டாம். உங்களையும், என்னையும் படைத்த இறைவனை வணங்குவதற்கு வாருங்கள் என ‘அதான்’ என்னும் பாங்கின் மூலம் எல்லோரையும் அழைக்கக்கூடிய பணியை நான் தான் செய்து வருகிறேன். அதனால் தான் இறைவன் எனக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்தை தந்துள்ளான்.
சுவனத்தின் தோழர்களில் ஒருவரான ஹழ்ரத் பிலால் ( ரலி ) அவர்களே, என் முதுகில் ஏறி நின்று பாங்கு சொன்னதால் இன்னும் எனக்கு பெருமை கூடிவிட்ட்து. நான் கொடுக்கும் சப்தம் வான் மண்டலம் முழுவதும் எதிரொலிப்பது உங்களுக்குத் தெரியுமா?. தெரியாவிட்டால் அறிவியல் ஆய்வாளர் ஆம்ஸ்ட்ராங்கை கேட்டுப் பாருங்கள். அவர் ஒரு முறை சந்திரமண்டலத்தில் கால் வைத்த போது எனது சப்தத்தை கேட்டு திடுக்கிட்டவராக பூமியில் சொல்லப்படும் பாங்கின் ஓசை சந்திர மண்டலம் வரைக்கும் எதிரொலிக்கிறதே என வியப்படைந்தவராக பூமிக்கு திரும்பியதும் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.
இஸ்லாத்தின் தீர்க்க தரிசியாம் நமதருமை நாயகம் ( ஸல் ) அவர்களுக்கு அடுத்தபடியா முதன் முதலில் சந்திர மண்டலத்தில் கால்பதித்த சிறப்பையும் பெற்றவர்தான் ஆம்ஸ்ட்ராங். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கு நான் கொடுத்த சப்தமும் ஒரு காரணம் எனபதை நினைக்கும் போதெல்லாம் எனக்குள் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். உலகம் எப்போது அழியுமோ? அப்போது தான் எனக்கும் மரணம் நிகழும். இடையிடையே நான் நோய்வாய்ப்பட்டுவிட்டால் (பழைய மினாராகிவிட்டால்) என்னை குணப்படுத்தும் வகையிலேயே இடித்துவிட்டு மீண்டும் அதே இட்த்திலேயே உயிருடன் எழுப்பி விடுவார்கள். அப்போது சில அடிகள் நான் வளர்ந்துமிருப்பேன்.
இப்படி என் சிறப்பைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை ஒரு கல்லாக பார்ப்பவர்களுக்கு எனது வரலாறு தெரியாது!. இன்னொரு கோணத்தில் பார்த்தால் நானும் ஒரு வகையில் தியாகி தான். உங்களை இறையாடியார்களாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பை நான் செய்து வந்தாலும் உலக முடிவிற்குப் பிறகு நீங்களெல்லாம் மீண்டும் உயிர் கொடுக்கப்படுவீர்கள். ஆனால் நான் உயிர் கொடுக்கப்படாமலேயே போய் விடுவேன்.
எனது அழைப்பை செவிமடுத்து ஐந்து வேளை தொழுகையையும் இமாம் ஜமாஅத்துடன் தொழுதுவரும் நீங்கள் நல்லோர்களாகும் பட்சத்தில் சுவர்க்கம் சென்று விடுவீர்கள். ஆனால் நான் எதுவுமே இல்லாமல் நிராதரவற்றவனாகிவிடுவேன்.
ஒருவகையில் உலகம் அழியும் வரைக்கும் நான் மட்டுமே நீண்ட ஆயுளுடன் வாழ்வேன் எனபதை நினைக்கும் போது மனதிற்கு மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாகவே உள்ளது. என் இனிய சொந்தங்களே, எவ்வளவு தான் கஷடப்பட்டாலும் நல்ல விஷயங்களுக்கு துணை நின்றாலும் மண்ணில் உருவான எனது இறுதி முடிவு சல்லிக்காசுக்கு கூட தேறாது!. மறுமையில் மண்ணிற்கு மதிப்பில்லை என்பதை நன்கறிவேன். எனக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட அறிவுள்ள உங்களுக்குத் தெரியாமல் போனதேன்?. அதனால் தானே ஒரு சாண் அளவானாலும் அடுத்தவரின் இடத்தை (நிலத்தை) அபகரித்துக் கொள்ளத் துடிக்கிறீர்கள்.
எனதருமை நண்பா!. ஓ ……………காதர் பாய் உங்களைத்தான் கூப்பிடுகிறேன் என்ன சௌக்யமா இருக்கீங்களா!. அடேங்கப்பா போன வருஷம் ரமலானில் பார்த்தது. அந்த வருட பெருநாள் தொழுகைக்குப்பின் இப்போதுதான் உங்களை பார்க்க முடிகிறது. அதுவும் நான் பாங்கு சொல்வதற்கு முன்பே பள்ளிக்கு வந்து விட்டீர்களே, எதுவும் விசேஷமா? என நான் கேட்டு முடிப்பதற்குள் காதர் பாய்க்கு கோபத்தில் மூக்கு வியர்த்து விட்டது.
ஓ… அறிவு கெட்ட மினாராவே, நான் போன வருஷ ரம்ஜான் பெருநாள் தொழுகைக்குப் பின் நீ இருக்கும் திசை பக்கமே வரவில்லை என்றாயே?. எவ்வளவு பெரிய பொய்யை சொல்கிறாய்!. அதற்கடுத்து வந்த பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு நான் வந்ததை நீ மறந்து விட்டாயா?.
நான் எப்போதும் வளமையாக வருடத்தின் இரண்டு பெருநாள் தொழுகைக்கும் ரமலானின் முழுமாத இரவு தொழுகைக்கும் விசேஷமாக பள்ளிக்கு வந்திடுவேன் என்பதை கூடவா மறந்து விட்டாய்?. நோன்பு மாத்த்தில் உன் குரல் கேட்பதற்கு முன்பே நான் பள்ளிக்குள் நுழைந்தால் தானே, முதல் வரிசையில் நின்று தொழ வாய்ப்பு கிடைக்கும் என ( NON STOP ) இடை நிறுத்தமில்லாமல் தொடர்ந்து கொட்டி தீர்த்து விட்டார் காதர் பாய்!.
ஆனாலும் நான் விடவில்லை ஏன் காதர்பாய் வருஷம் முழுவதும் ஒரு வக்து தொழுகையை கூட விடாமல் தொடர்ந்து இமாம் ஜமாஅத்தின் முதல் வரிசையில் நின்று தொழுதுவரும் நல்லோர்களுக்கு சங்கை மிகும் ரமலானில் மட்டும் முதல் வரிசையில் நின்று தொழ முடியாமல் போகும் வகையில் சீசன் தொழுகையாளியான நீங்கள் இடையூறு செய்வது எந்த வகையில் நியாயம்? என நானும் விடாமல் துரத்தினேன்.
உங்களுடன் போன வருஷம் நோன்புக்கு மட்டும் தொழ வந்த உங்கள் கூட்டாளி கனிபாய் எங்கே? வெளிநாடு போய்விட்டாரா? இந்தக் கேள்வியை நான் கேட்ட்தும் காதர் பாயின் முகம் வாடிவிட்டது. என் நண்பர் கடந்த ஷஃபான் மாதம் மௌத்தாகிவிட்டார் எனக் கூறி கண் கலங்கினார். பரவாயில்லை காதர்பாய் உங்கள் நண்பரின் மறைவு உங்களுக்கு பேரிழப்புதான் என்றாலும் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு மய்யித்து வீதம் நான் பார்த்து வருவதால் எனக்கு அதில் வருத்தம் எதுவும் கிடையாது!.
ஆனாலும் சீசன் தொழுகையாளி என்ற குற்றப் பின்னணியுடன் மௌத்தாகிவிட்டாரே என்ற அனுதாபம் மட்டுமே எனக்குள் வந்து போகிறது. கடந்த வருட ரமலானில் நான் பார்த்த எத்தனையோ நபர்களை இவ்வருட ரமலானில் பார்க்க முடியவில்லை காதர்பாய்!.
ஏதோ உங்களைப் போன்ற ஒரு சில சீசன் நேர தொழுகையாளிகளை மட்டுமே இவ்வருட ரமலானில் காண முடிகிறது!
கல்லாக நிற்கும் நானே எனது இறைவனுக்கும் கடமையை பேணுதலோடு செய்து வரும் போது மனிதனாய் இருக்கும் நீங்கள் சீசன் காலத்து தொழுகையாளியாய் (வேடந்தாங்கல் பறவை போல் ) இருப்பது வெட்கம் இல்லையா? என்னை வணங்குவதற்கேயன்றி உம்மை படைக்கவில்லையென ஓராயிரம் முறைக்கு மேல் கூறியுள்ள இறைவனின் கூற்றுகள் உமது செவிகளுக்கு உறைக்கவில்லையா?
ஆட்சியாளர்களின் பார்வையில் நிரந்தர ஊழியர்களும், தற்கால பணியாளர்களும் எப்படி சம அந்தஸ்தை பெற முடியாதோ? அதே போலத்தான் இறைவனின் பார்வையிலும் நிரந்தர தொழுகையாளிகளும், சீசன் காலத்து தொழுகையாளிகளும் சமநிலையை அடைய மாட்டார்கள்.
கல்லும், மண்ணுமாகவுமிருக்கிற நானே இவ்வளவு கேவலமாக பேசியதற்குப் பிறகும் ரோசமுள்ள மனிதர்களான நீங்கள் இவ்வருட நோன்பிலிருந்தாவது நிரந்தரமான தொழுகையாளிகளாய் வாழும் காலம் வரை தொழக்கூடிய நிலைக்கு உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அடிக்க, அடிக்க அம்மிக் கல்லும் நகரும் என்பது போல நானும் தொடர்ந்து ஐந்து நேரமும் உங்களை தொழுகைக்கு வாருங்கள் என அழைத்துக் கொண்டேயிருப்பேன்! நீங்கள் தொழ வர வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, உங்களுக்கு தொழ வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல!.
( மௌலவி ஜஹாங்கீர் அரூஸி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர். தற்பொழுது துபையில் பணியாற்றி வருகிறார். மின்னஞ்சல்: sjaroosi@yahoo.com)

