Wednesday, October 7, 2009

தானமே பிரதானம்... கட்டணம் அவமானம்

தானமே பிரதானம்... கட்டணம் அவமானம்


Courtesy - Dinamalar dt.06.10.09

கோவை : கோவை, பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் (28); ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தனது 18 வயதில் ரத்தம் அளிக்க துவங்கிய இவரது சேவை, நண்பர்கள் உதவியால் இன்று சென்னை வரை நீண்டுள்ளது. யார், எந்த குரூப் ரத்தம் கேட் டாலும், எப்பாடு பட்டாவது அவர்களுக்கு ரத்தம் கிடைக்கச் செய்கிறார். இதற்கென இவரோ இவரது நண்பர்களோ கட்டணம் எதுவும் பெற்றுக் கொள்வதில்லை. "ஸ்பாட் பிளட்' என்ற இவரது அமைப்பின் பெயருக்கேற்ப, ரத்தம் கேட்ட சில மணி நேரங்களில் இவரது ஆட்கள், "ஸ்பாட்டில்' தயாராக நிற்பர். இதனால், கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், போலீஸ் ஸ்டேஷன்களில் இவரது பெயர் பிரசித்தம்.

தனது சேவை பற்றி அப்பாஸ் கூறியதாவது: ஏழாவது வரை மட்டுமே படித்துள்ள நான் பூ வியாபாரம் செய்கிறேன். 18வது வயதில் பெரியப்பா இருதய ஆபரேஷனுக்காக, ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தேன். அங்கு ஒரு குழந் தையின் வயிற்றில் கடப்பாறை குத்தியதில் ஆபத்தான நிலையில் இருந்தது. "ஏ பாசிட்டிவ்' ரத்தம் நிறைய தேவைப்பட்டது. உடனே ரத்தம் கொடுத் தேன். அந்த குழந்தை பிழைத் துக் கொண்டது. நம்மால் ஒருவருக்கு உயிர் கொடுக்க முடியும் என்பதை கண் முன் உணர்ந்த அன்று முதல், யார் எப்போது கேட்டாலும் ரத்தம் கொடுத்து வருகிறேன். வேறு குரூப் ரத்தம் தேவைப் பட்டவர்களுக்கு எனது நண் பர்களை அனுப்பி உதவினேன். இப்படி எங்கள் "ஸ்பாட் பிளட்' அமைப்பு உருவானது. இதுவரை 200 பேருக்கு ரத்தம் கொடுத்துள்ளோம். நான் மட்டும் 24 முறை கொடுத்துள் ளேன். குறைந்தபட்சம் 50 பேரையாவது ரத்தம் கொடுத்து காப்பாற்ற வேணடும் என்பதே லட்சியம். அரிய வகை ரத்தப் பிரிவுகளான "ஏபி நெகட்டிவ்',"ஏ நெகட்டிவ்' ரத்தம் தேவைப்படுபவர்களுக்காக, நிறைய அலைந்துள்ளோம்.

சிரமப்பட்டு ரத்தம் கொடுத் தும், உயிரை காப்பாற்ற முடியாமல் போகும் போது வருத்தம் இருக்கும். ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிறைய குழந்தைகளுக்கு ரெகுலராக ரத்தம் கொடுத்து வருகிறோம். நல்ல மனதுடைய எனது நண்பர்களால், பல உயிர்களை காப்பாற்றிய திருப்தி உள்ளது. மூன்று மாதத்துக்கு ஒருமுறைதான் ரத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், இரண்டரை மாதத் திலேயே சில அவசர தேவைகளுக்கு கொடுக்க வேண்டியதிருக்கும். இதனால், எனது ரத்தத்தில் "கவுன்ட்' குறைந்து ஒரு கட்டத்தில் எனது கைகள் நடுங்கத் துவங்கின. டாக்டரின் அறிவுரையின்படி சில மாதங் கள் ரத்தம் கொடுக்காமல் இருந்தேன். 50 முறை ரத்தம் கொடுக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். ஜாதி, மதம், இனம் பார்க்காமல், ஒருவரின் ரத்தத்துடன் நமது ரத்தம் கலக்கும் போது ஒரு புதிய உறவு உண்டாகிறது. எந்த ஜாதி, மதமானாலும், ரத்தத்தின் நிறம் ஒரே நிறம் தானே. இதை புரிந்து கொள்ளாமல், அன்றாட வாழ்வில் சக மனிதரிடம் வேறுபாடு பார்க்கும் சிலர், யாரோ ஒருவரிடம் ரத்தம் பெற்று, மருத்துவமனையில் பிழைக்கும் போதுதான் திருந்துகின்றனர். தங்கள் உடல் ஆரோக்கியம் கெட்டு விடும் என சொந்த தாய், தந்தைக்கே ரத்தம் கொடுக்க தயங்கி, எங்களுக்கு பணம் கொடுத்து அழைப்பவர்கள் அதிகம். பணம் பெறாமல் அவர்களுக்கும் உதவியுள்ளோம். ரத் தம் பெற்றுக் கொண்டு, பணம் தரும் சிலரிடம் தகராறு கூட ஏற்பட்டுள்ளது.

உயிருக்கு விலை ஏது? இருதய புற்றுநோயால் பாதிக்கப் பட்ட ஒருவருக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு ரத்தம் கொடுத்தேன். "என்னால்தான் உயிரோடு இருப்பதாக' கைகளை இறுகப் பிடித்து கண்ணீர் விட்டு அழுதார். இரண்டு நாள் கழித்து அவர் இறந்து விட்டதாக, தகவல் கேட்டு சோகத்தில் மூழ்கினோம். இவ்வாறு, அப்பாஸ் கூறினார்.

முழு ஆரோக்கியமுடன் இருப்பவர்களால் மட்டுமே "ஸ்பாட் பிளட்டில்' சேர முடியும். இதற்கென உள்ள ஏஜன்டுகள் பணம் பெற்றுக் கொள்வதால், தங்களை நேரடியாக தொடர்பு கொள்பவர்களுக்கு மட்டுமே ரத்தம் கொடுக்கின்றனர், இந்த அமைப்பினர். அப்பாஸ் சேவையைக் கண்டு தற்போது அவரது மனைவியும் அமைப்பில் சேர்ந்துள் ளார். அவசர ரத்த தேவைக்கு 98434 89535, 96004 00190 ஆகிய எண்களில் அப்பாஸை தொடர்பு கொள்ளலாம்.