Saturday, August 22, 2009

( மௌலவி ஜஹாங்கீர் அரூஸி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர். தற்பொழுது துபையில் பணியாற்றி வருகிறார். தொடர்பு எண் : 050 795 9960. மின்னஞ்சல்: sjaroosi@yahoo.com)

Thursday, July 23, 2009

கட்டிமேடு & ஆதிரங்கம் புதிய பள்ளிவாசல் திறப்புவிழா அழைப்பிதழ்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி தாலுகா கட்டிமேடு & ஆதிரங்கம்
புதிய பள்ளிவாசல் திறப்புவிழா அழைப்பிதழ்

நாள் : 26 / 07/ 2009
நேரம் : மாலை 3.00 மணி
இடம் : கட்டிமேடு & ஆதிரங்கம் - (தர்ஹா தெரு)

தலைமை :
M . E . சச்சா . முகம்மது உசேன்

சிறப்புரை :
மௌலவி . சிரஜ்தீன் அஹ்மத் .ரஸாதி
(அல் ஹரமைன் அறக்கட்டளை சென்னை)

மௌலவி. P.M.A . அப்துல் ரஹ்மான், ரஹிமி
(தலைமை இமாம் ஜும்மா பள்ளிவாசல்)
கட்டிமேடு & ஆதிரங்கம்

மௌலவி . H. முஹம்மது இம்ரான்
(ஆசிரியர் ஹைரியதுள் ஜாரியா)
கட்டிமேடு & ஆதிரங்கம்

அழைப்பது

மாம்சா ராவுத்தர் குடும்ப அறக்கட்டளை
மற்றும்
கட்டிமேடு & ஆதிரங்கம் ஜமாத் மன்றம்

அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கவும்

தகவல்

இஸ்லாமிய நூலகம் - கட்டிமேடு - ஆதிரங்கம்
islamic_library2006@yahoogroups.com

முஹம்மத் ரபிஃக் - துபாய் - 050 - 8718176
rafiquk2008@gamil.com

Saturday, May 16, 2009

பள்ளிவாசல் பணியாளர் சங்கம்

பள்ளிவாசல் பணியாளர் சங்கம்

சட்ட ஆலோசகர் சந்திர குமாரிடம் நேரடி உரையாடல்!

பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்தின் நோக்கமென்ன? கோரிக்கை என்ன?

தமிழகம் முழுக்கவுள்ள ஏறத்தாழ 7,500 பள்ளிவாசல்களில் பணிசெய்யும் இமாம்கள், முஅதீன்கள், மதரஸாக்களில் பணி செய்யும் ஒஸ்தாது, பள்ளி கணக்கர், சந்தா வசூலர், மையத்தை குளிப்பாட்டுபவர், கபர்க்குழி வெட்டுபவர் என தமிழகம் தழுவி ஏறத்தாழ 30,000 பேர் பணி செய்கின்றனர். இவர்களுக்கு அரசு சலுகை கிடைப்பது என்பது அதிகாரி களின் மனோநிலையைப் பொறுத்து அமைகிறது. ஆனால் உத்தரவாதமில்லை. மற்ற பணியாளர்களைப் போல் இவர்கள் போராட்டம் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடமுடியாத நிலை இவர்கள் இறைப்பணியாளர்களாக இருப்பதால்

இவர்கள் ஏதாவது ஓர் அமைப்பு சார்ந்து செயல்பட்டால் தான் குறவர், கோயில்பூசாரி, ஓவியர், இதரப் பணியாளர்கள் தங்களுக்கான நலவாரியம் பெற்றது போல் பெற முடியும். இதனைக் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே பள்ளி வாசல் பணியாளர் சங்கம். இது கடந்த ஏழு வருடமாக இயங்கி வருகிறது இச்சங்கத்தின் தலைவராக சென்ற ஓரிரு நாட்களுக்கு முன்பு நிர்வாகக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தஞ்சை மேட்டுப் பள்ளிவாசல் இமாம் ஏ.எம்.எஸ்.அஹமது லியாகத்தலி நூரி அவர்கள் இருக்கின்றார்கள்.

வலது சாரி தளத்தைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ.உலகநாதன் சட்டசபையில் இவர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டுமெனப் பேசினார். அவரது பேச்சை செவிமடுத்த அரசு முதற்கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளிவாசல் பணியாளர்களைக் கணக் கெடுக்கும்படி வக்ஃபு வாரியத்தை பணித்தது. வக்ஃபு வாரியத்தைச் சேர்ந்தவர்கள் கணக்கெடுக்கச் செல்லும்போது பள்ளி நிர்வாகிகள் பயந்து கொண்டு உண்மையான கணக்கைக் கூறாது மறைத்து விட்டனர். இதனால் கணக்கெடுப்பு பாதியிலேயே நின்று விட்டது. இதுபற்றி விரிவாக எழுதி சமீபத்தில் தஞ்சைப் பகுதிக்கு வருகை தந்திருந்த உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வசம் மனுக்கொடுத்துள்ளோம். அதனில்,கணக்கெடுப்பை அரசு தான் செய்ய வேண்டும். அது எளிமையானதும் கூட ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஹெட்மேன் (V.A.O)மூலமாகவும் நகரப்பகுதிகளில் கார்ப்பரேஷன் அலுவலர்கள் மூலமாகவும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். என்று மனுவில் கூறியிருக்கிறோம்.

ஏழு வருடமாக பள்ளிவாசல் பணியாளர் சங்கத்துக்கு பெயர் பதிவைத் தமிழக அரசு மறுப்பதாகக் கூறப்படுகிறதே?

சங்கப் பதிவு சுணக்கத்திற்குக் காரணம், அவர்கள் கேட்கும் பதிவு தொழிலாளர் நலச் சட்டத்துக்குள் வருமா? என்ற சந்தேகம் தான். எவ்வளவு நேரம் பணி செய்கின்றார்கள். எத்தனை பேர் பணி செய்கின்றார்கள் என்று எப்படி நாங்கள் மசூதிக்குள் சென்று செக்கப் செய்வது என்ற கேள்விகளை அரசு அதிகாரிகள் முன் வைத்தனர். பள்ளிவாசல்களில் 8மணி நேரம் வேலை போன்ற கணக்கெல்லாம் கிடையாது. ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை பேர் பணி, என்ன பணி என்பதற்கு ஆதாரமாக பள்ளி நிர்வாகம் தனது லெட்டர் ஹெட்டில் எழுதிக் கொடுத்து விடும். அதை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளோம். ஆகவே தர மறுக்கின்றார்கள் என்பதெல்லாம் சரியல்ல.

ஏகப்பட்ட வாரியங்களை அமைத்திருக்கும் அரசு முஸ்லிம் களுக்கு ஒரு வாரியம் கொடுப்பதில் மட்டும் தடுமாற்றம் அடைவது ஏன்?

தடுமாற்றம் நமக்குள்தான். இந்த வாரியத்தை வாங்கலாமா வாங்கக் கூடாதா? மதப்படி சரியா? சரியில்லையா? என்ற ஊசலாட்டம் பலரிடம் நிகழ்கிறது. இதன் காரணமாகச் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மசூதிகளுக்குச் சென்று தெளிவுபடுத்தி வருகிறோம். ஒரு பள்ளியில் 20 வருடம் வேலை பார்த்ததாகச் சான்றிதழ் பெற்றுக் கொடுத்தால் தான் உலமா, முஅதீன் ஓய்வூதியம் 750/- பெறமுடிகிறது. ஒரே பள்ளியில் ஒரு இமாமோ, முஅதினோ 20 வருடம் பணி செய்வது என்பது இயலாது காரியம். அதனால் ஒரு இமாம் எந்தெந்த பள்ளியில் எத்தனை வருடம் பணி செய்திருக்கிறார் என்று சான்றிதழ் பெற்றுக் கொடுத்தால் அது மொத்தமாக 20 வருடம் இருக்கும் பட்சத்தில் ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. இந்த ஓய்வூதியம் விண்ணப்பிப்பதற்கான இலவசப் படிவத்தை 100 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். அதனை நாங்கள் இலவசமாக வழங்கி வருகிறோம்.

தமிழக அரசு இப்போதைய சூழ்நிலையில் வாரியம் அமைத்தால், அது வலிமையானதாக இருக்குமா?

வாரியங்களுடைய வருமானத்தை பெருக்கும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 16 வாரியங்களில் கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியத்தில் மட்டுமே 219 கோடி நிதியுள்ளது. இந்த வாரியத்தில் மட்டும் இவ்வளவு நிதி சேர்ந்துள்ளதற்குக் காரணம் ஒவ்வொரு கட்டிடமும் கட்ட பிளான் அப்ரூவல் கொடுக்கும் போது கட்டிடத் தொழிலாளர் வாரியத்துக்காக 1003/- (ஆயிரத்து மூன்று ரூபாய்) நிதி பெறப்படுகிறது. இந்த நிதியிலிருந்து எடுத்து மற்ற வாரியங்களுடைய அலுவலகச் செலவை மேற்கொள்ளலாம் எனப் பேசப்பட்டுள்ளது. இதற்கு கட்டுமானத் தொழிலாளர்கள் எங்களது நிதியை மற்ற வாரியங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வாரியங்களுடைய அலுவலகச் செலவுக்கே திண்டாடும் போது பள்ளிவாசல் பணியாளர்களுக்கு வாரியம் அமைக்கப் பட்டால் மட்டும் என்ன நன்மைகள் கிடைக்கும்?

முதலில் வாரியம் அமைக்கப்பட வேண்டும். வாரியம் அமைப்பதற்கு முன்னதாக நாம் என்ன கோரிக்கை வைக்கிறோம் என்பதைத் தெளிவாகப் பிரேம் செய்து கொடுக்க வேண்டும். அதற்கு தனித்தனியாகச் சென்று குரல் கொடுக்காமல் அனைவரும் ஒட்டு மொத்தமாகச் சென்று கேட்டுப் பெற வேண்டும்.இதற்கு அமைப்பு ரீதியாகச் செயல் படவேண்டும். வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால் பலரிடமும் சிக்கி வீணாகும் வக்ஃபு சொத்துக்களை வாரியத்துக்குக் கொடுங்கள் எனக்கேட்டு வாங்கலாம். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாரியத்தை செயல்படுத்தலாம். இன்னும் ஒன்றாக அமர்ந்து பேசி செயல்பட நிரம்ப வாய்ப்புகள் உள்ளன.

வாரியம் அமைக்கப்பட்டால் பள்ளிவாசல் பணியாளர்கள் என்னென்ன நன்மைகளைப்
பெறமுடியும்?

வாரியத்தில் பதிவு செய்து ஐந்து வருடம் ஆகியிருக்க வேண்டும். அவர்களுக்கு 400/- ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வூதியம் பெற 60 வயது நிரம்பியிருக்க வேண்டும். வாரிய உறுப்பினர்கள் விபத்தில் இறந்தால் ஒரு லட்சம் ரூபாயும், இயற்கை மரணத்துக்கு 15,000 + 2,000 மொத்தம் 17,000மும் 10 ஆவதுக்கு மேல் படிக்கும் வாரிய உறுப்பினர்களுடைய குழந்தைகள் இருவருக்கு 6000 த்திலிருந்து 10,000/-ம் வரைக்கும் கிடைக்கும். இரண்டு பெண் குழந்தைகளுடைய திருமணத்துக்கு 2,000/- வீதம் கிடைக்கும். பிரசவத்துக்கு 6,000/-ம் கிடைக்கும். வாரிய உறுப்பினர் பதிவை 2 வருடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

இந்த சங்கத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? சங்கத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரபலப்படுத்து வதற்கு என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

30 மாவட்டங்களைச் சேர்ந்த 1,600 உறுப்பினர்கள் இச்சங்கத்தில் உள்ளனர். சங்க வருடச் சந்தா 120/- ரூபாய். சங்கத்திற்கு அலுவலகம் இல்லை. தற்போதைக்கு தஞ்சை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்துக்கு கீழ் தளத்தில் இயங்கி வருகிறது. விரைவில் தனி அலுவலகம் ஏற்பாடு செய்ய உள்ளார்கள். மாவட்டந்தோறும் சென்று, பள்ளிவாசல் இமாம், முஅதீன், மற்றுமுள்ளோரைச் சந்தித்து பேசி வருகிறார்கள். – விரைவில் தனி அலுவலகத்தில் இயங்கும்.

(குறிப்பு) : ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலத் துணைத்தலைவராகப் பணி செய்பவர் திரு.வழக்கறிஞர் சந்திரகுமார் அவர்கள். இவர் பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்துக்கு சட்ட ஆலோசகராகச் சேவையாற்றுகிறார்.)

பள்ளிவாசல் பணியாளர் சங்கப் பொதுச் செயலாளரோடு நேரடி உரையாடல்!

தங்களது சங்கத்தின் செயல்பாடுகள்; இது வரை என்ன விதமான பணிகளை மேற்கொண்டிருக்கிறீர்கள்?

பிலால் சங்கம் என்று முதலில் ஆரம்பித்தோம். எங்களது செயல்பாடுகளைப்
பார்த்து இமாம்கள் எங்களோடு இணைய ஆரம்பித்தார்கள். பிலால் என்று மட்டும் இருந்தால் சரியாக இருக்காது. பள்ளிவாசலில் பணிசெய்யக்கூடிய அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பள்ளிவாசல் பணியாளர் சங்கம் எனப் பெயர் மாற்றிக் கொண்டுள்ளோம். ஜெயலலிதா அம்மா அவர்களது ஆட்சி காலத்தில் 6 கோரிக்கைகளை முன்வைத்தோம். உலமா ஓய்வூதியம் 500 ஆக உள்ளதை 1,000/- ம் ஆக உயர்த்திக் கொடுக்க வேண்டும். உலமாக்கள் இறந்த பிறகு ஓய்வூதியம் நிறுத்தப்படுகிறது. இறந்த பிறகு உலமா மனைவிக்கு வழங்கப்படவேண்டும். உலமா பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை, உலமா பெண் பிள்ளைகளுக்கு திருமண உதவித் தொகை, இமாமாகப் பணி செய்யும் உலமாக்களுக்கு வக்ஃபு வாரிய நிலங்களை கையகப்படுத்தி தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும். சங்கத்துக்கு பதிவு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம் இக்கோரிக்கைகளை ஓய்வூதியம் 1,000ம் ஆக உயர்த்த வேண்டும் என்பதை மட்டும் 750/- ரூபாய் ஆக உயர்த்திக் கொடுத்தார். மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
உலமாக்கள் மத்தியில் உங்களுக்கு எப்படி ஆதரவுள்ளது?

உலமா ஒருவர் தான் இச்சங்கத்துக்கு இப்போது புதிய தலைவர் சமீபத்தில் உலமா வாரியம் கேட்டு மாநாடு போட்டார்கள். பலரும் தீர்மானம் போட்டுக் கொண்டிருக் கிறார்கள். நாங்கள் அவர்களிடம் உலமா வாரியம் என்று கேட்காதீர்கள் பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கம் என்று கேளுங்கள், ஏழு வருடமாக முயற்சிக்கிறோம் எங்களது கோரிக்கைகள் செக்ரட்டிரியேட்டில் உள்ளன. வீணாக்கி விடாதீர்கள் என தொலைபேசியில் கூறினோம்.ஒரு சிலர் ஒத்துக் கொண்டாலும் ஒரிருவர் ஒத்துக்கொள்ளவில்லை. உலமா சபைத் தலைமையை அணுகினோம். உங்களது பாதை எங்களுக்கு ஒத்துவராது உங்களுக்குப் பின்னால் நாங்கள் வரமாட்டோம் என்றார்கள்.

இதற்குக் காரணம் என்ன?

எங்களைக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று கருதுவது தான். ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் மூலமாகவே ப.ப. சங்கப்பிரச்சனைகளை அணுகி வருகிறோம் இந்த மாதிரி பொது அமைப்போடு சேர்ந்து செயல்பட்டு தான் பெற முடியும். முஸ்லிம் அமைப்புகளுக்குள் ஒற்றுமை இல்லை. அவர்கள் கேட்டாலும் அரசும் அதிகாரிகளும் செவி சாய்க்கப் போவதில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. அதனால்தான் இவ்வகையில் முயற்சிக்கிறோம். எங்களது அலுவலகம் ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிடத்திற்குக் கீழாக அலுவலகம் இல்லாத காரணமாக தற்காலிகமாக இயங்கி வருகிறது. அவர்கள் தான் எங்களுக்கு உதவி வருகிறார்களே தவிர நாங்கள் அவர்கள் கட்சிக் கூட்டத்திற்கோ, தேர்தல் விளம்பரத்திற்கோ, கட்சிப் போராட்டங்களிலோ கலந்து கொள்வதில்லை. இது தான் உண்மை. எங்களது நோக்கம் இறையில்லப் பணியாளர்களாக விளங்கும் அனைவருக்கும் ஏதாவது ஒரு நன்மையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான். ஒரு முக்கியமான செய்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உலமா ஓய்வூதியத்துக்காக ஒருவர் விண்ணப்பிக்கும் போது 20 வருடப் பணிசெய்தல் அவசியம் என்ற சட்டம் ஒருபுறம். விண்ணப்பிக்கும் உலமா, வக்ஃபு வாரியத்தில் வரி கட்டும் பள்ளிவாசலில் பணி செய்தால் தான் அந்த ஓய்வூதியமும் கிடைக்கும் என்பது மறுபுறம். வருமானம் இல்லாத காரணத்தால் வரி கட்டாது வெறுமனே வக்ஃபு வாரிய சர்வே பதிவோடு இயங்கும் பள்ளிகள் இங்கு ஆயிரக்கணக்கில் உள்ளன. இதனில் பணிசெய்யும் இமாம் களுக்கு இல்லை எனச் சொல்லும் வக்ஃபு வாரியச் சட்டமும் மாற்றப்பட வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்.

எங்களது சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாவட்டத்துக்கு ஐந்து பேர் என 150 பேர் உள்ளனர்.

குறிப்பு : பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெ.ஷேக் அப்துல் காதர் என்ற இவர், முன்னாள் முஅதீனாக இருந்து இப்போது இச்சங்கத்துக்கு முழு நேர ஊழியராகப் பணி செய்கின்றார். இச்சங்கம் தற்போது இயங்குவது நெ.117, கீழ வாசல் வீதி, தஞ்சாவூர்.

நன்றி : முஸ்லிம் முரசு – ஜனவரி 2009

Wednesday, January 28, 2009

பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!

பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!

முஸ்லிம்களின் நூலக பாரம்பரியம் தொன்மைமிக்க ஒன்றாகும். எண்ணற்ற புகழ் மிக்க நூலகங்களை அமைத்து நூலக கலைக்கு ஆற்றிய பணிகளை எல்லாம் இங்கே விரிவாக சொல்லிவிட முடியாது. எனினும் இஸ்லாத்தின் ஆரம்ப கால முஸ்லிம்களிடையே அறிவு பெருக்கத்திற்கு நூலகங்கள் எவ்வாறு துணை நின்றன என்பதை மட்டும் இங்கே பதிவு செய்வோம்.

இஸ்லாமிய உலகில் நூலகங்களின் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் நாம் காணக்கூடிய சிறப்பம்சம் நூலகங்கள் அல்லாஹ்வின் இறை இல்லமான பள்ளிவாசல்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தன. ஒவ்வொரு பள்ளி வாசல்களும் ஒரு அறிவுபீடமகவே திகழ்ந்தன.

மருத்துவம் தவிர்த்து ஏனைய துறைகளெல்லாம் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் தான் போதிக்கப்பட்டன.

இவ்வுலகில் மிகத் தொன்மையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான அல் அஹ்ஸர் பல்கலைக் கழகம் (கி.பி 970) பள்ளிவாசலோடு இணைந்து உருவான உன்னத அறிவு பீடமாகும். ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் கலிபா அப்துல் அஜிஸ் அவர்களால் அல் அஹ்ஸர் பள்ளிவாசலுக்கு அருகில் சுமார் 35 உலமாக்கள் தங்கி இருப்பதற்கான இல்லமொன்று நிறுவபெற்றது. வெள்ளிக் கிழமைகள் தோறும் இந்த அறிஞர்கள் அல் அஹ்ஸர் பள்ளியில் உரை நிகழ்த்தி வந்தார்கள். இதிலிருந்து தான் அப் பல்கலைகழகம் உருவாகியது. இப்பல்கலை கழக நூலகத்தில் கிடைப்பதற்கு அறிய பல கையெழுத்து பிரதியில் ஆன நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மொரோக்கோ வின் பண்டைய தலைநகரம் பெஸ் (FEZ) இல் கி.பி 859 இல் எழுந்த அல் கரவயீன் பள்ளிவாசலும் குறிப்பிடத்தக்கதாகும். இது வணக்க தளமாகவும், சிறந்த கல்வி கூடமாகவும் விளங்கியது. இங்கு தான் அன்றைய உலகின் புகழ்மிக்க வானவியல் மற்றும் கணித அறிஞர்களும் ஆய்வு நிகழ்த்தினார்கள். இப்னு கல்தூன் லியோ ஆப்ரிகனஸ் போன்ற பேரறிஞர்களில் பெயர்கள் இப்பல்கலை கழகத்துடன் இணைந்துள்ளன. இங்கும் சுமார் 16000 மேற்பட்ட கையெழுத்து பிரதிகள் பாதுக்ககபட்டு வருகின்றன.

இதேபோல் அல் ஹக்கீம் என்பவருடைய நூலகம் நாற்பது அறைகளை கொண்டு இயங்கி வந்தது. இங்கு சுமார் 18.000 நூல்கள் அன்றைய காலகட்டத்தில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.

ஈராக் தலைநகர் பாக்தாத் இல் ஷாக்பூர் என்பவர் 1.00.000 மேற்பட்ட நூல்களை கொண்டு நூலகம் ஒன்றை நிறுவி இருந்தார்.

இதேபோல் கலிபாகளும், பல தனியாரும் அமைத்த நூலகங்களின் விபரம் இஸ்லாமிய வரலாற்று நூல்களில் காண கிடைக்கின்றன.

நபிகள் நாயகம் அவர்கள் தமது காலத்தில் சமுக, கலாச்சார, அரசியல் நடவடிகைகள் அனைத்திற்கும் பள்ளிவாயிலையே தலைமை இடமாக எற்படுத்தி இருந்தார்கள். இங்கு தான் இறை விசுவாசிகள் தொழுகைக்கு கூடும் இடமாகும். அங்கு நபி அவர்களின் சொற்பொழிவினை செவிமடுப்பார்கள்.

இரண்டாவது கலிபா உமர் அவர்கள் கூபா, பஸ்ரா, திமிஸ்க் போன்ற நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் உரை நிகழ்த்த பல அறிஞர்களை நியமித்தார். இவர்கள் காஸ் என அழைக்கப்பட்டனர். இதற்கு கதை சொல்வோர் என்பதாகும்.

இவ்வறிஞர்கள் இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் புராண கதைகள் கூறுவது போலன்றி, திருக்குரான் மற்றும் ஹதிஸ் விளக்கங்களை போதித்து வந்தனர். இவ்வாறாக பள்ளிவாசல்கள் இறை வணக்கதளமாக மட்டுமின்றி கல்விகூடங்களாக
பரிணமித்தன. இப்பள்ளிகளில் நிகழ்த்தப்பட்ட விரிஉரைகள் நாளடைவில் பெருகி பள்ளிவாசல்களோடு இணைந்த மதராசா (கல்லூரி) களின் தோற்றத்திற்கு வழிகோலின.

பல்வேறு சமூகங்களோடு இணைந்து வாழும் நாம் நமது கலாச்சாரங்களை பாதுகாக்க பள்ளிவாசல்களை மார்க்க மற்றும் கலாச்சார மையமாக சமூகத்தில் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நூலகம் நிறுவ பட வேண்டும்.
60 வருட சுதந்திர இந்தியாவில் குறிப்பாக தமிழ் முஸ்லிம்களிடையே கடந்த 10 ஆண்டுகளில் கல்வி பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு இருக்கிறது.

கிடைத்த இடஒதிக்கீட்டை சரியான வழியில் பயன் படுத்தவும், வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டவும் களமாக அமைய வேண்டியது பள்ளிவாசல்களும், அதனுடன் இணைந்த நூலகமும் தான் என்பதை சமுதாயத்துக்கு உணர்த்துவோம்!!.

முஸ்லிம்களிடைய குறிப்பாக இளைஞர்களிடைய வாசிக்கும் பழக்கம் குறைவாகவே இருக்கிறது. மேலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அரசாங்க நூலகம் இருப்பது குறைவே. முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் படிப்பகங்கள் இருக்கின்றன. இங்கு அமைப்பு மற்றும் இயக்கம் சார்ந்த பத்திரிகைகள், புத்தகங்கள் மட்டுமே இருப்பது வாசிப்பவர்களை ஒரு குறிப்பிட வட்டத்திற்குள் அடக்கிவிடுகிறது.

தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் தினசரி பத்திரிகைகள் வெளிவராமல் போனதற்கும்,
மாத மற்றும் வார இதழ்கள் வெற்றி பெறாமல் போனதற்கும் நூலகங்கள் நிறுவ படாததே முக்கிய காரணமாகும்.

முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு சம்மந்தம் இல்லாத அரசியற் கொள்கைகள், கோட்பாடுகள், சமுக கலாச்சார மாற்றங்கள் சமுதயத்தில் வேகமாக பரவி போனதற்கு சமுகத்தின் உண்மையான அவல நிலையை, கலாசார சீரழிவை, கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய வலிமையான பத்திரிகைகள் இல்லாமல் போனதே மிக முக்கிய காரணம் ஆகும். இஸ்லாமிய மார்க்க,கலாச்சார மற்றும் இலக்கிய ஏடுகள் மக்களிடையே ஆதரவு இல்லாமல் போனதன் அவல நிலையை இன்று காண்கிறோம். ஊடகங்களில் எத்தனை வகை இருந்தாலும் பத்திரிகை ஒரு வலுவான ஊடகம் ஆகும். பிற நாளிதழ்கள் மக்களிடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. உதரணமாக நபிகள் நாயகம் சித்திரத்தை வரைந்த தினமலர், தொடர்ந்து முஸ்லிம் விரோத கருத்துக்களை எழுதி வரும் இந்திய டுடே. துக்ளக், காலசுவடு என நம்மிடம் பட்டியலே இருக்கிறது. வாசகர்களாகிய நீங்கள் அறிந்ததே. அவற்றை சமாளிக்க கூடிய நாளிதலோ, வார இதழோ, மாத இதழோ நம்மிடம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே இயங்கி வருகின்றன. வெகு ஜனங்களை இந்த இதழ்களால் கவர முடிய வில்லை.

இன்னும் கவலை தர கூடிய செய்தி முஸ்லிம் இதழ்களின் பெயர்களே தெரியாத படித்த முஸ்லிம்கள் உள்ளனர் என்பதாகும்.

உலகில் பத்திரிகைகள் அதிகமாக வரும் நாடு எது தெரியுமா சகோதரர்களே!!! இஸ்ரேல்.

என்று யூதர்கள் மத்திய கிழக்கை நோக்கி வந்தார்களோ அன்றிலிருந்து சரியாக பதினேழாவது நாள் அவர்கள் நாளிதழ்கள் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடங்கி சரியாக 38 நாட்களில் அவர்களால் பத்திரிகைகள் வெளி இடப்பட்டன. அடுத்த ஐந்து மாத காலத்தில் பல்கலை கழகத்திற்கும் அடிக்கல் நாடினார்கள். இது நடந்த வருடம் 1947.

ராஜகிரி கஸ்ஸாலி

shabath ahamed
dateWed, Jan 28, 2009 at 2:56 PM
subjectRe: பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!

Thank You for the information.

AHMED MEERAN MOHAMED BILAL
dateThu, Jan 29, 2009 at 10:20 AM
subjectRe: பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!

Thanks. very good informations.
Bilal

Monday, January 5, 2009

கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளிவாசலின் கட்டிடக்கலை சிறப்பு

செத்தும் கொடை கொடுத்த" வள்ளல் சீதக்காதி என்றழைக்கப்பட்ட செய்கு அப்துல் காதர் மரைக்காயர் அவர்களால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளிவாசலின் கட்டிடக்கலை சிறப்பு பற்றி தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட வீடியோ படம் உங்கள் அபிமான www.tamilmuslimtube .com ல் கீழ்காணும் சுட்டில் காணலாம்.

http://www.tamilmus limtube.com/ video/Jumma- Masjid-Kilakarai -29723009

Short video film by Tamil Vitrtual University about the Architechtuaral excellence of Kilakarai Naduth theru Juma Masjid built by "Vallal Seethakaathi" in 17th Century , now available in your favourite website www.tamilmuslimtube .com in the following link

http://www.tamilmus limtube.com/ video/Jumma- Masjid-Kilakarai -29723009

Friday, December 26, 2008

முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா

முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா

முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா

www.mudukulathur.com

www.muduvaivision.com

முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா 26 டிசம்பர் 2008 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதனை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அல்ஹாஜ் எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் துஆ ஓதி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவரும், பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான ஏ.ஷாஜ‌ஹான், சென்னை அல் ஹ‌ர‌மைன் அறக்கட்டளை தலைவர் முஹம்ம‌து ர‌பீக் ஹாஜியார், பொறியாளர்கள் ருக்னுதீன்,தேரிருவேலி காஜா நஜுமுதீன், ப‌னைக்குள‌ம் ஜாஹிர் ஹுசைன் குடும்பத்தினர். திட‌ல் ஜமாஅத் தலைவர் மவ்லவி அல்ஹாஜ் உம‌ர் ஜ‌ஃப‌ர் மன்பயீ, திடல் முன்னாள் ஜமாஅத் தலைவர் முஹ‌ம்ம‌து ம‌சூது, பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.க‌மால் நாச‌ர், பெரியபள்ளிவாசல் முன்னாள் ஜமாஅத் தலைவரும், ஓய்வு பெற்ற தாசில்தாருமான எம்.அன்வ‌ர், தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காத‌ர் உள்ளிட்ட அனைத்து ஜமாஅத் பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இப்பகுதியில் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்தினருக்குட்பட்ட இவ்விடத்தில் இப்புதிய பள்ளிவாசல் ஆறு மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். அல் ஹரமைன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இப்பள்ளி கட்டப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 66 குடும்ப‌ங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலோர் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாவர். இவர்களது குழந்தைகள் மார்க்கக் கல்வி கற்றுக் கொள்வதற்கும் இப்பள்ளிவாசல் உதவியாக இருக்கும்.

Thursday, September 18, 2008

செஞ்சிக்கோட்டையில் சதாத்துல்லாகான் மசூதி, நுழைவு வாயில் புதுப்பிக்கும் பணி தீவிரம்

செஞ்சிக்கோட்டையில் சதாத்துல்லாகான் மசூதி, நுழைவு வாயில் புதுப்பிக்கும் பணி தீவிரம்

செஞ்சி,செப்.19-

செஞ்சிக்கோட்டையில் சதாத்துல்லாகான் மசூதி நுழைவு வாயில் உள்பட பல்வேறு பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

நுழைவு வாயில் புதுப்பிக்கும் பணி

தொல்பொருள் ஆய்வுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையை பழமை மாறாமல் வைத்திருக்க வேண்டும் என்று காரணம் சொல்லி ஏற்கனவே பராமரிக்கப்படாமல் இருந்தது. இதனால் கோட்டை மதில் சுவர்கள் புல் செடிகள் முளைத்து சேதமடையும் வகையில் காணப்பட்டது.அதனால் தற்போதுள்ள அதிகாரிகள் அதனை செப்பணிட முடிவு செய்து கடந்த ஓராண்டாக பல்வேறு பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

அதன்படி கோட்டையில் மதில் சுவர்கள் சரிசெய்யப்பட்டு சிமெண்டு பூசி புதுப்பிக்கப்பட்டது. சிவன் கோவில் சீரமைக்கப் பட்டது.வெளிநாட்டினரும் பயன்படுத்தும் வகையில் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.

பழமை வாய்ந்த மசூதி

தற்போது ராஜகிரி கோட்டைக்கு வெளியில் உள்ள சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த சதாத்துல்லாகான் மசூதி புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இதில் இன்றும் செஞ்சியை சேர்ந்த முஸ்லீம்கள் ரம்ஜான் மற்றும் பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களில் தொழுகை நடத்துகின்றனர்.

மேலும் ராஜகிரி கோட்டையில் முதல் மற்றும் 2-வது, 3-வது நுழைவு வாயில் மதில் சுவர்கள் (பெரிய பெரிய பெரிய கருங்கற்களால் ஆனது ) இங்கு பழுதடைந்த பணிகள் சீர் செய்யப்படுகிறது.

இப்பணிகள் தொல் பொருள்துறை அலுவலர் சந்திரசேகர், உதவியாளர் மணி ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

Tuesday, January 29, 2008

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 2006-07 ஆம் ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா 01.02.2008 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஆர்.எம்.அப்துல் கரீம் நினைவரங்கில் நடைபெற இருக்கிறது.

பரிசளிப்பு விழாவிற்கு பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். அன்வர் தலைமை தாங்குகிறார்.

சென்னை கிளை ஜமாஅத் தலைவர் அமீர் ஹம்சா,மதுரை கிளை ஜமாஅத் தலைவர் முஹம்மது இப்ராஹிம், முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் தலைவர் முஹம்மது மசூது, முஸ்தபா நகர் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம், பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி தாளாளர் ஏ. முஹம்மது மூஸா, பள்ளிவாசல் நர்சரி பள்ளி தாளாளர் வாவா ராவுத்தர், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவர் சீனி முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம். ராஜா முஹம்மது வரவேற்புரை நிகழ்த்துகிறார். பள்ளிவாசல் பள்ளிகள் கல்விக்குழு தலைவர் ஏ.எம்.எம். முஹம்மது மீரா பொன்னாடை அணிவிக்கிறார்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு குடிசை மாற்றுவாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலனும், இரண்டாம் இடம் பெற்றவருக்கு முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே. முருகவேல், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வித்துறை இணைய் இயக்குநர் எம்.எஸ். நெய்னா முஹம்மது ஆகியோர் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கின்றனர்.

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவித்து முதன்மைக்கல்வி அலுவலர் வி. பழனிவேலுச்சாமி மாவட்டக் கல்வி அலுவலர் மேகவர்ணம்,முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஈஸ்வரி கருப்பையா, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஏ. ஷாஜஹான், பேரூராட்சி மன்ற தலைவர் சசிவர்ணம், சென்னை முதுகுளத்தூர் முஸ்லிம்கள் நலச்சங்க தலைவர் ஏ.அப்துல் குத்தூஸ், சென்னை அஜீஸ் ஸ்டீல் கார்ப்பரேஷன் அஜீஸ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ( பொறுப்பு ) பாலசுப்பிரமணியம், உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துராமலிங்கம், இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். சௌக்கதலி, பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் பொருளாளர் கமால்நாசர் உள்ளிட்டோர் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனர்.

தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல் காதர், முன்னாள் தலைமையாசிரியர்கள் நல்லாசிரியர் எஸ். காதர் முகைதீன், எம்.எஸ். லியாக்கத்தலி, எஸ். வரிசை முஹம்மது, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஞானதாஸ், டிஇஎல்சி பள்ளி தலைமையாசிரியர் ஜான் இராஜேந்திர பிரசாத உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

தகவல் உதவி :

ஏ.முஹம்மது மூஸா,
பானு பிரிண்டிங் பிரஸ்,
முதுகுளத்தூர்